Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி
விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி
விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி இலங்கையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பில் ரக 212 ஹெலிகாப்டர் ஒன்று மாதரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது விழுந்திருகின்றது.
சிம்ரன் கூட விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நேரத்தில் அங்குள்ள மாதுரு ஓயா நீர் அணையில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறங்குவான் விபத்து தொடர்புள்ளான விசாரணைகளை தற்பொழுது விமானப்படை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விமானம் விழுந்த விடயம் இலங்கை ராணுவத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுடன் விசாரணை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா ஆட்சி அரியணையில் குந்திய பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வானூர்தி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
ஒரு மாத இடைவெளியில் வீழ்ந்து நொறுங்கிய இரண்டாவது விமானமாக இது காணப்படுகிறது.
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது வான் விபத்தா என்பது தான் மக்களுக்கு கல்வியாக உள்ளது.
ஒரு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது வான் விபத்து சம்பவமாக இது காணப்படுகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை இப்படி அறிவித்துள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 34 பேரையே தாங்கள் கைது செய்யப்படுவதாக குடிவரவு குடி அகழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை தங்கி இருந்தவர்கள் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழுவில் கண்டரிக்கப்பட்டுள்ளது.
விசா காலாவதியானா நிலையில் அது கடந்து நாட்டில் தங்கி இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ,இந்த பங்களாதேஷ் பிரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.
இவர்கள் எதற்காக இலங்கைக்குள் வாழ்ந்து இருந்தார்கள் இந்த விடயம் தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையின் பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகின்ற உல்லாச பயணிகள் பலர் இவ்வாறு விசாக்கள் கால அவதியான நிலையிலும் அங்கு தங்கி வருவதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

யாழ் மேயர் யார்
யாழ் மேயர் யார்
யாழ்ப்பாணத்துக்கான மேயர் யார், மேயரை எப்படி தெரிவு செய்யவேண்டும், மேயர் எப்படியானவராக இருக்க வேண்டும், மேயர் என்ன என்ன செய்ய வேண்டும்
என்ற கேள்விகளோடு யாழ்ப்பாண மேயரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் இது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது.
நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாகச் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள்.
அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
எனவே, மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.
இந்நிலையில் மூத்த போராளி மனோகர் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.
இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் குறிப்பாக மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக யாழ். மேயர் விடயம் கவனத்துக்குரியது. இதனை முன்நிபந்தனைபோன்று வைப்பது ஏற்புடையதல்ல.
சுமந்திரன் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நோகடிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுமந்திரன் தெரிவிக்கையில்,
“யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல,
யாழ். மாநகர சபையின் உறுப்பினராகப் கூடப் பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தால் வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டகல பாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் கடந்த இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில். 34 வயதுடைய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
வாகனம் ஒன்றில் வந்த மர்ம ஆயுததாரிகள், திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இலங்கையில் தொடரும் இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.
இலங்கையில் ஆயுதப் பாவனை தடைவிதிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆயுதங்கள் பாவித்தால் 20 வருட கடூழிய சிறை தண்டனை என சட்டம் இருக்கிறது.
அவ்வாறான காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ,அனுரா அரசின் திட்டமிடப்பட்ட நிழல் நடவடிக்கையா என்பது தொடர்பாகவே சந்தேகம் வெளியிடப்படுகிறது.
அனுரா ஆட்சி இடம்பெற்ற 30ஆவது சூட்டு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
மக்களை நல்வழிப்படுத்த வந்த அது அவருடைய ஆட்சி அதிகாரம், இன்று இப்படி இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அவர் மீதான அதிர்த்தியம் அதிகமாக ஏற்படுத்தி வருவதாக ,நோக்கர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவம் அதிகரித்து காணப்பட்டால் ,அது மிகப் பெரும் அபாய நிலையில் ,இலங்கையை அழைத்துச் செல்லும் என்பதை மக்கள் கருத்தாக உள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
டிரோன் தாக்குதல்
மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கைமற்றும் டிரோன் தாக்குதக்கலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கை
இதுதவிர்த்து இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.
சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள், ஊழியர்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக,
இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நோட்டீஸ் டூ ஏர்மேன் என்ற பிரிவின் கீழ் இதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ள தகவலில், விமான நிலையங்கள் மூடுதல் என்பது தற்காலிக முடிவு.
தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு வர வேண்டிய பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், வேறு விமான நிலையங்களுக்கு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை அணுகும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஆகாசா ஏர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்துக்கு பயணிகள் வர வேண்டும்.
விமான நிலையத்திற்குள் செல்ல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்துக்குள் ஏழு கிலோ வரை எடையுள்ள ஒரு கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் விமானத்துக்குள் ஏறுவதற்கு முன்பு இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அசாதாரண சூழலில், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சோதனைகள் மற்றும் சம்பிரதாயங்களை எதிர்கொள்ள, திட்டமிட்ட பயண நேரத்துக்கு முன்பே விமானநிலையத்துக்கு பயணிகள் வரவேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.
ஆனால், இதனை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. “நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைவதற்கு முழுமையான தடை இல்லை.
குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன” என்று அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பை விடுத்து இருக்கின்றனர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு.
தமிழரசுக் கட்சி பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு
தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள
அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உள்ளூராட்சி சபைகளில் மக்கள் வழங்கிய ஆணை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளன.
இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம்.
அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன்
மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது.
அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக
இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.
அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில்
தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம்.
அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய
உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.
பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம்.
ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம்.
மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள்.
மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில்
கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா ,பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட ஆச்சுடா ராமநாதன் சம்பவம் இன்று பாராளுமன்ற பர பரப்பாக இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான விடயம் பேசப்பட்டு கொண்டிருந்த பொழுது, அங்கு அந்த பேச்சை குழப்பி சபையில் அநாகரிகத்தை மேற்கொண்டார் .
இதன் காரணத்தினால் அர்ச்சுனா இராமநாதன் அந்த பாராளுமன்றத் தேர்தலில் தூக்கி வீசப்பட்டார்.
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தானே மீட்க வந்தவராகவும், தான் ஒருவரே பாராளுமன்றத்தை ஆட்டுவதாகவும், உருட்டி வந்து பொய்பித்தலாட்டம் ஆடிவந்த ,அர்ச்சுனா இராமநாதனுக்கு இந்த பாராளுமன்ற சாட்டையடி விழுந்திருக்கிறது.
நாள்தோறும் தமிழர் தமிழர் தேசியம் தமிழர் விடுதலை ,தமிழியம் தமிழ் பெண்கள் ,பெண்ணுரிமை எதிராக பேசி வருகின்றறார் அர்ச்சுனா.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அங்கு நடத்தப்படும் விவாதங்களை திசை திருப்பி ,நேரத்தை வீணடித்து அதனை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு அர்ச்சுனா செயல்பட்டார்.
அதன் அடிப்படையில் இப்பொழுது இன்று பாராளுமன்றத்தில் பேசுகின்ற பொழுது சபையை குழப்பினார் ,என்ற காரணத்தினால் அங்கிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
ஆக சபை குழப்பி என்கின்ற பெயர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எங்கே இலங்கை உடைய பாராளுமன்றம் சூட்டியிருக்கிறது.
ஆகவே சபை குழப்பி அர்ச்சனா இராமநாதன் தமிழருடைய சபைகளையும் தமிழ் தேசிய வரலாற்றை குழப்புகின்ற குழப்படி நாயகனாக காணப்படுகிறார்.
ஆகவே ஊசி கட்சிக்கு இன்று உருட்டி உருட்டி பாராளுமன்றத்தில் ஊசி போடப்பட்டு ,அர்ச்சனா ராமநாதன் இழுத்து வந்து, பாராளுமன்றத்துக்கு முன்னிலே வீசப்பட்ட சம்பவம் ,பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,
மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.
சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.
இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.
மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்
காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்
காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,
2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,
காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,
என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,
வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,
6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது
அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,
இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.
வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்
பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.
சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா , 2022 முதல் 2024 வரை ,பயணித்த அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ,விடயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா , 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக 1. 27 பில்லியன் அவர் செலவு செய்துள்ளதாக, வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு வாங்குரோத்து நிலையில் செல்கின்ற பொழுது, இவ்விதமான ஆடம்பரமான வாழ்க்கைச் செலவுகளை, அவர் மேற்கொண்டு நாட்டை கீழ் நிலைக்குத் தள்ளி உள்ளதாக ,மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆடம்பர வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அதன் ஊடாகவும் பல மில்லியன்களை மோசடி செய்துள்ளதான, தகவலும் வெளியாகி இருக்கிறது.
சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை ,இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி ,இன்று சீரழிந்து வருவதாக அவர் கண்ணீர் மல்கினார் .
எனவேதான் இலங்கை மக்கள் விழிப்புணர்வு கொண்டு ,எழுந்து இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக ,குரல் கொடுத்து போராட வேண்டுமென, தற்பொழுது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
முன்னாள் தமிழின படுகொலையாளி ,மஹிந்த ராஜபக்,ஷ கோத்தபாய ராஜபக்,ஷ மைத்திரிபால சிறிசேன ,உள்ளிட்டவர்களும் இவ்வாறான ஆடம்பரமான பயணங்களை மேற்கொண்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம், போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஊடக போராளிகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் பரப்புரைக்க கூறி உலக மக்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தை கொள்ளையடித்த பாராளுமன்ற உறுப்பினர்.
அர்ஜுனா இராமநாதன் அவரது செயலர் தங்கமாகியோர் , இலங்கையை விட்டு புலம்பெயர் நாட்டுக்கு தப்பியோடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இப்படி எழுதி வருகிறார்கள்.
இந்த விடயம் என்பது தற்பொழுது புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
மக்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு தான் பெற்றுக்கொள்ளவில்லை என, கபட நாடக மாடி, தான் திருடன் என்பதை வசமாக சிக்கினார் அர்ஜுனா.
இதன் பின்னர் நாட்டில் இருக்க முடியாத காரணத்தினால் ,வெளிநாடு தப்பியோட இருப்பதாக அந்த குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
தொடர்ந்தும் இலங்கை அரசியலில் மக்களை ஏமாற்றி ,அவதூறுபடுத்தி, தமிழ் பெண்களையும், தமிழ் தேசியத்தையும் ,தமிழ் தேச வாதத்தையும் ,இழிவுபடுத்தி வரும் அர்ச்சுனா விரட்டப்பட வேண்டியவர் என மக்கள் தெரிவிக்கின்றனர் .
வன்னி மைந்தன் tiktok தளம் இவரை பாராளுமன்ற உறுப்பின ஆக்கியதிலிருந்து ,இன்று வரை அவர் பல்வேறுப்பட்ட இன்னல்களை செய்து வருவதாகவும் ,வன்னி மைந்தன் tiktok தளம் மீதும் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .
எனினும் வன்னி மைந்தன் தளம் தாங்கள் ஆதரிக்கின்ற பொழுது ,இவ்வாறான பேச்சுக்களை அவர் பேசவில்லை என மறுத்து வருகின்றனர் .
அப்படி அவர் உரைத்திருந்தால் இப்போது போன்று அன்றே திருப்பித் தாக்கி இருப்போம் என அவர்கள் வாதம் வைக்கிறார்கள்.
ஆகவேதான் தற்பொழுது 5 மாதத்தில் மக்கள் மனங்களிலிருந்து அர்ச்சுன ராமநாதன் வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் காணப்படுகிறது.
பெண்கள் தொடர்பாக அவதூறு அர்ச்சுனா பேசும் பொழுது ,அதனை தட்டிக் கேட்காது தங்கம் பம்மிக் கொண்டுள்ளது, ஏன் என இந்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
அர்ச்சுனா தங்கமாகிய நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் என இப்படி தெரிவித்து வருகிறார்கள்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

மாகாண சபைத் தேர்தல் விரைவில்
மாகாண சபைத் தேர்தல் விரைவில்
மாகாண சபைத் தேர்தல் விரைவில் ,மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்த வேண்டி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என,
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியானது வடக்கு கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. நாடு யாரிடமாவது இருக்கட்டும்,
தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைவாக வடக்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி
இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்திற்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்.
அந்தவகையிலே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் வெல்வோம்
மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.
பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது.
அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.
இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாட இருக்கின்றோம்.
இன்று நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர்,
பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாட இருக்கின்றோம்.
எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,
உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அப்படியான சிக்கலான ஒரு முறை காணப்பட்டபோதிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.
வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம், சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.
பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால்
அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளுராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவிற்கு எமது கட்சி உரிய ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.
சில கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து கடுமையான பிரயத்தனங்கள் செய்தும் கூட அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
தமிழர்தாயகம் தமிழரசுக் கட்சியின் பக்கம் இருக்கின்றது என்பதை இவ்விடத்தில் கூற முடியும்.
எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பான செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்வோம்.
தேசிய மக்கள் சக்தியானது தாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறியிருப்பதாக அறிய முடிகின்றது.
நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்.
மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.
ஏனென்றால் மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருக்கின்றபடியால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக இருக்கின்றபடியால்,
அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு ,மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் திடீர் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரமே மசகு எண்ணெயின் விலை குறைப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
விலை குறைப்பு, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிக்கின்ற அரசியல் தந்திரபாய நடவடிக்கை சித்து விளையாட்டாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை குறைக்கப்படுவதும் ,தேர்தல் முடிவுற்றதும் அதே கதியில் விலை வானளாவிய உச்சத்தை தொடுவதும் வழக்கமாக உள்ளது.
எனவே இந்த எரிபொருள் விலை குறைப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏமாற்று அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற தற்கால நவீன அரசியல்வாதிகளை ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
அனுரா அரசின் இந்த விலை குறைப்புகளும் விலை மாற்றங்களும் தமிழ் மக்கள் முதுகில் ஏற்றப்பட போகின்ற .மிகச்சுமையின் முன்னெற்பாட்டு அறிகுறியாகவே காணப்படுகிறது.
ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் யாவரும் தற்பொழுது விழித்துக் கொள்ளவேண்டும்.
எனவே, தேர்தல் காலத்தில் குறைக்கப்பட்ட விலைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை ,சிறை வைக்கப்பட்ட இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
மியான்மர் நாட்டுக்குள் நுழைந்த இலங்கையில் பதினைந்து பேர் பல மாதங்களாக மியன்மார் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .
அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 15 கைதிகளும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர் .
இலங்கை விமானத்தின் ஊடாக இந்த 15 பேரும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மியன்மார் நாட்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த, 41 பேர் இலங்கை அரசாங்கம் மேற்கண்ட பேச்சுவார்த்தை அடுத்து இந்த 41 பேரில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறனர் .
தற்பொழுது 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விதம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து அவர்களது குஉடம்பம் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளது .
பல சொல்லென்ன சித்தரைவதைகளின் பின்னர் இலங்கையர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்பிய மகிழ்வில் அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .
இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.
மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
மிக விரைவில் இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில்,
அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதன் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும்.
மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது, அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் பொருத்தமான பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்திற்கான முதலாவது மின் கட்டண திருத்தம் ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றதோடு, அப்போது மின் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வாரம் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார், அதாவது,
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ழுப்பினார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிதியை வழங்குவதாக நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை.
மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்று நாணய நிதியம் கூறியுள்ளதாக அரசாங்கம் வெளிப்படுத்தியதா? இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை.
ஆனாலும் ஜனாதிபதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,
2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் மின்சார கட்டண திருத்தத்தின் போது, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட அதிகமாக இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தல் சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லை குறைக்கப்படுமா, மின்சார சபை என்ன முடிவு எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன லண்டன் குடும்பம் ஒன்று திருகோணமலையில் ஒரு ஏமாற்று கொள்ளைக்கார குடும்பத்திடம் சிக்கியுள்ளனர். இக் குடும்பத்திற்கு நடந்தது என்ன?
