Posted in இலங்கை செய்திகள்

கோட்டா அடாவடி – முஸ்லீம் அமைப்பு ஐநாவில் முறையீடு

கோட்டா அடாவடி – முஸ்லீம் அமைப்பு ஐநாவில் முறையீடு

இலங்கையில் கொரனோ நோய் காரணமாக மரணித்த முஸ்லீம் மக்களை

வர்களது மத வழிபாடு முறைமைக்கு ஏற்ப இறுதி அடக்கம் செய்ய விடாது ஆளும் கோட்டா அரசு அடக்கி வருகிறது

இந்த அரசின் அடக்குமுறை தொடர்பாக ஐநா மனித உரிமை மன்றம் ,

மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் குறித்த அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது

இதே முஸ்லீம் இலங்கை அரசியல்வாகள் ஆண்டாண்டு காலமாக ஆண்டு

வந்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்து அப்பாவி

தமிழர்களை அடக்கி ஒழித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

Posted in சினிமா

நான் காதல் திருமணம் செய்ய வில்லை – கயல்

நான் காதல் திருமணம் செய்ய வில்லை – கயல்

கயல் படம் மூலம் அறிமுகமான ஆனந்தி தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கடந்த மாதம்

திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவர் முதன்மை நாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான

படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள்

ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத்

தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.

ஆனந்தி

என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது.

இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன்

இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என

காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர்

குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in சினிமா

கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்

கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில்

அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

தெலுங்கில், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை

பெற்றார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 3

மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன்

அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

அனிருத், கீர்த்தி சுரேஷ்

தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும்

விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத்

தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.

ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்

நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்

இலங்கை கிழக்கு திருமலை என்.சீ வீதியில் அமைந்துள்ள நகை

கடை ஒன்றுக்குள் ஆயுத முனையில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பெரும் தொகையான நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்

இங்கு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிய படுத்த

பட்ட நிலையில் குறித்த குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள்

இந்தியா எல்லையில் சீன இராணுவம் விலகல்

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன.

எனினும் இந்த படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் சுமார் 9 சுற்று பேச்சுவார்த்தை

நடத்தியுள்ளன. இதில் கடந்த மாதம் 24-ந்தேதி நடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து கவச வாகனங்கள்

உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் வீரர்களை திரும்பப்பெறுவது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தன.

அதன்படி பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய முன்கள வீரர்களின் ஒழுங்கமைவு

மற்றும் ஒத்திசைவு சார்ந்த படை விலக்கல் 10-ந்தேதி (நேற்று) தொடங்கியதாக சீனா தெரிவித்து உள்ளது. கடந்த 9-வது சுற்று

பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் சீன ராணுவ அமைச்சக செய்தி

தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். எனினும் இதுதொடர்பாக இந்திய ராணுவமோ, பாதுகாப்பு அமைச்சகமோ எந்த தகவலும்

வெளியிடவில்லை. அதேநேரம் எல்லையில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் திரும்பப்பெறப்பட்டு வருவதாக எல்லையோர வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் லடாக் நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதாக

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்

Posted in உலக செய்திகள்

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 34.24 ஏக்கர் மில் அரசுடைமை-பழனிசாமி அதிரடி ஆட்டம்

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 34.24 ஏக்கர் மில் அரசுடைமை-பழனிசாமி அதிரடி ஆட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சுதாகரன்

தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவர்களது சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கி வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் பங்குதாரர்களான சசிகலா,

இளவரசி, சுதாகரன் மற்றும் பலருக்கு சொந்தமான சொத்து வண்டாம்பாளை கிராமம், கீழகாவாதுகுடி கிராமம் ஆகியவற்றில் உள்ள 34 ஏக்கர் 24 சென்ட்(14 லட்சத்து 91 ஆயிரத்து 494 சதுர அடி)

மற்றும் வண்டாம்பாளை தொழிலாளர் குடியிருப்பு 5 தரை தளம், தரை தளத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு கட்டிடம், முதல்

தளத்தில் உள்ள விருந்தினர் கட்டிடம், டுவின் ஹவுஸ் மற்றும் மேலாண்மை இயக்குனர் பங்களா ஆகிய சொத்துகள் தமிழ்நாடு அரசால் நேற்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

மேற்படி சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய்(வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு

பாத்தியப்பட்டது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மில் பயன்பாடற்ற நிலையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சசிகலா, இளவரசி,
சசிகலா, இளவரசி,
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை ஏன் கைது செய்தாய் …?

என்னை ஏன் கைது செய்தாய் …?

அலை வீசும் கடலா நீ
அதில் ஓடும் மீனா நீ
எதுவென்று சொல்லாயோ
என் மனதை வெல்லாயோ …?

பாய் விரிக்கும் புல்வெளியில்
பனி துளியாய் வீழ்பவளே
உதயமாய் நான் விடிய
உருண்டோடி மறைவதெங்கே ..?

