Posted in Uncategorized

AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த கண்டுபிடிக்க பட்ட தடுப்பு மருந்தாக விளங்கும் AstraZeneca jab நிறுவனத்தின் ஊசியை செலுத்திய மக்களில் ஆறுபேர் இரத்த உறைவு

காரணமாக மாரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,எனினும் இந்த மருந்து பாதுகாப்பானது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

மேற்படி ஊசியை செலுத்தி கொண்ட தமிழர்கள் சிலரும் பிரிட்டனில் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இந்த ஊசியை செலுத்தி கொண்டவர்களில் இரத்த உறைதல் ஏற்படத்தை அடுத்தே மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவே தெரிவிக்க படுகிறது

இவ்வாறு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு மரணம் நிகழ்வதற்கு முன்னர் ,கை ,கால்கள் வீங்கிய நிலையில் காணப்படுவதுடன் ,உடல் முழுவதும் குற்றி முறிவது போன்ற நிலை

ஏற்படுகிறதாம் ,அதன் பின்னர் மரணம் முத்த மிடுகிறது என தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித பேச்சு பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

It comes as the rollout of the AstraZeneca jab resumed earlier, following a week-long suspension due to concerns it caused blood clots.

A review by Europe’s medicines regulator has since found it to be safe and effective.

The 30,000 high-risk patients impacted by the suspension will now be worked through over the coming week.

    Posted in உலக செய்திகள்

    பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது

    பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது

    பிரிட்டனில் லொக்கடவுன் காலத்தில் கொரனோ விதிகளை மீறி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி

    போராட்டத்தில் ஈடுபட்டனர் ,இவ்வாறு ஈடுபட்டவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது

    இந்த மோதல்களின் விளைவாக முப்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து அடித்து

    பூட்டும் நிலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில் இவ்விதமான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

      Posted in Uncategorized

      ஜாப்பனில் நில நடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

      ஜாப்பனில் நில நடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

      ஜப்பான் மியாகி பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது ,

      இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6.9 ஆகா பதிய பெற்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டது

      இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடியதுடன் ,அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது ,தொடர்ந்து கரையோர பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

        Posted in Uncategorized

        மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்

        மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்

        பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

        இவர் இறுதியாக இலங்கை பயணித்து கோட்டபாய மற்றும் மகிந்தாவுடன் நேரடியாக சந்தித்து பேசிய இருந்தார்

        இவருக்கு தற்போது இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளது

        இலங்கை அதிபர் கோட்டபாயத ,மாற்று மகிந்தாவுக்கும் கொரனோ நோயானது தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது

        தமிழர்களை கொன்று குவித்த இரு சகோதர்களும், இந்த கொரானாவுடன் செத்து மடிவார்கள் என தமிழர் தேசம் நம்புகிறது

        அரசன் அன்று அறுப்பான் -தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தான் போலும்

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்

          புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்

          ரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் புதிய கொலை பட்டியலில் பிரிட்டனில் ஆறு பேர் உள்ளனர்

          எனவும் அவ்விதமான அந்த நபர்களின் புகைப்படங்களுடன் அந்த கொலை பட்டியல் விபரம் வெளியிட பட்டுள்ளது

          இவர்கள் எவ்வேளையும் கொலை செய்யப்படலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது ,


          ரசியாவை சேர்ந்த முன்னாள் புலனாய்வுத்துறை நபர் மற்றும் அவரது மகள் ஆகியோர் மர்ம நச்சு தூவ பட்டு படுகொலை செய்ய பட்டனர்

          அதுபோன்று இவர்களும் கொலை செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,நீண்டு செல்லும்

          புட்டீனின் இந்த கொலை பட்டியலில் இவர்கள் எவ்வாறு, ஏன் சிக்கினார் என்பதே இப்போது ,உலக உளவுத்துறையை கலக்கி வரும் செய்தியாக உள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          மன்னாரில் இருந்து இந்தியகடலை நீந்தி கடந்து சென்ற பெண்

          மன்னாரில் இருந்து இந்தியகடலை நீந்தி கடந்து சென்ற பெண்

          தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

          தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது.

          ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.

          தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.

          பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார்.

          தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.

          வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.

          இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.

          தலைமன்னாரில் நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளா கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.

          இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.

          பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்

              பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்

              பாசாறை பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில்

              வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 30 க்குமேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

              குறித்த வண்டியை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ,மக்கள் ஈடுபட்டுள்ளனர்


              சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணமாக உள்ளது

                Posted in Uncategorized

                பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.

                பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.

                அறப்போர் சொல்லப் போகும் செய்தி என்ன ?

                உண்மைக்கும் நீதிக்குமான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்
                ~~~~~~

                கோரிக்கைகள் :
                1.அனைத்து சுயாதீன விசாரணைப்பொறிமுறையை உருவாக்குதல்னை
                அனைத்த்து குற்றவியல் நீதிமன்றில் விசாரித்தல்,

                2.மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல்

                3.மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையிலும் அவர்களின் அபிலாசைகளை தீர்மானிக்க வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்

                Posted in Uncategorized

                கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

                கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

                இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்த ,குற்ற சாட்டுக்களுடன்

                தொடர்புடையவர்களை ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்குள் நுழைவதற்கான பயண தடையினை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

                அவ்வாறு எனின் ,கோட்டா,மகிந்தா,மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய பத்து பேருக்கு எதிராக இந்த பயண தடைகள் விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                அவ்வாறு விதிக்க பட்டால் இலங்கைக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்

                  Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

                  புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்

                  புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்

                  பிரான்சில் ஆபிரிக்காவில் கணடறிய ப்பட்ட புதியவகை கொரனோ ஒத்த நோயானது பரவி வருவதால் தற்போது ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது ,

                  எனினும் பலசரக்கு கடைகளில் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் எனவும்

                  ,குடும்பத்தில் ஒருவர் கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்திட முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது

                  15 நகரங்களுக்கு இந்த விசேட ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    கார்-மினிபஸ் மோதல் -16 பேர் காயம்

                    கார்-மினிபஸ் மோதல் -16 பேர் காயம்

                    அவுஸ்ரேலியயாகுயின்லாநாத் பகுதியில் தக்காளி தோட்டம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை காவிய படி

                    பயணித்த மினிபஸ் ஒன்று கார் ஒன்றுடன் மதி சிதறியதில் அதில் பயணித்த பதின் நான்கு பேர் படுகாயமடைந்தனர் ,

                    இவர்களுடன் மொத்தமாக 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,அதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                      Posted in Uncategorized

                      லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                      லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                      அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் பவர் லொத்தரியில் நபர் ஒருவர் ஐம்பது மில்லியனை அள்ளி

                      சென்றுள்ளார் ,கடை ஒன்றில் குறித்த லொத்தரியை கொள்வனவு செய்த நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது

                      ஆனால் அதனை பெற்று கொண்ட நபர் இதுவரை தனது ஐம்பது மில்லியனை உரிமை கோரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                        Posted in Uncategorized

                        100 வயது தாத்தாவை வெட்டி கொன்ற பேரன்

                        100 வயது தாத்தாவை வெட்டி கொன்ற பேரன்

                        அமெரிக்கா லொஸ் அஞ்சலோ பகுதியில் நூறு வயதுடைய தாத்தா ஒருவரை அவரது பேரன் கோரமாக வெட்டி கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி கொலை செயலை

                        புரிந்த பேரன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                          Posted in Uncategorized

                          அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்

                          அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்

                          இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக ,முகவர்கள் துணையுடன் நுழைந்த இலங்கை தமிழர்

                          ஒருவர் ,அங்கு நிலவும் அதிக குளிருக்குள் சிக்கி அவரது கால்கள் விறைத்து ,காயமடைந்த

                          நிலையில் ,அவரை எல்லோயோர படையினர் தூக்கி செல்லும் காட்சிகள் இவை ,

                          ஐரோப்பிய கனடா ,அமெரிக்கா கால நிலையை கருத்தில் கொள்ளாது ,இலங்கை மாசி பனி மழை என நினைத்து

                          வெளிநாட்ட்டு மோகத்தில் ,இவ்விதம் வரும் தமிழர்கள் ,ஆளைக்கொல்லும் குளிருக்குள் சிக்கி

                          தமது உயிரை மாய்க்கும் நிலை தோற்றம் பெற்று வருகிறது

                          இவரை பார்த்தாவது நம்ம தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாகாட்டும்

                            Posted in Uncategorized

                            மனைவி முன் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்

                            மனைவி முன் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்

                            தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

                            . சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் கையை உடைத்து கொண்ட ஜெனிலியா, கட்டுப்போட்ட கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

                            இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் தனது கணவருடன் ஜெனிலியா கலந்துகொண்டார். அதே விழாவுக்கு வருகை தந்திருந்த நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ரித்தேஷ்

                            தேஷ்முக் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பிரீத்தி ஜிந்தாவின் கைகளில் ரித்தேஷ் முத்தமிட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியா தர்மசங்கடத்துடன் சிரித்துக் கொண்டிருப்பார்.

                            இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு வந்த பின் என்ன நடந்தது என்பதை காமெடியாக ஒரு வீடியோவை ஜெனிலியா தனது சமூக

                            வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது கணவரை போட்டு உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

                            Posted in Uncategorized

                            மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்

                            மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்

                            மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த பட்ட பின்னர் அங்கு பெரும் கலவரம் இடம்பெற்று வருகிறது ,

                            இராணுவத்தினரின் தொடர் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்,இந்த வன்முறை

                            தாக்குதல்களை அடுத்து பீதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர்

                            இதனால் இந்தியா எல்லையோரத்தில் பாதுகாப்பபு பலப்படுத்த பட்டுள்ளது

                              Posted in சினிமா

                              மாப்பிள்ளை தேடும் ஷெரின்

                              மாப்பிள்ளை தேடும் ஷெரின்

                              செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின்

                              . தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

                              பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

                              சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே?’ என்று பதிவு செய்திருக்கிறார்.

                              இதற்கு ரசிகர்கள் நான் இருக்கிறேன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலர், பொண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என்று கேள்வியும் கேட்டு வருகிறார்கள்.

                              Posted in Uncategorized

                              முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி

                              முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி

                              உலகளாவிய ரீதியில் அதிக பாவனையில் உள்ள பேஸ்புக் ,இன்சாப்கிராம்,மற்றும் வாட்சாப் என்பன பலமணிநேரமாக செயல் முடங்கின

                              இந்த செயல் முடக்கத்தினால் பயனாளர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கினர்,எனினும் தற்போது அவை மீள

                              சேவைக்கு திரும்பியுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன ,இந்த செயல் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை

                                Posted in சினிமா

                                கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

                                கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

                                சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.

                                இது குறித்து வெளியாகியிருக்கும் பிரத்யேக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

                                நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது வாசிப்பு விழா.

                                கபிலன் வைரமுத்து

                                கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அதில் அடங்கும்.

                                தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும் அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும்

                                (இரண்டாவது), சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன.

                                நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன.

                                நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் எழுத்தாளர்கள் இருவரும் கெளரவிக்கப்பட விருக்கிறார்கள்.

                                  Posted in Uncategorized

                                  பஸ்ஸில் பயணித்தவர் திடீர் மரணம்

                                  மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

                                  மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.

                                  இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.

                                  இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

                                  இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

                                  உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

                                  மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.