Posted in உலக செய்திகள்

வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க

சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,

அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை

சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது


கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .

    Posted in உலக செய்திகள்

    12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

    12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

    சோமாலியாவில் முக முக்கிய உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பண்ணிரெண்டு

    பேரை அல்கொய்தாவுடன் தொடர்பு பட்ட இயங்கும் தீவிரவாத குழு ஒன்று கொன்று குவித்துள்ளது

    இவர்கள் செல்லும் ,சாலை வழியில் வைக்க பட்ட கண்ணிவெடியில்

    சிக்கி இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

    இந்த படுகொலைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என குறித்த அரச

    இராணுவம் எச்சரித்துள்ளது ,வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிர படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

      Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

      சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

      பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்

      பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,

      அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்

      உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க

      பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்

      அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க

      படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது

      இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,

      அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை

      உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

        லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

        கடந்த தினம் லண்டன் ஸ்பீக்கிலுள்ள காஸ்கில் சாலையில் உள்ள உடல் பயிற்சி நிலைய ஒன்றில் திடீரென கூடிய


        ஐம்பதுக்கு மேற்பட்டவர்களினால் அங்கு பதட்டம் நிலவியது ,தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருபத்தி நான்கு வயதுடைய

        வாலிபர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்தனர்

        இவர்களே இந்த நிகழ்வை ஒன்று கூட்டியதாக காவல்துறையினர் சநதேகம் வெளியிட்டுள்ளனர்,சந்தேகம் நிரூபிக்க பட்டால்

        இருவருக்கும் தலா பாத்து ஆயிரம் பவுண்டுகள் விகிதம் தண்டம் வழங்க படலாம் .

        மேலும் நிகழ்கால நோயின் பரவல் கட்டு பாட்டு விதிகளை மீறிய குற்ற

        சாட்டில் ஐம்பது பேருக்கு நிர்ணயிக்க பட்ட தண்டம் அறவிட பட்டுள்ளது ,இருநூறு முதல் எண்ணூறு பவுண்டுகள் விகிதம் வழங்க பட்டுள்ளது

        சமீப நாட்களில் இவ்விதம் ஒன்று கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றதும் ,

        போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை

          கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை

          இலங்கையில் ஆளும் இரத்த காட்டேரி கோட்டாவின் ஆட்சியில் ,கழுத்துறை

          பகுதியில் முப்பத்தி நான்கு வயது மதிக்க தக்க இளம் ஊடக நபர் ஒருவர்

          நேற்று காணாமல் போனார் ,அவ்விதம் காணாமல் போன இவர் தற்போது மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          காணாமல் போனவரை தேடிய சிங்கள இராணுவம் , அவர் கால நிலை

          சீற்றத்தில் சிக்கி இறந்து விட்டார் என கதை வசனம் எழுதி இவரது மரணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது

          பிரபல ஊடக நபர் கோட்டாவின் கிபிர் விமான ஊழல் விவகாரத்தை அம்பல

          படுத்திய நிலையில் லசந்த கொலை செய்ய பட்டார் , அவ்விதம் ஐவரும் மரணமாகியுள்ளார்

          ஆளும் அடக்குமுறை இனவாத ஆட்சிக்கு என்று தூக்கு ..?

            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

            மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

            மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

            இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு

            அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்

            தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு

            கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன

            உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு

            ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை

            ,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை

            அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச

            விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்

            46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி

            தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது

            பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்

            தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு

            தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது

            தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட

            அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண

            தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?

            இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது

            இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?

            • வன்னி மைந்தன் –
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

            கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

            பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

            நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்

            அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

            மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது

            சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்

            ,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்

            1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              ஈரான் புதிய ரொக்கட் சோதனை – கொதிப்பில் இஸ்ரேல்

              ஈரான் புதிய ரொக்கட் சோதனை – கொதிப்பில் இஸ்ரேல்

              228 கிலோ எடை கொண்ட புதிய திரவ வாயுவில் இயங்கும் ரொக்கட் ஒன்றை

              ஈரான் ஏவி சோதனை செய்துள்ளது ,குறித்த ரொக்கட்டை ஈரானிய புரட்சி காவல் படையினர் ஏவி சோதனை செய்தனர்

              மேற்படி ரொக்கட் சோதனை தமது நாட்டுக்கு பெரும் முதுகெலும்பாக

              விளங்கும் என தெரிவித்துள்ள இராணுவம் எதிரிகள் இந்த

              ரொக்கட்டை கண்டு கலங்கி போயிருப்பார்கள் என்பது திண்ணம் என குறிப்பிட்டுள்ளது

              மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி அமெரிக்கா ஆளும் அதிபர் போரை

