Posted in இலங்கை செய்திகள்

காதல் சண்டை நண்பனை கத்தியால் குத்திய காதலன்

காதல் சண்டை நண்பனை கத்தியால் குத்திய காதலன்

இலங்கை ; தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே அந்த மாணவனை கத்தியால் குத்தியுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திய மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காயத்துக்கு உள்ளான மாணவன் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கைதுசெய்யப்பட்ட மாணவன் இன்றைய தினம் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இவளுடன் வாழ விடு ..!

    இவளுடன் வாழ விடு ..!

    காத்திருந்தேன் நேற்று வரை
    காணவில்லை நீ மயிலே
    கண் விழித்து நானெழுந்தேன்
    கண்ணெதிரே நீ குயிலே

    முந்தினத்து கற்பனைகள்
    முத்த மழை பொலிந்து விட
    வெட்கத்தில நீ தவித்தாய்
    வேர்வையில உடல் குளித்தாய்

    பக்கத்தில நீ இருக்க
    பகலிரவு தெரியவில்லை
    சொர்க்க மதாய் நீ விளங்க
    சோகமதை காணவில்லை

    இறக்கும் வரை உன்னுடனே
    இதயமே இருக்க வேண்டும்
    இத்தனை நாள் வேண்டுதலை
    இறைவா நீ தர வேண்டும் ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 19-05-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஒருநாள் அழுவாய் காத்திரு ..!

      ஒருநாள் அழுவாய் காத்திரு ..!

      சிறகை ஒடித்தேன்
      சிறையில் அடைத்தாய்
      ஏது செய்தேன்
      என்று என்னை இழிந்தாய்

      வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
      விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
      உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
      உறவை எண்ணி வெந்து தணிந்தேன்

      உந்தன் திட்டம் இங்கு வென்றது
      உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
      காதல் ஒன்று முடிவு கண்டது
      காலம் ஆறா காயம் தந்தது

      நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
      நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
      உன்னை போல உன்னை வதைக்க
      உள்ளம் என்னால் இன்று முடியும்

      பழிகள் வாங்கும் நிலையில் இந்த
      பாவி மனம் முனையவில்லை
      செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
      செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்

      வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
      வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
      ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
      எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 18-04-2022

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன் காதலை சொல்லிடு …!

        உன் காதலை சொல்லிடு …!

        நான் உலாவும் வீதியிலே
        நாளை நீயும் உலவிடு
        நானும் நொந்த நாளினையே
        நகல் எடுத்து சென்றிடு

        ஆள் உலாவும் வீதியிலே
        அமைதியானால் ஏற்று விடு
        அன்பு உலாவும் வீதியிலே
        அமைதி ஆனாய் செத்திடு

        வான் நிலவு வீதியிலே
        வந்து விட்டால் பார்த்திடு
        வந்து நின்ற செய்தியென்ன
        வாசல் வந்து சொல்லிடு

        ஏற்று விட்டால் என்னன்பே
        ஏறி வந்து சொல்லிடு
        என்னுறக்கம் தொலைத்த நாளை
        எழுதி வைத்து சென்றிடு

        உன்னுறக்கம் நீ தொலைத்தால்
        உள்ளம் என்னை ஏற்றிடு
        உன் உளமதில் யானமர்ந்தேன்
        ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 26-12-2021

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          இதுதான் மனித வாழ்வு பார் …!

          இதுதான் மனித வாழ்வு பார் …!

