என்னை விட்டு விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விட்டு விடு

என்னை விட்டு விடு

பக்கத்தில் நீ இருக்க
பகலும் இங்கு இருளுதடி
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லி மனம் துடிக்குதடி

அத்தனை கோள்களும்
அழகி உன்னை சுற்றுதடி
வெப்ப மாணிக்கும்
வேர்த்து இன்று கொட்டுதடி

மஞ்சள் வெயில் சூரியனும்
மணி கணகக்காய் காத்திருக்க
காணாமல் நடப்பவளே
கட்டழகி நீ தானோ ..?

வீதியில நீ போகையில
விபத்துக்கள் கூடுதடி
வெடிக்கின்ற எரிமலையே
வெப்பத்தை தணிக்காயோ

சத்தியமாய் சொல்கிறேன்
சம்மதம் சொல்லிடாதே
பிடிவாத காறியே – என்னை
பிடித்து போக வந்திடாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -33-03-2024

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

முடிந்தால் அடக்கு

முடிந்தால் அடக்கு …!

அடக்கு முறை இங்கு வெடிக்குதடா
அடக்க என்னை துடிக்குதுடா
மிதித்தால் எழுத்து அடங்குமோ ..?
மிதவாத கால் பணியுமோ ..?

பெண்ணுடன் ஒரு சிங்கமாம்
புனைந்ததால் ஒரு வம்சமாம்
ஆளுது அங்கொரு நாடடா
அதனால் தினம் தொல்லைடா

அஞ்சி பாதம் வீழ்வதோ
அடிமையாய் யான் மாய்வதோ
கெஞ்சி விழும் நிலையிலே
கேடு கெட்டு வாழ்வதோ

கொஞ்சி தமிழ் பேசிடும்
கொள்கை மண்ணில் வீழுமோ ..?
அஞ்சிடாத புலியவன்
ஆண்ட மண் பரம்பரை

செய்தவன் கொலை காலிலே
செந்தமிழ் இன்று வீழ்வதோ ..?
உண்மை மறைத்து உலகிலே
ஊடகத்தை ஆள்வதோ ..?

செவந்து குருதி ஓடலாம் – மண்ணில்
செத்தே இன்று வீழலாம்
கொத்து கொத்தாய் கொன்றவன்
கொலை காலிலே வீழ்ந்திடேன்

முகநூலை முடக்க துடிக்கிறாய்
,முடக்கு முடக்கு போகிறேன்
நேரம் கொஞ்சம் மிஞ்சிடும்
நேர்த்தி பொங்கி எழுந்திடும்

ஏதும் இல்லா காலத்தில்
எழுந்து நாம் நடந்தவர்
ஏது இங்கு வேணுமோ
எழுதினேன் இழுத்து முடக்கு

எதிரி எனக்கு இருக்கு
எதிரி யான் உனக்கு
எரியும் இனி விளக்கு
எழுதுறேன் இனி உழக்கு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-02-2021
முகநூலை நிரந்தரமாக முடக்குவதாக இப்போது செய்தி வந்த போது –

Home » tamilkavithai
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் சொல்லிட வா

காதல் சொல்லிட வா

ஏழைந்து நாட்களாக
என்னுயிரை காணலையே
முன்னே நானழுது
மூவாறு பெருகிடிச்சே

ஏழு நாளு வாரத்தில
ஏங்கி போனேன் பூச்சியமா
ஏழேழு ஜென்மங்களும்
ஏய் நீ தா காட்சியம்மா

ஒன்ப தாண்டு வாழ்விலே
ஒடிந்து போனேன் மூனாக
தென்பை தந்து நின்னவளே
தேடுகிறேன் தானாக

வந்திடுவாய் என்று தனே
விழியோரம் காத்திருக்கேன்
தந்து விட்டேன் இலக்கமதை
தாகத்தோடு அழைத்து விடு

பூச்சியத்தில் இருந்து தான்
பூமி சுத்துதே
நாளுக்கு நாலு நாலு
நாட்டை ஆழுதே

கை பேசி இலக்கத்தை
கவிதைக்குள்ளே வைத்தேன
கண்டு பிடித் தழைப்பாய்
காதல் கூறி நிற்பாய்

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 05-06-2020
இதற்குள் பிரிட்டன் 11 இலக்கம் கொண்ட கைபேசி இலக்கம் உள்ளது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

வன்னி மைந்தன் கவிதைகள்

Home » tamilkavithai
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே

    உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே …!

