கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய

விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .

அதன் வேட்பாளர்களும் கடுமையான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இதில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது கோட்டபாய ராஜபக்ஸே தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்க படும் பொருட்களுக்கு வரி விலக்க படும் என கோட்டபாய வாக்குறுதிகளை அள்ளி விதைத்து வருகின்றார் .

விவசாயிகளுக்கு திடீர் ஐஸ் வைக்கும் கோட்டபாய ராஜபக்ஸே பிரச்சாரா பீரங்கி வேட்டு தாக்குதல் அதிக வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கம் கொண்டவை .

அதனை இலக்கு வைத்தே கோட்டபாய ராஜபக்ஸே தனது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி வருகிறார் .

    Posted in இலங்கை செய்திகள்

    ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு

    ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு

    இலங்கை பூண்டுலோயா பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

    கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

    இவர் எவ்விதம் இந்த இந்த ஆயுதங்கள் பெற்று கொண்டார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

    காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் இருந்து இருந்தே பின்புலத்தில் செயல் படும் ஆயுத வியாபார கும்பல் தொடர்பான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

    எதிரிகளை கொலை செய்யும் நோக்குடன் இந்த ஆயுதங்கள் எதிரி குழுவால் வழங்க பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை

      பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை

      பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் .

      காலி, மாபலகம பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச இவ்விதம் கருத்து தெரிவித்தார்.

      இதன் போது வௌ்ள நீரே மாபலகம பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என சஜித் பிரேமதாசா சுட்டிக்காட்டினார்.

      இதனால் அரசாங்க பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி இங்கு ஏற்படும் வௌ்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

      நான் நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தால் பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார் .

        இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
        Posted in இலங்கை செய்திகள்

        காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்

        காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…!

        காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

        மின்சார சபைக்கு சொந்தமான லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும்

        ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 7 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய

        வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

          உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

          நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரே
          நெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..
          உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …
          உன் வலியின் உயிர் அறிந்தேன் …

          நேற்றைக்கும் இன்றைக்கும் நீ இருப்பாய்
          நினைவிலே என்றும் நீ உதிப்பாய் …
          பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையிலான்
          பொழிவிலா உடலை ஏன் பறித்தான் …

          கண்ணுக்குள் உலா வரும் உன் உடலை
          கை தொழுதான் ஏன் பறித்தான் …?
          என் செய்தி கேட்டு நீ வீழ்ந்தாய் …?
          ஏன் இத்தனை வேகத்தில் நீ மறைந்தாய் ..?

          உன்னிடம் கற்றதை சொல்லிடவா …?
          உள்ளத்தில் வைத்ததை கொட்டிடவா ..?
          மடியாத நம்பிக்கை நான் முகர்ந்தேன்
          மணம் வீசும் காதலை யான் உணர்ந்தேன் …

          கூணாத உழைப்பை நான் சுவைத்தேன்
          குன்றாத வீரத்தை யான் படித்தேன் …
          மன்றாட்டம் இல்லா பேச்சை கண்டேன்
          மரியாதை பொழிகின்ற அகவை கண்டேன் …

          விரைவாக பிடித்த மொழியை கண்டேன்
          வீழாது எழுகின்ற வேகம் கண்டேன் …
          முடியாது என்ற சொல்லை மறந்தேன் – உன்
          முயற்சிகள் கண்டே யான் வியந்தேன் …

          அகவையில் நீ வயதானாய்
          அகத்திலே நீ உயர்வானாய் …
          பிடித்ததை பேசும் பண்பானாய் – நூல்
          பிடித்ததில் படைக்கும் படைப்பானாய் …

          கண்டவை உன்னில் நூறெனலாம் – யான்
          கற்றது தூசென சொல்லிடலாம் …
          சொற்ப நேரத்தில் கண்ணுற்றதை
          சொல்லிட நாள் ஒன்று போதாது …

          ஒரு நாள் உன்னாலே நான் துடித்தேன்
          ஒயாத உன் நினைவால் நான் துவண்டேன்..
          உன்னரு ஓர் நாள் உட்கார்ந்து
          உறவாடிய நாளது பொற்காலம் …..

          பிள்ளைக்கு பிள்ளையார் பெயர் வைத்தவா
          பிரியமாய் அவனை உளம் கொண்டவா ..
          உன்னாலே தவிக்கிறோம் நீ காணாய்
          உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

          வன்னி மைந்தன் – ( ஜெகன் )
          ஆக்கம் -19/07/2019
          குறிப்பு –

          ஐங்கரன் தந்தையார் துயர் அறிந்து ….
          அவர் பாதம் இதனை நான் விரித்தேன் …
          நெஞ்சுக்குள் நிற்கின்ற நினைவொன்றின்
          நியமான தடத்தில் நான் படைத்தேன் …!

          உயிர்த்தே ஒருமுறை
          உயிர்த்தே ஒருமுறை