          ஊருக்குள் வேட்டை நடக்குது பார்
          உரையாடல் வீதி கேட்குது பார்
          ஆளுக்குள் மோதல் வெடிக்குது பார்
          ஆயிரம் புகார் கொட்டுது பார்

          முன்னைய பகை போராடுது பார்
          முகங்கள் இங்கே கிழியுது பார்
          தன் மானம் இங்கே தவறுது பார்
          தறிகெட்டு வார்த்தை கொட்டுது பார்

          தானே மேலென கொத்துறார் பார்
          தவறுகள் இங்கே கொட்டுறார் பார்
          வீழ்வேனோ தானென விரட்டிறார் பார்
          வீழ்ந்திட்டார் இப்போ மறந்திட்டார் பார்

          சிந்தையில் தவறு சிரிக்குது பார்
          சீக்கிரம் உன்னை மாற்றும் பார்
          முன்னைய நிகழ்வு தவறுதான் பார்
          மூளை கூறும் பொறுத்து பார்

          பக்குவம் உன்னில் படருது பார்
          பகையிலும் பாசம் பொழியும் பார்
          போர்குணம் இன்று செத்தது பார்
          பொற்குணம் உன்னில் மலருது பார்

          இது தான் முதுமை இன்றுபார்
          இளைப்பாறும் காலம் இதுவே பார்
          தவறுகள் திருத்தும் அகவை பார்
          தவறா மனிதம் இதிலே பார்

          கடந்ததை எண்ணி வருத்தும் பார்
          கல்லான மனமும் கனியும் பார்
          இதுதான் பக்குவ முதுமை பார்
          இதுதான் மனித வாழ்வு பார் …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 25-12-2021

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            நான் வாழ நீ வா ..!

            நான் வாழ நீ வா ..!

            இன்றேவா இதயம்தரவா
            இக்கீதம் இசைந்தே இசைக்கவா
            இசையே இணைந்தால் இசையாவேன்
            இன்றே இணையே இசைவேன்

            நீபாட நினைவுக்குள் நீராடா
            நிகழ்காலம் நின்றாட
            ஓடும்நதியாக ஓடுவேன்
            ஓடும்கரை ஓடமாவேன்

            நாள்தோறும் நான்வாழ
            நீவா நினைவுதா
            உன்னை உயிலெழுதி
            உயிரே உயிரேதா

            சீர்மோனை சீதனமா
            சீரிட்டாய் சிக்கனமா
            உன்னாலே ஊர்கிறேன்
            உள்ளமே உயிராகிறேன்

            எந்நாளும் என்நெஞ்சில்
            ஏமனமே ஏறியாடு
            எனக்காக என்னுயிரே
            எந்நாளும் ஏக்கமிடு …!

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 10-12-2021

              Posted in இலங்கை செய்திகள்

              காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

              காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

              தருமபுரம் வட்டக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

              டிப்பர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

              விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த இளைஞரும் பெண்ணும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

              உயிரிழந்தவர் நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

              இளைஞன் ஒருவர் தனது காதலியை கடத்திச் சென்று டிப்பர் வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து டிப்பர் பாரவூர்தியின் சாரதி உட்பட பலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

              சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                உன்னால் மகிழ்கின்றேன் …!

                உன்னால் மகிழ்கின்றேன் …!

                கண் பார்க்கும் முன்னாலே
                கை பேசியில் வந்தவளே
                உன்னிடத்தில் சரணடைய
                உச்சரித்தாய் எப்படியோ

                ஆழ்கடலின் பேரலையில்
                அகப்பட்ட என்னை
                தேடி வந்து மீட்டெண்ணை
                தேற்றினாய் எப்படியோ

                முடியாதென்ற அலட்சியத்தை
                முடிவுகட்டி அனுப்பி வைத்து
                முடியும் என்ற இலட்சியத்தை
                முன்னேற்றி வைத்தாயே

                உன்னால் மட்டும் எப்படியோ
                உயிர் கொடுக்க முடிகிறது
                கண்டு பிடிப்புகளை எப்படியோ
                கரையேற்ற முடிகிறது

                நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
                நிலம் செழிக்கும் உரமாய்
                வீசிட எப்படித்தான்
                விண்ணிலவே முடிகிறது

                காலத்தை அளவிடும்
                கலண்டராய் நீ இருக்க
                என் மன கவலை எல்லாம்
                ஏ மனமே ஓடி விடும் …!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 01-12-2021

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

                  மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

                  சோழ கடலில் ஆடிய வீரம்
                  சோரம் போனதுவோ – பகை
                  சோர்வை அகற்ற கயவர் கூடி
                  சோடனை செய்ததுவோ

