Tag: இலங்கை
குழு சண்டை – ஒருவர் வெட்டிக் கொலை -இருவர் காயம்
குழு சண்டை – ஒருவர் வெட்டிக்கொலை -இருவர் காயம்
இலங்கை – இரதமலானை பகுதியில் கடந்த இரவு வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் சிக்கி ஒருவர் கோரமாக
கத்தியால் வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
மேலும் இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவாவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
எனினும் இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
இலங்கையில் இவ்வாறான காத்தி வெட்டு படுகொலைகள் நாள் தோறும் அதிகரித்து செல்வதுடன் இதனை தடுப்பதில்
இலங்கை பொலிசார் தவறி வருகின்றனர் என மக்கள் மத்தியில் பொதுவான குற்ற சாட்டு எழுந்துள்ளது .
லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை
இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை
இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை
அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .
இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்
நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .
இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .
லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என
கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மர்ம விபச்சார விடுதி ஒன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப் பட்டது .
இந்த சுற்றிவளைத்த இரகசிய விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்
உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய
நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .
இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு
முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என
கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .
இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்
அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .
கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த
விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .
இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .
செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .
தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற
இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது
- வன்னி மைந்தன் –
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் தமிழர்களை கோரமாக கொன்று குவித்தவரும் ,இன்றைய
மகிந்த கோட்டபாய அரசுகளின் நேரடி எதிரியுமாக விளங்கும்,விளங்கி வரும் சரத் பொன்சேகா கைது செய்ய படும் அபாயம் எழுந்துள்ளது .
கோட்டா ,மகிந்த சிந்தையின் நேரடி கைது வேட்டை பட்டியலில் இவரும் ஒருவராக இடம் பிடித்துள்ளாராம் .
விரைவில் இவரும் கைது செய்யப் படலாம் என கொழும்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .
பழி வாங்கும் அரசியலை நடத்தி செல்லும் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயவின் கழுகு
பார்வை இவர் மீதும் வீழ்ந்துள்ளதாகவே அந்த உள்ளக வட்டாரங்கள் அலசுகின்றன.
இவ்வாறான தொடர் கைதுகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஆளும் அதிபர் கோத்தபாயாவுக்கு ஏற்படுததலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
அவர் அதனையும் தாண்டி சிங்கள பவுத்த மக்கள் தனக்கு தகுந்த வாக்கினை வழங்கி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வைப்பார் என நம்புகிறார்
இது சாத்தியமா என்பதை எதிர்வரும் பங்குனி மாதம் தெரியவரும் .
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் உயிர் ஆபத்து கருதி வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி
சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் வாலிபன் ஒருவர் ,துருக்கி அருகில் உள்ள கிரீஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
இதே எல்லை பகுதி ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்படும் நபர்கள்,அல்லது துருக்கியில் இருந்து வெளியேறி
ஐரோப்பா எல்லைக்குள் நுழைய முனைபவர்கள் மீது அந்த நாட்டு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
அவ்வாறே இவரும் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது .
வெளிநாடுகளுக்கு என தமது உயிரை பணயம் வைத்து வெளிக்கிளம்பி வரும் தமிழர்கள் ,ஆபத்தான பகுதியான
,போலந்து நதிக்கரையில் ,மற்றும் ரசியா,துருக்கிய பகுதியில் சடலங்களாக மீட்க பட்டமை வரலாறாக உள்ளது
சிங்கப்பூர் அரசுடன் கோட்டா பேச்சு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம்
மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை
சந்தித்தார். ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் சண்முகமும் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும்
முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை
கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும்
புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெறுப்புப் பேச்சு, இணைய வழியாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணுதல் மற்றும் சமய நல்லிணக்கத்தை பேணுதல் தொடர்பாக சிங்கப்பூர்
அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். வர்த்தக அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரவு
முகாமைத்துவத்தை வர்த்தகத் துறைகள் அதிகளவில் நம்பியிருக்கும் சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் மற்றும் ஆளடையாளத் தரவுகள் (பயோமெட்ரிக்) ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் மறுக்கமுடியாத
அடையாளமாக சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர்
சண்முகத்திற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பகற் போசன விருந்தளித்தார். அதன் பின்னர் அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
சிங்கப்பூர் அரசுடன் கோட்டா பேச்சு

இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
இலங்கை இன்று . சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி தனிநபர் பிரேரணை பற்றி விஜேதாசவிடம் மனோ கணேசன் தனியார் தொலைக்காட்சியில் கேள்வி
எனக்கு சிங்கள ராஜ்யமோ, தமிழ் ராஜ்யமோ, முஸ்லிம் ராஜ்யமோ வேண்டாம். இலங்கை ராஜ்யமே வேண்டும்.
