500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.
500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.
கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும்.
ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலும், மொரட்டுவை, பிலியந்தலை, நாராஹென்பிட்டி ஊடாக
களனி வரையிலும், கொட்டாவ, பன்னிப்பிட்டி, தலவத்துகொட ஊடாக ஹணுப்பிட்டி வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
இதுபற்றி ஆராயும் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.
திட்டத்தில் மஹரகம நகரையும் உள்ளடக்குவது பிரயோசனமாக இருக்குமென பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் தேவைக்கு
அமைய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையில்லை.
இதற்கமைய, கொட்டாவை, ஹணுப்பிட்டி ரயில் பாதையில், மஹரகம நகரையும் உள்ளடக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
வீதிப் போக்குவரத்து நெரிசலால் 2019ம் ஆண்டு விளைந்த நாளாந்த நஷ்டம் நூறு கோடி ரூபாவென பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கான தீர்வுகளுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட ‘சிற்றி பஸ் சேவை’ சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
உத்தேச ரெயில் பாதைத் திட்டம் அரச – தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்கான நேரடி
வெளிநாட்டு முதலீடு 500 கோடி அமெரிக்க டொலராகும். அரசாங்கம் 6 சதவீத பங்களிப்பை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை
வழங்கப்போவதாக இந்திய விமானப் படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு,
போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும்
விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!
ஒத்தையில நீ தனித்து
ஒடிந்துருகி போனவளே
நித்தம் பல கோயில் ஏறி
நின்று வரம் பெற்றவளே
மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
மூழ்கி விழி போனதடி
அல்லும் பகல் வாயில் வந்து
அறம் பேசி நிற்பவளே
உந்தன் துயர் பாடும் நிலை
உயிர் விட்டு தந்ததென்ன
நெஞ்சுருகி நாம் கதறும்
நிலை இன்று வைத்த தென்ன
ஒத்த பிள்ளை பெற்றவளே
ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
பெற்றவளே உனையிழந்து
பேரன்பு கதறுதடி
அன்புருகி பேசி நிதம்
ஆறுதல் சொல்பவளே
நெஞ்சிளகி நாம் வாழ
நீ வந்து பேசாயோ ..?
முன் தினத்தில் கோழிக்கறி
முழு சமையல் செய்தவளே
அன்புருகும் பிள்ளாய்க்கு
ஆக்கி நன்றே தந்தவளே
இன்று அதை எண்ணி எண்ணி
இதயமுடைந்து அழுகிறானே
பெற்றவளே உனையிழந்து
பெரும் துயரில் தவிக்கிறானே
சோதனைகள் ஆயிரமாம்
சோடனையாய் தூவையிலும்
அவை எல்லாம் நெஞ்சடக்கி
அமைதியாய் நடந்தவளே
நீ வீழ்ந்த செய்தி இன்று
நெஞ்சில் துயர் தந்ததம்மா
இன்று வரை உன் இறப்பை
நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!
மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..
-வன்னி மைந்தன்-(ஜெகன் )
ஆக்கம் -03-03-2021

பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு
பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு
பிரிட்டனில் ஆளும் நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள வரவு செலவு அறிக்கையில் பல்வேறு பட்ட புதிய விடயங்கள் அறிவிக்க பட்டுள்ளன
அதில் பூட்டப் பட்டுள்ள அல்லது வணிகம் முடக்க பட்டுள்ள கடைகளுக்கு நிதிகள் அதிகளவு வழங்க படுகின்றன
சலூன்,மற்றும் ஆடம்பர கடைகள் என்பனவற்றுக்கு 18.000 பவுண்டுகள் வழங்க படுகிறது ,நிகழ் காலத்தில் திறக்க பட்டுள்ள கடைகளுக்கு 6000 வழங்க படுகிறது
£6,000 per premises for non-essential outlets due to re-open in April and £18,000 for gyms, personal care providers and other hospitality and leisure businesses
மேலும் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் சம்பளம் 8,91 ஆக அதிகரிக்கிறது ,ஆனால் இதுவே பத்து பவுண்டுகள் உயரும் என எதிர் பார்க்க ப்பட்ட பொழுதும் இங்கே அது ஏமாற்றமாக அமைந்துள்ளது
Minimum wage to increase to £8.91 an hour from April
இவற்றுடன் சோசல் பணம் வாரம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் எதிர் வரும் ஆறு மதங்களுக்கு அதிகரிக்க பட்டுள்ளது ,£20 uplift in Universal Credit worth £1,000 a year to be extended for another six months
மேலும் Working Tax Credit claimants will get £500 one-off payment ஒரு தரத்தில் வழங்க படுகிறது
வங்கி அட்டைகளில் 40 பவுண்டுகள் வழங்கும் நடைமுறை தற்போது நூறு பவுண்டுகளாக அதிகரிக்க பட்டுளள்து Contactless payment limit will rise to £100 later this year
இவை பிரதானமாக இடம் பிடித்துள்ளன
தமிழ் முதலாளிமாருக்கு குஷி தான் ,இதுவல்லோ அரசு
வீட்டில் இருந்தபடியே பணம் உழைக்க ,video
வீட்டில் இருந்தபடியே பணம் உழைக்க ,video
உலக பங்கு சநதையில் எவ்வாறு நாம் பணம் உழைத்து கொள்வது என்பது தொடர்பாக நாம் இந்த பக்கத்தின் ஊடாக விளக்குகிறோம்
,செய்முறை விளக்கத்துடன் ,ஆதாரங்கள் உடனும் இங்கே தொடர்ச்சியாக காணொளி மூலம் காண்பிக்க உள்ளோம் ,
ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள் ,முதலில் நாணய
மாற்று பங்கு சந்தை என்றால் என்ன ..?,அதனில் உள்ள கடினங்கள் என்ன என்பனவற்றை அறிந்து கொண்டு முன்னேறுங்கள்
வரும் நாட்களில் அதிக தொகையுடன் கூடிய காணொளிகள் இங்கே பதிவேற்றம் செய்ய படும் ,பாருங்கள்,பகிருங்கள்,இது தொடர்பாக சற்றே யோசியுங்கள்
நாமும் செல்வந்தராக இது ஒரு சிறந்த வழிமுறையாகவும் ,
CLICK HERE FOREX TRADING VIDEO
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்
மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான
துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
கொழும்பு டாம் வீதியில் முப்பது வயது மதிக்க தக்க பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டு சூட்கேசில் அடைத்து வைக்க பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,