                  வில்லும் வாழும் பொருதியே களத்தில்
                  விண்ணில் எறியவர்
                  பண்ணிசை பாடியே பாமர மக்களை
                  படைக்கு அழைத்தவர்

                  இன்நிலை இழிதலில் விளைந்திடார் என்றே
                  இந்நிலை ஆடாதே
                  ஒரு நிலை வீழ்ந்திட ஒரு நிலை எழுந்திடும்
                  ஓர்மம் கொள்ளாதே

                  காலிடை நாசியும் புழுவாய் துடித்தால்
                  கலவரம் பிறக்காதோ
                  கயவர் இவரென பகைவர் அவரென
                  களமது முளைக்காதோ

                  எழுவதும் வீழ்வதும்
                  எழுவாய் பயனிலை
                  ஏற்றம் தரித்தல்
                  செயல் படு பொருள் நிலை

                  வழித்தடம் விழித்திடும் போதினில்
                  வழியெங்கும் பகையுடல் சரியும்
                  மொழியுடன் புரட்சி வெடித்திடும்
                  மொழியா புகழுடன் விடிந்திடும்

                  நஞ்சு கட்டியே களமது பொருதினார்
                  நாளை வந்திடுவார்
                  நலமுடன் வாழ தமிழ் மொழி அழ
                  நல் வழி செய்திடுவார் …!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 30-11-2021

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    நீயே என் உயிர் வந்து விடு …!

                    நீயே என் உயிர் வந்து விடு …!

                    நீயும் நானும் கூடனும்
                    நீளும் காலம் வாழனும்
                    உயிரே வா வா
                    உள்ளம் தா தா

                    அசைந்து வரும் காற்றாய்
                    ஆடி விழும் மின்னலாய்
                    ஓடி நாளும் வருவாய்
                    ஓராயிரம் இன்பம் தருவாய்

                    மின்னல் அடி கண்ணில் ஊறுதடி
                    யன்னல் வழி காற்று ஓடுதடி
                    கொட்டும் மழையில் உடல் நனையுதடி
                    ஓட்டும் உடையில் உடல் தெரியுதடி

                    வானம் கறுத்ததோ மேனி சிலிர்த்ததோ
                    வானம் பாடி மழை பொழிந்ததோ
                    அட டா இது தான் விதியோ
                    ஆண்டவன் இட்டான் சதியோ

                    ஓடும் நதியிலே ஆடும் அலையிலே
                    ஓடும் படகாய் ஆடும் மயிலே
                    நீதானே நிதம் வேண்டும்
                    நீயே என் உயிர் வரணும் …!

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 22-11-2021

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      இறந்தால் உன்னை மறப்பேன் …!

                      இறந்தால் உன்னை மறப்பேன் …!

                      நினைத்து நினைத்து உருகிடத்தான்
                      நீ வந்து போகிறாய்- உன்
                      நினைவுகளை தந்து விட்டு
                      நிதம் ஏனோ மறைகின்றாய்..?

                      ஆழ் மனதில் நீயிருக்க
                      அன்பே உனை மறப்பேனா
                      அடியே உனை மறந்தால்
                      ஆவி உடல் தங்குமா ?

                      நீயெடுத்த முடிவொன்றால்
                      நிகழ் காலம் இதுவாச்சு
                      ஏதெடுத்து உனை மொழிவேன்
                      எப்படி உனை உமிழ்வேன்

                      காதோரம் செய்திகளை
                      காதலியே சொல்லிட வா— நான்
                      காணாமல் போகு முன்னே
                      கதை ஒண்ணு சொல்லிட வா

                      உருமாறும் அகவையில
                      உள்ளத்தை மாற்றிட வா
                      உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
                      உண்மையை ஏற்றிடவா

                      எதை உரைத்தும் இன்றென்ன
                      எனக்கில்லை நீதானே
                      எதை விதைத்தும் இன்றென்ன
                      எல்லாமே வீன்தானே

                      இருவருக்கும் இடையிலின்று
                      இடையே ஒர் வேலியிட்டாய்
                      இரு வேறாய் பிரிவதற்கா
                      இடையில் ஒரு பதி வைத்தாய்?

                      இதயத்தை சலவை செய்ய
                      இன்றென்னால் முடியாது
                      இறந்தால் உனை தொடரேன்
                      இதயமே வருந்தாதே …!

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் -10-03-2021

                        Posted in சினிமா

                        40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை

                        40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை

                        தமிழில் துப்பறிந்த நடிகை அதன்பிறகு கடவுளின் பெயரைக் கொண்ட நடிகருடன் இணைந்து நடித்தாராம்.

                        இவர் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். இவர் தெலுங்கு இயக்குனருடன் நெருங்கி பழகி வருகிறாராம்.

                        இயக்குனருடன் நெருக்கமாக இருப்பதால்தான் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம் நடிகை.

                        அந்த இயக்குனருக்கு 40 வயது ஆகிறதாம். நடிகைக்கு 23 ஆகிறதாம்.

                        இவர்களுடைய காதல் தான் தற்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.

                        Home » காதல் » Page 2
                        Posted in சினிமா

                        கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்

                        கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்

                        நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில்

                        அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

                        தெலுங்கில், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை

                        பெற்றார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

                        இந்நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 3

                        மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன்

                        அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

                        அனிருத், கீர்த்தி சுரேஷ்

                        தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும்

                        விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத்

                        தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.

                        ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        காதல் சொல்லிட வா

                        காதல் சொல்லிட வா

                        ஏழைந்து நாட்களாக
                        என்னுயிரை காணலையே
                        முன்னே நானழுது
                        மூவாறு பெருகிடிச்சே

                        ஏழு நாளு வாரத்தில
                        ஏங்கி போனேன் பூச்சியமா
                        ஏழேழு ஜென்மங்களும்
                        ஏய் நீ தா காட்சியம்மா

                        ஒன்ப தாண்டு வாழ்விலே
                        ஒடிந்து போனேன் மூனாக
                        தென்பை தந்து நின்னவளே
                        தேடுகிறேன் தானாக

                        வந்திடுவாய் என்று தனே
                        விழியோரம் காத்திருக்கேன்
                        தந்து விட்டேன் இலக்கமதை
                        தாகத்தோடு அழைத்து விடு

                        பூச்சியத்தில் இருந்து தான்
                        பூமி சுத்துதே
                        நாளுக்கு நாலு நாலு
                        நாட்டை ஆழுதே

                        கை பேசி இலக்கத்தை
                        கவிதைக்குள்ளே வைத்தேன
                        கண்டு பிடித் தழைப்பாய்
                        காதல் கூறி நிற்பாய்

                        வன்னி மைந்தன் (ஜெகன் )
                        ஆக்கம் 05-06-2020
                        இதற்குள் பிரிட்டன் 11 இலக்கம் கொண்ட கைபேசி இலக்கம் உள்ளது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                        Home » காதல் » Page 2
                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                          யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்

                          யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்

                          யாழ்ப்பாணத்தில் தற்போது கள்ள காதல் சமாச்சாரம் அதிகரித்து வருகிறது


                          திருமணம் முடித்த பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் உறவுகள் அதிகரித்து செல்கிறது

                          இதனை கட்டு படுத்த முடியாத நிலையில் கணவன் ,மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் .


                          சம்பவ தினம் அன்று மனைவியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி வந்த வாலிபர்கள் ,தகாத உறவு அழைத்துள்ளனர்

                          கணவன் வீட்டில் இருந்துள்ளார் ,இதனை அறியாத வாலிபர்கள் வாலிபர்கள் வழமை போன்று பாலியல் உரையாடல்கள் அடங்கிய

                          பதிவுகளை அனுப்பினார் ,இதனை அவதானித்த கணவன் மேற்படி விடயம் தொடர்பாக மனைவியிடம் வினவிய பொழுது அவர் நடந்தவற்றை விபிரித்துள்ளார்