நான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம்தான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்கள பெளத்த ராஜ்யத்தை கட்டி எழுப்ப முயல்கிறீர்கள் என்ற அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை ராஜ்யத்தையா அல்லது சிங்கள பெளத்த ராஜ்யத்தையா நீங்கள் இந்த நாட்டில் உருவாக்க
விளைகிறீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் நேற்றிரவு நடைபெற்ற
தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில், தனிநபர் பிரேரணை மூலம் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் அரசியலமைப்புக்கான
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
21ம் திருத்தத்தை கொண்டுவந்துள்ள அரசாங்க எம்பி விஜேதாச ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினார்.
நேற்று நள்ளிரவு கடந்து, சிங்கள மொழியில் நடைபெற்ற இந்த விவாதத்தில் ஜேவிபி எம்பி நளின்த ஜயதிஸ்ஸ, ஐதேக
எம்பி முஜிபுர் ரகுமான், பொதுஜன பெரமுன எம்பி விஜேதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கம் இல்லாமல் இருப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் இருப்பதே காரணம் என்று கூறுகிறீர்கள். ஆகவே தேர்தல் வெட்டுபுள்ளியை
உயர்த்தி சிறு கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறீர்கள். இன்று இந்நாட்டில் நல்லிணக்கம் இல்லை என்பது மெத்த சரி. அது ஒரு நோய்.
ஆனால், அந்த நோய்க்கு நீங்கள் சொல்லும் மருந்துதான் பிழையானது.
நல்லிணக்கம் இல்லாமல் போனதற்கு இந்நாட்டு பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை மக்களை அரவணைக்க தவறியதே காரணம்.
அதனால்தான் வேறு வழிகள் இல்லாமல், சிறுபான்மை கட்சிகள் உருவாகின. சிங்களம் மட்டும் என்று 1950களில் இனவாதத்தை மையமாக கொண்டு பெரும்பான்மை
அரசியல்வாதிகள் அரசியல் செய்ய புறப்பட்டதாலேயே, சிறுபான்மை கட்சிகள் உருவாக வழி ஏற்பட்டது.
இதனால், சுமார் 70 வருடங்கள் இந்நாடு இருளில் இருந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு அதை மாற்ற நாம் முயன்று வரும் போது, மீண்டும் அதே பழைய இருளை நோக்கி நீங்கள்
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
இந்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முயல்கிறீர்கள். அதாவது வரலாற்றில் இருந்து இன்னமும் நீங்கள் பாடம் படிக்கவில்லை என்று எனக்கு புலனாகிறது.
இந்நாட்டில் இப்போது, தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் தமது தாய்நாட்டை உணர்வோடு, “தாயே” என தேசிய கீதமாக பாட முடியாத நிலைமைக்கு நீங்கள்
கொண்டுவர முயல்கிறீர்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும், இந்நாட்டின் இன்றைய ஜனாதிபதி, பிரதமர்,
அமைச்சர்கள், அரச எம்பீக்கள் ஆகியோர் இதையிட்டு வெட்கி தலை குனிய வேண்டும்.
இதுதான் பிரிவினை. சிறுபான்மை இனங்களை ஒதுக்கி வைப்பதுதான் பிரிவினை. ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்றால், இந்நாட்டில் வாழும் எல்லா
இனங்களுக்கும், மொழிகளுக்கும், மதங்களுக்கும் அங்கீகாரம் தருவதன் மூலமே அதை செய்ய முடியும் என்பதை உணருங்கள்.
இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோகன் சிங் பிரதமர் ஆக முடியும். அப்துல் கலாம் என்ற முஸ்லிம் ஜனாதிபதி ஆக முடியும்.
இங்கே லக்சமன் கதிர்காமர் கூட பிரதமராக முடியாது. இங்கே இனவாதம் உள்ளத்தில் ஆழமாக ஊறி விட்டது. அதை நீங்கள் இன்னமும் வளர்க்கிறீர்கள்.
இன்று உள்ள தேர்தல் சட்டத்தை திருத்த நாமும் தயார். ஆனால், எப்படி திருத்துவது? இப்படி வெட்டுப்புள்ளியை உயர்த்தி சிறு கட்சிகளை ஒழிப்பதன் மூலம் அல்ல.