    ஓடி வந்தெங்கள் உயிர் தின்ற கடலே
    ஒரு பதில் சொல்லாமல் உள் வந்த தென்ன ..?
    தேடி பொருள் தேட மடி தந்த கடலே
    தேய் கூலி இழக்கத்தான் சேதங்கள் தந்தாயோ …?

    பேரலை உருட்டி எம் பெரு வீடு உடைத்தாயே
    ஆழ்ந்து உறங்கியார் அவர் வந்து தின்றாயே ….
    உயிர் தின்ற கடலே உன் கோபம் என்ன …?
    உடைந்து உடல் வாழ துயர் தந்ததென்ன …?

    ஆடி பாடிய அழகான ஊருக்குள்
    ஆழி பேரலையே அவை வந்ததென்ன …?
    நேற்றெந்தன் பிள்ளைக்கு நான் செய்த பண்டங்கள்
    இன்று படைக்கத்தான் எமனாக வந்தாயோ …?

    கத்தி வாய் குழற கை தட்டும் கடலே
    கடும் கோபம் உன் மேலே என் செய்வான் நானோ ..?
    உன்னை தாய் என்றார் உதடுகள் சாகட்டும்
    உன்னரு வாழ நான் வர மாட்டேனே ….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -24/12/2019
    23-12-2018 இந்தோனேசிய சுனாமி பேரழிவை 281 பேர் பலி தாக்கத்தை எண்ணி
    கலங்கிய போது

    Home » tamilkavithai
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    ஏன் அழுகிறாள்

    ஏன் அழுகிறாள்

    ஆடி வரும் காற்று போல
    அன்று உடல் தழுவியவள் ..
    இன்று விட்டு போனதென்ன ..?
    இதயம் மறந்து நின்றதென்ன ..?

    கூண்டுடைத்து பறந்திட தான்
    கூண்டு கிளி முனைந்ததென்ன …?
    காடு மேவி வந்ததினால்
    காமம் கணக்க பறந்ததுவோ …?

    கூவி வரும் குயில் பாட்டை
    கூடுடைத்து கேட்டு நிற்பின் …
    வாழ்வு பயிர் வாடிவிடும்
    வாயில் கோலம் புரியலையோ ..?

    ஏது சொல்லி இயம்பிடுவேன்
    என் மனதின் வேதனையை ..?
    காறி உன்னில் உமிழ்ந்திடவோ
    கட்டி தாலி பற்றி வந்தேன் …?

    பறந்த கிளி மகிழ்வுறுமோ ..?- வந்தான்
    பாசமதில் குளித்திடுமோ …?
    நொந்து நொந்து அழுது இன்று
    நோகும் வாழ்வில் ஏன் மிதந்தாய் …?

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -13/08/2019

    Home » tamilkavithai
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நான் ஆட நீ வா …!

      நான் ஆட நீ வா …!

      உடையாதே பூவே
      உன்னை சூடவா …?
      உள்ளத்தில கோயில் கட்டி
      உன்னை வணங்கவா …?

      ஒழுகும் நிலவொளியில்
      ஓடி பாடவா ..?
      உன்னை நான் விரட்ட
      என்னை நீ மிரட்ட …

      கோயில் மணி ஓசையில
      கொழுந்து காற்றினிலே …..
      ஆனந்தம் பிறக்குமே
      அதிகாலை உதிக்குமே ….

      தேன் சிந்தும் இனிமையில
      தேகம் குளிர மனம் மகிழ ….
      தந்தனா பாட்டு தான்
      தாளமிடும் நேரம் தான் ….

      கண்ணே கவலை விடு
      காதலே உயிர் கொடு ..
      நாளுமே ஊர்கோலம் தான்
      நாள் திசையும் எம் வசம் தான் ….!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -18/03/2019

      Home » tamilkavithai
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

      பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

      ஆடை குறைத்து
      அரை உடல் நிறுத்து …
      போகும் பெண்ணே
      போக்கிடம் மாற்று ….

      தீங்கை விதைத்து
      தீயாய் கசிந்து …
      ஊரை எரிக்கும்
      ஊனம் மாற்று ….

      நக்கி குலைக்கும்
      நாய்கள் கூட….
      வாலை ஆட்டும்
      வாழ்தல் மாற்று …..

      தொப்பை நீட்டி
      தொடையும் காட்டி …
      வன்முறை தூவும்
      வாழ்க் கை மாற்று ….

      ஆடை குறைத்து
      அங்கம் காட்டும் ,,,
      அழிவே உந்தன்
      அடி எண்ணம் மாற்று ….

      கண்ணில் காமம்
      கசியும் நிலையை
      தூவும் பெண்ணே – உன்
      தூரிகை மாற்று ….

      கண்டவன் நின்றவன்
      கன்னியில் ஏறியே
      காமம் புணர்தல்
      கழிவே நிறுத்து ….

      பொல்லா உடலை
      பொருத்தி உயிரில்
      நடக்கும் நிலவே
      நாயாய் வேண்டாம் …

      தப்பை விதைத்து
      தண்டனை அறுக்கும் …
      குற்ற மன்றாய்
      குந்த வேண்டாம் …

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -16/03/2019

      Home » tamilkavithai
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நிச்சயம் நீ அழுவாய் ….!

      நிச்சயம் நீ அழுவாய் ….!

      நானும் இன்று தொழிலாளி
      நாளை ஒரு முதலாளி …
      நயாகராவாய் நீளுவேன்
      நாள் திசையும் ஓடுவேன் ….

      கண்டபடி வார்த்தைகளை
      நெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..
      கெஞ்சுகின்ற காலம் ஒன்று
      கொஞ்சி வரும் காத்திரு …..

      பஞ்சு போல பிய்த்தவனே
      படு பாதகங்கள் செய்தவனே …..
      கொடுங்கோல் உடைத்தெறிய
      கொட்டும் தேளாய் நான் மலர்வேன் …

      உப்பு கண்ணீர் உடல் படிய
      உள்ளம் தீயாய் எரிய ….
      பற்றும் தீயாய் நான் வருவேன்
      பாதகனே நீ அழிவாய் ……

      முற்றுகையில் நீ அமிழ
      முட்டாள் சிந்தை இன்றொழிய ….
      கத்துகின்ற நாள் வரும் பார்
      கை கட்டும் நிலை தரும் பார் ….!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -14/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நாம் வாழ்வோம் ஓடி வா

      நாம் வாழ்வோம் ஓடி வா

      துளை போடும் பார்வைக்குள்ள
      துடுப்பாட்டம் ஈடுப்பாட …
      மனது மயங்குதடி – விழி
      மத்தாளம் கொட்டுதடி …

      காற்று பட்டு சேலை நுனி
      கன்னம் வருட …
      அடி உள்ளம் துள்ளுதடி
      ஆசை காதல் கொல்லுதடி …

      அச்சப்பட்டு வெக்கப்பட்டு
      அடி மேனி வேர்க்குதடி …
      காத்திருந்த போதுமடி
      கண்ணே நீ வந்திடடி . …

      வயதான வேளையில
      வாலிபம் சாக முன்ன …
      வாழ வேணுமடி
      வாழ்க்கை பட வேணுமடி …

      தினம் தோறும் தேவைகளோ
      தீராது கூடுமடி …
      அயராது உழைத்து கொட்ட – இந்த
      ஆயூள் போதாதடி …

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -10/03/2019

      Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நினைவில் துடிக்கும் காதல் …!

        நினைவில் துடிக்கும் காதல் …!

        இன்று வந்து உன் நினைப்பு
        இதயத்தை வாட்டுதடி ..
        தூக்கம் இன்றி விழி
        துடி துடித்து சாகுதடி …

        பாண் மேலே பட்டரிட்டு
        பாசமுடன் நீயளித்த ….
        உணவு பரிமாறல்
        உள்ளத்திலே இனிக்குதடி …

        கையிலே காசு இன்றி
        காகிதம் தூது விட்ட ….
        உன் பணி எண்ணையில
        உள்ளம் துடிக்குதடி …

        தனிமையில நான் தவிக்க
        தாலாட்டு நீ பாட …
        உள்ளத்தில சிறு மகிழ்வு
        ஊட்டினாய் மறவேனே ….

        முகில் முட்டும் மலையோரம்
        முடங்கி நீ மறைந்தாலும் …
        நினைவுக்குள் நீ இருப்பாய்
        நீங்காது மலர்வாய் ….

        நான் உனை பார்த்திடத்தான்
        நாள் ஒன்று வந்திடுமா ..?
        நான் தொழும் என்னிறைவா
        நாள் ஒன்று தந்திடுமா ..?

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -12/03/2019

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நாம் வாழ்வோம் ஓடி வா …!

        நாம் வாழ்வோம் ஓடி வா …!

