Posted in சினிமா

தொழில் தொடங்கினார் வனிதா

தொழில் தொடங்கினார் வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.

புதிதாக தொழில் தொடங்கினார் வனிதா
வனிதா


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-

வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில மாதங்களிலேயே அவரை குடிகாரர்

என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

வனிதா

இவர் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வனிதா, தற்போது புதிதாக தொழில் தொடங்கி உள்ளார். பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை

உள்ளடக்கிய கடையை அவர் புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    Posted in சினிமா

    நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு

    நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு


    நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    விவாகரத்து விவகாரம் – நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
    வனிதா, சமந்தா, நாக சைதன்யா


    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள்

    கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள்

    நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

      Posted in சினிமா

      பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா

      பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா

      தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் வனிதா, தனது வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.

      பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா
      வனிதா


      தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் மிகவும் பிரபலமானார். தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

      வனிதா

      இந்நிலையில் வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பண மாலை அணிந்து குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

      அவருடன் மகளும் பண மாலை அணிந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா

        புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா

        பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

        புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா வருத்தம்
        வனிதா


        சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார்.

        இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வனிதா அளித்த பேட்டியில், “தனியார் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை

        சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின்

        மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.

        மாதர் சங்கம் எந்தப் பெண்ணிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு

        மாதர் சங்கமும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரத்துக்காக சப்போர்ட் செய்கிறார்கள்.

        வனிதா

        சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட

        விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள் என்றார்.

          Posted in சினிமா

          உங்க வேலைய பாருங்க… ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா

          உங்க வேலைய பாருங்க… ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா

          தனக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன் ஒருவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

          நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தான் இப்போது சிங்கிள் என்றும் ’அவைலபிள்’ என்றும் குறிப்பிட்டு தனது திருமணம் குறித்து வதந்திகளை யாரும்

          நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ’அவைலபிள்’ என்ற வார்த்தை தேவையா? என்றும் உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்

          இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற அசிங்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

          அதற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார் ’நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும்

          தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு நடிகை, என்

          நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

            Posted in சினிமா

            மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

            மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

            பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3

            -வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி

            தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

            இதனிடையே, நடிகை வனிதா, கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை அண்மையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

            இந்நிலையில், இதுகுறித்து விளக்களித்து நடிகை வனிதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே

            இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

            Posted in சினிமா

            கடுப்பான வனிதா விஜயகுமார்- ஏன் தெரியுமா ..?

            கடுப்பான வனிதா விஜயகுமார்- ஏன் தெரியுமா ..?

            சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

            கொரோனா தேவியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… கடுப்பான வனிதா விஜயகுமார்
            கொரோனா தேவி – வனிதா


            கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா

            தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

            வனிதா

            இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர்.

            வனிதா விஜயகுமார்

            இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், கடுப்பாகி, “எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்”. இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

              Posted in சினிமா

              நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு

              நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு

              கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா விஜயகுமார், சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறி தள்ளி மேலும் பரபரப்பு

              ஏற்படுத்தினார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

              அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து ‘2 கே அழகானது காதல்’ என்ற

              படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

              நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு

              அடுத்ததாக வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் வனிதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு

              மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

                Posted in சினிமா

                பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா

                பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா

                பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

                ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

                நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                அந்தகன் பட போஸ்டர்

                இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

                இதேபோல் அனல்காற்று, 2கே அழகான காதல் போன்ற படங்களிலும் வனிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                Home » வனிதா
                Posted in சினிமா

                வனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்

                வனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்

                மீண்டும் வனிதா வீட்டில் நடந்த விஷேசம்
                வனிதா
                பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா- பீட்டர் பால் திருமண விசேஷம் அவரது வீட்டில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

                ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா அறிவித்தார். இந்த நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்வு நடந்துள்ளது.

                வனிதா

                வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டதாகவும் எனது மகள்கள் உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்..

                Posted in சினிமா

                காதலிக்கிறேன் – வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

                காதலிக்கிறேன் – வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

                பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2

                முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.

                பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து

                செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. வனிதா – பீட்டர் பால் திருமண உறவு சில

                மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டனர்.

                வனிதாவின் இன்ஸ்டா பதிவு

                இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக அவ்வாறு

                பதிவு செய்தார், என்பது தெரியவில்லை. வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

                Posted in சினிமா வினோத வீடுப்பு

                டுவிட்டரில் இருந்து வனிதா ஒட்டம் – கஸ்தூரி வைத்த ஆப்பு

                டுவிட்டரில் இருந்து வனிதா ஒட்டம் – கஸ்தூரி வைத்த ஆப்பு

                நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதில் இருந்து பிரச்சனைகள் எழுந்து வருவதால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

                தொடர் பிரச்சனைகள் – வனிதா எடுத்த திடீர் முடிவு
                வனிதா
                நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். தனது சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று வனிதா

                கண்டித்தார். இந்த தகராறு ஓய்ந்த நிலையில் இப்போது வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இணைய தளத்தில் கடும்

                மோதல் ஏற்பட்டது. கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும்போது இதயத்தில் ரத்தம் கசிகிறது.

                வனிதாவின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார்” என்றார்.

                இதற்கு பதில் அளித்த வனிதா, “எனது சொந்த வாழ்க்கையில் தலையிட முயன்றால் உங்கள் வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி,

                “எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை. உங்களைப்போல் சீசன் 1.2.3 போன்ற

                மெகா சீரியல் வாழ்க்கை எனக்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். உங்களை பிரபலபடுத்த என்னை

                பயன்படுத்த வேண்டாம்”என்றார். இதையடுத்து வனிதா, “எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன்.

                காமெடி பீஸ்” என்றார். பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்தார். இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது.

                வனிதாவின் டுவிட்டர் பக்கம்

                இந்நிலையில், தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, டுவிட்டரில் இருந்து அவர் திடீரென

                விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது. வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

                    Posted in சினிமா

                    தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி

                    தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி

                    தப்ப நீங்க பண்ணா சரியாகிடுமா என்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

                    தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி
                    வனிதா – சனம் ஷெட்டி


                    நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சித்தார்கள். தனது சொந்த வாழ்க்கையில்

                    தலையிட வேண்டாம் என்று நடிகை வனிதா கூறி வந்தார். இது நாளடைவில் பெரிய விவாதமாக மாறியது. சமூக வலைத்தளத்தில்

                    வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் சண்டைப் போட்டுக் கொண்டார்கள்.

                    இந்நிலையில், வனிதாவிற்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் சனம் ஷெட்டி. அதில், வனிமா உங்களுடைய சமீபத்தில் வீடியோ

                    பார்த்தேன். அதில் நீங்கள் பேசியது தவறு. எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது நீங்கள் குரல் கொடுத்தீர்கள். இப்போ தப்ப நீங்க

                    பண்ணா சரியாகிவிடுமா என்று கேள்விக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

                    மேலும் பீட்டர் பாலின் மனைவிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு, முறைப்படி அவர்கள் விவாகரத்து பெற்ற பிறகு

                    நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குகள் என்றும் வீடியோவில் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

                        Posted in சினிமா

                        அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா

                        அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா

                        செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா, அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

                        அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா
                        வனிதா
                        நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல்

                        மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார்.

                        இந்நிலையில், நடிகை வனிதா, சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர்

                        காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார். தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

                        ரவிந்திரன் – சூர்யா தேவி

                        பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும்

                        பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார். போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன். சூர்யா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

                        இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு

                        பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

                        வனிதா
                        வனிதா
                            Posted in சினிமா

                            இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.

                            இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.

                            இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல… என்று நடிகை வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

                            இது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா
                            லட்சுமி ராமகிருஷ்ணன் – வனிதா


                            நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டார்.

                            திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல்

                            திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர்

                            பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

                            பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக

                            எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

                            பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பதிவின் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில், பீட்டர்பாலுக்கு

                            திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும்

                            வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

                            கணவருடன் வனிதா

                            மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது

                            அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது.

                            அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

                            லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலளித்திருக்கும் வனிதா விஜயகுமார், “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது

                            உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை.

                            எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.

                            மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன்.

                            அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

                            வனிதா
                            வனிதா