அது இருக்கும் நிலைமையை இன்னமும் மோசமாக்கி விடும். இது சிறுபான்மை கட்சிகளை மட்டுமல்ல, அனைத்து சிறு கட்சிகளையும் பாதிக்கும். எம்மை விட ஜேவிபியை
அதிகம் பாதிக்கும். அரசில் உள்ள ஈபீடீபியை பாதிக்கும். கடந்த காலங்களில் ஆயுதம் தூக்கி விட்டு, பின் அவற்றை
கைவிட்டு, பாராளுமன்ற பாதையை தெரிவு செய்தவர்களை பார்த்து மீண்டும் ஆயுத போருக்கு போங்கள். காட்டுக்குள் போங்கள். பங்கருக்குள் போங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
வரலாற்றில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள். இலங்கை ராஜ்ஜியம் என்ற அனைவாராலும் ஏற்றுக்கொள்ள கூடிய இலக்கையும் நிராகரிப்பீர்கள்.
ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் கைவிட வேண்டும். இது என்னய்யா நியாயம்?
கூரை இல்லாத -பஸ் நிலையாம் -அரசின் சாதனை
பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க
கட்டாயம் குடை வேண்டும்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள்
நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது.
தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும்
. இது வரைக்கும் திருத்தி அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்கூரை இல்லாத பஸ் நிலையாம்
இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம
மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி
அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும்.
இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கூரை இல்லாத பஸ் நிலையாம்

காணமல் போனார் பணியக்கத்திற்கு ஆப்பு
காணமல் போனார் பணியக்கத்திற்கு ஆப்பு
இலங்கையில் ஆளும் கோட்டபாயப அரசினால் பலத்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .
அந்த வகையில் காணாமல் போனோருக்கு உருவாக்க பட்ட காணமல் போனோர் சங்கம் கோட்டா அரசினால் கலைக்க படவுள்ளதாக தெரியவருகிறது .
இது தொடர்பான கலந்தாராய்வில் கோட்டபாய தீவிரமாக ஈடுபட்டுளளார் .இவ்வாறு இந்த அமைப்பு கலைக்க பட்டால்
அது கோட்டா அரசுக்கு சர்வதேச ரீதியில் பலத்த நெருக்குதலை கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது
எனினும் இதனை செய்வதாக இருப்பினும் இவர் பாரளுமன்ற தேர்தல் முடிவின் பின்னரே அதனை புரிய கூடிய வாய்ப்புக்கள் கிட்டும் என எதிர்பார்க்கலாம்
அல்லாது விடின் தேர்தலில் இவருக்கு பின்னடைவை தமிழர்கள் மத்தியில் கொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி
பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி
இலங்கையில் இடம்பெற்ற தொடர் எட்டு குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்த பட்ட போலீஸ் அதியஸ்தகர் ஒருவர் ஆளும் கோத்தபாயா அரசினால்
திடிரெண்டு
பதவி இறக்கம் செய்யப் பட்டுள்ளார் .
போலீஸ் தலைமையகம் வழங்கிய உத்தரவின் பேரில் தற்காலிகமாக இவரது இந்த பதவி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கையில் -பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கை – காலி பகுதியில் பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை பிரிட்டன் பெண் ஒருவர் கடித்துள்ள சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பிரிட்டன் பெண் தங்கியிருந்த விடுதியை காவல்துறையினர் சோதனை புரிந்த போதே கணவனுடன் தங்கி இருந்த பிரிட்டன் பெண் இவ்வாறு அந்த பெண்ணின் கையை கடித்துள்ளார்
இலங்கைக்கு வருடம் தோறும் சுற்றுலா வரும் இவர்கள் விசா முடிவடைந்த நிலையில் அங்கு மேலதிகமாக தங்கி இருந்த சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
பெண் காவல்துறை ஊழியரை கடித்த குற்ற சாட்டில் இப்பொழுது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்
தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம் செய்வதற்கு கூட இடமில்லை
தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம்
செய்வதற்கு கூட இடமில்லை
மலையக தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாபரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே
சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் பாதையில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இடம்
அதாவது தோட்டம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் காணப்படுகின்றது.
இந்த நல்லடக்க பூமி கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகிலேயே காணப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் இவை முறையாக காணப்பட்ட போதும் கண்டி நுவரெலியா வீதி புணர்நிர்மானம் செய்யப்பட்ட போது பாதை அபிவிருத்திக்காக நல்லடக்க பூமி பாதைக்கு இறையானது.
இதனால் பெருபாலான கல்லரைகளும் புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டும் உள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு தோட்ட
மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்க் கொண்ட போதும் இதுவரை முயற்சிகள் கை கூடவில்லை.
