எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு ,எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம்
கார் ஒன்றுக்குள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக ,இலங்கை காவல்துறையினர் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் குரு நகல் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.
கடந்த 25ஆம் தேதி தலைமுடி திருத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற இவர் , வீடு திரும்பாததை அடுத்து ,அவரது மனைவி போலீசாரில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதனை அடுத்து அவரை தேடிய போலீசார் ,அவரது காரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள் .
கொலையா அல்லது தற்கொலையா
இந்த சம்பவம் மரணமா அல்லது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தொழிலதிபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும்பாலும் படுகொலையாக இருக்கலாமென அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.
தொழில் பகமை காரணமாக, கூலி குழுக்களை ஏவி இந்த படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர் இந்த கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்










