Tag: நல்லூர்
நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது
நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது
நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது ,நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி
ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்
இதன்போது, யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.
விசாரணையில், குறித்த யுவதி கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்
யுவதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று (21) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆறுமுக பெருமான் வள்ளி
இன்று காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் காலை 7.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி
காலை 8.30 மணிக்கு இருப்பிடத்தை அடைந்த தேர், காலை 09.15 மணியளவில் ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி
பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 10.30 மணிக்கு ஆறுமுக பெருமான் ஆலயத்திற்குள் சென்றார்.
நல்லூர் தேர்த்திருவிழா
நல்லூர் தேர்த்திருவிழா
நல்லூர் தேர்த்திருவிழா ,இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது இன்று (01) மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதன்படி கடந்த 09 ஆம் திகதி நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நாளை (02) தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.
பல இடங்களில் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில் ,புட்டும் தேங்காய் பூவும்..
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில்
எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.
உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…
இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..
முருகப்பெருமானுக்கு அரோகரா..
முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..
அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..
காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..
(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..
புட்டு எது தேங்காய் பூ எது?
இனம் சம்பந்தமான பதிவு அல்ல..
சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்..) இவ்வாறு அர்ச்சுனா இரமானதகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

நல்லூர் கொடியேற்றம் இன்று
நல்லூர் கொடியேற்றம் இன்று
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, 25 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
பின்னர், செப்டெம்பர் 14 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
by நிருபர் காவலன் - மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
by நிருபர் காவலன் - எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
by நிருபர் காவலன் - புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
by நிருபர் காவலன் - பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்
by நிருபர் காவலன்
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.
கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு
மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு
இந்தியாவின் ஆளும் நரேந்திர மோடியில் அங்கம் வகிக்கும் பாரதிஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை
இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்
இவ்விதம் பயணம் மேற்கொண்ட அவர் பல கட்சிகளுடன் பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க படுவதுடன்
,இவரது இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளதாக கருத படுகிறது
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஐீலி சுங் யாழ்ப்பாணம் சென்று நல்லூரில்
தரிசனத்தை மேற்கொண்டார் ,பின்னர் மக்களை சந்தித்து கலந்து உரையாடியதாக
தெரிவிக்க படுகிறது
இவரது இந்த திடீர் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது




















