Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உந்தன் மனதில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
என்னை எண்ணி தானோ
எங்கிராய் இன்று நீயோ

அலைகளின் ஆடலில் மோதல்
மரங்களின் உரசலில் காற்று
உந்தன் உரசலில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ

உன்னை ஏற்று நானே
உலகில் வாழ்வேன் மானே
இதயம் தாரேன் நானே
ஏற்று வருவாய் தேனே

இரவும் இங்கு பகலாகும்
இந்த பூமி சுகமாகும்
இதயம் நாளும் மகிழ்வேறும்
இது தான் வாழ்வு சுகம் ஆளும்

03-08-2022

https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
கவிதை
Posted in கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உந்தன் மனதில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
என்னை எண்ணி தானோ
எங்கிராய் இன்று நீயோ

அலைகளின் ஆடலில் மோதல்
மரங்களின் உரசலில் காற்று
உந்தன் உரசலில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ

உன்னை ஏற்று நானே
உலகில் வாழ்வேன் மானே
இதயம் தாரேன் நானே
ஏற்று வருவாய் தேனே

இரவும் இங்கு பகலாகும்
இந்த பூமி சுகமாகும்
இதயம் நாளும் மகிழ்வேறும்
இது தான் வாழ்வு சுகம் ஆளும்
03-08-2022

https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இறந்து போ

இறந்து போ

சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்

வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்

கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே

துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே

இறந்து போ

பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன

கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன

பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே

பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு

வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா

இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022

உன்னில் நன் என்னை நம்பு
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னில் நான் என்னை நம்பு

உன்னில் நான் என்னை நம்பு

காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்

புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்

எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்

மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்

காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்

கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே

நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே

இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    சிக்கன் கடை நாற்றம்

    சிக்கன் கடை நாற்றம்

    சிக்கன் கடை சிக்கன் கடை
    சிரிப்பு வருகுது
    லண்டனில சிக்கன் கடையில்
    நாற்றம் எழுகுது

    பணத்தை கொடுத்து உணவு வாங்க
    பறந்து வருகிறான்
    பழசை விற்று பணத்தை வாங்கி
    பறந்து திரிகிறான்

    வீடு காரு எல்லாம் இங்கே
    கடனில் ஓடுறான்
    பணக்காரன் என்றே தன்னை
    பந்தா காட்டுறான்

    காரில் இருந்து கமரா பார்த்து
    கடைக்குள் நுழையுறான்
    வேலை செய்யும் தொழிலாளியை
    வெறித்து முறைக்கிறான்

    தொழிலாளி போல வேலை செய்ய முடியல
    தொந்தி வைத்த வயிறால ஏதும் முடியல
    அரை குறையா ஆங்கிலமும் பேசி அலைகிறான்
    அதிலேனும் புலமையில்லா இவனும் கிடக்கிறான்

    பண்டியையும் கோழியையும்
    ஒண்ணா பொரிக்கிறான்
    பள்ளி வாசல் போறவனும்
    பாவம் திண்ணுறான்

    பாபுக்கி கிரில் சிக்கன்
    வாங்கி உண்ணாத
    பழைய சிக்கன் இதுதாங்க
    மறந்து போகாத

    இவர்கள் போல குப்பையர்கள்
    இங்கு யாரும் இல்லையே
    இவரை இங்கு சிறையில் போட
    எவரும் முனையல

    சிக்கன் கடை நாற்றம்

    உழைத்த பணத்தில் வரியை கட்ட
    ஊதி மறைக்கிறான்
    ஊருக்குள்ள முதலாளி
    ஊனம் போகிறான்

    இவரை கண்டால் செருப்பெடுத்து
    இன்றே அடியடா
    இடுகாடு உள்ளே இழுத்து
    இன்றே புதையடா

    கலர் படத்தை செய்கிறவன்
    கலராய் திரிகிறான்
    நாற நாற சிக்கன் விற்கும்
    நாயு போகிறான்

    கோழிக் கடையில் கொஞ்சம் நீங்க
    வேலை செயுங்க
    கொள்ளை அடிக்கும் கொள்ளையரை
    அங்க பாருங்க

    சூடு ஒயிலை வடிக்கிறாங்க
    ரப்பர் வாளியில்
    சுகாதார பாதுகாப்பு
    மறந்து போறாங்க

    சட்டம் வாழும் நாட்டில தான்
    எல்லாம் நடக்குது
    சாட்ச்சி களாய் சொன்னேன் இதை
    எடுத்து பேசுங்க

    லண்டனில சிக்கன் கடை
    கூத்து பாருங்க
    நம்ம தமிழர் கடையில் இந்த
    நாற்றம் கேளுங்க

