இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்

Spread the love

இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்

இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய

நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .

இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு

முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என


கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா

சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .

இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்

இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்

,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்

அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத

சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .

கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த

விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .

இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .

செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்

புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .

தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற

இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது

  • வன்னி மைந்தன் –

Leave a Reply