Tag: இலங்கை
அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்
அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா ன்மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர்
உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
இவ்வேளை பாரளுமன்றில் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இதை கருத்தை உரைத்துள்ளார்
எனினும் இதுவரை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்கள் பதிவை
விலகவில்லை என்பது குறிப்பிட தக்கது
சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும்
மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை
முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய பொலிஸார் தலைமறைவாக இருந்த 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு, தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை
(18) அன்று கப்பம் கோரிய சந்தேக நபரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரை கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்தனர்.
அதன் பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 31
வயதுடையவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்
துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை
மேற்கொண்ட பின்னர் நேற்று (19) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான சாய்ந்தமருது
பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை
உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை ! தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !!
ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை ! தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !!
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவுவதற்கு,
அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றலுடன் ஓர் பொறிமுறையொன்றினை உருவாக்குமாறு தமிழக அரசினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று கடிதமொன்றினை அனுப்பியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப்
போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி உதவிப்பொறிமுறை
உருவாகும் நிலை தோன்றின் புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகத் தமிழ் மக்கள் இணைந்து ஈழத்தமிழ் மக்களை இன்றைய நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான சிங்கள அரசாங்கங்களின் இனவழிப்புப்போரும், பெரும் இராணுவச் செலவீனங்களும், தவறான கொள்கைளும், ஊழல் நிறைந்த நிர்வாகமும், கொரோனா உலகப்பெருந்தொற்று உருவாக்கிய தாக்கங்களும்
இணைந்தே இப்பெரும் பொருளாதார நெருக்கடியினை உருவாக்கியுள்ளதெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழர் தேசம் சிங்கள பேரினவாத அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பொருhளார நெருக்கடிக்,
இனவழிப்புப்போரால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு இன்றைய நெருக்கடி இரட்டைச்சுமையாய் அமைந்துள்ளளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்கான ஒரு நேரடி உதவிப்பொறிமுறையினை உருவாக்கும் முயற்சிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை தாங்குமாறு கோரியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், இப்பொறிமுறையினை உருவாக்கும்
முயிற்சியினைக் காலதாமதம் இன்றி ஆரம்பிப்பது ஈழத்தமிழ்மக்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தரும் எனத் nதிவித்திருந்ததோடு, தமிழ்நாடு அரசின் சார்பில்
ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை
அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும்
முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கோட்டா போடா வெளியே மக்கள் கோசம் – வீடியோ
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக காலிக முக திடலில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில்
மூவின மக்களும் இணைந்து ஒன்றுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த தன்னியல் எழுசி ஆளும் அரசை கதிகலங்க வைத்து வருகிறது ,அங்கு முழக்க பட்ட கோசங்களை இங்கே காணுங்கள்
மக்களுக்கு எதிராக இராணுவம் செயல்படவில்லை – இராணுவ தளபதி
மக்களுக்கு எதிராக இராணுவம் செயல்படவில்லை – இராணுவ தளபதி
இலங்கையில் அரசுக்கு எதிராக நடத்த பட்டு வரும் போராட்டங்களில் இராணுவம்
மக்களுக்கு எதிராக செயல் படவில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நாம் மேலும் மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாக சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தெரிவித்துள்ளார் ,
ஊந்துருளியில் வருகை தந்த இராணுவத்தினர் மக்களை மிரட்டி சென்றமை இங்கே குறிப்பிட தக்கது
தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்
தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்
இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது நாடு
பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் வெடித்துள்ளது
தற்போது மேலும் எரிபொருள் விலை அதிகரிக்க பட்ட நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க பட்டுள்ளன
இந்த சேவைகள் முடக்கத்தினால் மக்கள் போக்குவரத்து பாதிக்க பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டுள்ளது ,
இதனை அடுத்து போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது
தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்
தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்
இலங்கையில் ,இன்றும் ,நாளையும் மின்வெட்டு மேலும் மூன்று மணித்தியாலங்கள்
மேலாக முடக்க படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
இதனால் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளதுடன், உள்ளூர் உற்பத்தி சேவைகள்
பாதிக்க பட்டுள்ளது ,இதனால் பொருளாதாரம் மேலும் கீழ் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் மக்கள் கொதிப்பில்
உறைந்துள்ளனர்
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு
இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையினை சீர் செய்திடும்
நோக்குடன் சர்வதேச நாணய நிதியத்துடன்
இலங்கை நிதி அமைச்சர் குழு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது
இதன் பொழுது உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக
பேச பட்டதுடன் இலங்கைக்கு மேலும் உதவிடும் செயல் திட்டங்கள் முன் வைக்க பட்டுள்ளது
கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு
கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு சீனி இறக்குமதியை ஏற்படுத்தி பல மில்லியன் டொலர் பணத்தினை
சம்பாதித்து வந்துள்ளது
இதனை அடுத்து தற்போது இவ்விதம் மோசடி புரிந்த நபர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு
எதிராக வழக்கு தாக்குதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்ற நிலையில்
கோட்டா அரசின் சீனி வியாபாரம் அம்பலத்திற்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது
எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில ஆளும் கோட்டா அரசினால் மீளவும் தற்போது
எரிபொருள்விலை அதிகரிக்க பட்டுள்ளது
இந்த எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கொதிப்படைந்து போராடி வருகின்றனர்
இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது கோட்டா அரசு பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், மன்னிப்பு கேட்க வேண்டும்-மனோ எம்பி
20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
- தமுகூ தலைவர் மனோ எம்பி
20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இந்நிலையில் 20ம் - திருத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அதீத அதிகாரங்களை கொடுத்து, அதை நியாயப்படுத்தியும் பேசிய எம்பீகள், அதே கைகளை உயர்த்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் கோதாபய ராஜபக்சவின் சர்வதிகாரம் வீழும் என இவர்கள் கற்பனையிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை
பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இதை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றும் யோசனையும் தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு கூறினார். எனினும் முழுமையாக
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அகற்றப்பட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திட வேண்டிவரும் என்பதால், அதற்கு நாடு இன்றைய சூழலில் தயார் இல்லை என்பதால்,
முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்சமயம் அகற்ற பெரும்பாலான கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றப்பட்டால்,
விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்த மாகாணசபைகள் ஆகியவற்றையும்
அகற்ற வேண்டி வரும் என சில ஆளும்கட்சி பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்புடைய நிலைப்பாடுகள் இல்லை.
தமது நிலைப்பாடும் இதுவே என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரிசாத் பதுர்தீன்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் என்னிடம் தெரிவித்தார்கள்.
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முகக்கவசம்
தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானது
இந்த நிலையில் தற்பொழுது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர்ந்த
இடங்களில் இவை அவசியம் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு
தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.
ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற
உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.
அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி
விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த
நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்
அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்
கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி
ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்
தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி
பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு எதிராக காலிமுக திடலில்
போராட்டத்தில் கலந்து கொண்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இராணுவ,காவல்துறையை அடக்கி எச்சரிக்கும் முகமான மிரட்டல் இதுவாக பார்க்க படுகிறது
புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்
புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்
இலங்கையில் நடந்து முடிந்த புத்தாண்டு தின கொண்ட்டாட்டத்தில் சிக்கி
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 118 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
போலீசார் பாதுகாப்பு பல படுத்த பட்ட வேளையிலும் இந்த விபரீதங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா
இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா
இலங்கைக்கு இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது
இதற்கு அமைவாக இந்த நிதி உதவி வழங்க படவுள்ளது
கடனை வழங்கியே இலங்கையின் பொருளாதாரம் இந்த நிலைக்கு மாறிட காரணமாக விளங்கியது
தற்போதையை நெருக்கடியை நிவர்த்தி செய்திட இலங்கை முன்னெடுக்கும் மீளவும் கடன் பெறும்
நிலை இவ்வாறு நீண்ட கால பொருளாதார நெருக்கடியை தணிக்கும் என கேள்வி எழுப்ப பட்டுள்ளது
கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்
கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்
இலங்கை அளவும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பிரதமர் மகிந்த சுள்ளிட்டா ராஜபக்ஸ
குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என
அங்குகூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்
மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து பதவி விலக மறுத்து வரும் கோட்டாவுக்கு
எதிராக நாளுக்கு நாள் மக்கள்
போராட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது







