Tag: மீன்பிடி
இது மீன்பிடி படகுகள் விபத்து
இது மீன்பிடி படகுகள் விபத்து
இது மீன்பிடி படகுகள் விபத்து ,இரு மீன்பிடி படகுகள் விபத்து மீனவர்களை காணவில்லை தேடும் இலங்கை ராணுவம்.
தெவுந்தரா மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு படகும் ,களுத்துறை பகுதியிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படைக்கும் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது .
விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள்
இந்த விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள் ஐந்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது .
மேலும் படகு ஒன்று வணிக கப்பலுடன் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
இருப்பினும் விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு ,கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏனைய நால்வர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இவ்வாறு காணாமல் போன நால்வரும் பலியாகி உள்ளார்களா, அல்லது கடல் நீந்திக்கொண்டு உள்ளார்களா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
இவ்வாறு காணாமல் போன நால்வரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில், இலங்கை விமானப்படை
இலங்கை விமான படை
ஈடுபட்டுள்ளதாகவும் ,இலங்கை விமான படை உலங்குவானூர்திகளில் தேர்தல் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த விபத்து திடீரென ஏற்பட்ட விபத்தா, அல்லது திட்டமிடப்பட்ட ஒரு விபத்தா என தெரியவில்லை.
படகு கடலில் கவிழ்ந்து காணாமல் போன நிலையிலையே ,இந்த மீனவர்களுக்கு என்ன ஆனாது என தெரியவில்லை.
இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் சிங்கள மீனவர்கள் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து தற்பொழுது இலங்கை ராணுவ வான்படை தேடுதலில் ஈடுபட்டுள்ளன.
காவலாளியின் உடல் கடலில் சடலமாக மீட்பு
காவலாளியின் உடல் கடலில் சடலமாக மீட்பு
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை
புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21)
திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.
அத்துடன் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் காணாமல் போன மூன்று மீனவர்களையும் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக
மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளமை கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