    பெண்டாட்டி பேரில
    கடைகள் பாருங்க
    பொறுப்பற்று திரியும்
    இந்த ஊழல் வாதிங்க

    சொலவதெல்லாம் உண்மை என்றே
    சொல்லி போறெங்கே
    சொன்னதில பொய் இருந்தா
    சொல்லி திருத்துங்க …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 31-07-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    எல்லாம் உன்னால் உனக்கு சமர்ப்பணம்

    எல்லாம் உன்னால் உனக்கு சமர்ப்பணம்

    பத்து விரல் மீட்ட
    பாடுதடி வீணை – உன்
    பா வாடை போல
    ஆடுதடி மேடை

    தட்டி தாளம் போட – நீரில்
    தாமரையும் ஆட
    வற்ற வைக்க வானம்
    வந்து வெயில் போட

    கச்சேரி நடக்குது – இங்கு
    காதல் ஒண்ணு பிறக்குது
    உள்ளம் எல்லாம் மகிழ
    உருண்டு வாயு பாடுது

    எனக்கு பிடிச்ச மெட்டை – நீ
    எடுத்து இங்கு பாட
    பூமி அதிருது – இந்த
    பூ கோளம் சூளறுது

    நல்ல வரி போட
    நாவும் எழுந்து பாட
    ஆடுதிங்கு மேடை
    உன் பா வாடை போல …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 30-07-2022

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      கோபம் தவிர்

      கோபம் தவிர்

      என்னை அடித்தாயா – நீ
      என்னை அடித்தாயா
      எரிமலை ஒண்ணை – நீ
      ஏறி அணைத்தாயா ..?

      உச்சி வெயில் போல – என்
      உள்ளம் எரியுதே
      கந்தல் உடல் தேயுதே – உன்
      கதை கேட்டு விழி உருகுதே

      எத்தனை முறை என்னை இழிப்பாய்
      எனக்கு பதில் சொல்லாய்
      தோற்று போனது நீயே – இந்த
      தோல்வி எல்லாம் போலியே

      உள்ளம் மாசடைந்தால்
      உயிரும் வாழ்ந்திடுமா
      கள்ளம் மனம் படுத்தால்
      கருணை பிறந்திடுமா

      ஏதும் செய்தும் இன்றென்ன
      எல்லாம் வீண் தானே
      என்னை வீழ்த்த முடியாது
      ஏற்று தெளிந்தாயே

      கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
      கொடி நாட்டி ஆள்வாயே
      கொள்கை நட்டு எழுந்தால்
      கோட்டை ஆள்வாயே …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 28-07-2022

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னை தா எனக்கு

        உன்னை தா எனக்கு

        உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
        உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
        வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
        வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு

        நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
        நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
        இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
        இதயமதை ஓடி வந்து தந்துவிடு

        நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
        நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
        மூச்சிழக்க பேசும் உன் உதடு
        முத்தமிட நீ எனக்கு தந்துவிடு

        உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
        உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
        உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
        உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் 27-07-2022

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          நீயே என் கவிதை

          நீயே என் கவிதை

          இன்றொரு கவிதை கண்டேன்
          இதயம் மகிழ்ந்து நின்றேன்
          நுண்ணுயிர் போல நுழையும் – உன்
          நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்

          விண்ணது எழுந்து ஆடும்- உன்
          வீரிய குரலது கண்டால்
          பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
          பொடி படும் தமிழது கண்டால்

          பாவையர் கூடி வந்தால் – அட
          பாவும் உனக்குள் மோதும்
          பாவையர் கூடி பாடின் – அட
          பகலும் உனக்குள் இருளும்

          வைர முத்து குரலோ
          வந்து காதில் வீழ்ந்தால்
          துள்ளி ஆடும் புல்லும் – மழை
          துளியை தூவும் வானம்

          கவியின் அழகும் நீதான் – அந்த
          கடலின் அலையும் நீதான்
          மொழியின் மலர்வு நீதான் – உன்னை
          மொழிந்தேன் இன்று நான்தான் …!