                          அதே மனைவியை கொண்டு அழைப்பை ஏற்படுத்திய கணவர் அவர்களை மறைவான இடம் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளனர்

                          பெண்ணின் பேச்சை நம்பி இரு வாலிபர்களும் காரில் வந்துள்ளனர்
                          அவ்வளவு தான் அங்கு கணவன் ,மற்றும் அவர்கள் நண்பர்கள்

                          மறைந்து காத்திருந்தனர் .இருவரை பிடித்து கட்டி வைத்து அடித்து நையப்புடைத்து விரட்டியுள்ளனர்

                          ஆமா உங்க மனைவி ஒழுங்கா இருந்தா ஏன் இவங்க வர போறானுக இவ்வாறு சந்தியடி வம்பர்கள் கேள்வியையையும் எழுப்பிட தவறவில்லை

                          யாழில் மனைவியுடன் கள்ள
                          யாழில் மனைவியுடன் கள்ள
                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              சொல்லாமல் வந்த காதல் .!

                              சொல்லாமல் வந்த காதல் .!

                              பெற்றவரை நீ இழந்து
                              பேரழகே வாடையில…..
                              நெஞ்சமெலாம் வேகுதடி
                              நினைவிழந்து சாகுதடி……

                              ஒற்றையிலே நீ இருந்து
                              ஓரமா அழுகிறியே ….
                              சாத்தியமா உனை காக்க
                              சம்பந்தம் செய்யலேயே …..

                              தேடி வந்த வேளையிலே – என்
                              தேதியில நீ இல்ல …
                              வேரறுத்து போகையில- நீ
                              வேறாகி போனாயே …

                              தங்கிட தான் துடித்தேண்டி
                              தவமாய் தவித்தேண்டி …
                              விதி வந்து விளையாட
                              விலகி நீ போனாயே …

                              இன்ரழுது துடித்தேண்டி
                              ஈர் விழியால் உடல் நனைத்தேண்டி …
                              என்னழகே உனை தேற்றிடவே
                              என்ன யான் செய்திடுவேன் …?

                              வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                              ஆக்கம் -11/05/2019

                              Home » காதல் » Page 2
                              Posted in Uncategorized

                              கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்

                              கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்

                              இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் இளசுகள் ஆடம்பரத்தில் மூழ்கி இதுவே வாழ்வின் சொர்க்கம் என்ற நிலையில் உறைந்து விடுகின்றனர்

                              இதனால் ஆண் ,பெண் நெருக்கம் அதிகரிக் கிறது ,பெண் கற்பமாகிறாள் ,இன்று பெண்ணோடு நெருங்கியவர் அவளை விட்டு

                              தப்பி ஓடி விடுகின்றார் ,விளைவு ,.அவள் சிசுவை பெற்று வீதிகளில் எறிந்து விட்டு தப்பி ஓடுகின்றாள் ,இல்லை எனின் தற்கொலை

                              செய்கின்றாள் ,அதற்கு மேலாக சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுகிறது

                              பெற்றவர்கள் தலை குனியும் நிலையை இந்த பெண் பிள்ளைகள் ஏற்படுத்தி விடுகின்றனர் ,ஒரு வேளை சுகம் காண ,அதனை

                              செய்திட முன்பு அதன் தடுப்பு முறைகளை கையாள மறந்து ,இவ்விதம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதால் ,

                                தனது அழகிய வாழ்வை சிதைத்து சாகும் வரை வலியோடு பயணிக்கும் வாழ்வியல் சுழன்ற வண்ணம் உள்ளது

                                கஞ்சா,பீடி,மது,என கேளிக்கைகளில் நாட்டம் கொண்டுள்ள இளசுகள் ,புரியும் இந்த சிந்திக்க மறந்த சீர்கேட்டு தனத்தில் தம்மை

                                ஈடுபடுத்தி கொள்வதுடன் ,ஒரு சமூகத்தையும் குற்ற சமூகமாக மாற்றி வருகிறது

                                போதைவஸ்து ,மது பாவனையை தடுத்திட அரச முயலுமா…?அப்படி அவை தடுக்க முடியாத படத்தில் சமூகம் குற்றம் அற்ற சமூகமாக மாறும் ,,?

                                அவ்வாறு இல்லை எனின் கீழ் வரும் விடயங்களை நடைமுறை படுத்த வேண்டும் .விழிப்புணர்வு நிச்சயமாக பெண்களுக்கு தேவை படுகிறது

                                இதனை தடுப்பது யார் கடமை ….?சிந்திக்குமா அரசு …? தற்கால நிலையில் இலங்கையில் பாலியல் கல்வி ஊட்டம் அவசிய மாகிறது

                                வெளி நாடுகளை போல சிறுவயது முதலே இந்த பாலியல் கல்வியை ஊட்டுதல் மூலமே குற்றம் அற்ற சமூகமாகவும் ,இந்த சீரழிவுகளில் இருந்து சமூகத்தை காப்பாற்றும் நகர்வையும் மேற்கொள்ள முடியும் .

                                இந்த கல்வி முறையை அமூல் படுத்திட மகிந்த முனைந்தார் ,ஆனால் அது கைவிட பட்டது ,மீள இதனை ஆளும் அரசு நடைமுறைக்கு

                                உள்ளாக்கி குற்றம் அற்ற சமூகத்தை உருவாக்குமா..?சமூக சீரழிவை தடுக்குமா ..?மேற்படி சட்ட மாற்றத்தின் மூலம் குற்றங்களை கட்டு படுத்த முடியுமா ..? சிந்திக்க வேண்டியது நீங்களே ….!

                                கள்ள காதலால்
                                கள்ள காதலால்
                                  Posted in சினிமா

                                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

                                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

                                  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

                                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
                                  நயன்தாரா


                                  நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.

                                  10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

                                  ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த

                                  பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.

                                  லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு

                                  பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்

                                  என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.

                                  ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்

                                  அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

                                  நயன்தாரா

                                  அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது

                                  அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.

                                  நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.

                                  தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து

                                  பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

                                  இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

                                  ”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்

                                  என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

                                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
                                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
                                  Posted in சினிமா

                                  அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை

                                  அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை

                                  96, பிகில் படத்தில் நடித்து பிரபலமான வர்ஷா பொல்லம்மா, பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் என்று கூறியிருக்கிறார்.

                                  பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் – வர்ஷா பொல்லம்மா
                                  வர்ஷா பொல்லம்மா


                                  விஜய் சேதுபதியின் 96 படத்தில் மற்றும் விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

                                  வர்ஷா பொல்லம்மா பென்சிலில் வரைந்த ஜெர்சி மாடல்

                                  இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விராட் கோலியின் மீது கிரஸ் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை

                                  வெளியிட்டுள்ளார். பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் இருந்ததாகவும், அவருக்காக பென்சிலில் ஜெர்சி மாடல் வரைந்து வைத்ததாகவும் பதிவு செய்து இருக்கிறார்.

                                  இதை பார்த்த ரசிகர்கள் திருமணமானவர் மீது ஈர்ப்பா என அவரை கலாய்த்து வருகின்றனர்.

                                  வர்ஷா பொல்லம்மா
                                  வர்ஷா பொல்லம்மா
                                  Posted in சினிமா

                                  அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், ரைசா

                                  அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், ரைசா

                                  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க என்று பதிலளித்துள்ளார்.

                                  அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க – ரைசா

                                  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா

                                  காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மேலும் சில படங்களில் நடித்து

                                  வருகிறார்.
                                  ஹரிஷ் கல்யாண்- ரைசா


                                  எப்போதும் ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர் ரைசா. அந்தவகையில் ரசிகர் ஒருவர், ‘ஹரீஷ்

                                  அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசா, “ஆமாம். நாங்கள் திருமணம்

                                  செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள்.

                                  அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

                                  அவரைத்தான் கல்யாணம்
                                  அவரைத்தான் கல்யாணம்