மீனவர்களை தேடச் சென்ற விமானம்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களை தேடச் சென்ற விமானம்

மீனவர்களை தேடச் சென்ற விமானம்

மீனவர்களை தேடச் சென்ற விமானம் ,தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத்

விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம்

தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சுமார் ஒரு மணி நேரமாக அந்த விமானம் மூலம் காணாமற்போன இரு மீனவர்களைத் தேடும் பணி

முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப் படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீன்பிடி படகு விபத்து

குறித்த நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளாகும்போது, அதில் ஆறு மீனவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

இவர்கள் உயிரோடு உள்ளார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை .மீனவர்களின் குடும்பத்தினர் ஏக்கத்தோடு தவித்த வண்ணம் உள்ளனர்

மீண்டு வருவார்களா இல்லை சடலமாக மீட்க போடுவார்களா என்பதே தற்போதுள்ள கேள்வியாக உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .

இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு

இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு

இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு கடந்த தினம் அவரது இல்லத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள்

பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள் கடந்த தினம் இடம் பெற்றுள்ளது.

தமது குடும்பத்தாருடன் சிறப்பான முறையில் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் .

தமிழ் தேசிய பாடகர்களில் ஒருவராக விளங்கும் ஐயா தேனிசை செல்லப்பா தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மாமனிதன் ஆவர் .

அவருடன் இணைந்து பல நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை யாரத்து ,அதற்கு இசை வழங்கியவர் இளங்கோ செல்லப்பா அவர்களாவார் .

தமிழர் தேசிய விடுதலைக்காகும் தன்னை அர்ப்பணித்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா

அவ்வாறான தேசிய எழுச்சிக்காகவும் தமிழர் தேசிய விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்த அந்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

அவ்வாறான விடுதலை சார்ந்து பயணித்த அந்த குடும்பத்தின் செல்வனை , சர்வதேசத்தில் உள்ள தமிழர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவரை வாழ்த்தி வணங்கினர்.

காலத்தால் அழியாத காவியமாக ஐயா தேனிசை செல்லப்பா ,இளங்கோ செல்லப்பா அவர்கள் காணப்படுகிறார்கள்.

அதனால்தான் உலகத் தமிழர்கள் இவர்களை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இவ்வேளையில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக்டாக் தளம் என்பன ,இளங்கோ செல்லப் அவர்களுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறது.

இவரது இந்த பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ,பிறந்த நிகழ்வு கொண்டாட்ட காணொளி கீழே இணைக்கப்படுகிறது.

இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மது போதைக்கு 65பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மது போதைக்கு 65பேர் பலி

மது போதைக்கு 65பேர் பலி

மது போதைக்கு 65பேர் பலி ,மது போதைக்கு அடிமையான நிலையில் மாதம் ஒன்றுக்கு 65 பேர் பலியாகி வருவதாக, புதிய புள்ளி விவரங்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது .

அதிக மது பாவனை

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் அதிக மதுபாவனை அதிகரிப்பின் காரணமாக ,நாளொன்றுக்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் குடிபோதை யில் இறந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

வருடம் ஒன்றுக்கு இலங்கையில் இந்த குடிபோதையினால் ,23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாக வருவதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுக்கடங்காது மது போதை களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதனால், ஈரல் கருகி பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாரணம் மரணங்கள் சம்பவித்து வருகின்றன.

மது போதைகள் ,சாராயம் விற்பனை

நாள் ஒன்றுக்கு இலங்கையில் 242 மில்லியன் ரூபாய்க்கு மேல் மது போதைகள் ,சாராயம் விற்பனையாகிறது .

இதில் பாதி அளவு பணத்தினை ஆளுகின்ற அரசு வரியாக பெற்றுவிடுகிறது.