          வன்னி மைந்தன் ( ஜெகன் )
          ஆக்கம் 17-07-2022

          வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

          உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

          ஊரும் கதற உறவும் கதற
          உன்னை தேடுறேன் – நீ
          உள்ளம் தந்தால் போதும் நானும்
          உயிரே வாழுவேன்

          ஆசை உன்னில் வைத்து விட்டேன்
          அதனால் பாவமே – என்
          ஆயூள் முடிவை நீயே சொல்வாய்
          அன்பே தாங்குவேன்

          நீரை போல ஓடி வரும்
          நீளம் தாண்டுவேன்
          நீயும் வந்தால் போதும் – இந்த
          நிலவை வாங்குவேன்

          காடும் மலை கடந்து வந்தால்
          காட்சி காணலாம்
          கடைசி வரை வாழும் வாழ்வில்
          நீட்சி பேணலாம்

          உன்னில் ஒன்றை மட்டும் தானே
          உயிரே கேட்க்கிறேன்
          உன் உள்ளம் தந்தால் போதும்
          உன்னை தாங்குவேன் …!

          வன்னி மைந்தன் ( ஜெகன் )
          ஆக்கம் 08-06-2022

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            இவளுடன் வாழ விடு ..!

            இவளுடன் வாழ விடு ..!

            காத்திருந்தேன் நேற்று வரை
            காணவில்லை நீ மயிலே
            கண் விழித்து நானெழுந்தேன்
            கண்ணெதிரே நீ குயிலே

            முந்தினத்து கற்பனைகள்
            முத்த மழை பொலிந்து விட
            வெட்கத்தில நீ தவித்தாய்
            வேர்வையில உடல் குளித்தாய்

            பக்கத்தில நீ இருக்க
            பகலிரவு தெரியவில்லை
            சொர்க்க மதாய் நீ விளங்க
            சோகமதை காணவில்லை

            இறக்கும் வரை உன்னுடனே
            இதயமே இருக்க வேண்டும்
            இத்தனை நாள் வேண்டுதலை
            இறைவா நீ தர வேண்டும் ..!

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் 19-05-2022

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              தமிழன் அழிந்த நாள் ….!

              தமிழன் அழிந்த நாள் ….!

              நந்தி கடலே நந்தி கடலே
              நீயும் அழுவதா
              நித்தம் குமுறி மடிவதா – நீயும்
              நித்தம் குமுறி மடிவதா

              ஆண்டு பல ஆகிப் போச்சு
              ஆனாலும் என்ன ஆச்சு
              உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
              உணர்வுகளும் செத்து போச்சு

              வல்லரசு ஆதிக்கம் தான்
              வாலாட்டுது எங்கும் தான்
              பலம் இழந்தால் இழிவாச்சு
              பாதணியாய் கிழிவதாச்சு

              படு கொலையை புரிந்தாரை
              பாடையிலே ஏற்றலையே
              தீர்ப்பெழுத மறந்தவரே
              தீர்வென்ன கூறாயோ

              ஆதிக்க இன வெறியான்
              அரசாண்டு மகிழ்வதுவோ
              இனம் அழித்தான் இனவெறியன்
              இன்றாழ விடுவதுவோ

              முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
              முன் தீர்ப்பு எழுதிவிடு
              நாம் வாழும் நாடொன்றை
              நலமுடனே தந்து விடு …!

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் 14-05-2022

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!

                இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!

                வீழ்ந்தவர்கள் நாமென்று
                விலாசம் தந்தவர்கள்
                வீழ்கின்ற காலமிது
                வீசுது காற்று நன்று

                உலகோடி தினம் அன்று
                ஊதி திரிந்தவர்கள்
                ஊர் திரண்டு விரட்டும் காலம்
                ஊடகத்தில் தினம் இன்று

                நடித்து வெடித்து
                நகைச்சுவை குழைத்து
                கழித்து திரிந்தார்
                காலடியில் கல்லடி

                படித்து முடித்தார்
                பக்குவம் தொலைத்தார்
                மன்றில் ஏறி
                மறைகழண்று வீழ்ந்தார்

                அடித்து பிடித்து
                ஆட்சி அமைத்தார்
                அந்தோ பார் – இன்று
                ஆட்சி கவிழ்கிறது

                வென்றவர் தாமென்று
                வெறியோடு அலைந்தால்
                காற்சட்டை கிழியும்
                கல்லறை அழைக்கும்

                விதைக்கும் முன் விதையின்
                விளைச்சல் தெரிந்தால்
                வாழ்வு செழிக்கும்
                வழியெங்கும் மணம் வீசும்

                இன்று பார்த்தாயா
                இராவணன் வருகிறான்
                துட்டகை முணுக்களே
                தூரே ஓடிவிடும் …!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் 10-04-2022

                வன்னி மைந்தன் கவிதைகள்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  கத்திகள் எழுகிறது …!

                  கத்திகள் எழுகிறது …!

