Tag: வீதியில்
வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் ஹோமாகம கிளை வீதியில் இன்று (10) காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சடலத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
வீதியில் மனித சடலம் மீட்பு
வீதியில் மனித சடலம் மீட்பு
வீதியில் மனித சடலம் மீட்பு. கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆணுறுவது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தெரிவித்துள்ளனர் .
மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக பாவனைக்கு உட்படுத்தப்படும் இந்த பகுதியில் இந்த ஆண் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது இயற்கை மரணம் ஏதும் எய்தினார் என்பது தொடர்பில் வைசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உடனடியாக இந்த சடலம் தொடர்பான விடயங்கள் தெரிய வரவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான மனித சடலங்கள் காடுகள் ,நீர் ஏரிகள் மற்றும் பாழடைந்த வீடுகள் உள்ளிட்டவத்ரில் இருந்து மீட்க பட்டு வருகிறது .
இவ்வாறான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இவர் அந்த கொலைகள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .
இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .
வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்
இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .
அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .
உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .
அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .
மது போதைக்கு அடிமையான தமிழர்கள்
இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,
அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .
Featured
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா
- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு
- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்
- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது
வீதியில் வினோத போராட்டம்
வீதியில் வினோத போராட்டம்
வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மூளாயில் மக்கள் நேற்று (10) வினோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வீதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும் மற்றும் உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியில் வினோத போராட்டம்
இப் போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்தப் பாரபட்சம், R.D.A அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா?,
வழக்கம்பரை தொடக்கம் பொன்னாலை வரை வாழும் மக்கள் மந்தைகளா?, வெள்ளத்தில் நீந்தியா நாம் பள்ளிக்கு வருவது போன்ற பல பதாகைகளைத் தாங்கியிருந்தனர்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா
- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு
- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்
வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு
வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு
மன்னார் – உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றம்.
மன்னார் உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்று (26) இரவு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பகுதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின் பின்னர் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
மீட்கப்பட்ட குறித்த நபர் அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு
அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர், அடம்பன் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகிறது .
குறித்த நபர் விபத்திற்கு உள்ளானாரா? அல்லது தாக்குதல் சம்பவமா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
- போதையில் சாரதி இரு பெண்கள் பலிby நிருபர் காவலன்
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்by நிருபர் காவலன்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமாby நிருபர் காவலன்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
by நிருபர் காவலன் - போதையில் சாரதி இரு பெண்கள் பலி
by நிருபர் காவலன் - கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
by நிருபர் காவலன் - டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
by நிருபர் காவலன் - குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
by நிருபர் காவலன் - இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா
by நிருபர் காவலன் - வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு
by நிருபர் காவலன் - இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
by நிருபர் காவலன் - இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்
by நிருபர் காவலன்
வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி
வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி
வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய பண்டிகைக் காலத்தில் அனுமதி .
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற வீதிகளில் பொது போக்குவரத்தை வலுப்படுத்த 500 புதிய பேரூந்துகளை இயக்கும் திட்டத்தின் கீழ் இந்த பேரூந்துகள் நாட்டிலுள்ள
அனைத்து டிப்போக்களுக்கும் விநியோகிக்கப்படும். இதனடிப்படையில், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் டிப்போக்களுக்கு இந்த பேருந்துகளை கையளிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
´நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழ், சிங்களப் புத்தாண்டை வழமை போன்று கொண்டாடும் வாய்ப்பை எமது நாட்டு மக்கள் இழந்துள்ளனர்.
இதனால் அதிகளவான உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சுயதொழில் செய்து வீட்டிலேயே சிறிய அளவில் உற்பத்தி செய்து வரும் தொழில் முயற்சியாளர்கள், தங்கள் பொருட்களை கட்டணம் ஏதுமின்றி வீதியோரங்களில் இருந்து விற்பனை செய்ய, பண்டிகை காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிக அனுமதி வழங்க
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வீதி ஓரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில், அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் அனுமதி மற்றும்
மேற்பார்வையுடன், நிரந்தர கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய தற்காலிகமாக இந்த அனுமதியைப் பெறுகின்றனர்.
தற்போது மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் துணி மற்றும் ஆடைகள் விற்பனைக்காக இவ்வாறான விசேட இடங்களை ஒதுக்கியுள்ளோம்.
அதேபோன்று, நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை, ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக சுயதொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு
உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்..´
இந்நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரள, வஜிர அபேவர்தன, உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டா ரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில்
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டா ரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம்
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா கியூபெக் மாநிலத்தின் அதி வேகா சாலையில் திடீரென
இலகு ரக விமானம் ஒன்று தரை இறங்கியது
வாகனங்கள் அவ்வாறே பயணித்து கொண்டிருக்க இந்த விமானம் இவ்விதம் அவசரமாக தரை இறங்கியது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம்
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது ,விமானியின்
சாதுரியத்தால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர்





