அதனால் நாடும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ,எங்களுக்கு வரி மட்டும் வந்தால் போதுமான நிலையில் ,மதுபானத்தை அதிகமாக அரசு விற்பனை செய்வதற்கு பல கடைகளை திறந்து அதை வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இதனால் நாடெங்கும் 65 பேர் மாதந்தோறும் பலியாகி வருகின்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

குடி மகன்களினால் குடிகள் சீரழிகின்ற அதே வேளையில் ,தற்பொழுது புதிய சந்ததியும் புதிய சீரழிவான கலாச்சாரத்துக்கு சிக்கி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்கலை தடுப்பது எப்படி இதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்பது தான் ,தற்பொழுது மக்கள் சமூகவாதிகள் சிந்தித்து வருகிறார்கள்.

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள், செம்மணி மனித புதைகுழியில் கடந்த தினம் இரண்டு மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணியின் பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி

இதுவரை இந்தசெம்மணி மனித புதைகுழியில் இருந்து 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பணிகளில் இந்த எலும்பு கூடுகள் மீட்ககப்பட்டுள்ளன.

இதுவரை 26க்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதிய சுயாதீன தகவல் தெரிவிக்கின்றன.

சந்திரிகா காலத்தில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கையின் போது, புதைக்கப்பட்ட சடலங்கே தற்பொழுது தோண்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கட்டிப் பிடித்தபடி இறந்த நிலையில் தாயின் உடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிங்கள ராணுவ காட்டினால் மிக கொடூரமாக குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குடும்பங்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் இப்பொழுது மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகின்றது .

இவ்வாறான நிலையில் இந்த செம்மணி விவகாரம் உலக அரங்கில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்

காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்

காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் ,காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025

திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக

வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை உரிமை மீறல் வழக்கு

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின்

பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.

வீதி விபத்துகளில் 4பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துகளில் 4பேர் பலி

வீதி விபத்துகளில் 4பேர் பலி

வீதி விபத்துகளில் 4பேர் பலி ,நாடு முழுவதும் இடம்பெற்ற சில வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் நேற்றும் (27) இன்றும் (28) இடம்பெற்ற சில விபத்துக்களில், அனைத்துமே மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று காலை நாரம்மல பொலிஸ் பிரிவில் கடஹபொல – கடுபொத வீதியில் உள்ள சியம்பலாகஸ்கொட்டுவ பிரதேசத்தில், கட்டுபொதவிலிருந்து

கடஹபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து, கட்டுபொத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், மீட்டியாகொட – கஹவ வீதியில் மீட்டியாகொடவிலிருந்து கஹவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்.

கொழும்பு – கண்டி வீதியில் மாஹேன பகுதியில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பெண் பாதசாரி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அங்கு பெண் பாதசாரி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (28) அதிகாலை பொத்துவில் வீதியில் அக்கரப்பத்திலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மற்றும் பயணி பலத்த காயங்களுடன் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா ,தவறுகளை ஏமாற்றிய அமெரிக்கா பல்வேறுபட்ட நாடுகளில் நடத்தப்பட்டதாக கூறப்படும் போர் கூட்டங்கள் மற்றும் பின்னப்படுவது தொடர்பான பொறுப்பு கூறல் மனித உரிமை விசாரணைக்காக 24 திட்டங்களுக்காக அமெரிக்கா நிதி வழங்கி வந்தது.

அந்த நிதியினை தற்போது நிறுத்துவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

இவ்வாறு ஈராக் .சிரியா . ரஷ்ய ஆகிய நாடுகளும் அடங்குவதாகவும் அதில் இலங்கையின் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் குற்றங்கள்

இதனால் இந்த நாடுகளில் இடம்பெற்று வருகின்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களுக்கு அமெரிக்கா இனி

நிதி வழங்காத நிலையில் அந்த விடயங்கள் அப்படியே காணாமல் ஆக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

அமெரிக்கா முன்னெடுத்த முடியும் தற்பொழுது பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போர் குற்றவியல் தொடர்பாக அதனை பகுப்பாய் செய்வதற்கு அதனை பேசுவதற்குமாக அமெரிக்காவின் நிதி உதவி ஊடாகவே அங்கு காரியங்களிடம் பெற்று வந்தன.

இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் நடவடிக்கை

தற்பொழுது இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது இலங்கையிலும் இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஊக்குவித்துள்ளதாகவே தமிழ் திறப்பு பார்க்கிறது.

ஆகவே இந்த இடத்தில் தமிழர் தரப்புக்கு அமெரிக்கா துரோகம் அளித்துள்ளதாக தவறுகள் பேசிக்கொள்கிறார்கள்.

இது மீன்பிடி படகுகள் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

இது மீன்பிடி படகுகள் விபத்து

இது மீன்பிடி படகுகள் விபத்து

இது மீன்பிடி படகுகள் விபத்து ,இரு மீன்பிடி படகுகள் விபத்து மீனவர்களை காணவில்லை தேடும் இலங்கை ராணுவம்.

தெவுந்தரா மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு படகும் ,களுத்துறை பகுதியிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படைக்கும் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது .

விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள்

இந்த விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள் ஐந்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது .

மேலும் படகு ஒன்று வணிக கப்பலுடன் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.

இருப்பினும் விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு ,கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏனைய நால்வர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

இவ்வாறு காணாமல் போன நால்வரும் பலியாகி உள்ளார்களா, அல்லது கடல் நீந்திக்கொண்டு உள்ளார்களா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

இவ்வாறு காணாமல் போன நால்வரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில், இலங்கை விமானப்படை

இலங்கை விமான படை

ஈடுபட்டுள்ளதாகவும் ,இலங்கை விமான படை உலங்குவானூர்திகளில் தேர்தல் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த விபத்து திடீரென ஏற்பட்ட விபத்தா, அல்லது திட்டமிடப்பட்ட ஒரு விபத்தா என தெரியவில்லை.

படகு கடலில் கவிழ்ந்து காணாமல் போன நிலையிலையே ,இந்த மீனவர்களுக்கு என்ன ஆனாது என தெரியவில்லை.

இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் சிங்கள மீனவர்கள் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து தற்பொழுது இலங்கை ராணுவ வான்படை தேடுதலில் ஈடுபட்டுள்ளன.

கைது செய்யப்படவுள்ள ராஜித
Posted in இலங்கை செய்திகள்

கைது செய்யப்படவுள்ள ராஜித

கைது செய்யப்படவுள்ள ராஜித

கைது செய்யப்படவுள்ள ராஜித ,முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் கைது

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்டபோது, இ​​லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன

சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யவிருப்பதாக அவர் இதன்போது கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி

லியனகே, இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாப்புள்ள ஊழல் கொடி கட்டி பறந்த சிங்க முத்து என இலக்கை வாழ் மக்கள் அறிந்தது உண்மை என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு ,எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம்

கார் ஒன்றுக்குள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக ,இலங்கை காவல்துறையினர் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் குரு நகல் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

கடந்த 25ஆம் தேதி தலைமுடி திருத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற இவர் , வீடு திரும்பாததை அடுத்து ,அவரது மனைவி போலீசாரில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதனை அடுத்து அவரை தேடிய போலீசார் ,அவரது காரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள் .

கொலையா அல்லது தற்கொலையா

இந்த சம்பவம் மரணமா அல்லது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தொழிலதிபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும்பாலும் படுகொலையாக இருக்கலாமென அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

தொழில் பகமை காரணமாக, கூலி குழுக்களை ஏவி இந்த படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர் இந்த கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

யாழ் ரயில்சேவை இனி தினசரி
Posted in இலங்கை செய்திகள்

யாழ் ரயில்சேவை இனி தினசரி

யாழ் ரயில்சேவை இனி தினசரி

யாழ் ரயில்சேவை இனி தினசரி ,யாழ்ப்பாணம் முதல் கல்கிசை வரையிலான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, இதுவரை வார இறுதி நாட்களில் (சனி

மற்றும் ஞாயிறு) மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக விரிவாக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்தார்.

நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சேவை தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொழும்பு கோட்டை நிலையத்தை காலை 5:45 மணிக்கு வந்தடைந்து, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும்.

இது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மதியம் 11:49 மணிக்கு வந்தடைந்து, பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12:13 மணிக்கு சென்றடையும்.

மீண்டும் மாலை 1:30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 2:12 மணிக்கு

பயணத்தைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டையை இரவு 8:33 மணிக்கு வந்தடையும். பின்னர், கல்கிசையை இரவு 8:55 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை அடுத்த சில நாட்களில் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

மேலும், இதுவரை காலை 5:45 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டு வந்த யாழ் தேவி ரயில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காலை 6:35 மணிக்கு புறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை, பொருளாதார விரைவில் வீழ்ச்சியூறும் நிலைக்கு காணப்படுகின்றன.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற ,இந்தப் போர் காரணமாக இலங்கையுனுடைய பொருளாதார ம் ஆட்டம் கண்டு வருகிறது .

விழுந்து போன பொருளாதாரத்தில் நிமிர்ந்து எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது .

இலங்கை இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தற்பொழுது இடம்பெறும் யுத்தம் 3 மாதம் நீடித்தால் அதுவே இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் .

தொடர்ந்து இஸ்ரேல் ஈரானுக்குள் போர் நடைபெற்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் , வீழ்ந்து பட்டினி பஞ்சத்தால் இலங்கை தள்ளாடும் நிலை காணப்படுகிறது .

விமானங்கள் ,கப்பல்கள் ,பறக்கவும். செல்லவும் முடியாத நிலை ஏற்படும் .அவ்வாறு ஏற்பட்டால் இலங்கை நிலை என்னவாகும்..? என்பதை இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவும்.

வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில்

வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில், இலங்கை கால்பதிக்கிறது .அதற்கான காரணம் பட்டினியால் அந்த நாடு மிக விரைவில் சிக்கப்போவது என்பதுதான் அபாய எச்சரிக்கையாகும் .

இதை உணராது ஆளுகின்ற அரசியல் வாதிகளும் ,ஆண்டு சென்ற ஆட்சியாளர்களும் லஞ்ச உடலில் சிக்கி திகழ்த்த இருக்கிறார்கள்.

இவ்வாறான ஏற்பட்டால் இலங்கையினுடைய ஆண்ட ஜனாதிபதிகள் வீடுகள் சுத்திவளைக்கப்பட்டு ,மக்களால் விரட்டப்படும் காலம் விரைவில் எழுதப்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்கள் இதை பகிரும்.

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள் எழுச்சி கண்டு அனுரா அரசு ஆடிப் போயுள்ளதுடன் மக்கள் எதிர்ப்பை கண்டு ஆட்டம் கண்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மண்ணில் ஒட்டுக் குழுக்களின் தளபதிகளாக விளங்கியவர்கள் ,ஆதரவாளர்கள் விளங்கியவர்கள் ,யாழ்ப்பாணத்தில் எம்பிக்களாக விளம்பரம் செய்தவர்கள் காணாமல் போயுள்ளனர் .

ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர்

இவர்கள் ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர் ,மணல் கொள்ளைகளை பிடிக்கிற சமூக வாதியாக தன்னை அடையாளம் காட்டிய எம்பிக்கள் என அனைவரையும் மக்களோடு சேர்த்து அரவணைப்பது போல கட்டி கொண்டார் .

தமிழருடைய அரசியல் பரப்புரையில், தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பாக ,பேச மறுக்கின்ற இவர்களையே வீரம் கொண்டிருந்த மக்கள் ஒன்றாகி விரட்டி அடித்தனர் .

தேசத்தின் தற்காப்புக்காகவும் ,தேசத்தின் விடியலிற்காகவும் தங்களை அர்ப்பணிக்க மறந்த இந்த அன்ன கைகளை ,மக்கள் ஓட விரட்டியது வாழ்த்தப்படக்கூடிய ஒன்று தான் .

தமிழர் தேசிய விடுதலை

தமிழர் தேசிய விடுதலை மெல்ல மெல்ல மீண்டெழ தோன்றும் காலத்தில் வலிகள் சுமந்து பயணிக்கின்ற மக்களை ,ஏமாற்ற வந்தால் உங்களுக்கு இதுதான் நடக்கும் என்பதை செம்மணியில் எழுச்சி கொண்ட மக்கள் கோபம் காட்டியது .

அப்பாவி தமிழர்களை கைது செய்து ,கொலை செய்ய காரணமாக இருந்த ,ஆண்ட கால ஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இருந்தது ,ஆளுகின்ற இந்த அனுராது என்பதை மறந்துவிட முடியாது.

அவ்வாறான கூலி குழுக்களை விட்டு விட முடியாது என்பதற்காக அனுராவை ஓடவிட்டது சரிதான் போலும் . மக்கள் தீர்ப்பு செவ்வென எழுத பட்டுள்ளது .

பொலிஸார் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் மீது தாக்குதல்

பொலிஸார் தாக்குதல்

பொலிஸார் மீது தாக்குதல் மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட

ஐந்து பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேக நபரான திருடனை கைது செய்ய மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் (25) பிற்பகல் 1:30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்றனர்.

இதன்போது, சந்தேக நபரும் அவருடன் இருந்த இரு பெண்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழு, பொலிஸார் மீது கத்தியால் குத்தியும், கம்புகளால் அடித்தும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரான திருடன் உட்பட மூன்று ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம் ,செம்மணி மக்கள் படுகொலை தொடர்பாக ,கொதித்து எழுந்து நின்ற பொழுது, அங்கு சென்ற அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர் .

சிவஞானத்தை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர்

இதன் பொழுது சிவஞானம் அவர்களை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர் .

ஆனால் தங்களை யாரும் விரட்டவில்லை ,மக்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் இதெல்லாம் பொய் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று ஐயா சிவஞானம் உருட்டு விட்டுள்ளார் உருட்டு கட்டை உருட்டு சிதம்பரம்.

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓட்டம்

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓடித் தப்பிய ஊழல்வாதிகளும் ,ஓட்டுக்குழு ஆசாமிகளும், இப்பொழுது ஊடகங்கள் முன்னால் குந்தி இருந்து எங்களுக்கு மக்கள் ஆதரவு என கத்தி வருகின்றனர் .

பாடையில போற வயதில், கூடையில் வருகிறது குஷ்பூ மாதிரி ஆட முற்பட்ட ,சிவ ஞானத்தை பார்த்து மக்கள் சிரிக்காமல் என்ன செய்வார்..?

ஏமாற்றி வந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை இனியாவது இந்த அரசியல் உருட்டு வாதிகள் உருட்ட கட்டுகள் உணர்ந்து கொள்வார்களாக.

இவர்களது இந்த பேச்சைக் கேட்டு மக்கள் தற்போது சிரித்து நகைச்சுவை ஆடுகிறார்கள்.

இந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா சுருட்டு கட்டை அயோக்கியர்களே .

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம்

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக

இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு

நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள்

குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார சவால்கள்

பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க

சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி

நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் ,கடந்த இரவு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமாக விசாரணை ஆரம்பித்துள்ள போலீசார் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றனர்.

காயம் அடைந்தவர் மிகுந்தலையைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது தொடர்பாக இன்னும் தெரிய வரவில்லை.

எனினும் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் இரகசிய குற்றத் தடுப்பு போலீஸ் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராவினுடைய ஆட்சி அரியணையில் ஏறித்தன் பின்னர் இலங்கையில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சூட்டத் தாக்குதலுக்கு பின்புலமாக உள்ளவர் யார்? ஏன் இவர் மீது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதும் ,அதன் ஊடாக பல தடயங்களை சேகரித்துள்ளனர்.