              தொடுப்பார் என இஸ்ரேலிய உளவுத்துறை ஊடகம் ஆருடம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

              ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

              இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்

              மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின்

              ஒரு ஆசிரியர் உள்ளிட்ட பதின் ஐந்து மாணவர்கள் குறித்த நோயின் தாக்குதலினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

              இதனை அடுத்து அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை

              பெற்று வருகின்றனர் ,பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

                செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்

                இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 356 பேர் மரணமாகியுள்ளனர்

                மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம்

                நல்தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்னம் உள்ளனர்

                தமது ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்பதால நோயின் தொற்று

                விபரமும் ,பலி எண்ணிக்கைகளை ஆளும் சிங்கள பவுத்த இனவாத

                அரசு மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  பொத்துவில் முதல் பொலிகண்டி -லண்டனில் தமிழர்களினால் போராடட்ம – video

                  பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிக்கு வலு சேர்க்கும்

                  வகையில் பிரித்தானிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

                  இடை நடுவில் பொலிசாரினால் மறிக்கப்பட்டு கொவிட் சட்டம் அமுலில்

                  இருக்கும் நிலையில் தொடர முடியாது என எச்சரிக்கப்பட்டதுடன் வாகன

                  இலக்கத் தகடுகள் பதிவு செய்யப்பட்டு கொடிகள் அகற்றப்பட வேண்டும்

                  என கோரியதுடன் மீளவும் தேவையற்ற பிரயாணமாக இந்த வாகனங்கள்

                  வெளியில் செல்லுமிடத்து தண்டப்ப அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

                  இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு

                    toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு

                    லண்டன் கரோ பகுதியில் வாடகை வீடொன்றில் குடியிருந்த தம்பதிகள்

                    வீட்டு சமையலறைக்குள் ,வீட்டின் மேலே இருந்த toilet தண்ணீர் கசிந்து சமையலறைக்குள் ஊற்றியுள்ளது

                    மேற்படி மலசல கழிவு நீர் தொற்றின் காரணமாக நன்கு வயது அழகிய

                    சிறுமி நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                    இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த விசாரணை குழு அகாரிகள்

                    நடத்திய விசாரணையில் வீடு பழுதடைந்த நிலையில் ,பராமரிப்பு இன்று கிடந்துள்ளது காணப்பட்டுள்ளது

                    குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கிய வீட்டு உரிமையாளர் தீவிர விசாரணைகளுக்கு

                    உட்படுத்த பட்டுள்ளதுடன் ,இவருக்கு பல்லாயிரம் பவுண்டுகள்

                    தண்டம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    வீட்டை வாடகைக்கு வழங்கி பணத்தை பறிக்கும் இவர்கள்

                    ,அங்குள்ளவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    இந்த சம்பவம் தமிழர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி

                      கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி

                      இங்கிலாந்து புறநகர் பகுதி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்த இருபத்தி மூன்று


                      வயது தாதி ஒருவர் கொரனோ தொற்று பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்

                      அதிக நேரம் பணி புரிந்த நிலையில் இவர் தனது உடலில் பாதியை

                      இழந்து அழகு தேவதையாக வலம் வருவதாக மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்

                      கொரனோ பரவியதால் இவருக்கே அதிக நன்மை கிடைத்துள்ளதாக

                      நெட்டிசன்கள் கிண்டல் செய்திடவும் தவறவில்லை

                      சமூக வலைத் தளத்தில் இந்த பெண்மணி சூப்பர் கீரோனியாகி விட்டார்

                        Posted in இலங்கை செய்திகள்

                        வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்

                        வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்

                        இலங்கை எம்பிலிப்பிட்டிய பகுதியில் சாலையில் பயணித்து

                        கொண்டிருந்த தந்தையும் அவரது 11 வயது மகனும் பிக்கப் ரக

                        வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில பலியாகினர்

                        நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துக்களில் நால்வர் பலியாகி

                        வருகின்றனர் என்ற புள்ளி விபரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

                        காவல்துறையின் அலட்சிய போக்கே இந்த சம்பவங்கள் நிகழ காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை – இராணுவ தளபதி அறிவிப்பு

                          நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை –

                          இராணுவ தளபதி அறிவிப்பு

                          இலங்கையில் பரவி வரும் நோயின் காரணமாக மக்கள் நடமாட

                          தடை செய்ய பட்டுள்ள பகுதிகள் சில நாளை காலை முதல் மக்கள்

                          பாவனைக்கு விடுவிக்க படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி

                          சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

                            Posted in இலங்கை செய்திகள்

                            18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு

                            18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு

                            இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பொது சந்தை ஒன்றில் பணி

                            புரிந்த பதினெட்டு பேருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க

                            பட்ட நிலையில் மேற்படி சந்தை மறு தேதி வரை அடித்து பூட்ட

                            பட்டுள்ளது

                            தற்போது பொது சந்தைக்கு கிருமி நாசினி தெளிக்கும் நகர்வில்

                            சுகாதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?