        துளை போடும் பார்வைக்குள்ள
        துடுப்பாட்டம் ஈடுப்பாட …
        மனது மயங்குதடி – விழி
        மத்தாளம் கொட்டுதடி …

        காற்று பட்டு சேலை நுனி
        கன்னம் வருட …
        அடி உள்ளம் துள்ளுதடி
        ஆசை காதல் கொல்லுதடி …

        அச்சப்பட்டு வெக்கப்பட்டு
        அடி மேனி வேர்க்குதடி …
        காத்திருந்த போதுமடி
        கண்ணே நீ வந்திடடி . …

        வயதான வேளையில
        வாலிபம் சாக முன்ன …
        வாழ வேணுமடி
        வாழ்க்கை பட வேணுமடி …

        தினம் தோறும் தேவைகளோ
        தீராது கூடுமடி …
        அயராது உழைத்து கொட்ட – இந்த
        ஆயூள் போதாதடி …

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -10/03/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!

        பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!

        நான் பிறந்த நாளு – அட
        ஏன் பிறந்தன் சாமி …?
        நாளுமே கோடி துன்பம்
        நட்டு படைத்த சாமி …

        வலியெடுக்க நெஞ்சுக்குள்ள – நீர்
        வழிந்தோட கண்ணுக்குள்ள …
        செத்து செத்து பிழைக்கிறேன்
        சொகம் இன்றி தவிக்கிறேன் ….

        கலரு என்ன கறுப்பா …
        கண்ணை மூடி படைத்தவா …
        தொல்லை வேணாம் விட்டு விடு
        தொலைய வேணும் எடுத்து விடு …

        வெறுப்பான உலகத்தில
        வெந்து வாழ முடியல …
        தப்பான மனிதத்தில
        தாழ நிதம் முடியல ….

        ஆண்டென்ன நாப்பதாச்சு
        ஆயுல் வாசலாச்சு …
        வந்து விட்டேன் இது போதும்
        வாழ்ந்து விட்டேன் அது போதும் …

        நான் பிறந்த நாளினிலே
        நான் மடிய வேண்டுகிறேன் …
        என் ஆசை வேண்டுதலை
        என்னிறைவா தந்து விடு ….!

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -07/03/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        என் காதலை ஏற்றுவிடு …!

        என் காதலை ஏற்றுவிடு …!

        உடையாத நிலவே
        உள்ளம் தரவா …?
        உயிரையே தாரேன்
        உள்ளே வரவா ..?

        ஒத்தவரி சொல்லம்மா
        ஒத்துகிறேன் எண்ணம்மா ….
        கரை தேடும் அலைபோல
        காத்திருக்கேன் நானம்மா …

        ஏக்கம் தந்து போறவளே
        என்ன பதில் சொல்லாயோ ..?
        தாக்கம் தந்து நின்னவளே
        தகுமென்னு கூறாயோ …?

        பாதி நாளு தூங்கவில்லை
        பகலிரவு தெரியவில்லை …
        என்னாச்சோ தெரியவில்லை
        என்னையே காணவில்லை ….

        உன்னாலே தவிக்கிறேனே
        உள்ளமே புரிந்திடுவாய் …..
        இந்நாளு உந்தனுக்கே
        இதயம் தந்திடுவாய் ……..!

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -01/03/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னை நான் மறப்பேனா …?

        உன்னை நான் மறப்பேனா …?

        உடைத்து பாயும் அருவி போல
        உன் நினைவு ஓடுதடி…..
        உருளும் அலை வேகம் போல
        உள்ளம் ஆடுதடி …

        வெடித்து பறக்கும் கணை போல
        வேகம் கூடுதடி – என்னை
        வேக வைத்து பார்த்தவளே
        வேண்டும் வரம் தந்திடடி ….

        பூவை சூடி நீயும் நடக்க
        பூமி குளிருதடி – அந்த
        வானம் கூட சிரிக்க
        வாழ்த்து கொட்டுதடி ….

        கலைந்த கூந்தல்
        கண்ணில் விழவே காதல் பிறக்குதடி .
        கண்ணே உன்னை தீண்டத்தானே
        காமம் அழைக்குதடி …

        நெஞ்சுக்குள்ளே உந்தன் நினைவு
        நெருப்பாய் கொதிக்குதடி ….
        நெஞ்சே உன்னை சுமந்தேன்
        நெருங்கி வந்திடடி …!

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -26/02/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        அழகிய வெள்ளச்சி ….!

        அழகிய வெள்ளச்சி ….!

        பருவத்தில் உடைந்தவளே
        பால் நிலவாய் பொழிய …
        கூடுகள் வாடுதடி
        குளிராலே நோகுதடி ….

        மெல்ல மெல்ல நீ உருக
        மேனி மெல்ல விறைக்க ..
        உன்னை திட்டி உதடு பேச
        உருகும் பனியே அழுதிடுவாய் …

        முன் பகலின் வெண்பனியே
        முழு நிலவாய் நிலம் வீழ்ந்து ….
        மேகமாய் விரிந்தேன்
        மேனி வதைக்கிறாய் …?

        உடல் மேலே எடை ஏற்றி
        உருவங்களை மாற்றி ..
        ஆட வைத்து மகிழ்வாய்
        அடியே வேணாம் சீண்டலே ….

        அழையாமலே உடல் வீழ்ந்து
        ஆடி பாடும் வெண்பனியே …
        சொல்லாமலே மறைந்த தென்ன..?-என்
        சொந்தமே பிரிந்ததென்ன …?

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -11/02/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        என்னை ஏன் மறந்தாய் …?

        என்னை ஏன் மறந்தாய் …?

        ஆள் மனதில் நீ உறங்க
        அழுது விழி உடல் நோக ….
        தேம்புதடி உன் நினைவு
        தேவதையே என் செய்வேன் ..? ..

        கை பிடிக்கும் தூரத்திலே
        காணமல் போனவளே ….
        பெருக்கெடுத்த நிலவொளியில்
        பேரழகை தேடுகிறேன் …

        கூடு கட்டி தனிமையிலே
        கூடி வாழ ஆசைப்பட்ட ….
        நினைவுகளின் வேர் அறுத்து
        நினைவே ஏனெறிந்தாய் ….?

        கண்ணீர் சாலையிலே
        காயங்களால் வாடுகிறேன் ….
        பேறு கொண்டு முன்னெழுந்த
        பெரும் கனவு சிதறிடிச்சு …..

        வில்லெடுத்து அம்பெய்து
        வீழ்த்தி நெஞ்சை போனவளே ….
        காரணத்தை சொல்லி விடு
        காதல் செய்த பாவம் என்ன …?

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -10/02/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        அசிங்கதில் பிறந்தவளே …அடங்கு ….!

        அசிங்கதில் பிறந்தவளே …அடங்கு ….!

        ஆடை வெட்டி உடல் காட்டி
        ஆடி போவது யாரோ ..?
        ஆடவன் தொடர பூவும் கிழிய
        அழுவது இன்று ஏனோ …?

        ஆசை ஊற உறவு கூட
        அலைவது இந்த பெண்ணே
        அந்தோ வந்தான் கற்பை தின்றான்
        அழுவது இன்று வீணே …

        நடிப்பில் நன்றாய் மிஞ்சி நிற்பீர்
        நாயிடை கீழாய் ஆனீர் …
        கொஞ்சி குலவி ஆசை தீர்த்து
        கொடியான் ஆனாய் எறிவீர் …

        பத்தினி என்றே பாரில் அலையும்
        பாவையே கொஞ்சம் நிற்பாய் ..
        கன்னி தண்மை சோதனை நடத்தி
        கற்பை கூறு முன்னாய் ….

        வழியில் கிழிசல் பெருகி கிடக்கும்
        வந்தான் மறைத்து நடப்பான் …
        இந்த விடயம் ஏதும் புரியா
        இன்றும் பத்தினி நடிப்பாம் ….

        விதிகள் மீறி வீதியில் செல்லும்
        விதிகளை முன்னே மாற்று ….
        உன்னை மாற்றிட மறந்தேன்
        ஊனமாய் ஆணை இழிந்தாய் …?

        கற்பை தின்றான் என்றே பாடி
        கட்டி வைத்து கொன்றாய் ..
        கற்பை இழந்தாள் வாழ்வு நாளை
        கரம் பிடிப்பது ஆணே மறந்தாய் ….

        உன்னை காப்பதாய் எண்ணி இங்கே
        உன்னில் ஏனோ உமிழ்ந்தாய் ..?
        உலகின் முன்னே நீயே இன்று
        உலவும் வேசி ஆனாய் …

        சிந்தனை விரித்தே கொஞ்சம் எழுவாய்
        சிறகு பறவை ஆவாய் …
        திசைகள் அறிந்து வழிகள் அறியும்
        திறவு கோல் ஆகி மலர்வாய் ….

        ஆசை தீரும் உடலுறவு
        அசிங்கத்தில் மலர்வது கர்ப்பம் …
        அதனை அறியா அரங்கில் ஏறி
        அசிங்கமே என்ன உரைத்தாய் ..?

        நாளுமே ஆசை தீர தானே
        நாயே செய்வாய் என்ன ..?
        முன்னுக்கு பின்னே முரண்கள் கூவி
        முட்டாளாவது பெண்ணே …!

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -09/02/2019
        ( கற்பழித்தான் என ஊரே கூடி ஒருவனை அடித்து கொன்ற துயர் அறிந்த பொழுது )

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        தப்பி ஓடு ….!

        தப்பி ஓடு ….!

        வண்டமிழ் வீரத்தை
        வந்தவன் கொய்வதோ ..?
        வாலாட்டும் நாய்களாய்
        வண்டமிழ் மலர்வதோ ..?

        கூணாது பேசும்
        கூனிகள் வாய்களிற்கு …..
        நகல்களாய் மாறும்
        நகைச்சுவை ஆணீரோ ..?

        வீர திருமறைகள்
        விளையாது என்றெண்ணி …..
        முதிர் கன்னி விழி நீராய்
        முன்னே வீழ்ந்தீரோ ..?

        உறங்கி போனதால்
        ஊர்வலம் போகின்றீர் …
        நாளை எழுவார்
        நரகத்தில் மறைவீர் ….

        கருணாக்கள் உயிலில்
        கரிகாலன் உறைந்தான் …
        கண்ணிலா பொழுதிலும்
        கருணாக்கள் பயந்தான் ….

        பேருக்கே அஞ்சும்
        பெருச்சாளிகள் எல்லாம் …
        முரசு அறைந்தீரோ ..?
        முன் எச்சரிக்கை மறைவீர் ..!

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -05/02/2019

        Home » tamilkavithai
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        கதறி அழும் காதல் ….!

        கதறி அழும் காதல் ….!

        மடி வைத்து தலை தூங்க
        மணி விரல்கள் தலை கோத …
        முன்பகல் இரவாகி
        முழுமையாய் நனைந்த நாட்கள் …

        எண்ணி இன்று பார்க்கையிலே
        ஏங்குதடி என் மனது ….
        காற்று வந்து உடல் புகா
        கட்டி அணைத்து நின்றவளே ….

        நீ இட்ட முத்தங்களை
        நினைவுகள் தேடுதடி …
        உன் புருஷன் நான் என்று
        உறவாடிய காலங்கள் …..

        வீணாகி போகும் என்று
        விரும்பியது யார் இன்று ..?
        ஏகாந்த பெரு வெளிக்குள்
        எறிந்தது யார் இன்று …?

        ஊர் வந்த வேளையில -கால்
        ஊன்றிய சாலையிலே …
        தேம்பியது உன் நினைவுகளே
        தேவைதையே என் செய்வேன் …?

        அழுதபடி நான் நடக்க
        அகம் எல்லாம் நீர் துடிக்க
        பாத்திருந்த கதிரவனோ
        பாய்ந்து வந்து காய வைக்க …

        நான் நடந்து போனேண்டி
        நடை பிணம் ஆனேண்டி …
        ஏதறிவாய் என் மனதை
        எவர் சொல்வார் என் நிலையை …?

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -21/01/2018

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

        மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

        புழுதி உழவடித்து
        புழுவாய் அதில் உழைத்து …
        சேர்த்த பணம் போல
        சொர்க்கம் ஏது வரும் …?

        தலை சாய்த்த கதிர் கோதி
        தலையறுத்து நிலம் வீழ்த்தி …
        மண்டையில் மிதி மிதித்து
        மணிகளை அள்ளியது போல் …..

        சுனை பிடிச்சு உடல் கடிக்க
        சுழன்று குளம் மிதக்க …
        ஆடி பாடிய நாள்
        அது போல ஏது சுகம் ..?

        கோயில் மணியடிக்க
        கொழுவி நிரை பிடிக்க …
        கரம் வீழ்ந்த பிரசாதம்
        கனி போல ஏது சுகம் …?

        உடன் ஆய்ந்த காய் கறிகள்
        உடனடி உலையேற ….
        அடி பட்டு வாய் சுவைத்த
        அது போல நாள் வருமா …?

        எல்லாம் இருக்கிறது
        எங்களவன் தேசத்தில் …
        அதை எல்லாம் மறந்தேன்
        அன்னியன் தேசத்தில் …?

        சிங்கள தனி சட்டம்
        சிறை நிரப்ப தமிழினத்தை …
        வாழவா முடியும்
        வந்தேறிகள் சுடுகாட்டில் ..?

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -19/12/2018

        Home » tamilkavithai