மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்
பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்
திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பஸ்ஸில் பிட்பொக்கட் அடித்த ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரேயே பயணிகள் பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
திருகோணமலையிலிருந்து நேற்று (21) மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய
சந்தேக நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் கண்டு கூக்குரலிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதிய சாதனை படைத்த வாத்தி கம்மிங் பாடல்
புதிய சாதனை படைத்த வாத்தி கம்மிங் பாடல்
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing100MViews என்ற ஹேஷ்டேக்கை
விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர். ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் பட போஸ்டர்
இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும், வீடியோ பாடலும் தனித்தனியே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததில்லை.
தற்போது வாத்தி கம்மிங் பாடல் அந்த உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
விஜய் சேதுபதி நழுவவிட்ட வில்லன்
விஜய் சேதுபதி நழுவவிட்ட வில்லன்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு
ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பஹத் பாசில், அல்லு அர்ஜுன்
இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார்.
இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.
சிம்பு
ஆனால் இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவர் அரசியலில் பிசியாக உள்ளதால், அவருக்கு பதில் நடிகர் சிம்பு ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டுவிட்டர் ,பேஸ்புக்கிற்கு எதிராக புதிய சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்
டுவிட்டர் ,பேஸ்புக்கிற்கு எதிராக புதிய சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபத்தி டிரம்ப் பயன் படுத்தி வந்த டுவிட்டர் ,மற்றும் பேஸ்புக்,YOUTUBE என்பன அவரது கணக்கை தடை செய்தன
,இதனை அடுத்து கொதித்து போன அவர் இப்பொழுது அவர்கள் நடைமுறையில் பயன் படுத்தி வருவது போன்ற சமூகக வலைத்தளத்திற்கு உயர்வான ஒன்றை ஆம்பிக்க உளளார் ,இது எதிர்வரும் மூன்று மாதத்தில் பாவனைக்கு வரவுள்ளதாம்
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் கேம் விளையாட்டுக்களும் உள்ளனவாம் ,அப்படி என்றால் டிரம்ப் கில்லாடி தான் போங்க
மேற்படி நிறுவனங்களின் தனிக்காட்டு ராயா அடக்கி ஆளும் அட்டகாசம் கூடி விட்டது ,இப்படி மேலும் சிலது முளைத்தால் தான் இவர்கள் அடங்குவார்கள் என்பது டிரம்பின் தெரிவாக உள்ளது
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கட்டுக்குள் இருந்து மீட்பு
பிரிட்டனில் Hove, East Sussex பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இருபது வயதுடைய இளம் பெண் ஒருவர் ஞாயிறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
காணாமல் போன இவர் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பில் அவரது உடல் மரண பரிசோதனை அறிக்கையில்
தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது ,சடலம் உடல் கூற்று ஆய்வுக்குள் உட்படுத்த பட்டுள்ளதுடன் மேப்ப நாய்களுடன் உதவியுடன் போலீசார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்
இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,
இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்
அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள்-பொறி தட்டும் அடிதடி video
நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள்-பொறி தட்டும் அடிதடி video
தமிழகத்தில் இடம் பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் தமது போட்டிகளை தீவிரமாக்கி
மோதுகின்றன
அந்த சண்டைக்கள காட்சிகள் இதோ ,பாருங்கள் பேச்சின் வீச்சில் நாம் தமிழர் முன் நிலையில் உள்ளதை காணமுடிகிறது
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
பார்வைத்திறனை திருடும் நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது என்றும், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் தெரிவித்தார்.
கண்விழி விறைப்பு நோயினால் ஏற்படும் பார்வை திறன் இழப்பை முற்றிலுமாக ஒழிப்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரமாக கடைப்பிடிப்பதின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இந்த ஆண்டு ‘‘உலகம் ஒளிமயமானது, உங்கள் பார்வையை காத்திடுங்கள்’’ என்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அந்த வகையில் கணிவிழி
விறைப்பு நோய் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது:-
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.
ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே
பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான். கண்ணுக்கு தெரியாமல் சத்தமின்றி பார்வைத்திறனை திருடும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்புரை நோய் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் பார்வைத்திறன் இழப்புக்கு காரணமான நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கண்ணுக்குள் அழுத்தம்
அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. கண்ணின் முன்புற பகுதிக்குள் இருக்கும் தெளிவான திரவத்தின் உற்பத்தி விகிதம் இயல்பானதாக இருக்கின்ற காலம் வரை இந்த அழுத்தமானது அதன்
வெளியேறல் விகிதத்துக்கு நிகரானதாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்துச்செல்கிற பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும்.
மேலும் மூளைக்கு தகவல்களை அனுப்பும் விழி நரம்பையும் சேதப்படுத்துகிறது.
பார்வைத்திறன் இழப்பு
எந்தவொரு வயது பிரிவில் உள்ள நபரையும் கண் விழி விறைப்பு நோய் தாக்கலாம். கண்விழி விறைப்பு நோய்க்கு சுமார் 2.3 சதவீதம் வாழ்நாள் இடர்வாய்ப்பு மக்களுக்கு
இருப்பதாக அறியப்படுகிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழிவு நோய்
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ள நபர்கள் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் இந்த இடர்வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.
இத்தகைய நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்விழி விறைப்பு நோய் தங்களுக்கு இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்விழி விறைப்பு நோய் இருப்பது கண்டறியப்படுமானால், பார்வை திறன் இழப்பை தவிர்க்க அல்லது குறைக்க தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இதுவரை 12 மில்லியன் நபர்களை இந்த நோய் பாதித்திருக்கிறது.
அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி
அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி
2012-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற கோவை மாணவி ஒருவர், தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, அம்மாணவி தீ காயங்களில் இருந்து ஓரளவு குணமடைந்த பின், அகரம் அறக்கட்டளை
மூலம், சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.
பொறியியல் படிப்பை நிறைவு செய்த அந்த பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் கடந்த சில
தினங்களுக்கு முன் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி பங்கேற்றார்.
அவரை அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற பெண் வரவேற்றார். தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த அந்தப் பெண்ணை நடிகர் கார்த்தி நெகிழ்ந்து பாராட்டினார்.
காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா
காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், சூர்யா, சரத்குமார், விஷால், பிருதிவிராஜ், அபிஷேக் பச்சன், நடிகைகள்
ஐஸ்வர்யா ராய், தமன்னா, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிக்கி தம்போலி
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன்
தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு
நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு
கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா விஜயகுமார், சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறி தள்ளி மேலும் பரபரப்பு
ஏற்படுத்தினார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து ‘2 கே அழகானது காதல்’ என்ற
படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு
அடுத்ததாக வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் வனிதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது.
அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள்.
நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’’ என்றார்.
அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள்.
அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்” என்றார்.
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த
ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில், இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
திருநகரில், நேற்றிரவு (20) குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்
, இன்று காலை விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே, அக்குடுபத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, திருநகர் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்
சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்
இலங்கை -பெல்மதுளையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
சாக்கு மூட்டையில் அடுக்கி வைக்க பட்ட நிலையில் சுமார் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான பண மீட்க பட்டுள்ளது
இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில்; 44 வயாதான பெண்மணி கைது செய்ய பட்டுள்ளார்
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
லண்டனில் கல்வி கற்க வந்து அது முடிவுற்றதும் தாயகம் திரும்பிய தமிழ் பேசும் தெலுங்கு வாலிபர்
,தன்னை சீமான் எவ்வாறு சுண்டி இழுத்தார் என்பதும் ,அவர் மக்களுக்கான அரசியலை பேசாது ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசுகிறார்
அவரே நமக்கு வேண்டும் ,அவருக்கே என் குடும்ப ஒட்டு என தெலுங்கு வாலிபர் பேசி அசத்தும் அந்த உண்மையின் தரிசனத்தை இங்கே பாருங்கள்
தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா
தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா
உலக நாடுகளை மிரள வைத்தும் வரும் வடகொரியாவை அடக்கி அதன் ஆளும் பலத்தை சிதைத்து ,
அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா பாரிய முயற்சிகளை மேற்கொண்டது ,ஆனால் அது யாவும் தோல்வியில் முடிந்ததது
வட கொரியா அசுர வேகத்தில் அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை சோதனைகளை தொடராக செய்து வருகிறது
இவ்வேளை தென் கொரியாவில் Yongsan Garrison in Seoul பகுதியில் மிக பெரும் அமெரிக்கா இராணுவ தளம் உள்ளது ,அதனை அடுத்து பதின் ஐந்து நடுதர சிறிய முகாம்கள் உள்ளன ,
இவ்வாறு செறிந்து உள்ள அமெரிக்கா படைகள் யாவும் வடகொரியாவின் கூறும் தூர ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் சிக்கியுள்ளன ,போர் ஒன்று மூண்டால் முதல் இலக்கு அமெரிக்கா படைகள் தான என்கிறது முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று
வட கொரியாவின் உள்ளிருந்து கசிந்த தகவலை மையப்படுத்தி மேற்படி விடயத்தை அந்த ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அவ்வாறு அமெரிக்கா படைகள் கொன்று குவிக்க பட்டால் ,அதற்கு அமெரிக்கா எவ்விதமான தாக்குதலை
புரியும் என்பதை டிரம்பின் ஆட்சியில் வெளியானது ,அது அணுகுண்டு தாக்குதல் தான் என்பது அந்த விடயமாக பேச பட்டது குறிப்பிட தக்கது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்

- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்

- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி

பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை
பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் கிழக்கு சிட்டி பகுதியில் அதிவேக சாலை அருகே பிள்ளைகள் முன்பாக தாயை
கட்டிவைத்து கற்பழித்த இருவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நீதிமன்ற விசாரணைகளில் இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
இவர்கள் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டு கொலை செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது







