Posted in சினிமா

நடிகரின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்

நடிகரின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு பட உலகின் பிரபல நடிகரின் முகத்தில் அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டார்.
கீர்த்தி சுரேஷ்


நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12ம் தேதி படம் திரைக்கு வர

இருக்கிறது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

படத்தின் பாடல் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டார்.

இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்து விட்டது. தெரியாமல் மகேஷ் சாரின் முகத்தில் அடித்து விட்டேன்.

உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். ஆனால், என்னால் அமைதியாக இருக்க

முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

இந்த படத்தில் கலாவதி என்ற வேடத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், இதுவரை திரை துறையில்தான் நடித்துள்ள படங்களில் நடித்திராத வகையில் காட்சிப்படுத்தப்பட்டு

உள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் பெருமையுடன் கூறியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். பரசுராம் இயக்கி உள்ளார்.


படத்தில் நடிகர்கள் சமுத்திரகனி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    Posted in சினிமா

    இந்த நடிகைக்கும் கொரனோ

    இந்த நடிகைக்கும் கொரனோ

    தமிழில் ரஜினி முருகன், சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி

    சுரேஷ். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

    நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

    இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும்.

    கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

      Posted in சினிமா

      புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

      புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

      தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

      புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
      கீர்த்தி சுரேஷ்


      நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம்

      ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

      தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன்

      லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.

      கீர்த்தி சுரேஷ்
      கீர்த்தி சுரேஷ் – டோவினோ தாமஸ்

      ‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின்

      மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

      Posted in சினிமா

      குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்

      குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்

      தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

      குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்
      கீர்த்தி சுரேஷ்


      தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது

      தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

      இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

      கீர்த்தி சுரேஷ்

      இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி

      சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் அவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

        Posted in சினிமா

        கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்

        கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்

        ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது மகனுக்கு 3வது பிறந்தநாள் என்று கூறியிருக்கிறார்.

        கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்…. வாழ்த்தும் ரசிகர்கள்
        கீர்த்தி சுரேஷ்
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

        மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

        இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி

        கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே Nyke“ என்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

        கீர்த்தி சுரேஷ்
        நாய்க்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ்

        இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நாய்க்குட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

          Posted in சினிமா

          கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்

          கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்

          கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில்

          நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார்.

          ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல்

          குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது.

          கீர்த்தி சுரேஷ், நிதின்

          இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன்

          நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

          அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இப்படி நடித்துள்ளார்? என்று வியந்ததுடன், இனிமேல் அவரை படங்களில் கவர்ச்சியாக பார்க்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

            Posted in Uncategorized

            கீர்த்தி சுரேஷ்-நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன்

            கீர்த்தி சுரேஷ்-நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன்

            நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

            நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன் – வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
            கீர்த்தி சுரேஷ்


            தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

            தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

            இசையமைப்பாளர் அனிருத்துடன், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.

            பின்னர் இருவரும் நண்பர்கள்தான், அவர்களிடையே காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன், கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது.

            கீர்த்தி சுரேஷ்

            இதனையும் மறுத்த கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இருப்பினும் அவர் குறித்து தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன.

            இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

            சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன.

            ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்றார்.

              Posted in சினிமா

              கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்

              கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்

              நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில்

              அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

              தெலுங்கில், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை

              பெற்றார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

              இந்நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 3

              மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன்

              அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

              அனிருத், கீர்த்தி சுரேஷ்

              தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும்

              விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத்

              தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.

              ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

              Posted in சினிமா

              தூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்

              தூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்

              தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து தெரிவித்துள்ளார்.

              தூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்
              கீர்த்தி சுரேஷ்


              ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

              நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா

              கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர 3 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

              இந்நிலையில், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர்

              எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது.

              கீர்த்தி சுரேஷ்

              என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு

              காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

                  Posted in சினிமா

                  கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்

                  கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்

                  இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், திடீரென அப்படத்தில் இருந்து

                  நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

                  இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்? – படக்குழு விளக்கம்
                  கீர்த்தி சுரேஷ்


                  மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்,

                  அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத்

                  ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

                  கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்

                  இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து

                  இந்த படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும்

                  நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.

                  கீர்த்தி சுரேஷ்

                  இந்த நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேசை திடீரென்று நீக்கி விட்டு பிரியாமணியை ஒப்பந்தம்

                  செய்துள்ளனர். மைதான் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். இதுவே அவர் நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.

                  இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும்,

                  ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார்.

                  ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை

                  நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை.”

                  இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                  Posted in சினிமா

                  கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார்

                  66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது.

                  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றுள்ளார்.

                  தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால்,

                  இந்த முறை தேசிய விருது பெற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.

                  சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ்

                  இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

                  இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

                  மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக பிரியா

                  கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

                  சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட ‘ஹெல்லாரோ’ தேர்வு செய்யப்பட்டது.

                  ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘

                  உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                  கீர்த்தி சுரேஷ்

                  66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை கடந்த ஆகஸ்டு மாதம் விருதுகளுக்கான நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார்.

                  கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார்

                  31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.

                  முழு விருது பட்டியல்: சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா, சிறந்த ஆக்‌‌ஷன் படம்: கேஜிஎப் (கன்னடம்), சிறந்த நடன அமைப்பு:

                  குமார்(பத்மாவத்), பியூச்சர் பிலிம் அல்லாத சிறந்த படம்: விபா பக்‌ஷியின் சன் ரைஸ் மற்றும் தி சீக்ரெட் லைப் ஆப் பிராக்ஸ், அஜய் – விஜய் பேடி,

                  சிறந்த இயக்குநர்: யுரி ஆதித்ய தார், சிறந்த திரைப்படம்: ஹெல்லாரோ, குஜராத்தி திரைப்படம்,

                  இயக்கம்: அபிஷேக் ஷா, சிறந்த நடிகர்: அந்தாதூன் படத்தின் ஆயுஷ்மான் குராணா, யுரியின் விக்கி குஷால்,

                  சிறந்த நடிகை: மகாநடி கீர்த்தி சுரேஷ், சிறந்த துணை நடிகர்: ஸ்வானந்த் கிர்கிரே படம் கும்பக், சிறந்த துணை நடிகை:

                  பாத்ஹை ஹோவின் சுரேகா சிக்ரி, சிறந்த ஆக்‌‌ஷன் பட இயக்கம்: கேஜிஎப் அத்தியாயம் 1, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம்:

                  ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்), சிறந்த வெகுஜனப் படம்: பத்ஹாய் ஹோ, சிறந்த அறிமுக இயக்குநர் படம்:

                  நான், சிறந்த சமூக திரைப்படம்: பத்மன், சிறந்த ஒளிப்பதிவு: உல்லு (மலையாளம்), சிறந்த ஸ்பெ‌ஷல் எபெக்ட்ஸ்:

                  கேஜிஎப், சுற்றுச்சூழல் காப்பு பற்றிய சிறந்த திரைப்படம்: பானி, சிறந்த மாநில மொழிப்படங்கள்:

                  தமிழ்: பாரம், ராஜஸ்தானி: டர்ட்டில், பஞ்செங்கா: இன் த லேண்ட் ஆஃப் பாய்சனஸ் உமன், மராத்தி: போங்கா, இந்தி: அந்தாதூன்,

                  தெலுங்கு: மகாநடி, அசாமிய மொழி: புல்புல் கேன் சிங், பஞ்சாபி: அர்ஜேதா.

                  சிறந்த பாடல்: நதிச்சிரமி (கன்னடம்), சிறந்த இசையமைப்பு (பாடல்கள்): சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)

                  சிறந்த இசையமைப்பு ( பின்னணி இசை): யுரி, சிறந்த ஒலியமைப்பு: யுரி, சிறந்த பின்னணிப் பாடகி:

                  கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார்

                  மயவி மனவே கன்னடப் படத்துக்காக பிந்து, சிறந்தப் பின்னணிப் பாடகர்: அரிஜித் சிங், படம்: பிந்த்தே தில்,

                  சிறந்த மேக்அப் கலைஞர்: ஏவ், சிறந்த தயாரிப்பு: குமார சம்பவம் (மலையாளம்), சிறந்த ஆடை வடிவமைப்பு:

                  மஹாநடி(தெலுங்கு), சிறந்த அசல் திரைக்கதை: சி லா சவ், சிறந்த தழுவல் திரைக்கதை: அந்தாதூன், சிறந்த வசனம்: தாரிக், சிறந்த குழந்தைகள் படம்:

                  சர்க்காரி அரியா பிரதமிக ஷாலி காசர்கோட், சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி. ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்‌ஷத் ரோஹி

                  (உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி), சிறந்த சினிமாட்டோகிராபி:

                  ஒலு, மலையாளம், எம்.ஜே.ராதாகிருஷ்ணன், சிறப்பு நடுவர் விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், ஜோஜு ஜார்ஜ் ஜோசப், சுதானி ஃப்ரம் நைஜீரியாவுக்காக சாவித்ரி, சந்த்ரசூட் ராய்.கீர்த்தி சுரேஷ்

                  கீர்த்தி சுரேஷ்