Tag: இலங்கை
இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்
இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்
இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் ஓமான் நாட்டில்
பலியாகியுள்ளார்
அங்கு இவருக்கு ஏற்பட்ட மர்ம நோயினால் பீடிக்க பட்ட நிலையில்
மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு
சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு
இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில்
சர்வதேச நாணய நித்தியதுடன் இலங்கை பேச்சில் ஈடுபடுகிறது
நான்கு பில்லியன் டொலர் தேவைப்பாடு உள்ள நிலையில் இந்த பேச்சு இடம்பெற
உள்ளதாக புதிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது ஆளும்
அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்
செயல் இழந்த பொருளாதரத்தை மீள கட்டி எழுப்பி அதற்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவராத்தையில் ஈடுபடடார் ,
இதில் சஜித்,சுமந்திரன்,பதியுதீன் உள்ளிட்ட தமிழ் முஸ்லீம் காட்சிகள் பிரதானிகளும் கலந்து கொண்டனர்
கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு
கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு அவர்கள் கொள்ளையடித்த மில்லியன் டொலர்
பணத்தை மீள திருப்பி வழங்க வேண்டும் என சிங்கள தமிழ் முசுலீம் மக்கள்
கோசங்களை எழுப்பியவாறு காலிமுக திடலில் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
சித்திரை புத்தாண்டு தினத்திலும் மக்கள் அதனை வீடுகளில் நிகழ்த்தாது அதே ஆர்ப்பாட்ட நிகழ்வு இடத்தில்
திரண்டு கொண்டாடி வருகின்றனர் ,கோட்டா வீடு போ என்ற கோசம் வானை பிளந்து மக்கள் போராட்டம் தொடர்கிறது
தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்
தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்
கொழும்பு தமிழ் சங்கத்தில் பூங்கோதையின் “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டில் எனது உரை
கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார்.
“யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.”
“உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக போராடியவங்க.”
“இந்த உணவு, மருந்து… இல்லாம நம்ம தமிழர், யுத்த காலத்தில் வடக்கில், பொருளாதார தடைல வாழ்ந்தாங்க.”
“மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர், யுத்தம் இல்லாமலேயே அப்படி வாழ்றாங்க.”
“ஆனாலும் கொள்கை அடிப்படையில் நாம் கோதாவுக்கு எதிராகத்தான் நிற்கிறோம். வேறு எவரையும் விட அதிகமாக நிற்கிறோம்.”
“நாளைக்கு உணவு, கேஸ், கிடைத்தால் நீங்க போராட்டத்தை கைவிட்டு போயிடுவீங்கன்னு நமக்கு சந்தேகம் இருக்கு.”
“நம்ம மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்தாங்க.”
“போராளிகள் செத்தார்கள். அது பிரச்சினை இல்லை. அவர்களின் சாவு, வீரச்சாவு.”
“ஆனால் எமது அப்பாவி மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதை மறந்து நீங்கள், பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடினீர்கள். இது உண்மை.”
“ஆகவே, எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.”
“நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.”
“அதுவரைக்கும் நாம் “நிறமில்லா மனிதர்” களாகவே இருப்போம்.”
“இது தலைநகர மாவட்ட எம்பியான எனது நிலைப்பாடு.”
நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு
நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்
போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை
சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்
அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி
(வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்
சடலம் கற்பாறை
ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேச தயார் – மகிந்தா அழைப்பு
ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேச தயார் – மகிந்தா அழைப்பு
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில்
தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில்
கலந்துரையாடுவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு
அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனையாம் – நம்பிட்டம் போங்க
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி. எப்படியாக
இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.
சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ்
மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன மாதிரியான
ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.
இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும்
பாதிக்கப் போகிறது. அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான
வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம். எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள்,
செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.
இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக்
கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார். அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏனெனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார். சர்வதேச நாணய நிதியமும்,
மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.
நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம். எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.
தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம். மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக
கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது.
இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான
ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல
பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்
என நான் யோசிகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர்
பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள். அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான்
கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு
வந்தால் சில விடயங்களில்
முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை
கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை
சீனாவிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றே இலங்கை அதனை மீள் செலுத்த முடியா
நிலையில் சிக்கி தவித்து வருகிறது .அழகான பாலங்கள் ,வீதிகள் என இலங்கையின் யுத்த பூமி எங்கும் காட்சி அளிக்கிறது
அந்த அபிவிருத்திக்கு பெற்ற கடனை மீள வழங்க முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது
இவ்வேளை இலங்கையின் நிலையினை புரிந்து மேலும் கடன்களை அள்ளி வழங்க
காத்திருக்கிறோம் ஓடிவாங்க என சீனா அழைக்கிறது ,ஆனால் இலங்கையோ வாங்கிட தயக்கம் காட்டுகிறது
இப்போது கழுத்தளவு மூழ்கியுள்ளது ,மேலும் வாங்கினால் அப்டியே மூழ்கிவிடுவார்கள் ,அந்த சாவு மணி அடிக்கவே சீனா அழைக்கிறது
களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி
களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி
இலங்கையில் சந்திரிக்கா வந்திருக்கா சமாதானம் தந்திருக்க என்ற வாசகங்கள் 1994
ஆண்டுகளில் எங்கும் ஒலித்தவை ,அதே அம்மணி நவாலி செண்பட்டீஸ் ஆலயம் முதல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்
எனினும் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டவர் ,இன்று அதே அம்மணி ஜனாதிபதி
தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி அரசை அமைக்கும் நகர்வில் ஈடுபடுகிறார்
இவருக்கு மேற்குல நாடுக்ளின் பலத்த ஆதரவு உள்ளது ,அம்மணி தனது விட்ட அதிகாரத்தை பிடித்து நாட்டில் நிரந்த தெரிவை மேற்கொள்ள புது முயற்சிகளை
மேக்கொள்ள முனைகிறார்
இது சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு
உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு
உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் அருகில் உள்ள நகரம் ஒன்றில் பெரும் குழிதோண்டி
புதைக்க பட்ட நிலையில் 1200 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
ரசியா உக்கிரேனில் பெரும் மனித பேரழிவை நடத்தியுள்ளது எனவும் இவர்கள் புரிந்த
போர்குற்றத்திற்கு தண்டனை
வழங்க வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது
காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை
காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை
இலங்கை ஊர் காவல்துறை பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் காதலி தற்கொலை
செய்துள்ள நிலையில் அதனால் மனமுடைந்த 22 வயது காதலன் தற்கொலை செய்துள்ளார்
அதிக மன உளைச்சலில் இருந்த இவர் இந்த தவறான முடிவினை மேற்கொண்டு காதலி
சென்ற இடத்திற்கு பயணித்துள்ளார்
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்
மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்
மைத்திரி கட்சியில் அங்கம் வகித்த சாந்த பண்டார கோட்டாவின் கட்சியில் இணைந்து
விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்
இவருக்கு பேச ப்பட்ட டீலில் அதிக தொகையை பெற்றுக்கொண்டு கட்சி
தாவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சீற்றம் கொண்ட மைத்திரி அவரை தமது கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்
கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்
கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்
இலங்கை இரத்தினபுரி பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 82
வயது கணவன் மற்றும் 75 வயதுடைய மனைவி ஆகியோரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க
பட்டுள்ளன ,இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்த்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்
யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ரவுடிகள் கும்பல் வீடு புகுந்த்து தரித்து நின்ற ஆட்டோ ஒன்றினை எரித்து
சென்றுள்ளனர்
இந்த தாக்குதலை நடத்திய ஆறுபேர் கொண்ட வன்முறை ரவுடி கும்பல் அங்கிருந்து
தப்பி சென்றுள்ளது
மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கொதித்துள்ள மக்கள் இவ்வாறான ரவுடிகளை மடக்கி பிடித்து கட்டி வைத்து அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்
கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்
கோட்டாவின் ஆட்சிக்கு எதிராக கலந்து கொண்டு பேரணியில் பாட்டு பாடி வந்த
ஷிராஸ் யூனுஸ் என்ற பாடகர் திடீர் மாரடைப்பால பலியாகியுள்ளார்
இந்த சம்பவம் அங்கு கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்
யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த
ஏழுவயது சிறுவன் ஒருவன் வேகமாக வந்த லொறி மோதியதில் அதன் சக்கரத்தில்
நசிந்து பலியாகியுள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாது வாகன ஓட்டிகள் செல்வதால்
இவ்விதமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது
ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க எம்பீகளை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும்-மனோ
ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க எம்பீகளை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும்
- மனோ கணேசன் யோசனை
ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி,
ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால்
சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்பீகளில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்பீகள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு
வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.
முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும் என தமிழ்
முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
நம்பிக்கை இல்லா பிரேரணையை விட இதுதான் ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப கோரும் கோஷத்தின் அடிப்படை
இதுதான். எமது கட்சி உட்பட, இந்நாட்டில் எதிரணி அரசியல் கட்சிகள் கோருவது இதைதான். சமூக சிவில் அமைப்புகள் கோருவது இதைதான். வெளியே தெருக்களில் போராடும் மக்கள் கோருவதும் இதைதான்.
நம்பிக்கை இல்லா பிரேரணையையிலும் கையெழுத்திடுவோம். அதையும் கொண்டு வருவோம். ஆனால், அதைவிட 21ம் திருத்தத்தை கொண்டு பிரதானமாக கொண்டு வருவோம்.
நம்பிக்கை இல்லா பிரேரணை என்பது ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரானது. அது வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் கீழேயே அமைய வேண்டும். அதை செய்ய முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது.
ஏனெனில், ஜனாதிபதியின் சொந்த பொதுஜன முன்னணி கட்சி அமைச்சரவையே இவருக்கு கீழே செயற்பட முடியாவிட்டால், எதிரணியும் பங்கு பற்றும் காபந்து
அரசாங்கம் எப்படி இவருக்கு கீழே செயற்பட முடியும்? அப்படியானால், அது “காபந்து” அரசாங்கமாக இருக்காது, “கால்பந்து” அரசாங்கமாகவே இருக்கும்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை, ஆதரிக்காமல், தமது மனசாட்சியை மறந்துவிட்டு பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்கும் எம்பீகளை
அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். வெளியே போராடும் மக்களும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கை. ஆகவே அவர் வீட்டுக்கு
போகும் போது, 21ம் திருத்தத்தை, தமது மனசாட்சியை மறந்துவிட்டு எதிர்த்து வாக்களிக்கும் எம்பீகளையும் அவருடன் துணைக்கு அனுப்பி வைக்கலாம்.
மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்
மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் நெருக்கடியில் சிக்கி
தவித்துள்ள நிலையில் சில நாட்களில் மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளார்
என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இவரது இந்த உரையி பின்னர் மக்கள் மேலும் கொதித்து எழுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது
டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்
டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்
இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் நீண்ட வரிசையில் ஒரு மணிநேரமாக காத்திருந்த
நபர் ஒருவர் மரணமாகியுள்ளார்
இவருடன் இதுவரை நான்கு பேர் இவ்விதம் மரணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிட தக்கது







