Tag: அண்ணாத்த
2 நாளில் 100 கோடி வசூல் செய்த அண்ணாத்த
2 நாளில் 100 கோடி வசூல் செய்த அண்ணாத்த
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படம் இரண்டு நாளில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அண்ணாத்த
‘தர்பார்’ படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர்
நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
ரஜினி
அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்
செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி
ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி
இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி
அண்ணாத்த
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று
வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.
அண்ணாத்த
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக
வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு
அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள
இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு
இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
ரஜினி
சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில்
நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால்
படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.
இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி சென்னையிலேயே மீதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி
உள்ளது. அதன்படி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.
ரஜினி
இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்
. இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்
அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்
அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் இரண்டு பேர் இணைந்து இருக்கிறார்கள்.
அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்… வைரலாகும் செல்பி
ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர்
நடிக்கின்றனர் . சூப்பர் ஸ்டாருடன் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதால்
அண்ணாத்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த்
, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு மற்றும் மீனா படப்பிடிப்பிற்கு இணைந்துள்ளனர்.
மீனா – குஷ்பு
நடிகை குஷ்புவும் மீனாவும் விமான நிலையத்தில் சந்தித்து ஒன்றாக பயணித்து உள்ளனர். இவர்கள் சந்தித்த தருணத்தை இருவரும்
தங்கள் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப்
போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு
‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தனி
விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது. ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.
ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்
. படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி
தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு
கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு
அண்ணாத்த
‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த்
நடிப்பில் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.
இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.
மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம்
படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ”டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்” என்று முடிவெடுத்தார் ரஜினி. இதற்கிடையில் டிசம்பர் 31-ம் தேதி
கட்சியைத் தொடங்கவிருக்கும் அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். அப்போது பேசும்போது, கட்சி வேலைகள்
தீவிரமாகும் முன் முதல் கட்டமாக ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிடுவதாகவும் கூறியிருந்தார்.
அண்ணாத்த
அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அளித்துள்ள பேட்டியில்
கூறியிருப்பதாவது. ” ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐதராபாத் செல்ல ரஜினி
சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள்
கொண்டுவர உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் ‘அண்ணாத்த’ டீமிற்கும் செய்யப்படவுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல்,
படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தீவிர பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து 40 நாள்கள் ரஜினி சாரின் ஷூட்டிங் இருக்கும். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை
2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.