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                  திண்ணையில உட்க்கார்ந்து
                  தீங்குரைக்கும் நெஞ்சுகளே
                  குஞ்சுகளை காணாது
                  குருவிகள் அலைகிறதாம்

                  பஞ்சு வெடிக்கின்ற
                  பங்குனி வெய்யிலில்
                  கஞ்சிக்கு வழியில்லா
                  கால்கள் நடக்கிறதாம்

                  இதயம் இருக்கென்று
                  இன்றமர்ந்து பேசும்
                  கோடிகளில் கொஞ்சத்தை
                  கொட்டி கொடுங்கள்

                  கேடில்லை தான்
                  கேட்பாரும் இல்லைத்தான்
                  நாட்டை தின்றுவிட்டு
                  நம் வயிற்றில் அடித்தீரே

                  கோடிகளில் கொஞ்சத்தை
                  கொட்டி கொடுங்கள்
                  பாவ சுமையில்
                  பாதி கழுவட்டும்

                  ஆளை கொன்று
                  அரியணை பிடித்தீர்
                  அம் மக்கள் விழித்தார்
                  ஆட்சி துறப்பீர்

                  கஞ்சா காடழிக்க
                  கத்திகள் எழுகிறது
                  நாடு சுத்தமிட
                  நல்புரட்சி வெடிக்கிறது …!

                  வன்னி மைந்தன் ( ஜெகன் )
                  ஆக்கம் 31-03-2022

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

                    பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

                    குப்பையில மிதக்குதடா குளிர் பானம்
                    குளிரூட்டி இல்லாது இவை காணம்
                    குசினியில சமையலது பெண் பாவம்
                    குழாயில காஸ்இல்லா அவை சாபம்

                    விறகெரிந்த காலமது மறந்தாச்சு – இன்று
                    வீடெல்லாம் மீள இவை வந்தாச்சு
                    ஆடம்பர வீடெல்லாம் அவிழ்ந்தாச்சு
                    அவை சேர்த்த பொருள் எல்லாம் வீணாச்சு

                    கோட்டையிலே ஆண்டவரும் வீழ்ந்தாச்சு
                    கொடும்பாவி எரியும் நிலை வாந்தாச்சு
                    வீதியில மக்கள் எல்லாம் கூடியாச்சு
                    விதி மறந்தார் சதிக்குள்ளே வீழ்ந்தாச்சு

                    வாசல் படி கூட்டுமாறு வந்தாச்சு
                    வாய்க்கரிசி போட வந்தான் சொன்னாச்சு
                    தன் பலத்தில் வாழ்வேன் என்றார் என்னாச்சு
                    தமிழர் பலம் வேண்டும் நிலை என்றாச்சு

                    நாறடித்தான் ஆட்சி இவன் என்றாச்சு
                    நாட்டை விட்டு ஓடும் நிலை என்றாச்சு
                    நம் நாட்டை நாம் காக்க தீர்வு வேண்டும்
                    நாம் தமிழர் வந்தால் மட்டும் நாடு எழும்

                    நீர் மூலம் ஆக்கினாய் தமிழரைத் தான்
                    நிர்வாணமாய் ஆனாய் நீ கேவலம் தான்
                    சிங்களவர் தமிழர் எல்லாம் ஓர் இனம் தான்
                    சிறை வைத்தான் ஆட்ச்சியாளன் கொடியவன்தான்

                    ஏறி அன்று ஆட்டம் போட்டாய் ஏன் ராசா – இன்று
                    எமன் வந்தான் வாசலிலே ஏன் ராசா
                    நாடு விற்றாய் சீனாவிடம் ஏன் ராசா
                    நாட்டை விட்டு ஓட வைப்பான் பார் ராசா

                    பிரபாகரன் ஆண்ட காலம் பொற்காலம்
                    பிடரி பட சொல்லுதடா இக்காலம்
                    பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
                    பட்டியணியால் சாக வேண்டாம் நாங்க தாங்க ..!

                    வன்னி மைந்தன் ( ஜெகன் )
                    ஆக்கம் 29-03-2022

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

                      இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

                      இளமையில உன் ஏக்கம்
                      இன்றே தனித்து விடு
                      முதுமையில முதலிரவு
                      முழு ஏக்கம் தனிக்காது

                      வெறுமையில நீ இருந்து
                      வெளியேற்றி விட்டவைகள்
                      முதுமையில தேறாது
                      முதுகெலும்பு தாங்காது

                      வறுமை என்ற கூட்டுக்குள்ளே
                      நீ தொலைத்த வாழ்விருக்கே
                      மீள் எழுச்சி கொள்ளாது
                      மீள உன்னை கெஞ்சாது

                      வாலிபத்து அகவையில
                      வாழ்க்கை பட வேணுமடி
                      வரப்புயரும் நீர் போல
                      வாழ்வு அமைய வேணுமடி

                      கோடி பணம் சேர்த்து வைத்து
                      கோட்டையிலே நீ இருந்தும்
                      காணப்போவது ஏதுமில்லை
                      கண் மலர்ச்சி ஏதுமில்லை

                      இளமையில இல்லறத்தை
                      இனிதே நீ கலந்து விடு
                      இல்லையது தப்பி விடின்
                      இறந்தே நீ மாண்டு விடு ..!