இதனை பெற்றுக் கொடுப்பதில் தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இலுத்தடிப்புகளை மேற் கொண்டு வருகின்றது. தற்போது காணப்படும் நல்லடக்க பூமி வீதி
அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும். மலையக தேயிலைக்கே உழைத்து தேயிலைக்கே உரமாகி கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இறந்தும்
நல்லடக்கம் செய்வதற்கு கூட ஒரு பொருத்தமான இடம் இல்லாதது வேதனைக்குறிய விடயமாகும். இதை உணர்ந்து
சம்பந்தபட்வர்கள் இவர்களுக்கான தீர்விணை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கையில் -விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கை -வெள்ளவாய பகுதியில் காட்டு யானைகள் விகாரை ஒன்றுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தின .
இந்த தாக்குதலிலும் விகாரை பலத்த சேதமடைந்துள்ளது ,யானையை கண்ணுற்ற பிக்குகள் அங்கிருந்து தப்பி
ஓடியதால் உயிர் தப்பித்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
இலங்கையில் கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – வீழ்ந்தது ஆப்பு
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பபதவியேற்றுள்ள இலங்கை ஹிட்லர் கோட்டபாய
ராஜபக்சயா நாள் தோறும் புதிய அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார் . .
இலங்கை லஞ்சம் ,ஊழல் அற்ற நாடாக மலரவேண்டும் என்ற கோட் பாட்டை அவர் முன்வைத்துள்ளார் .
அதற்கு அமைவாக இன்றில் இருந்து இலங்கையில் ஆட்டோக்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க படுகிறது ,
மேலும் சாரதி அனுமதி பத்திரங்கள் பெறுபவர்கள் மருத்துவ சான்றிதழ் கண்ணபிக்க படவேண்டும்
தொடர்ந்து ஜனாதிபதியாக போட்டியிடும் நபர் ஒருவித வாக்குகள் பெற்றால் அவர் ஒரு கோடி அபராதம் செலுத்த வேண்டும் ,
மேலும் பகிடி வதைகள் இடம்பெற்றால் எட்டு வரும் கல்வி பயிலத்தடை ,வீதி போக்குவரத்து காவல்துறையினரை புதிதாக நியமிக்க பட்ட இரகசிய காவல்துறையினர் கண் காணிப்பார்கள்
இவர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்ற சாட்டு உள்ளது .எனவே இவர்களுக்கு லஞ்சம் வழங்கும் நபர்களாக இந்த இரகசிய போலீசாரே செயல் .படலாம்
, அவ்வாறு லஞ்ச பெற்றால் போலீசாரை இரு நாட்களில் பணி நீக்கம் செய்ய படுவார் இதே போலவே
கோட்டா ஆட்டத்தை ஆரம்பிதர் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
பாட சாலைகளிலும் ஆசிரியர்கள் லஞ்சம் பெற்றால் அவர்களுக்கும் இதே நிலை
என மக்களை ஒழுங்கு படுத்தும் ,வெள்ளையர்கள் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் போல கோட்டபாய கொண்டு வந்துள்ளார் .
இது நாம் தமிழர் சீமானை காப்பி அடித்து கோட்டா வெளியிடுவதாக தெரிகிறது ,எனினும் இது வரவேற்க பட கூடிய ஒன்றாக உள்ளது .
லஞ்சத்தில் ஊதி பெருத்த சிங்களவர்கள் கோட்டபாய போடும் இந்த அதிரடி உத்தரவுகளிற்கு அடிபணிந்து செல்வார்களா …?
அல்லது இவரது ஆட்சியை கலைக்க முறைப்படுவார்களா ….?
லிபியாவின் கடாபி போல இலங்கையை மேலும் இருபது ஆண்டுகள் ஆண்டுவிட மகிந்த தரப்பு முனைவதை இந்த செயல் பாடுகள் எடுத்து காட்டுகின்றன .
எனினும் இந்த சர்வாதிகார போக்கு நாப்பது ஆண்டுகள் நோக்கி பயணிக்கும் எனின் உலக சண்டியர் அமெரிக்கா
தென் ஆசியாவிற்குள் ஊடுருவும் நாளை எதிர்பார்த்து கொண்டுள்ளது .
இந்த வேளையில் தமிழர்கள் பிரச்னை மீளவும் ஊந்தி தள்ள பட்டு இலங்கை ஒரு சுடுகாடாக மாற்றம் பெறும் நிலை உருவாகலாம் என்றே எதிர்பார்க்க படுகிறது .