குறித்த சூட்கேசில் பெண்ணை கொலை செய்து அடைத்து எடுத்து சென்ற நபர் தற்போது தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
பெண்ணை கொன்று கொடூரமாக சூட்கேசில் அடைத்து வீசிய கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் தீவிர விசாரணையில் சிறப்பு போலீஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர் .
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம் மிரட்டும் கொலைகள்
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்
குறித்த இளம் பெண் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவிலை .
இலங்கை தலைநகரில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்க பட்ட மேற்படி சம்பவ உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
வவுனியாவில் பேரூந்து சாரதியை தாக்கிய பெண்
நேற்று (02) மதியம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு குறித்த நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.
பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர் பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கி சென்றுள்ளார்.
அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின்னர் அதே தொலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது நடத்துனரின் தொலைபேசியினை கேட்ட போது தொலைபேசியினை அவர் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
அதன் போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் நடத்துனரை முச்சக்கரவண்டியில்
ஏற்றிச்சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு
தொலைபேசி கிடைத்து விட்டது தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறு நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளார்கள்.
காயமடைந்த நடத்துனர் , சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமையுடன் வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சி சி டிவியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு
குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் எட்டுமாத சிசுவை பிரம்பால் அடித்து கொடுமை படுத்தியமை ,கொலை செய்திட முனைந்தமை
உள்ளிட்ட தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது
மேற்படி சட்ட பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க பட்டால் குறித்த பெண் இருபது வருடங்கள் சிறையில் வாழ நேரிடும் என
காவல்துறை அதிகாரி தெரிவித்துளளார் ,இதனையே உலக மக்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர் .
யாழ்ப்பாண நீதிமன்றம் இந்த சிறந்த தீர்ப்பை குறித்த பெண்ணுக்கு வழங்கி சமூகத்தில் நிலைபெறும் இவ்வாறான கொடுமையான
சிந்தனை வாதிகளை தடுத்து குற்றங்களை குறைக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது
மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய
துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை
தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்
வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி
வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது
இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா
மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,
இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
பிரிட்டன் புறநகர் பகுதியான Yorkshire பகுதியில் வசிக்கும் மக்கள் பலருக்கு மோசடி கும்பல் ஒன்று இலக்கு வைத்து அவர்களது nationa
l insurance numbers.பெற்று மோசடி செய்த்துள்ளது அம்பலமாகியுள்ளது
குறித்த நபர்கள் கைபேசியில் அழைத்து அவர்களது இன்சூரன்ஸ் இலக்கம் பிழையாக உள்ளது எனவும் புதியவை சரியானதை
அனுப்பி வைக்கிறோம் என கூறி பழைய இலக்கத்தை கேட்டு அதன் ஊடாக மோசடி இடம் பெற்றுள்ளது
அழைத்த நபர் மீது சந்தேக அடைந்த நபர்கள் சிலர் அவர்களது குரலை பதிவு செய்து பொலிசாருக்கு தெரிய படுத்திய நிலையில்
,போலீசார் வழங்கிய வழி காட்டலின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்களே இவ்வாறு யராவது அழைத்தால் அவர்களுக்கு உங்கள் விபரங்கள் எதனையும் தெரிவித்து விடாதீர்கள் ,எச்சரிக்கை
,இவ்வாறான அழைப்பு வந்தால்உடனே பொலிஸாருக்கு தெரிய படுத்துங்கள்
தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ
தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ
நாம் தமிழர் கட்சி சட்ட சபை தேர்தலின் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்திட விவசாயி சின்னத்தில் புதிய பாடல்கள் உருவாக்க பெற்று வெளியிடப் பட்டுள்ளன
அவ்வாறான பாடல்களில் புதிய பாடல் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இளங்கோ செல்லாப்பா இசையில் கம்பீரமாக நடை போடுகிறது இந்த பாடல் ,
சமகால அரசியல் களத்தின் முதன்மை அறிந்து பரப்புரை பணியாளர்களினால் முன்னெடுக்க படும் இந்த களப்பணி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது
இந்த பாடல் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எமது பாரட்டுக்கள் ,வாழ்த்துக்கள் ,வெல்லட்டும் நாம் தமிழர்,
ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்
ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்
அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள்
குறிப்பிட்டதுபோல், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்திய அரசு துணைபுரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு திங்கட்கிழமை (01-03-02021) அன்று இணையவழிமூலமாக நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா
பார்வையாளராக இல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றக்கொடுக்க இந்தியாவே தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கிறோம்.
https://youtu.be/hw5a7OmeO-k
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென
எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியா முன்வைக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள இனவாதம் அனுமதிக்காது என்பதோடு, இலங்கையின் வடக்கு கிழக்கு
பிராந்தியம் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தூக்கியெறிந்துள்ள சிங்கள அரசாங்கம், தமிழர்களின் பாரம்பரிய
தேசத்தைச் சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.
சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தைச் சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையினைத் தடுத்து நிறுத்தும் தார்மீக் கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தின் தீவுக் கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு முரணாக அமைவது மட்டுமன்றி தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றது.
ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய காரணியாக அமைவது உள்நாட்டு அரசியலாகும். ஈழத் தமிழர்கள் தொடர்பான
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
இதற்கு வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்கின்றோம். இதனடிப்படையில், சிறிலங்காவை பன்னாட்டு நீதிமன்றத்துக்குப்
பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக கட்சிகள் அனைத்தும், தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.
அதனை, அனைத்துக் கட்சிகளும் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் தலைமையில் சர்வதேசத்தின் மேற்பார்வையில் ஒரு
பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதனையும் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டுகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி
சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்
அக்ஷயா, விமல்
களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அக்ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமலின் மனைவி அக்ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் விமலின் மனைவி அக்ஷயா.
உதயநிதி ஸ்டாலின், விமல், அக்ஷயா
விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து
விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் தரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
பிரிட்டனில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரது ஆடம்பர இல்லத்தில் அங்கு வந்து சென்ற பெண்கள் பயன் படுத்திய மலசல கூடத்தில்
இரகசிய கமராவை பொருத்தி அந்த பெண்களின் அந்தரங்க
பாகங்களை காணொளி பதிவு செய்து இரசித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவ்விதம் இருபத்தி நான்கு பெண்களை இவர் காணொளியாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன் ,பாதிக்க பட்ட
பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பவுண்டுகள் வழக்கப் பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட பட்டுள்ளது
லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டன் குரைடன் பகுதியில் deliveroo சாரதி ஒருவர் ,அந்த உணவை வினியோகிக்க சென்ற நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவர் மீது 12 தடவை கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இவருக்கும் கொலையாளிகளுக்கு இடையில் நீண்ட நேர வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது
அதன் பின்னரே இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது ,
குறித்த டிலிவரி வேலை ஆரம்பித்து இரண்டாவது நாள் இவர்
படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் கொலையாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டுளளார்
குறித்த பகுதி நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க அவர்கள், கௌரவ பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் இன்று (2021.03.02) முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மஹாசங்கத்தினரது ஆசீர்வாதத்திற்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்கள் தனது அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்
ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள்
இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ.பொரலெஸ்ஸ உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மனித உரிமைகள் பேரவையில் – இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் இலங்கை
மனித உரிமைகள் பேரவையில் – இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் இலங்கை
மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்
நீண்ட நாள் நல்லுறவு தொடர்புபட்ட விடயமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இலங்கை தமிழர்கள்
தொடர்பில் இந்திய அரசாங்கம் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்குட்பட்ட அதிகார பகிர்வை இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் தற்போது இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்கும் என இலங்கை அரசாங்கம்
எதிர்பார்க்கின்றது என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் 1976 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இடம்பெற்றதாகும். அந்த
நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் வெளிநாட்டு அமைச்சர் எமது படையினர் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.
துரதிஷ்டமான இந்த கருத்துக்களினால் பல நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டது. உண்மை நிலையை
புரிந்துக்கொண்டு பல நாடுகள் செயற்பட்டதற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
L.T.T.E இனால் யாழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை கருத்தில் கொள்ளாமல் சில நாடுகள்
செயற்பட்டன. L.T.T.E இனால் பிள்ளைகள் கடத்தப்பட்டமையால் பெற்றோர் துன்பத்தை அனுபவித்தனர்.
யுத்ததிற்கு பின்னர் யாழ் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துக்கொண்டுள்ளனர். சில நாடுகள் டு.வு.வு.நு மற்றும்
புலம்பெயர்ந்தவர்களுக்காக ஆதரவை தெரிவிக்காததையிட்டு நாம் கவலை அடைகின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.