திருகோணமலையிலுள்ள சுலக்சனா (பெயர் மாற்றம்) ஒன்லைன் zoom tuition கிளாஸ் எடுக்க முன்வந்ததன் மூலம் லண்டன் குடும்பம் அறிமுகம் ஆனது.
அதன் மூலம் அறிமுகம் ஆன பின் ஸ்ரீலங்கா வந்த போது இவர்களது வீட்டிற்கு சென்று தங்கினர்.
திட்டமிட்ட சுலக்சனா அவரது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இந்த லண்டன் குடும்பத்திடம் 10 இலக்சம் ரூபாயினை கேட்டுவாங்கியுள்ளனர்,
10 லட்சம் பணம் வாங்கி பின்பு தருவதாய் ஏமாற்றி குடும்பம் ஆக மோசடி செய்தது. பின்பு மொத்த குடும்பமும் wats up இல் லண்டன் நம்பரை Block செய்துள்ளதாக லண்டன் குடும்பம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த லண்டன் குடும்பம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் பொலிசார் கருத்தில் எடுப்பதில்லை என மட்டக்களப்பு இரகசியம் உள் பெட்டிக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கவனமாய் செயட்படவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
இந்த குடும்பம் பலரை இவ்வாறு இலக்கு வைத்து செயற்பட்டு வருகிறது என தற்போது தெரியவந்துள்ளது.
முன்பு பிரான்ஸ் இல் இருந்து வந்த ஒரு குடும்பத்தினரிடமும் மேற்படி முறையில் பணம் வாங்கிய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில், தற்போது லண்டன் குடும்பம் ஏமாறியுள்ளது.
பொலிசார் மோசடி குடும்பத்திற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றனர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக முகநூல் பக்க செய்திகள் படங்களோடு செய்திகள் வெளியிட்டுள்ளன.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
வாக்குகளை வழங்கி மக்கள் தமக்கான பலத்தை தெரிவுசெய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிறிதரன்.
நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், தமிழ்த் தேசியப் பயணத்தை ஏற்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைவணங்குகிறேன்,
என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு,
கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மைய தேர்தல்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்குகளால் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்து, கரைச்சி, பச்சிலைப்பள்ளி,
பூநகரி ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைக்க காரணமாக இருந்த மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும்,
புனித திரேசாள் தேவாலயத்திலும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையால் ஒழுங்கமைக்கப்பட்ட மத வழிபாட்டு ஆராதனைகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. பச்சிளைப்பள்ளி பிரதேச சபை,
கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும்
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
இலங்கை தமிழரசு கட்சி இல்லாமல்போகும் என நினைத்தோருக்கு இந்த மக்களின் வாக்குப்பதிவு ஒரு நெத்தியடி.
வாக்குப் பதிவுகளால் மக்கள் தமக்கான ஒரு அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்தி வலுச் சேர்த்துள்ளார்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்
பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்
பாராளுமன்றில் கேள்வி கேட்பேன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு, குற்றவாளிகளை கூண்டுமுன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கி கொடுத்த அவசியம் என மனோ கணேசன் ஆவேசம் அடைந்துள்ளார்.
பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும்,
இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள,
தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்,
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள்
எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன’ என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம்,
அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
அதேவேளை, ‘இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம்.
காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்’ எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும்,
இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது கருத்தைத் தொடர்ந்து குறித்த மாணவியின் பகுதியில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு இதற்கு ஒரு தீர்வு எடுத்தால் தான் இவ்வாறான மாணவ மாணவிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் தமது கல்வி கற்கை நெறிகளில் தம்மை ஈடுபடுத்திகொள்ள முடியும்.
மாறாக இலங்கையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை உடனடியாக இந்த அரசு கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.
மனோ கணேசனின் பாராளுமன்ற கேள்விக்கு கல்வி அமைச்சு என்ன நடவடிக்கை எடுப்பார்கள், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றனர்.