நகர்ந்து செல்லும் காலங்கள் பல எதிர்மறை மாற்றங்களை இலங்கை,மற்றும் இலங்கை பிராந்தியத்தை சுற்றி வளைக்க போகிறது .
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் ஊன்றிய நிலையில் அமெரிக்கா சீனா ,போர் இலங்கையில் இருந்து வெடிக்கும் சூழல் உள்ளது .
இதற்கு தமிழர்கள் தள்ள பட போகின்றனர் ,ஆம் அமெரிக்கா இலங்கைக்குள் காலடி வைத்தால் அவனை அகற்ற முடியாது என்பதற்கு ஈராக் ஒரு எடுத்து காட்டாக உள்ளது .
தமிழர் பிரச்சனைக்கு தீர்வை கண்டு ஆளும் இலங்கை அரசு செல்ல வேண்டும் தவறின் அமெரிக்கா சார்பு மேற்குலக
நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதும் ,சீனா இந்தியாவுக்கும் எதிராக அவர்கள் களம் திரும்புவதும் தடுத்துவிட முடியாது
இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இதனை சிந்திப்பார்களா …? ஈராக்,ஈரான் எதிரி நாடுகள் இன்று இவ்வாறு ஒன்றிணைந்தன .? இதற்கு காரணம் என்ன ..?
பவுத்த மத வெறியை தகர்த்தி முரண்பாடுகளை தீர்த்து வெளியில் இருந்து பெருக்கெடுக்கும் ஆபத்தை தனித்து ,
இணைந்த இலங்கைக்குள் இரு இனங்களும் நின்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும் .
இல்லாது விடின் மீளவும் இலங்கையில் முஸ்லீம்கள் பெயரால் பெரும் அழிவுகள் நடத்த படும் .பயங்கரவாதம் என்ற
போர்வையில் மீளவும் இலங்கையில் போர்க்களம் ஆகும் .இதனை எதிர்வரும் காலங்கள் வரலாறாக பதிய பெற போகின்றன .
அதற்குரிய ஆடுகளம் இப்பொழுது மலர்கிறது ,உஷாராகுமா …? இந்தியா ,இலங்கை ..?
பிராந்திய நலனை பாதுகாக்குமா ..? video
- வன்னி மைந்தன் –
பாட சாலைக்கு கணனி கையளிப்பு..
இலங்கையில் – பாடசாலைக்கு கணனி கையளிப்பு..
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கெட்டபுலா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய பாட சாலைக்கு கணனிகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.


புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .
மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
இலங்கை – கடற்கரை பகுதியில் சுமார் மக்காத நான்கு லட்ஷம் பிளாஸ்டிக் ரக வகையிலான குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன .
நாட்டின் கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் குப்பைகளை கடலில் கொட்டியதன் விளைவாக இவை கரை ஒதுங்கியுள்ளன
சுத்தமான நாடக இலங்கையை வைத்திருக்க வேண்டும் என ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பல்வேறு பட்ட அதிரடி
உத்தரவுகள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இந்த சம்பவங்களை கட்டு படுத்த இயலவில்லை

இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
இலங்கையில் =-இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
துண்டாடப்படும் பயணிகளின் பஸ் நிலையம்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன நகரத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையமானது பல நூறு வருடங்களாக மக்களின் போக்குவரத்துக்காக பாவிக்கபட்டு வருகின்றது.
இந்த பஸ் நிலையத்தை வீதி போக்கவரத்து அதிகாரபை நிர்வகித்து வந்த போதும் தற்போது பஸ் நிலையம் உடைந்த நிலையில் மக்களின் தேவைக்கு ஏற்ப செயற்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் நுவரெலியா வெளிமடை கதிர்காமம் பண்டாரவலை பதுளை போன்ற நகரங்களுக்கு
செல்லும் அனைத்து பிரதான பஸ்களும் மேலும் அருகில் உள்ள சிரிய நகரங்களுக்கும் பல கிராமங்களுக்கும் செல்லும் பஸ்களும் நிருத்தப்படுகின்றன.
இந்த நகரத்திற்கும் அருகில் உள்ள பதிய நகரமான கொத்மலை நகரத்திற்கும் நாளாந்தம் பிரதேச மக்கள்
தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் இடிந்து விழும்
வங்கியும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ்
நிலையத்திலேயே காத்து நிக்கின்றனர். மழை காலங்களில் நிற்க கூட முடியாது. இந் நிலையில் இதனை திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

சிக்கியது ஆறு கோடி தங்கம்
இலங்கை விமான நிலையத்தில் ஐந்து கோடியே 80, கோடி தங்கம் பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி இன்று காலை கைது
செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான
நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.






