Tag: தனியார்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம் ,அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
சாரதிகள் சோர்வாக இருந்தால்
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு
நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும். இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு,
மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை
குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள்
தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.
SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்
SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்
SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல் ,பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து
தனியார் பேருந்து அரசபேரூந்து ஊழியர் மோதல்
ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும்,
வழியில் பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறையிலிருந்து வந்த பேருந்தில் டிப்போ முகாமையாளரும் இருந்துள்ளார். மேலும் பொலன்னறுவை டிப்போவிற்கு முன்னால் பேருந்து கடக்கும்போது தனியார் பேருந்து சாரதி டிப்போ முகாமையாளரைத் தாக்கியதால் மோதல் அதிகரித்தது. பின்னர்
டிப்போவில் இருந்த அதிகாரிகள் குழு தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பேரூந்து ஊழியர்கள் காயம்
காயமடைந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்திலும், நீண்டதூர பயணங்களுக்காகவும் சுமார் 135 இ.போ. சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும், மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலன்னறுவை டிப்போவில் பல பேருந்துகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது, இதனால் ஊழியர்கள், பேருந்துகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பொலிஸார் டிப்போவுக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பொலன்னறுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள்இ வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புகையிரத சேவையை நட்டம் ஏற்படாதவகையில் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் புகையிரத ஊழியர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. அத்துடன், திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களினால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.
எனவே புகையிரத அதிகாரசபை சபை உருவாக்கப்பட்டு புகையிரத சேவை மீண்டும் சீர் செய்யப்படும்.
இதனூடாக நிருவாகமும் சீர் செய்யப்படும். தற்போது இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த காலங்களில் புகையிரத திணைக்களத்திற்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
கடந்த வருடத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், புகையிரத திணைக்களத்திற்கு மாதாந்தம் 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், அண்மையில் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதனால், தற்போது மாதாந்தம் சுமார் ஒரு பில்லியன் வருமானம் கிடைக்கின்றது.
ஆனால் இந்த வருமானம் புகையிரதங்களுக்கான எரிபொருளுக்கே பயன்படுத்தப்படுகின்றது.
எனவே, உயர் முகாமைத்துவ நுட்பங்களை பின்பற்றி எதிர்காலத்தில் இந்த வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கு
நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவத்தார்.

