                      வன்னி மைந்தன் ( ஜெகன் )
                      ஆக்கம் 06-03-2022

                      வன்னி மைந்தன் கவிதைங்கள்

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

                        கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

                        அழுகுரல் ஓசை வானை கிழிக்க
                        அவலம் நடக்கிறது
                        ஆடி வரும் குண்டு துளைத்து
                        அரை உடல் கிழிகிறது

                        போரும் விரட்ட போக்கிடம் கலைய
                        பொழுதும் விடிகிறது
                        போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
                        பெரும் நகர் வீழ்கிறது

                        தேடி சேர்த்த பொருளில் பாதி
                        தெருவில் மிதக்கிறது
                        தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
                        தேம்பி அழுகிறது

                        குஞ்சும் கதற பிஞ்சும் பதற
                        குரல் வளை அறுகிறது
                        கூவி திரிந்தவர் கூடுபிரிய
                        குறட்டை விடுகிறது

                        உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
                        உனக்கு கவலையில்லை
                        ஊரைநம்பி ஊதி திரிந்தால்
                        உனக்கு இழி நிலையே …!

                        வன்னி மைந்தன் ( ஜெகன் )
                        ஆக்கம் 05-03-2022

                        உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          உன் காதலை சொல்லிடு …!

                          உன் காதலை சொல்லிடு …!

                          நான் உலாவும் வீதியிலே
                          நாளை நீயும் உலவிடு
                          நானும் நொந்த நாளினையே
                          நகல் எடுத்து சென்றிடு

                          ஆள் உலாவும் வீதியிலே
                          அமைதியானால் ஏற்று விடு
                          அன்பு உலாவும் வீதியிலே
                          அமைதி ஆனாய் செத்திடு

                          வான் நிலவு வீதியிலே
                          வந்து விட்டால் பார்த்திடு
                          வந்து நின்ற செய்தியென்ன
                          வாசல் வந்து சொல்லிடு

                          ஏற்று விட்டால் என்னன்பே
                          ஏறி வந்து சொல்லிடு
                          என்னுறக்கம் தொலைத்த நாளை
                          எழுதி வைத்து சென்றிடு

                          உன்னுறக்கம் நீ தொலைத்தால்
                          உள்ளம் என்னை ஏற்றிடு
                          உன் உளமதில் யானமர்ந்தேன்
                          ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 26-12-2021

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            இதுதான் மனித வாழ்வு பார் …!

                            இதுதான் மனித வாழ்வு பார் …!

                            ஊருக்குள் வேட்டை நடக்குது பார்
                            உரையாடல் வீதி கேட்குது பார்
                            ஆளுக்குள் மோதல் வெடிக்குது பார்
                            ஆயிரம் புகார் கொட்டுது பார்

                            முன்னைய பகை போராடுது பார்
                            முகங்கள் இங்கே கிழியுது பார்
                            தன் மானம் இங்கே தவறுது பார்
                            தறிகெட்டு வார்த்தை கொட்டுது பார்

                            தானே மேலென கொத்துறார் பார்
                            தவறுகள் இங்கே கொட்டுறார் பார்
                            வீழ்வேனோ தானென விரட்டிறார் பார்
                            வீழ்ந்திட்டார் இப்போ மறந்திட்டார் பார்

                            சிந்தையில் தவறு சிரிக்குது பார்
                            சீக்கிரம் உன்னை மாற்றும் பார்
                            முன்னைய நிகழ்வு தவறுதான் பார்
                            மூளை கூறும் பொறுத்து பார்

                            பக்குவம் உன்னில் படருது பார்
                            பகையிலும் பாசம் பொழியும் பார்
                            போர்குணம் இன்று செத்தது பார்
                            பொற்குணம் உன்னில் மலருது பார்

                            இது தான் முதுமை இன்றுபார்
                            இளைப்பாறும் காலம் இதுவே பார்
                            தவறுகள் திருத்தும் அகவை பார்
                            தவறா மனிதம் இதிலே பார்

                            கடந்ததை எண்ணி வருத்தும் பார்
                            கல்லான மனமும் கனியும் பார்
                            இதுதான் பக்குவ முதுமை பார்
                            இதுதான் மனித வாழ்வு பார் …!

                            வன்னி மைந்தன்
                            ஆக்கம் 25-12-2021