                              11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?

                              இலங்கை சிறைகளில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு

                              பட்டு அடைத்து வைக்க பட்டிருந்த சுமார்
                              11,000 கைதிகள் ஆளும் கோட்டா அரசினால் விடுதலை செய்ய

                              பட்டுள்ளனர் ,
                              மேலும் எதிர்வரும், வெசாக் தினத்தை முன்னிட்டும் நூற்றுக்கு

                              மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய படவுள்ளனர் என

                              சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                இலங்கையில் அரச இணையதளங்களை முடக்கிய கைக்கர்கள்

                                இலங்கையில் அரச இணையதளங்களை முடக்கிய கைக்கர்கள்

                                இலங்கையில் இயங்கி வரும், மிக முக்கிய அரச மற்றும் அதன்

                                முகவர் இணைய தளங்கள் மர்ம கைக்கிங் நபர்களினால் முடக்க

                                பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

                                இவ்வாறு முடக்க பட்ட இணையங்கள் மீள செயல் பாட்டுக்குக்

                                கொண்டு வரும் நடவடிக்ககையில் தொழில் நுட்ப பிரிவினர் இயங்கி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  தமிழர்களோடு இணைந்திருப்பதே முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது- கண்டு பிடித்த காவிய தலைமைகள்

                                  தமிழர்களோடு இணைந்திருப்பதே முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது- கண்டு பிடித்த காவிய தலைமைகள்

                                  சிங்கள அரச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழர்களோடு முஸ்லீம்கள் இணைந்திருப்பது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களது

                                  அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப்பிரதிநிதி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

                                  தமிழர் தாயகத்தில் எழுச்சி கொண்டுள்ள ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ எனும் அறவழிப்போராட்டதுக்கு, புலம்பெயர்

                                  தமிழர்களின் உறுதுணையினை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த தோழமைக்

                                  கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.

                                  சிங்கள பேரினவாதிகளாலும், கடும்போக்குவாதிகளாலும் தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற செயற்பாடுகளை வன்மையாக

                                  கண்டிப்பதாக தெரிவித்த அப்துல்லா, சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் தமிழர்களோடு

                                  இணைந்து போராடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இணைந்த செயற்பாடு சக்திவாய்ந்தது மட்டுமல்லாது பலமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

                                  யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராகவும் தமது

                                  கண்டனத்தினை தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்த அப்துல்லா, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ பேரணி யாழ்

                                  மண்ணில் கால் வைக்கும் போது தமது சமூகம் அதற்கு ஆதரவாக பங்கெடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

                                  மேலும் இடம்பெயர்ந்த முஸ்லீம்களது மீளகுடியேற்றம் என்பது தமிழ்மக்களது அங்கீகாரத்துடனேயே சாத்தியம் என்பதனை

                                  வலியுறுத்திய அப்துல்லா, வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான சிங்கள

                                  அடக்குமுறையாளர்களிடம் இருந்து முஸ்லீம்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எனவும் அவர் இடித்துரைந்திருந்தார்.

                                  முன்னராக யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம், ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யிலான அறவழிப்போராட்டத்துக்கு

                                  தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததோடு, முஸ்லீம்களை ‘தமிழர்களாக’ அணிதிரளுமாறு அழைப்பும் விடுத்திருந்தது.

                                  இதேவேளை, அப்துல்லாவின் தோழமையினை கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பலரும் வரவேற்றிருந்ததோடு, இரு

                                  சமூகங்களுக்கு இடையிலான இணைந்த செயற்பாட்டுக்கு நல்லதொரு தொடக்கமாக தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளதென குறிப்பிட்டிருந்தனர்.

                                  சமதான காலத்தில் விடுதலைப்புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மானுடத்துக்கான ஒன்றுகூடல் நிகழ்வானது, மானிடத்தின் குரலாக தமிழர்களது உரிமைகளுக்கான

                                  ஒலித்திருந்தனை நினைவூட்டிய நீதிக்கான கனேடிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு பிரதிநிதி திருமுருகவேந்தன்,

                                  தியாகி திலீபன் காலத்தில் யாழ் பொம்வெளி, புதிய சோனகதெரு, ஒஸ்மேனியே கல்லூரி உட்பட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களையும் ஞாபகப்படுத்தினார்.

