மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு ,மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் திடீர் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரமே மசகு எண்ணெயின் விலை குறைப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
விலை குறைப்பு, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிக்கின்ற அரசியல் தந்திரபாய நடவடிக்கை சித்து விளையாட்டாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை குறைக்கப்படுவதும் ,தேர்தல் முடிவுற்றதும் அதே கதியில் விலை வானளாவிய உச்சத்தை தொடுவதும் வழக்கமாக உள்ளது.
எனவே இந்த எரிபொருள் விலை குறைப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏமாற்று அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற தற்கால நவீன அரசியல்வாதிகளை ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
அனுரா அரசின் இந்த விலை குறைப்புகளும் விலை மாற்றங்களும் தமிழ் மக்கள் முதுகில் ஏற்றப்பட போகின்ற .மிகச்சுமையின் முன்னெற்பாட்டு அறிகுறியாகவே காணப்படுகிறது.
ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் யாவரும் தற்பொழுது விழித்துக் கொள்ளவேண்டும்.
எனவே, தேர்தல் காலத்தில் குறைக்கப்பட்ட விலைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