அதனை மையமாக வைத்து குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல் ,பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து

தனியார் பேருந்து அரசபேரூந்து ஊழியர் மோதல்

ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும்,

வழியில் பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து வந்த பேருந்தில் டிப்போ முகாமையாளரும் இருந்துள்ளார். மேலும் பொலன்னறுவை டிப்போவிற்கு முன்னால் பேருந்து கடக்கும்போது தனியார் பேருந்து சாரதி டிப்போ முகாமையாளரைத் தாக்கியதால் மோதல் அதிகரித்தது. பின்னர்

டிப்போவில் இருந்த அதிகாரிகள் குழு தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பேரூந்து ஊழியர்கள் காயம்

காயமடைந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மாவட்டத்திலும், நீண்டதூர பயணங்களுக்காகவும் சுமார் 135 இ.போ. சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும், மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கு

எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை டிப்போவில் பல பேருந்துகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது, இதனால் ஊழியர்கள், பேருந்துகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பொலிஸார் டிப்போவுக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பொலன்னறுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு ,நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் குழந்தைகளிடையே தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

நோய் அதிகரிப்புக்கு காரணம்

உட்கொள்ளும் உணவு முறைமையே இந்த நோய் அதிகரிப்புக்கு காரணம், என ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகங்கள் சந்திப்பின்போது ,இந்த விடயத்தை தெரிவித்தார்.

நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொற்று நோய்கள் தற்பொழுது குழந்தைகளுடைய அதிகம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

பிட்ஸா, பேக்கர் ,மற்றும் கொழுப்பு நிறைந்த அதிகமான உணவுகளை உட்கொள்வது ,உடலுக்கு ஒவ்வாமையான உணவுகளை அதிகமாக உட்கொள்வதை இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே மக்கள் மிகப் பெரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கிறார்.

இதேபோல இலங்கையில் ஐந்து பெண்களுக்கு ஒருவர் வன்முறைக்கு உள்ளாட்சி பெறுவதாகவும் இவையும் தடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார் .

புதிய வகை உணவு

இந்த புதிய வகை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து புரதச்சத்து அதிக காரணத்தினால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்று வருகிறதால் என அவர் கூறாமல் கூறுகிறாரா என்பது பொருளாகிறது.

ஆகவே மேற்கத்திய நாடுகளை விரும்பி உண்ணும் உறவுகளை கொஞ்சம் உங்களில் கவனம் செலுத்துமாறு அவர் இதனூடாக வேண்டுதல் கொடுத்துள்ளார்.

நோயில்லா உடலோடு நீங்கள் வாழ வேண்டுமாக இருந்தால் இந்த உணவுகளை சற்று பின்தள்ளி போடுதல் அல்லது உண்பதை தவிர்த்துக் கொள்ளுதல் உங்கள் உடலுக்கு உசுத்தமானது என்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்
Posted in இலங்கை செய்திகள்

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம் ,இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம்

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய

மனித உரிமைகள் பேரவை

நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று இரவு அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம்

சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சிறீ பவனாந்தராஜா ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்றனர்.

கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன்

சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத்

தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் என்னிடம் தெரிவித்தார்.

ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக

பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் –

மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது – என்றார்.

மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித

உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று

சொன்னார். முக்கியமாக பல பிரச்சினைகள் எடுக்கப்படுகின்றபடியால் எவ்வளவு தூரம் இலங்கை விவகாரத்தில் அக்கறை எடுக்கப்படும் என்பது

தனக்கு தெரியாது. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை தான் முழுமையாக எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுக்கு நாம் நன்றி சொன்னோம் – என்றார்.

செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டியதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையிலே பொறுப்பு

கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை.

பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம் – என்றார்.

முப்பது வருடப் போரிலும் அதற்கு பிற்பட்ட 16 வருடங்களிலும் எதுவித முன்னேற்றத்தையும் காணாத தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தான்

எடுத்துக் கூறியதாகவும் எமது அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாண்டு மக்களுக்கு தீர்வை தருவதில் மிக முனைப்பாக இருப்பதாக தான்

சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா தெரிவித்தார்.