தெருவெல்லாம் பூவெய்தி
தேவதைகள் நடக்கையில
உனை மட்டும் என் விழிகள்
ஊர்வலமாய் தொடருதடி

கன்ன குழி பேரழகே
காவியத்தின் ஓரழகே
உள்ளத்தில் எனை மட்டும்
உயிரே சிறை வைக்காயோ ..?

உன் மூச்சு சுவாசத்தில்
உயர் மேகம் கருக்கட்டி
மழை வந்து கொட்டுதடி
மார்கழியாய் தாக்குதடி

இயற்கையே உன்னிடத்தில்
இன்று சரண் ஆகுதடி
நடமாடும் மனிதனடி
நான் காதல் செய்யேனோ …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-02-2021

Posted in இலங்கை செய்திகள்

300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்

300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு இருபத்தி ஒன்பது

கொண்டர்களில் பாக்கு இறக்குமதி செய்து வந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இவர் இந்த பாக்குகளை வரி செலுத்தாது சட்டவிரோதமாக

இறக்குமதி செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

Gulf Air மீள இலங்கையில் பறக்கிறது – குஷியில் பயணிகள்

Gulf Air மீள இலங்கையில் பறக்கிறது – குஷியில் பயணிகள்

இலங்கையில் சில காலம் தடை பட்டிருந்த Gulf Air மீள தற்போது தனது

பயணத்தை இலங்கை நோக்கி நகர்த்தியுள்ளது ,வாரம் இருமுறை என

தற்பொழுது தனது பயணத்தை ஆரம்பிக்கிறது ,
பகரனில்

இருந்து இந்த சேவை இடம்பெற உள்ளது ,குறித்த விமான நிறுவனம் மத்திய

கிழக்கு நாடுகள் மற்றும் தென் ஆசியாவில் மிக முக்கிய பணியாற்றி வருகிறது

மீள ஐந்து விமான நிறுவனம் சேவையை ஆற்ற ஆரம்பித்துள்ளது குறித்த

நாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 370 பேர் மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து குறித்த நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு

வரப்பட்டது என மார்தட்டி திரிந்த அரசுக்கு அதிகரித்து செல்லும்

மரணங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இறம்பொடை நகரத்தில் சிவன் ஆலயம் மலையக சின்னத்தை பாதுகாப்போம்.photo

நுவரெலியா மாவட்டம் இறம்பொடை நகரத்தில் காணப்படும் மிகவும்

பழமையான ஆலயத்தை ஊர் மக்களுடன் இணைந்து புணர் நிர்மானம்

செய்து சிவலிங்கம் உட்பட் பிள்ளையார் அம்மன் முருகன் நவக்கிரக சிலைகள்

ஆகம விதிபடி பிரதிஷ்டை செய்து ஆலயத்தை மீள் கட்யெழுப்பு நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா கண்டி பிரதான பாதை

அபிவிருத்தி காரணமாக இந்த ஆலய அபிவிருத்தி தாம நிலையில் காணப்படுகின்மை குறிப்பிடதக்கது.

சுற்றுலா தளமாக விளங்கும் இறம்பொடை நகரத்தில் இவ்வாறான ஆலயம்

ஒன்று அமையப்பெருவது காலத்தில் கட்டாயமாகும். இது நகரத்தையும் எமது மலையக மக்களின் காப்பக சின்னமாகவும் அமையும். இதனையே இந்த ஊர் பக்தர்களும் விரும்புகின்றனர்.

இந்த தெய்வீக செயற்பாட்டிற்கு பணமாகவோ பொருட்களாகவே உதவி

செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ஆலய நிர்வாகத்தினரை. நன்றி

ஓம் நமசிவாய

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

இலங்கையில் ஆளும் மகிந்த ,கோத்தபாயா ஆட்சிக்கு வந்ததன் பின்ன

நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது

கடந்த தினம் ஓமந்தை பகுதியில் ஏழுவயது மாணவன் ஒருவன்

கிணறு ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளான்

இவன் எவ்வாறு இந்த கிணற்றுக்குள் வீழ்ந்தான் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

அடித்து கொன்றுவிட்டு கிணறுகள்,குளங்கள் போன்ற பகுதிகளில்

மனித சடலங்கள் வீச பட்டு வருவதாக உள்ளிருந்து வரும் சில கசிவுகள் தெரிவிக்கின்றன

Posted in சினிமா

ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்

ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.

ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்?
ரஜினி, மணிரத்னம்


‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி

வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு,

மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரண்டு பாகங்களாக

இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம்

மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.

பொன்னியின் செல்வன், அண்ணாத்த பட போஸ்டர்கள்

தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். மார்ச் 5-ந் தேதிக்குள் முதல் பாகத்துக்கான முழு படப்பிடிப்பும்

முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் பின்னணி பணிகளை நான்கு, ஐந்து மாதங்களில் முடிக்க

திட்டமிட்டுள்ளார்களாம். அவ்வாறு முடிக்கப்பட்டால் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினியும்

மணிரத்னமும் பட வெளியீட்டில் நேருக்கு நேர் களம் காண்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Posted in சினிமா

பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா

பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா

இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில்

50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி

கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் ஒரு ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா. கக்கார் ( Tony Kakkar )

இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை சட்டி தில்லான் இயக்கியுள்ளார்.

இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது….

ஹன்ஷிகா

இசை துறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர்

டோனி கக்கார்
அவர்கள் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும்

மகிழ்ச்சியை தந்துள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே

பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள பெரும்

திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள் என்றார்.

Posted in உலக செய்திகள்

பிரபலங்கள் கைபேசிக்குள் நுழைந்து பணம் ,மற்றும் ஆவணங்களை திருடிய எட்டு பேர் லண்டனில் கைது

பிரபலங்கள் கைபேசிக்குள் நுழைந்து பணம் ,மற்றும் ஆவணங்களை திருடிய எட்டு பேர் லண்டனில் கைது

அமெரிக்கா ,மற்றும் பிரிட்டனை மையமாக வைத்து முக்கிய பிரலங்கள்

கைபேசிக்குள் நுழைந்து அவர்களது ஆவணங்கள் ,மற்றும் வங்கிகள் ,

உள்ளிட்ட விபரங்களை கைக்கிங்க செய்து ,அதன் ஊடக பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

பிரிட்டன் தேசிய குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதி தீவிர விசாரணைகள்

மூலம் இந்த நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள்

பிட்கொயின் உள்ளிட்டவற்றையும் திருடியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது


கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

அமெரிக்காவின் fbi என்ற உளவு அமைப்பும் இணைந்து

மேற்கொண்ட தேடுதலின் பொழுதே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள்

லண்டன்-சவுதிக்கு .1.4 பில்லியன் பவுண்டுகளில் ஆயுத விற்பனை

லண்டன்-சவுதிக்கு .1.4 பில்லியன் பவுண்டுகளில் ஆயுத விற்பனை

பிரித்தானிய அரச ஆதரவு பெற்ற ஆயுத நிறுவனம் ஒன்று சவூதி அரேபியாவுக்கு

சுமார் 1.4 பில்லியன் பவுண்டுகளுக்கு ஆயுத விற்பனைபுரிந்துள்ளது ,பிரிட்டன்

வழங்கிய ஆயுதங்களே சவுதி இராணுவத்தினர் ஏமன் நாட்டின் மீது

நடத்த படும் தாக்குதலுக்கு பயன் படுத்தி வருகின்றமை அம்பலமாகியுள்ளது

உலகில் தடை செய்ய பட்ட நச்சு குண்டுகளும் வழங்க பட்டுள்ளதாக

அந்த புள்ளி விபங்கள் தெரிவிக்கின்றன

Posted in உலக செய்திகள்

2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ

2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ

சிரியாவில் நடத்த பட்ட கொரனோ சோதனையின் பொழுது

ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேருக்கு

இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது இதனை அடுத்து தற்போது


பல பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

தொடர்ந்து சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது

லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது

லண்டன் குறைடன் பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் இருபத்தி நான்கு

வயதுடைய நபர் ஒருவர்
காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் ,குறித்த ஆயுத சேமிப்பு

தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை

ஆரம்பித்துள்ளனர் ,இது தீவிரவாத தொடர்பு பட்டதா என்பது

தொடர்பில் தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்

இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்

இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 1,052 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 12,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

அதேபோல அமெரிக்காவில் 2,589 பேர் பலியாகியும் சுமார் 80,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் நோயின் தொற்று அதிகரிக்க

கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

சில்லறையா நீ குலுங்க
சிலிர்க்குதடி என் உடம்பு
சிந்தையில நீ நடக்க
சிதறுதடி என் குசும்பு

வம்பு பண்ண வந்தவளே
வாசலிலே நிற்பதுவோ ..?
வாலாட்டி நான் சுற்ற
வாய் விட்டு சிரிப்பதுவோ ..?

கோடையில ஆற்று நீரை
கொதிக்க வைக்கும் சூரியனே
வெப்பத்தை தூவி விட்டு
வெண்ணிலவு போவதெங்கே ..?

குழைத்து வைத்த மாவை போல
குமரி புள்ள நீ கிடக்க
அவித்து உன்னை தின்ன
ஆள் மனசு துடிக்காதோ ..?

என் தோப்பில் பூவாகி
எனக்கெனவே காய்த்தவளே
நான் மட்டும் ரசித்துவிடும்
நாள் ஒன்றை காட்டாயா …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 09-02-2021

வன்னி மைந்தன் கவிதைகள்