                                  1957ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழரசுகட்சியினால் மேற்கொள்ளப்பட்ட

                                  கதவடைப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முஸ்லீம்கள் துணைபுரிந்த சம்பவத்தினை குறித்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்

                                  , தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கலா தன்னாட்சி அதிகார சபை வரைவில், முஸ்லீம் மக்களது தனித்துவம் அதில் அங்கீகரிக்கப்பட்டு, சிறிலங்காவின் யாப்பினையும் விட,

                                  அதிகளவான உரிமைகள், அதிகாரங்கள் அந்த வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்ததனையும் குறித்துரைந்தார்.

                                  இவ்வாறு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப் பிரதிநிதி அப்துல்லா அவர்களது தோழமையினை பலரும் உற்சாகத்தோடு

                                  வரவேற்றிருந்ததோடு, தாயக மக்களது எழுச்சிப் போராட்டத்துக்கான தமது உறுதுணையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

                                    Posted in Uncategorized

                                    2009 இற்கு பின்னர் பொங்கிய எழுந்த தமிழர்கள்

                                    2009 இற்கு பின்னர் பொங்கிய எழுந்த தமிழர்கள்

                                    தமிழீழத்தில் சமகாலத்தில் கடுகதியாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுவரும்

                                    தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழீழத்தின் வடக்கும் கிழக்கும் ஓரணியில் திரண்டு,

                                    இலட்சிய வேட்கை மேலோங்க, பேதங்கள் புதையுற தன்னெழுச்சிகொண்டு முன்னெடுக்கும் போராட்டத்தை தமிழர் இயக்கம் வரவேற்கின்றது.

                                    அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாக உறுதி தளராது போராடுவதற்கான உத்வேகத்தையும் இப்போராட்டம்

                                    வழங்கியுள்ளது. தமிழீழத்தில் இடம்பெற்றது, இடம்பெற்றுக்கொண்டிருப்பது திட்டமிட்ட தமிழின அழிப்பு என்ற

                                    கருத்தியலை சமரசமற்று முன்னெடுத்துவரும் தமிழர் இயக்கம் எமது எதிரிகளால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல

                                    சந்தர்ப்பங்களில் எமது நிலைப்பாடு தாயக மக்களின் நிலைப்பாடு அல்ல என்று

                                    பெரும்பாண்மை அனைத்துலக சமூகத்தாலும், ஏன் சில தமிழ் தரப்புக்களினாலும் ஓரம்கட்டபட்ட வரலாறும் இடம்பெற்றது.

                                    ஆனால் அவற்றை எல்லாம் பொய்ப்பித்து இடம்பெற்றது தமிழின அழிப்பு என்று தாயகம் வானதிர இடித்துரைக்கும் பிரகடனமாக

                                    இப்போராட்டம் திகழ்வதுடன், தாயக மக்களின் ஆழ்மன விருப்புடன், அவர்களும் நாமும் ஓர் கோரிக்கையில் ஓர் தாய்

                                    பிள்ளைகளாக பயணிக்கின்றோம் என்ற ஒரு செய்தியை இப்போராட்டம் உலகிற்கு கட்டியம் கூறி நிற்கின்றது. வெடித்த

                                    நிலத்தில், அழித்த நிலத்தில் இனி ஏதும் முளைக்காது என பகல்கனவு கண்ட பலரின் எண்ணங்களில் “ போராட்டம் நீள்கிறது” என்ற வரலாற்றுச் செய்தியை பறைசாற்றியுள்ளது.

                                    இப்போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை தமிழர் இயக்கம் பன்மொழிகளில் அனைத்துலக சமூகத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன் போராட்டத்தினை நிறுத்தும், அடக்கும்

                                    வகையில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் ஐ.நா வின்

                                    பிரதிநிதிகள், உறுப்பு நாடுகள் உற்பட பன்னாட்டு இராசதந்திர மட்டங்களிற்கும் தொடர்ச்சியாக அறிக்கைகளை அனுப்புவதன் ஊடாக தெரியப்படுத்தியவாறே இருக்கின்றோம்.

                                    ஓர் திருப்புமுனையாக அமையும் இப்போராட்டத்தில் தாயக உறவுகள் பெருந்திரட்சிகொள்ளுமாறு வேண்டுவதுடன்

                                    உலகத்தமிழர்களும் தமது தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

                                    வெல்வது உறுதி
                                    தமிழர் இயக்கம்