பேருந்துக் கட்டணம் உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துக் கட்டணம் உயர்வு

பேருந்துக் கட்டணம் உயர்வு

பேருந்துக் கட்டணம் உயர்வு ,ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் புதிய பேருந்துக் கட்டண உயர்வை என்டிசி அறிவித்துள்ளது

தேசியப் போக்குவரத்து ஆணையம்

தேசியப் போக்குவரத்து ஆணையம் (என்டிசி), திங்கட்கிழமை (ஜூலை 6) முதல் அமலுக்கு வரும் பேருந்துக் கட்டணத் திருத்தத்தை அறிவித்துள்ளது.

புதிய கட்டண அமைப்பின்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ. 30-லிருந்து ரூ. 34 ஆக உயரும்.

திருத்தப்பட்ட கட்டண அமைப்பின்படி, 100 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு 12% கட்டண உயர்வும், 100

கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரங்களுக்கான கட்டணங்கள் 20% உயர்வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சொகுசுப் பேருந்து சேவை

சொகுசுப் பேருந்து சேவைகளைப் பொறுத்தவரை, 100 கிலோமீட்டருக்குக் குறைவான வழித்தடங்களுக்கு 12% கட்டண உயர்வும்,

100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு 15% கட்டண உயர்வும் இருக்கும் வகையில் கட்டணங்களும் திருத்தி உயர்த்தப்படும்.

செயல்பாட்டுச் செலவு மாற்றங்களுக்கு ஏற்ப பயணிகள் போக்குவரத்துக் கட்டணங்களைச் சரிசெய்வது குறித்து எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று என்டிசி தெரிவித்துள்ளது.

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்தல் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்தல் ஆரம்பம்

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்தல் ஆரம்பம்

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்தல் ஆரம்பம் இன்று மீண்டும் தொடங்கியது கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபை (CMC) இன்று (23) முதல் தனது அதிகார வரம்பு முழுவதும் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலிப்பதை மீண்டும் தொடங்கியுள்ளது.

மாநகர ஆணையரின் கூற்றுப்படி, வாகன நிறுத்துமிட மேலாண்மை மற்றும் கட்டணம் வசூலிக்கும் பணிகள்

காலை 6:00 மணி முதல் வழக்கமான கால அட்டவணைக்குத் திரும்பியுள்ளன.

நகரம் முழுவதும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் காணப்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வாகன வரிசைகள்

காரணமாக, மார்ச் 18 முதல் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தேசிய எரிபொருள் அட்டை

இருப்பினும், தேசிய எரிபொருள் அட்டை (QR குறியீடு அடிப்படையிலான முறை) நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், வாகனப் பதிவு எண்களின்

அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலும், எரிபொருள் நிரப்பும் வரிசைகளின் நீளம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மாநகர சபை குறிப்பிட்டது.

அதன்படி, போக்குவரத்து நிலைமை சீரடைந்துள்ளதால், வழக்கமான வாகன நிறுத்துமிடக் கட்டண முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என சபை தீர்மானித்துள்ளது.

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்

மிக விரைவில் இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில்,

அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதன் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும்.

மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது, அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் பொருத்தமான பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான முதலாவது மின் கட்டண திருத்தம் ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றதோடு, அப்போது மின் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார், அதாவது,

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ழுப்பினார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிதியை வழங்குவதாக நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை.

மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்று நாணய நிதியம் கூறியுள்ளதாக அரசாங்கம் வெளிப்படுத்தியதா? இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை.

ஆனாலும் ஜனாதிபதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,

2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் மின்சார கட்டண திருத்தத்தின் போது, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட அதிகமாக இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தல் சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லை குறைக்கப்படுமா, மின்சார சபை என்ன முடிவு எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் ,அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்து கட்டணக் குறைப்பால் பொதுமக்கள் பயனடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் இதன் பாதகங்கள் ஜூலை மாதத்தில் வரும் என்றார்.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தங்களில் இந்த முறை 12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டண திருத்தங்கள் செய்யப்படுவதால், பேருந்து கட்டணங்களில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும் என்றார்.

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபை

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபைக்கு அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்

வீடியோ

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை
Posted in இலங்கை செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு

இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு

இலங்கையில் இன்று நள்ளிர முதல் பேரூந்து கட்டணங்கள் குறைக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது.

மக்கள் எழுச்சியை தடுக்க இவ்விதமான விலை குறைப்பு நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

எரிபொருள் விலையினால் பேரூந்து கட்டணங்களை விலை அதிகரித்தது.

ஆனால் தபோது அதே பேரூந்து விலை கட்டணங்கள் இன்று நாளிரவு குறைக்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.