கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video
கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக வருகை தந்த சிரியா,அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது ,அதன் பொழுது அந்த கப்பலில் இறந்த மனிதர்களது சடலங்கள் இவை
முழுமையாக காணொளியை பாருங்கள்
லண்டன் Chatham பகுதியில் தீவிரவாதி மக்கள் மீது சூடு – வீடியோ
லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது – தப்பிய மக்கள் வீடியோ
லண்டன் Dock Head Road, Chatham பகுதியில் வீட்டு பால்கனியில் இயந்திர துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் உலவியுள்ளார் ,இதனை
கண்ணுற்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர் மடக்கி பிடிக்க பட்டார் .
மக்களை சுடுவதற்கு முன்பாக இந்த துப்பாக்கிகளை காண்பித்து காவல்துறையினருக்கு அழையுங்கள் என சத்தம் போட்டுள்ளார் .
விரைந்து செயல் பட்ட காவல்துறையினரால் இவர் மடக்கி பிடிக்க பட்டார் ,இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன

மன்னார் ,வவுனியா மாவட்டங்களில் கடும் மழை
மன்னார் ,வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும்
வடமத்தியமாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்
பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியி;ட்டுள்ள வானிலை அறிக்கையில் ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இராணுவ சாட்லைட் வெற்றிகர சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா – வீடியோ
ஈரான் இராணுவ சாட்லைட் வெற்றிகர சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா – வீடியோ
ஈரான் நாடானது தனது புதிய தொழில் நுட்பத்தை தாங்கிய ய இராணுவ சாட்லைட் ஒன்றை சோதனை செய்து வந்ததது ,மூன்று
தடவைகள் நடத்த பட்ட சோதனைகள் தோல்வியில் முடிந்தது, தற்போது இன்று ஏவிய இந்த் சாட்லைட் வெற்றிகரமாக தனது இலக்கு நோக்கி பயணித்துள்ளது
இந்த செய்மதி ஊடாக இராணுவ நிலையங்களை ஈரான் கண்காணிப்பதுடன் ,புதிய ஏவுகணை தொழில் நுட்பத்தில்
மேம்பட்ட ஏவுகணைகளை ,அதாவது வான்மறிப்பு ஏவுகணைககளுக்குள் சிக்காத ஏவுகணையை ஈரான் வரும்
காலங்களில் தயாரிக்கும் நிலைக்குச செல்லும் என அடித்து கூற படுகிறது
எமது நாட்டின்மீது போர் தொடுத்தால் அமெரிக்காஇதுவரை சந்திக்காத பாரியஅழிவுகளை சந்திக்கும் எனவும் எங்களிடம்
,அவ்வாறான கருவிகள் உள்ளது என்பதே ஈரானை சொல்லாமல் கூறி வந்தது
அதன் ஒரு கட்டமாக இந்த சோதனை நிகழ்வு இடம்பெற்று .இது அமெரிக்கா,இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு
அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக
இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான
பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது

ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது
ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளையில் அந்த விதிகளை மீறி வெளியில் உலவிய சுமார் 34,956 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் ,
அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
இந்த தண்ட பணத்தினை பதின் நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின்
குற்ற பணம் மேலும் அதிகரிக்க பட்டு நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்
ஊரடங்கு விரைவில் அகற்ற படும் எனவும் ,சில பகுதியில் விலக்க பட்டுள்ளமைக்கு குறிப்பிட தக்கது

கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு
கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு
இலங்கையில் பிராவை வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என விதிகள் கூறப்பட்டது .
அதனை அடுத்து இதனை நிவர்த்தி செய்திட எண்ணிய வாலிபர் ஒருவர்
கால்களினால் கைகளை புதிய இயந்திரம் மூலம் கழிவிடும் வழியொன்றை கண்டு பிடித்தார் .
மலிந்த விலையில் தயாரிக்க பட்டுள்ள இந்த இயந்திரம் மக்களுக்கு
பெரிதும் பலன் தரும் ஒன்றாக அமைந்துள்ளது
வெறும் மூவாயிரம் ரூபா செலவில் இது தயாரிக்க பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது
குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன்
மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும்
அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து,
ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்நாட்டைச் சேர்ந்த
இஸ்லாமிய தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு
நிறைவடைந்துள்ளதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ
அல்லது தனிநபர்களுக்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள
பாதுகாப்புச் செயலாளர், இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து,
அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டு மக்கள்
அனைவருக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“நாம், எமது நாட்டு மக்கள், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களினால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை, அதன் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம்
காணும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் உதவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின்
முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, நாட்டின் அனைத்து
புலனாய்வு அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தின .
எனினும் இஸ்ரேல் ஏவுகணைகளை ரசியாவின் ஸ்-400 ரக வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தின .
மேற்படி சுட்டு வீழ்த்தும் காட்சிகளை சிரியா இராணுவம் வெளியிட்டுள்ளது
குறித்த வான் தடுப்பு ஏவுகணைகள் செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா பரப்புரை புரிந்து வந்த நிலையில் இந்த சுட்டு வீழ்த்துதல் இடம்பெற்றுள்ளது .
தானியங்கி முறையில் சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிட தக்கது ,
இஸ்ரேல்,அமெரிக்கா ,தொடர்ந்து ஈரான் ,ரசியா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றமையும் அதனை சிரியா தீவிரமாகி தடுத்து வருவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது
சிரியாவின் முப்பது ஆயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த இராணுவத்திற்கு ஆதரவு தாக்குதல்களை அமெரிக்கா,இஸ்ரேல் வழங்கிய வண்ணம் உள்ளன
வரும் நாட்களின் போரின் வேகம் அகோரமாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து
சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து
ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள்
இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் மொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறையில்
வியாபாரம் செய்யாமையால் கொவிட் 19 வைரஸ் பொது மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, வீடு வீடாகச் சென்று மீன், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை ஒன்லைன் முறையின் கீழ்
விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மொபைல் வணிகத்தை முன்னெடுப்பதில்
பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய சுத்தமான சீருடை அணிவது, பொருத்தமான காலணிகளை அணிவது, வியாபாரம் செய்யும் போது முக
கவசங்களை அணிவது, மற்றும் கையுறைகளை பயன்படுத்துதல், கைக்கழுவும் திரவங்களை உபயோகித்தல் ஆகியனவும் கைக்கொள்ள வேண்டும்.
மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
இலங்கை கண்டி பகுதியில் காதல் கணவனை அடித்து கொன்ற மனைவி பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துளளர் .
தினம் தோறும் போதையில் வந்து மனைவியை அடித்து ,வதை செய்து
வந்த கணவனின் தொல்லை தாங்கிட முடியாது ஒரே அடியாக அடித்து
கொலை செய்து விட்டு தற்பொழுது இரு பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்
தாயிடம் இருந்து பிள்ளைகளை பிரித்தெடுத்து காவல்துறையினர் மனைவியை நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பிள்ளைகள் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
அவசரம் செய்த அலங் கோலத்தால் பிள்ளைகள் பெற்றவர்கள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர்

எப்போது அருந்தினால் என்ன பலன்
தண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்
தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.
தண்ணீரின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. தண்ணீர்
அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு.
தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
- உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.
- உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராகும்.
- வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும்.
- விடியற்காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.
*3 வேளையும் சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.
- போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
- தண்ணீர் அருந்துவது நல்லதுதான். அதற்காக தாகம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது.
- அதிகமாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம்
- அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமாக சூட்டில் பருகுவது மிகவும் நன்மை தரும்.

டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு
டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு
ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் இடைவிடாமல் டி.வி., பார்ப்பதாலும், செல்போனை
பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர். மற்ற நேரங்களில் மக்கள்
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு வீட்டில் இருக்கும்போது, பொதுமக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள்,
சிறுவர்-சிறுமிகள் டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலர் மூழ்கி விடுகின்றனர்.
டி.வி., செல்போனை இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம்
எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பொதுவாக டி.வி., செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கில் செல்போனை
பயன்படுத்துவதும், டி.வி. பார்ப்பதும் அதிகரித்துள்ளது. செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிப்படையாமல்
இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் இருளில் அமர்ந்து செல்போனை பார்க்க
கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனால் கண்களில் விழித்திரை பாதிப்படையும்.
கண் பார்வையை பாதிக்காத வகையில் கண்ணாடிகள் அணியலாம். குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு செல்போன்
பயன்படுத்தலாம், டி.வி. பார்க்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து
வதையும் தவிர்த்து விட வேண்டும். இதேபோல குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைட்டமின் ‘ஏ‘ வகை உணவுகளான பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு
இறைச்சி, கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video
கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார்.
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர்
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் சதீஷ்
கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
🤓🤓🤓 pic.twitter.com/6jeRC3mgFx
— Sathish (@actorsathish) April 21, 2020
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட்
நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு
தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும்.
துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில்,
கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக
மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து தற்போது கனடா அரசுக்கு சொந்தமான Air Canada விமான நிறுவனம்
தனது பயணங்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விமானங்கள் பயணிக்க தடை விதித்தது .
இந்த சேவையானது வைகாசி 22 அம திகதி வரை மேலும் பிற்போட பட்டுள்ளது
மே மாதம் வரை இந்த விமான சேவைகள் அமெரிக்காவுக்கு இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்காவுக்கு இவ்வாறு பல நாடுகள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால் அமெரிக்காவின் பொருளாதரம் பாரிய சரிவை சந்தித்துள்ளது

கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி
கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர்பலி
எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை 17.337 பேர் இறந்துள்ளனர்
மேலும் இன்று புதிதாக 4,301 பேர் பாதிக்க பட்டுள்ளார் ,மேலும் 129,044 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் ஸ்பெயின் 430 ஆக உயிர்ந்துள்ளது ,21,282 பேர் இறந்துள்ளனர்
வழமைக்கு மாறாக இன்று பிரிட்டனில் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது செயல்
மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம
சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற்றன.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் உயிர்
இழந்தவர்களின் ஈத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை 8.45 மணியளவில் இடம் பெற்று இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மலையகத்திலும் இன்று (21.04.2020) வழிபாடுகள் நடைபெற்றன.
மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
கோவில்கள்இ விகாரைகள்இ பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.


கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் செய்தி
கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும்
சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும்
குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து
இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு
இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப்
படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.
தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த
ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.
‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து
இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும்
இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.








