Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்
தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஐம்பத்தி ஒரு வயது தந்தை ஒருவரை
மகன் ஒருவர் கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்
மதுபோதையில் தினமும் வந்து தாயாருடன் சண்டை பிடித்து வந்துள்ளார் .
இவரது நாளாந்த கொடுமையை சகித்து கொள்ள முடியாத மகன் தாயாரை தாக்கிய
வேளையில் தந்தையை இவ்வாறு படு கோரமாக வெட்டி கொலை புரிந்துள்ளார்
பெற்ற தந்தையை மகன் கொன்றுள்ள செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
அதிக குடியால் ஒரு குடும்பம் சீரழிந்து போன வரலாற்று பதிவாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

கண்டியில் பெய்த ஜஸ் மழை – வைரலாகும் புகைப்படம்
கண்டியில் பெய்த ஜஸ் மழை – வைரலாகும் புகைப்படம்
இலங்கை கண்டியின் பல பகுதிகளில் இன்று திடீரென ஐஸ் மழை பொழிந்துள்ளது
,மேற்படி காட்சிகள் மற்றும் காணொளிக என்பன சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
இந்த மழை வீழ்ச்சியால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்

புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள்
புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள்
விடுதலை புலிகளின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அந்த அமைப்புடன் இணைந்து அரசியல்
பணிகளை முன்னெடுத்து வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயரும் ,உறுப்பினரும் , பிரான்சின்
முக்கிய பொறுப்புக்களில் விளங்கியவரும்,தொழில் அதிபாருமாக விளங்கும் நாகலிங்கம் பாலச்சந்திரன் துணைவியார் கொரனோ நோயின்தாக்குதலில் சிக்கி பலியானார்
இவ்வாறு பலியான அவரது இறுதி கிரியை இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது ,
குடும்ப உறவுகளை மட்டும் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் இவரது நல்லடக்கம் இடம்பெறுகிறது
விடுதலையின் நேசித்தலுக்கு ,தனது மூச்சை வழங்கி அந்த குடும்ப உறவுகள் தொடர் பணி செய்திட முன் துணையாக விளங்கிய கமலா அவர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் .
அவரது ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தார் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .
ஏன் தவிக்க விட்டாய் …?
நேற்றெங்கள் தோட்டத்து பூவானவள்
நெஞ்சுக்குள் நிற்கின்ற விழியானவள்
அன்புக்கும் பண்புக்கும் உயிரானவள்
அகிலத்தின் நோயதில் பலியானவள் …..
வீம்புக்கு என்றுமே செல்லாதவள்
விடுதலை போருக்கு உயிரானவள் – உடல்
தாங்கிட இன்று முடியலையே – பக்கம்
தங்கிட கூட முடியலையே …
வேருக்கு நீர் வீட்ட குலமகளே
வேணடுறோம் மீள வா மகளே …
அறத்திலே நின்ற பெரு மகளே
அழுகிறோம் விழியை துடை மகளே ….
என்றுன்னை இனி நாங்கள் பார்த்துடுவோம்..?
எப்படி உன்னோடு கூடிடுவோம் …?
தீ வந்து உன் உடலை தீண்டிடவோ ..?
தீ தின்ன உன்னை நாம் பார்த்திடவோ ..?
அழுகிறோம் எம் விழி துடைப்பாயா ..?
ஆறுதல் தந்திடா வாராயா ..?
வேருக்கு நீர் விட்ட பெருமாளே
வேணடுறோம் மீள வந்திடுவாய் …!
கண்ணீருடன் – வன்னி மைந்தன் –
பிரான்சில் புலி முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம் read more click here

கொழும்பில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி – போலீசார் குவிப்பு
கொழும்பில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி – போலீசார் குவிப்பு
கொரனோ நோயால் பாதிக்க பாட்டு சிகிச்சை பெற்று வந்த சிங்களவர் ஒருவர் மருத்துவ மனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாறு தப்பி ஓடியவர் பதுங்கியுள்ள பகுதி ஒன்று இராணுவம் மற்றும்
காவல்துறையால் திடீரென சுற்றிவளைக்க பட்டுள்ளது ,மக்கள் குறித்த பகுதிக்குச்செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
மேலும் இவருடன் பழகிய இரண்டுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை தப்பி ஓடிய நோயாளி கைது செய்யப் படவில்லை

கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
இலங்கை கலுபோவாவில மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு
கோரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் அடித்து பூட்ட பட்டது
அவ்வாறு ,மூடப்பட்ட அந்த மருத்துவ மனையின் விசேட சிகிச்சை பிரிவு
இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மீளவும் திறக்க பட்டுள்ளது
இதனால்மீளவும் அவசர நோயாளர்களா இந்த பகுதியில் சிகிச்சைக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர்
என அந்த மருத்துவமனை குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துளளார்

இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது
இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது
இலங்கை அரசிக்கு சொந்தமான எயார் லங்கா விமான சேவைகள் எதிர்வரும்
சித்திரை முப்பதாம் திகதி வரை பறப்பில் ஈடுபடாது எனவும் ,திட்டமிட்ட
படி தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டும் சேவையில் இருக்கும் என குறித்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
இதனடிப் படையில் இவைகள் இடம் பெறும் எனவும் ,முப்பதாம் திகதி
தமது மறு அறிவித்தலில் இது தொடர்பான விடயங்கள் தெரிய படுத்த படும் என மேலும் கூறப்பட்டுள்ளது
வெளிநாடுகள் சென்ற இலங்கையர்கள் விமானிகள் இன்றி பெரிதும் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

காதல் தகராறு மாமனை சுட்டு கொன்ற மருமகன்
காதல் தகராறு மாமனை சுட்டு கொன்ற மருமகன்
இலங்கை மகாஓயா பகுதியில் நபர் வாலிபன் ஒருவர் தாயரின் சகோதரர்
மகளை காதல் செய்துளளர் ,ஆனால் அவரோ தங்கை மகனுக்கு மணம்
முடித்து வைக்க மறுத்துள்ளார் ,இதனால் ஆத்திரமுற்ற மருமகன் மாமனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்
இந்த சம்பவம் கடந்த தினம் பிரபல 5,40 மணியளவில்
இடம்பெற்றுள்ளது ,தற்போது குற்றவாளிகள்
கைது செய்ய பட்டுள்ளனர்,காதல் செய்த கோலம்

வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்
வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்
இலங்கை களுத்துறை பகுதியில் ஆண் ஒருவர்நடந்து சென்றுள்ளார் ,திடீரென உடல்நிலை இயலாது அவ்விடத்தில் குந்தி இருந்துள்ளார் ,
அவச நிலையத்துக்கு அழைக்க பட்டு அவர்கள் அந்த களமுனைக்கு வருவதற்கு முன்பாக அவர் இறந்துள்ளார்
இவருக்கு கொரனோ தொற்றி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ஆடைகள் தீ மூட்டி எரிக்க பட்டன
இவ்வாறு பிரிட்டனிலும் நடந்து சென்றவர்கள் ,மற்றும் வீட்டில் கதிரையில்
அமர்ந்த நிலையில் அறிகுறி ஏதும் இன்றி கோரனோவால் தமிழர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது
தற்போது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளானார்கள் என கூறி அந்த பகுதி முற்றாக மக்கள் நட மாட தடை
விதிக்க பட்டது ,தற்பொழுது அவை அங்கிருந்து அகற்ற பட்டுள்ளது
அங்கு தனிமை படுத்த பட்ட மக்களுக்கு நோயானது இல்லை என்ற நிலையில்
இந்த தடை விலக்கல் விடுக்க பட்டுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
இருவாரங்களுக்கு மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
இதனால் மக்கள் வெளியில் நாடமாடும் தடைகள் விதிக்க பட்டுள்ளன
இவ்வாறான காலப்பகுதியில் தொழில் அற்று வாடும் மக்களுக்கும் அரசு உதவி வருகிறது
வான் ,பள்ளி,ஆட்டோ சாரதிக்கு தலா ஐந்தாயிரம் ரூபா விகிதம் உதவி
தொகைகள் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது
இதனால் சாரதிகள் பெரும் குஷியில் உறைந்துள்ளனர்

கொரனோ தொற்றை மறைத்தால் இருவருடம் சிறை -மக்களுக்கு எச்சரிக்கை
கொரனோ தொற்றை மறைத்தால் இருவருடம் சிறை -மக்களுக்கு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது
செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த (COVID 19) செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான காலாநிதி பந்துல குணவர்த்தன, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள்
அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக
திட்டமிட்ட நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டிக்கு அமைவாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இவற்றை சீர்குலைக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இது தடுப்பு நடவடிக்கைக்கு
பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் இவ்வாறு செயற்பட்ட 23 பேர் தொடர்பாக விசாரனை நடத்தப்பட்டு இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நிமித்த பிரியதர்ஷன, மற்றுமொருவர் துஷ்மந்த என்பராவர். இவர்கள் தற்பொழுது கைது
செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
40 பேர் தொடர்பில் விசாரனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதே வேளை இந்த
நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் உரிய தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக நாடு முழுவதிலும் இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து
பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதிலும் பொது மக்களை தெளிவுப்படுத்தும் முகமாக சுவரொட்டிகளை ஒட்ட உள்ளது.
இது தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிடிவிறாந்தின்றி சிறைக்கு உட்படுத்த முடியும். குற்றமிழைத்தமை உறுதி செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 1000
ரூபா தண்ட பணமும் விதிக்கப்படும். இந்த தவறுகளுக்கு ஒத்தாசை வழங்குவோரும் குற்றவாளிகளாகவே கணிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு எதிராகவும் குறிப்பிடப்பட்ட தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 7மணியளவி;ல் கைதுசெய்யபபட்ட சந்தேக நபர்களில் முன்னாள்
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இடம்பெற்றிருப்பதாக
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும்
கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு
இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு
இலங்கையில் தற்பொழுது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
233 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
எதிர் வரும் இரு வாரங்கல் இந்த நோயானது அதிகம் மக்களை வாட்டும்
எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
இன்று மட்டும் ஆறு பேர் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில்
இனம் காணப்பட்டுள்ளனர்

யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்த
பட்ட 24 பேரில் 12 பேருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்தி வைத்திருந்த
நபர்கள் எனவும் ,அவ்வாறு இருந்தவர்களுக்கே இந்த நோயானது உள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்களை மிக அவதானமாக இருக்கும்
படி அரசு எச்சரிக்கை விடுத்தது சில நாட்களில் பெரும் தொகையில் இவர்கள் பாத்திக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிசார் பணிநீக்கம்
தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிசார் பணிநீக்கம்
இலங்கையில் ஊரடங்கு வேளை வீதியில் உலாவினார்கள் என்ற குற்றச்சாட்டில்
அந்த இரு வாலிபர்களை தோப்பு கரணம் பட வைத்த இரு காவல்துறை
சிப்பாய்கள் பொலிஸ்மா அதிபரினால் பணிநீக்கம் செய்ய பட்டுளளார்
மேலும் கான்ஸடபிள்,மற்றும் ஓ ஐ சி ஆகியோர் மன்னாருக்கு உடனடி இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர் .
மக்களை தவறான முறையில் நடத்தினாலோ ,லஞ்சம் வாங்கினாலோ இது தான் நிலை என கோட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்
நாட்டையும் மக்களையும் திறம்பட காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு என
அவர் பறை சாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் இந்த விடயங்கள் முன்னெடுக்க படுகின்றன

லண்டனில் யாழ்ப்பாண தமிழர்கள் கொரனோவால் பலி
லண்டனில் யாழ்ப்பாண தமிழர்கள் கொரனோவால் பலி
இன்று லண்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி யாழ் கச்சாய்
வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவர் பலியாகியுளளார் .
நோயின் தாக்குதலு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று
வந்த நபரே சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
இதே நோயின் தாக்குலுக்கு உள்ளாகி மேலும் இருவர் இறந்துள்ளனர் ,இறந்தவர்கள்
அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது

சவூதி,அபூதபி,டுபாய் இலங்கையர்களுக்கு அரசு அவசர உதவி
சவூதி,அபூதபி,டுபாய் இலங்கையர்களுக்கு அரசு அவசர உதவி
அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை காப்பாற்றும்
நகர்வில் இலங்கை தூதராலயம் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
அதன் பிரகாரம் ,சவூதி ,அபுதாபி ,மற்றும் டுபாயில் உள்ள மக்கள் அனைவரும்
அரசு கூறும் இந்த நடைமுறையிற் பின்பற்றவும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
உங்களுக்கு இலவச அழைப்புகள் வழங்க பட்டுள்ளன


கொழும்பில் பற்றி எரியும் அரச கட்டிடம்
சற்று முன்னர் கொழும்பு பொரளை பகுதியில் அமைந்துள்ள அரச அச்சு
கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த கட்டடம் முற்றாக எறிந்த வண்ணம் உள்ளது
தீயணைப்பபு படையினர் குவிக்க பட்டுள்ளனர் ,இந்த தீ விபத்து எவ்வாறு
ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
போலீசார் மற்றும் இராணுவமும் இந்த களத்தில் குவிக்க பட்டுள்ளனர்

யாழில் கொரனோ திருடர்களை துரத்தி பிடித்த பொலிஸ்
யாழில் கொரனோ திருடர்களை துரத்தி பிடித்த பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் ஊரடங்கை பயன் படுத்தி திருடர்கள்
தமது கைவரிசையை காட்டி வந்தனர் ,தமது பொருட்கள் இவ்வேளை
காணமல் போவதாக காவல்துறையில் மக்கள் முறைப்பாடு செய்த நிலையில்,பொலிசார் நடத்திய சுற்று காவால் தேடுதல் வேட்டையில்
தற்பொழுது நாவற்குழியை சேர்ந்த ஏழு திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இவர்களிடம் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம் ,கமராக்கள் ,மற்றும் ஏனைய விலை உயர்ந்த பொருட்கள் மீட்க பட்டுள்ளன .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இலங்கையர்கள் தவித்து நிற்க ,அவர்களை கைவிட்டு
சீனா நாட்டவர்கள் 218 பேரை இலங்கை விமான சேவை நிறுவனம் ஏற்றி சென்று சீனாவில் இறக்கியுள்ளது
ஆனால் ,லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் சொந்த நாட்டு
மக்களை இதுவரை ஏற்றி செல்வதற்கு இலங்கை மறுத்து வருகிறது .
இது ஏன் என்ற கேள்வியை முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்
வெளிநாடுகளில் உள்ள மக்களை விரைவில் தாம் அழைத்து வர தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆளும் அரசு தெரிவித்திருந்தது ,
ஆனால் அதனை முழுமையாக இதுவரை செயல் படுத்தவில்லை
சீனாவின் நெருங்கிய நண்பனாக விளங்கும் இலங்கை ,சீனாவுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது







