Tag: நடிகர்
நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்
நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் ,பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான் ,City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான
திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக
ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷொப்பிங்
மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த
ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

இலங்கை வந்தார் பிரபல நடிகர்
இலங்கை வந்தார் பிரபல நடிகர்
இலங்கை வந்தார் பிரபல நடிகர் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான KGF மூலம் கருடண் என அனைவராலும் அறியப்பட்ட பிரபல நடிகர் ராமச்சந்திர ராஜு இலங்கை வந்துள்ளார்.
இவர் கொழும்பிலிருந்து பெங்களூர் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை
விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
துணை ஆணையர் தீபக் தலைமையில், 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .
அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக
காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான
புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில்
வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம்
அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக
திருமணம்
நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.
காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
போண்டா மணி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய
போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல
படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ்
படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.
போண்டா மணி
இந்நிலையில், இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என் தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு அறிக்கை
சிம்பு – டி.ராஜேந்தர்
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை
மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய
இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர்
சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார்.
உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மீது -நடிகை பாலியல் புகார்
நடிகர் மீது -நடிகை பாலியல் புகார்
நடிகை பாலியல் புகாரில் தலைமறைவான விஜய்பாபு விவகாரத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் என்று விலகியுள்ளார்.
மலையாள திரைப்பட உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த விஜய்பாபு மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்
தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் விஜய்பாபு மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து தானே
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் விஜய்பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்பாபு
அதேநேரம் தன் மீதான புகார்கள் அனைத்தும் வேண்டுமென்றே கூறப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்பாபு மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து, சங்கத்தின் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை மாலாபார்வதி
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாலியல் புகாரில் சிக்கியுள்ள விஜய்பாபு, பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி உள்ளது சட்டத்தை
மீறிய செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க அம்மா சங்க விசாரணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்
இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனை கண்டித்து மலையாள நடிகர் சங்கத்தின் புகார்கள் விசாரணைக் குழுவில் இருந்து விலகியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
மோகன்
மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி, 1980-களில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி,
கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மவுன ராகம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இவரை மைக் மோகன் என்று அழைத்தனர். 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு
விலகினார். மோகனை புதிய படங்களில் நடிக்க வைக்க அழைப்புகள் வந்தும் மறுத்து வந்தார். தற்போது, இயக்குனர் விஜய் ஸ்ரீ சொன்ன ஹரா படத்தின் கதை பிடித்ததால்
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து மோகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்தார். ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த
படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க மோகன் முடிவு செய்து இருக்கிறார்.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3ம்தேதிவரை
தனிமைப்படுத்தப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கமல் ஹாசன்
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில்
கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருவதுடன்
நீண்டநாள் கிடப்பில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்
நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்
இந்தி சினிமா உலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். தற்போது 78 வயதாகும் அவருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 1
982-ம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவருடய உள் உறுப்புகள்
பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் எனது உள் உறுப்புகள் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன என்று கூறி
இருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் திடீரென அவரை கொரோனா தாக்கியது. மும்பை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்பிழைத்தார்.
அமிதாப்பச்சன்
ஆனால் இப்போது திடீரென அவருக்கு ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவலை அமிதாப்பச்சனே
அவருடை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒற்றை வரியில் அந்த செய்தி உள்ளது. அதில், ‘மருத்துவ சூழ்நிலை, ஆபரேசன்.
இதற்கு மேல் விவரிக்க முடியாது’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அவருக்கு உடல்நிலையில் என்ன செய்கிறது. எந்த வகையான ஆபரேசன் நடக்கிறது? ஆபரேசன் நடந்துவிட்டதா? அல்லது
நடக்கப்போகிறதா? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடக்கிறது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்
2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்
தெலுங்கு படவுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்
தில் ராஜு மற்றும் அவரது மனைவி
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த
திரைப்படங்களை தயாரித்தவர் தில் ராஜு. இவர் நேற்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்
49 வயதான தில் ராஜு முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம்
ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து
அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.
தில் ராஜு மற்றும் அவரது மனைவி
இந்த நிலையில் மகளின் வற்புறுத்தல் காரணமாக நேற்று நிஜாமாபாத்
பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
ஊரடங்கு நேரத்தில் இந்தத் திருமணம் நடந்ததால் இருவீட்டாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்

போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்ஷய்குமார்
போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்ஷய்குமார்
கொரோனா ஊரடங்கில் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் போலீசாருக்காக நடிகர் அக்ஷய்குமார் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய
கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும்
மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை
கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய்குமார், பிரதமரின்
நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.
தற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’
பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது
. நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.
அக்ஷய்குமார்
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர்
சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து
அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும்
பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள திரைப்படமான பட்டண பிரவேசம்
படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம் .
பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப்
பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக்
கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.
இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும்
காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி,
அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். இவ்வாறு துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video
கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார்.
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர்
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் சதீஷ்
கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
🤓🤓🤓 pic.twitter.com/6jeRC3mgFx
— Sathish (@actorsathish) April 21, 2020
ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.
ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.
ஊரடங்கை மீறி காரில் மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற துணை நடிகர் கைது
கைது செய்யப்பட ரிஸ்வான்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர்
பகுதியில் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றபோது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும்
ரூ.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.
அதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தசரதபுரம், மீன்
மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்,
சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல்
செய்தனர். பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
அஜித், விஜய்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம்
தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின.
இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
சஞ்சய், விஜய்
‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை.
சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது
வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளன

வடிவேலு பாடிய கொரோனா பாடல்
வடிவேலு பாடிய கொரோனா பாடல்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
கொரோனாவை வெல்வோம் – வடிவேலு பாடிய உருக்கமான பாடல்
வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன்
காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், என்னை ஒழிக்கமுயன்றார் என்று நடிகை சனம் ஷெட்டி மீது புகார் கூறியிருக்கிறார்.
என்னைஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
சனம் ஷெட்டி – தர்ஷன்
தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள்
காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.
இதனை சனம் ஷெட்டி மறுத்தார். தர்ஷனும், நானும் இரண்டரை வருடம் கணவன்-மனைவி போலவே
வாழ்ந்தோம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் அவர் மாறி விட்டார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி இருப்பதில் உண்மை இல்லை என்றார்.
இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சனம் ஷெட்டி – தர்ஷன்
“சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால்
பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.
அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது
குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.”
இவ்வாறு தர்ஷன் கூறியுள்ளார்.



















