Posted in உலக செய்திகள்

எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு

எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு

இஸ்ரேல் நாட்டின் முக்கிய உளவுத்துறை முக்கிய நபருக்கு சொந்தமான சர்க்கு கப்பல் மீது

கடல் கண்ணி வெடித் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் குறித்த கப்பலின் முக்கிய பகுதியில் மிக பெரும் இரு ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன ,

இதனால் குறித்த கப்பல் தற்போது டுபாய் துறைமுகத்தில் சேதங்களை திருத்தும் பணிக்கு விட பட்டுள்ளது

மேற்படி கப்பல் மீதான தாக்குதலை ஈரான் பின்புலத்தில் இருந்து நடத்தியுள்ளதாகவும் ,விரைவில் அதற்குரிய விலையினை ஈரான் சந்திக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த அறிவிப்பின் பின்னர் ஈரானிய முக்கிய ,இலக்குகள் அல்லது முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேலிய உளவுத்துறை படுகொலை ,அல்லது தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

சிரியாவின் வடக்கு ,மற்றும் மேற்கு பகுதியில் அமைய பெற்றிருந்த ஈரானிய முக்கிய ஏவுகணை தளங்களை

தாம் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது

ஈரானிய ஆதரவு படைகளுக்கு வழங்க பட்டிருந்த மேற்படி ஏவுகணை தளத்தில்

ஈரானிய இராணுவமும் உரு மறைப்பில் அங்கு இருந்துள்ளதாகவும், இவர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டத்துடன் ,

அங்கிருந்த ஈரானிய முக்கிய படை அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தாம் தகுந்த பதிலடி பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என

ஈரான் அதரவு படைகள் தெரிவித்துள்ள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

Posted in Uncategorized

ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி

கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்

நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்


இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்

இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை

கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை

அவுஸ்ரேலியாவின் தெற்கு கடல் கரை பகுதியில் கொடிய தாக்குதல் வெள்ளை சுறா தென் பட்டுள்ளது ,

இதனால் குறித்த கடற் கரை பகுதியில் மக்கள் குளிக்க செல்ல

இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையு விடுக்க பட்டுள்ளது

கடந்த ஆண்டு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் சுறாவின் கடிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

வானில் விமானியை கடித்த பூனை – தரை இறக்க பட்ட விமானம்

வானில் விமானியை கடித்த பூனை – தரை இறக்க பட்ட விமானம்

Khartoum bound – Doha, Qatar இருந்து பயணிகளுடன் பறந்து சென்ற Tarco Aviation சொந்தமான விமானத்தின் விமானியின் அறைக்குள்

இரகசியமாக புகுந்த பூனை ஒன்று பிரதான விமானியை கடித்து குதறியுள்ளது

பூனையின் கடி காயத்திற்கு உள்ளான அவரால் குறித்த விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று

வருகின்றன ,எனினும் விமானம் சேதங்கள் ஏதுமின்றி தரை இறக்க பட்டுள்ள்ளது குறிப்பிட தக்கது

Posted in சினிமா

புடவையை கிழித்து அதை நடத்திய சின்னத்திரை நடிகை

புடவையை கிழித்து அதை நடத்திய சின்னத்திரை நடிகை

புடவையை கிழித்து போட்டோஷூட் நடத்திய சின்னத்திரை பிரபலத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் பட்டு புடவை கட்டியிருக்கும் அவர் தொடை

தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ளார்.

பவித்ரா லட்சுமி

ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Posted in Uncategorized

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவரும் தற்போது நடிகையுமான ரைசா வில்சன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா
ரைசா


தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு

சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Posted in சினிமா

மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி

மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி

ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்

சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது.

விஜய் சேதுபதி, காயத்ரி

இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே

தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே

மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதி அபிவிருத்தியை பணியை மேற்கொள்ள இந்தியாவுக்கு 35 வட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளது

இதனை அடுத்து மீளவும் இந்தியா அதனை பாவனைக்கு உட்படுத்தும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது

இந்தியா இலங்கைக்குள் இடம்பெற்று வந்த இழுபறி நிலை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

யாழ்ப்பாணம் அரியாலை

பகுதியில் இளம் பெண் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை சரமாரியாக அடிக்கும் காட்சி

சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்

குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதனை காணொளி பிடித்து

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

இவளை பிடித்து தூக்கில் தொங்க விட வேண்டும் என நெட்டிசன்கள் கருது எழுதுவருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கைக்குள் இந்தியா போர் விமானங்கள் புகுந்தன

இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி

வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு 2021 மார்ச் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக

பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன

இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண் (Hawks), தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய

கடற்படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க

உள்ளன.1D6A5709இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 2021 பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளன.

இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130ஜே போக்குவரத்து விமானங்களும் இதற்கு ஆதரவாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.1D6A5945

பல வகையிலான தயாரிப்புக்களும் பாரிய எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது இந்திய மற்றும்

இலங்கை படையினரிடையிலான நட்பு மற்றும் பகிரப்பட்ட இயங்குதிறன் அதேபோல வலுவான பிணைப்புக்களையும் எடுத்தியம்புகின்றது.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் சகல இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதேநேரம் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சுதேச தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத்

துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. தேஜாஸ் பயிற்சி விமானம் முதற்தடவையாக இந்த கண்காட்சியில் கலந்து

கொள்வதுடன் இலங்கை விமானப்படையின் விமானிகள் இந்திய விமானிகளுடன் இணைந்து சுதந்திரமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைகின்றது. அதே

நேரம் இந்த நிகழ்வுகளின்போது சகல சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையின் சமுத்திர ரோந்து விமானமான டோனியரில் முதற்தடவையாக அனுபவங்களைப்பெற உள்ளனர். இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படையினர்

இந்திய விமானிகளுடன் இணைந்து விமானங்களில் பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படை

மற்றும் இலங்கை விமானப்படையினருக்காக அரையாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் டோர்னியர் பயிற்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைகின்றது.

பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் “முதல் முன்னுரிமை” நாடாக இலங்கை அமைகின்றது. 2020 நவம்பர் மாதம் இலங்கையால் நடத்தப்பட்டதும் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கலந்துகொண்டதுமான முத்தரப்பு கடல்

பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களால் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு பாதுகாப்புதுறை சார்ந்த

விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பானது வலியுறுத்தி கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில்

இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை இரு நாடுகளினதும்

ஆயுதப்படைகள் இடையிலான நட்புறவு, தோழமை மற்றும் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு ஆகியவற்றினை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது..

Posted in Uncategorized

பிளாஸ்டிக் ,பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை.

எதிர்வரும் ,மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle) ,செம்போ பக்கெட், காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இதனுள் அடங்கும்.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக

சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்து தொடர்பாக சுற்றாடல் அமைச்சு பல்வேறு பிரிவினர்களுடன் கலந்துரையாடியுள்ளது.

இதன்படி கடந்த வாரம் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல தனியார் வியாபார நிறுவனங்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் இலங்கை பல

முதல்தர ஹோட்டல்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனைக்கு பதிலான மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுவது

குறித்து வியாபாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர்கள் பயன்படுத்துகின்ற சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் சிலவற்றை அமைச்சரிட் சமர்ப்பித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுடன்இ இந்த வருட இறுதிக்குள்

மேலும் 350 உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

எனவே முடிந்தவரை சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்

Posted in இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிப்பதற்கு மகிந்தா உத்தரவு

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.

பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கௌரவ பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித

ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்

யூ.டீ.ஹர்ஷான் த சில்வா, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.சொய்சா

மற்றும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரொஷானி திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Posted in Uncategorized

ஐநாவில் வென்று -இராணுவத்தை காப்பாற்றுவோம் -இலங்கை சூளுரை

ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டு, அதில் வெற்றி கொள்ளுமென நம்பிக்கை தெரிவித்துள்ள கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இராணுவத்தைப்

பாதுகாக்கவேண்டிய தேவையேற்படின், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள்

சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் குறித்து இன்று வாதிடுகிறார்கள்’ என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது அறிக்கை, இலங்கையின் சுயாதீனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்

வகையில் காணப்பட்டது. ஆகையால், அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது’ என்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில், மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தேவையான

சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, 2019ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்று தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,

அப்பாவித் தமிழ் இளைஞர்களைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து

வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

’30 வருட கால யுத்தத்தைஇ நிறைவு செய்த இராணுவத்தினர், அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. . இராணுவத்தினரைப் பாதுகாக்க, தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின், புதிதாகச் சட்டத்தை உருவாக்குவோம்’ என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காலமாக, இணக்கமாகச் செயற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாகச் செயற்படுத்தி

உள்ளோம் என்று தெரிவித்த அவர், ஆனால்இ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றார் என்றார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சில விடயங்களை அடிப்படையாகக்

கொண்டு அறிக்கை பெறுமதியற்றது என்று குறிப்பிட முடியாது எனத் தெரிவித்த அவர், அடிப்படைவாதச் செயற்பாடுகள்,

எதிர்காலத்தில் நாட்டில் தோற்றம்பெறாமல் இருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றார்.

நீண்ட அறிக்கை என்பதால், அந்த அறிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகவும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது எனத்

தெரிவித்த அவர், எமது கட்சியின் நிலைப்பாட்டை, அடுத்தவாரம் தெளிவாகப் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே, அறிக்கை குறித்து அறிவிக்க வேண்டும். ஒருசில பக்கங்களை மாத்திரம் புரட்டிவிட்டு, அதிருப்தி கொள்ள முடியாது; அவ்வாறு செய்வது பொறுப்பான செயலல்ல என்றார்.

‘விசாரணை ஆணைக்குழுவுக்கு, தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்றபோது, பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை

வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

Posted in Uncategorized

10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி – உலக சுகாதார நிறுவனம்

10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி – உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம்பேருக்கு கொரோனா வந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது.

ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள

தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.

அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயல்படுவது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் ஒட்டு சுட்டான் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்

அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்

ஜனநாயக நாடு என இலங்கை கூறி கொள்கின்ற பொழுதும் ,அறவழியில் நடத்த பட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள்

,மற்றும் பிரமுகர்களை சிங்கள ஆளும் இரத்த காட்டேறி அரசு அடக்குமுறைகளை பிரோயோகித்து மிரட்டி அடக்கி வருகின்றமை

மேற்படி செயல் ஊடாக மீண்டும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்”

சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.

இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.

இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை

போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்

Posted in Uncategorized

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33

வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக

கோரமாக அடித்து கொன்றுள்ளார்

எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்

இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

Posted in Uncategorized

இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு

இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு

இலங்கை அனுராதபுரம் -ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில்இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு

பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

மேலு இவர்கள் பயணித்த வாகனங்களும் அடித்து நொறுக்க

பட்டுள்ளன ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Posted in Uncategorized

வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்

வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்

வவுனியா வைர புளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகள் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த

இருவரையும் கம்பியால் தாக்கி விட்டு அவர்களது மோட்டசைக்கிள்,மற்றும் கடிகாரம்,பணம்,என்பனவற்றை திருடி

சென்றதுடன் ,அவர்கள் தொலைக்காட்சிகள் ,கணனிகள் என்பனவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்

இந்த தாக்குதல் சம்பவம் அப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது