Author: நலன் விரும்பி
கூகிளுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக்- பணம் உழைக்க வசதி – video
கூகிளுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக்- பணம் உழைக்க வசதி – video
உலக மக்களை கட்டி போட்டு வைத்துள்ளது சமுக வலை தளங்களாகும் ,
அதில் முன்னிலையில் உள்ளது பேஸ்புக் நிறுவனமாகும் ,
கூகிளுக்கு போட்டியாக களத்தில் நிற்கும் பேஸ்புக் தற்பொழுதுy outube
இணையத்தை மைய படுத்திய முறைமையில் பணம் உழைக்கும்
வசதியினை செய்துள்ளது
முழுமையான விபரங்கள் அறிய இந்த காணொளியை பாருங்கள்
வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo
வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo
கடந்த தினம் வவுனியா பகுதியில் பலமாக வீசிய புயல் காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .
மரங்களின் கீழே நிறுத்தி வைக்க பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன
வீட்டு கூரைகள் காற்றில் அடித்து செல்ல பட்டுள்ளன ,இந்த பேரழிவு தொடர்பில்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது கடமைகளை துரித படுத்தியுள்ளனர்


பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்
பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்
இலங்கையில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் Dickwala வீதி , Siyambalape பகுதியில் ஐம்பது வயது பெண்மணி ஒருவர்
கோரமாக தாக்க பட்டு அதன் பின்னர் அவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு ராகம மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது .
மேற்படி படுகொலை தொடர்பில் காவல் துறையினர் புலன் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தற்போது இலங்கையில் இவ்விதமான படுகொலைகள் அதிகம் இடம்பெற்ற
வண்ணம் உள்ளதும், அதனை தடுக்க இயலாத நிலையில் காவல்துறை விளங்குவதும் குறிப்பிட தக்கது

மலிவு விலையில் மரக்கறிகள் -அரசு நடவடிக்கை
மலிவு விலையில் மரக்கறிகள் -அரசு நடவடிக்கை
கொழும்பு புறக்கொட்டை மெனிங் சந்தை மூடப்பட்டிருப்பதால், மரக்கறிகளை
மொத்தமாக நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்கு
அனுப்புவதற்கு உற்பத்தியாளர்களுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் ஈடுபடுகிறது.
மீகொட, இரத்மாலானை, வெலிசர, பிலியந்தலை மற்றும் வெயாங்கொட
பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறிகளை அனுப்பி வைக்க முடியும்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவிஅவசியமில்லை – இராணுவம்
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவிஅவசியமில்லை – இராணுவம்
இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை திறம்பட கையாள முடியும்
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் இருநாடுகளுக்குமிடையில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை
இலங்கையில் கொரோனவிரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும்
கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் முப்படைமற்றும் பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி தமது திறன்களை ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
“எமது இராணுவம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அவசரகால நிலைமையை கையாள்வதில் அவர்களின்
நிபுணத்துவம் மற்றும் தொழில்வான்மையை ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், ஒரு நாடு, அதன் புலனாய்வு நிறுவனங்களை, இராணுவ மற்றும் சுகாதார நிறுவனங்களுடன்
இணைப்பதன் ஊடாக எவ்வாறு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் ஏனைய நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
“இலங்கையின் புலனாய்வு அமைப்புகள், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் நெருக்கமாக
தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வமைப்புக்கள், அவர்களை 14 நாட்கள்
தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயல்முறைக்கு வழிகாட்டுகின்றன.” என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையில் இந்திய இராணுவம்
பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு
செயலாளர், இவ்வாறாக இரண்டு நாடுகளுக்கு இடையில் எத்தகைய கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

217 தொழிற்சாலைகளில் பணிகள் மீண்டும் ஆரம்பம்
நாடு முழுவதுமுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் 217 தொழிற்சாலைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
தொழிற்சாலை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவும், சுகாதார ஆலோசனைகளுக்கு
அமையவும் இவர்கள் செயற்பட வேண்டியது அவசியம் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 48 தொழிற் சாலைகளிலும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் 35
தொழிற்சாலைகளிலும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 30,269 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வீதியில் மயங்கி விழுந்த நபர் – மருத்துவ மனையில் அனுமதி
வீதியில் மயங்கி விழுந்த நபர் – மருத்துவ மனையில் அனுமதி
கடந்த தினம் வவுனியா இரண்டாம் குறுத்தெரு பகுதியில் நபர் ஒருவர்
திடீரென மயங்கி வீழ்ந்தார் ,இதனையே அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்த போலீசார் அவரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல பட்டார்
இவருக்கு கொரனோ நோயானது உளளதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

இத்தாலியில் வீட்டில் பாட்டி நடத்திய 11 இலங்கையர்களுக் 3000 யூரோ தண்டம்
ஐரோப்பாவில் கொரனோவின் முதல் தாயகமாக விளங்கிய இத்தாலியில்
இத்தாலியில் நீண்ட காலமாக வசித்து வரும் இலங்கையை சேர்ந்த நபர்கள் வீடு ஒன்றில், ஒன்று கூடி
விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ,இவர்கள் விருந்து வைத்தல்
வீட்டில் பாட்டி நடத்திய 11 இலங்கையர்களுக்கு 3000 யூரோ தண்டம் விதிக்க பட்டுள்ளது
நிகழ்வை அறிந்த அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் ,
அயல் வீடுகளில் இருந்து ஒன்று கூடி இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட குற்றங்கள்
தொடர்பாக 300 முதல் மூவாயிரம் யூரோ வரை தண்டம் அறவிட்டதுடன் ,
அனைவரும் தீவிர கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மக்களை ஒன்று கூடிட தடை விதிக்க பட்டுள்ளதுடன் , வீடுகளை விட்டு வெளியில் செல்ல
லாதீர்கள் என அரசு தெரிவித்து வரும் நிலையில் இவ்விதம் இலங்கையர்கள் செய்துள்ளமை வேதனையில் ஆழ்த்தியுள்ளது
இவர்களை போல மேலும் பலர் கைது செய்ய படும் காட்சிகளும் ,தண்டம் வழங்கும் காட்சிகளும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .
மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்
இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது
பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது
,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது
பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்
உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video
அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video
அவுஸ்ரேலியாவின் Eastern Freeway -அதிவேக பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் கார் லொறி
ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு காவல்துறை ஊழியர்களும் சம்பவ இடத்தில பலியானார்கள்
ஒரே தடவையில் இவ்விதம் நான்கு காவல்துறையினர் இறந்துள்ளது ,காவல்துறை
ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை பல மணி நேரம் மூட பட்டிருந்தது .
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video
கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக வருகை தந்த சிரியா,அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது ,அதன் பொழுது அந்த கப்பலில் இறந்த மனிதர்களது சடலங்கள் இவை
முழுமையாக காணொளியை பாருங்கள்
லண்டன் Chatham பகுதியில் தீவிரவாதி மக்கள் மீது சூடு – வீடியோ
லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது – தப்பிய மக்கள் வீடியோ
லண்டன் Dock Head Road, Chatham பகுதியில் வீட்டு பால்கனியில் இயந்திர துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் உலவியுள்ளார் ,இதனை
கண்ணுற்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர் மடக்கி பிடிக்க பட்டார் .
மக்களை சுடுவதற்கு முன்பாக இந்த துப்பாக்கிகளை காண்பித்து காவல்துறையினருக்கு அழையுங்கள் என சத்தம் போட்டுள்ளார் .
விரைந்து செயல் பட்ட காவல்துறையினரால் இவர் மடக்கி பிடிக்க பட்டார் ,இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன

மன்னார் ,வவுனியா மாவட்டங்களில் கடும் மழை
மன்னார் ,வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும்
வடமத்தியமாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்
பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியி;ட்டுள்ள வானிலை அறிக்கையில் ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இராணுவ சாட்லைட் வெற்றிகர சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா – வீடியோ
ஈரான் இராணுவ சாட்லைட் வெற்றிகர சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா – வீடியோ
ஈரான் நாடானது தனது புதிய தொழில் நுட்பத்தை தாங்கிய ய இராணுவ சாட்லைட் ஒன்றை சோதனை செய்து வந்ததது ,மூன்று
தடவைகள் நடத்த பட்ட சோதனைகள் தோல்வியில் முடிந்தது, தற்போது இன்று ஏவிய இந்த் சாட்லைட் வெற்றிகரமாக தனது இலக்கு நோக்கி பயணித்துள்ளது
இந்த செய்மதி ஊடாக இராணுவ நிலையங்களை ஈரான் கண்காணிப்பதுடன் ,புதிய ஏவுகணை தொழில் நுட்பத்தில்
மேம்பட்ட ஏவுகணைகளை ,அதாவது வான்மறிப்பு ஏவுகணைககளுக்குள் சிக்காத ஏவுகணையை ஈரான் வரும்
காலங்களில் தயாரிக்கும் நிலைக்குச செல்லும் என அடித்து கூற படுகிறது
எமது நாட்டின்மீது போர் தொடுத்தால் அமெரிக்காஇதுவரை சந்திக்காத பாரியஅழிவுகளை சந்திக்கும் எனவும் எங்களிடம்
,அவ்வாறான கருவிகள் உள்ளது என்பதே ஈரானை சொல்லாமல் கூறி வந்தது
அதன் ஒரு கட்டமாக இந்த சோதனை நிகழ்வு இடம்பெற்று .இது அமெரிக்கா,இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு
அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக
இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான
பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது

ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது
ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளையில் அந்த விதிகளை மீறி வெளியில் உலவிய சுமார் 34,956 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் ,
அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
இந்த தண்ட பணத்தினை பதின் நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின்
குற்ற பணம் மேலும் அதிகரிக்க பட்டு நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்
ஊரடங்கு விரைவில் அகற்ற படும் எனவும் ,சில பகுதியில் விலக்க பட்டுள்ளமைக்கு குறிப்பிட தக்கது

கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு
கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு
இலங்கையில் பிராவை வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என விதிகள் கூறப்பட்டது .
அதனை அடுத்து இதனை நிவர்த்தி செய்திட எண்ணிய வாலிபர் ஒருவர்
கால்களினால் கைகளை புதிய இயந்திரம் மூலம் கழிவிடும் வழியொன்றை கண்டு பிடித்தார் .
மலிந்த விலையில் தயாரிக்க பட்டுள்ள இந்த இயந்திரம் மக்களுக்கு
பெரிதும் பலன் தரும் ஒன்றாக அமைந்துள்ளது
வெறும் மூவாயிரம் ரூபா செலவில் இது தயாரிக்க பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது
குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன்
மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும்
அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து,
ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்நாட்டைச் சேர்ந்த
இஸ்லாமிய தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு
நிறைவடைந்துள்ளதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ
அல்லது தனிநபர்களுக்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள
பாதுகாப்புச் செயலாளர், இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து,
அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டு மக்கள்
அனைவருக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“நாம், எமது நாட்டு மக்கள், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களினால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை, அதன் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம்
காணும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் உதவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின்
முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, நாட்டின் அனைத்து
புலனாய்வு அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தின .
எனினும் இஸ்ரேல் ஏவுகணைகளை ரசியாவின் ஸ்-400 ரக வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தின .
மேற்படி சுட்டு வீழ்த்தும் காட்சிகளை சிரியா இராணுவம் வெளியிட்டுள்ளது
குறித்த வான் தடுப்பு ஏவுகணைகள் செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா பரப்புரை புரிந்து வந்த நிலையில் இந்த சுட்டு வீழ்த்துதல் இடம்பெற்றுள்ளது .
தானியங்கி முறையில் சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிட தக்கது ,
இஸ்ரேல்,அமெரிக்கா ,தொடர்ந்து ஈரான் ,ரசியா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றமையும் அதனை சிரியா தீவிரமாகி தடுத்து வருவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது
சிரியாவின் முப்பது ஆயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த இராணுவத்திற்கு ஆதரவு தாக்குதல்களை அமெரிக்கா,இஸ்ரேல் வழங்கிய வண்ணம் உள்ளன
வரும் நாட்களின் போரின் வேகம் அகோரமாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து
சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து
ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள்
இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் மொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறையில்
வியாபாரம் செய்யாமையால் கொவிட் 19 வைரஸ் பொது மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, வீடு வீடாகச் சென்று மீன், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை ஒன்லைன் முறையின் கீழ்
விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மொபைல் வணிகத்தை முன்னெடுப்பதில்
பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய சுத்தமான சீருடை அணிவது, பொருத்தமான காலணிகளை அணிவது, வியாபாரம் செய்யும் போது முக
கவசங்களை அணிவது, மற்றும் கையுறைகளை பயன்படுத்துதல், கைக்கழுவும் திரவங்களை உபயோகித்தல் ஆகியனவும் கைக்கொள்ள வேண்டும்.
மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.








