Tag: பிரபல நடிகை
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கைலியா போஸி
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக
நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது
16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி
தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை.
ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகம்
முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள்
தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தனக்கு நடந்த பாலியல் வன்முறை குறித்து பிரபல இந்தி சீரியல் நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.
டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
தேவோலீனா பட்டாச்சார்ஜி
பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார்.
அதில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக
கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது,
“அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச்
செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.
திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் (என் நண்பர்கள்) டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன்.
அப்போது ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து
அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்
புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது
போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்” என கூறி உள்ளார்.
12 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் பிரபல நடிகை
12 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் பிரபல நடிகை
வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்கடித்த நடிகை வினோதினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.
12 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் பிரபல நடிகை
வினோதினி
இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும்
இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர
வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர்.
வினோதினி
திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்
பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள்
போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு வெளிநாட்டு பிரபலங்கள்
பலர் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்திய விவசாயிகளுக்கு
ஆதரவளிக்கும் ஒவ்வொருமுறையும் தனக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வருவதாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜமீலா ஜமீல்
இது குறித்து நடிகை ஜமீலா ஜமீல் பதிவிட்டுள்ளதாவது: “இந்திய விவசாயிகள்
குறித்தும், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் கடந்த சில மாதங்களாக
நான் பலமுறை பேசியிருக்கிறேன். ஒவ்வொருமுறை அவ்வாறு பேசும்போதும்
நான் கொலை மிரட்டல்களையும், பாலியல் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன்.
நானும் ஒரு சக மனிதர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மிரட்டுங்கள்’
என்று தெரிவித்துள்ளார். நடிகை ஜமீலா ஜமீலின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார்.
நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
நயன்தாரா
நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற
படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னட ரீமேக்
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜான்வி கபூர்
இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்தியில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார்.
நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின்
படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
ரகுல் பிரீத் சிங்
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன்
அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில்
பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘மே டே’ என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான்
தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.
ரகுல் பிரீத் சிங்
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

பிரபல நடிகையின் தந்தை மரணம்- அதிர்ச்சியில் மரணம்
பிரபல நடிகையின் தந்தை மரணம்- அதிர்ச்சியில் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீரென மரணமடைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்
நிகிலா விமல், பவித்ரன்
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். கடந்தாண்டு ஜீத்து ஜோசப்
இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அடுத்ததாக ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நிகிலா விமல்
இந்நிலையில், நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 61.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை
ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை
ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் இவர் அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் வெளியான மகதீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியவே, முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார்.
இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இன்றும் பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலிடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை அழைத்துள்ளனர்.
காஜல் அகர்வால்
அதற்கு காஜல் சம்பளமாக ஒரு கோடி கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர் ஒரு படத்திற்கு ஒரு நடிகை பெறும் சம்பளத்தை ஒரு பாடலுக்கு இவர் கேட்கிறாரே என அதிர்ச்சியாகி உள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.






