Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எமது கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பேரழிவைத் தடுக்குமாறு கோரி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.
தற்போது மீனினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை.
இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்தவகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.
இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில் – அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக்கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நிச்சமயாக வரும்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும்,
மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ,புல் மூட்டை பகுதியில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மற்றும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை புல் மொட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது உன் மீது கடல் பயணம் மேற்கொண்ட திடீர் துப்பாக்கி பிரயோகித்த நிலையில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கண மீனவர் தீவிர சத்திர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய இலங்கை கடற்படையினர் அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்துவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடத்தல் அல்லது கொள்ளைக்காரர்கள் நினைத்து அப்பாவி மீனவர்கள் மீது இவர்கள் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகிறது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தினருக்கு இழப்புகளை ஆளும் அனுரா அரசு வழங்குமாய் எதிர்பார்க்கத் தெரியவில்லை
அர்ச்சனா போன்று லஞ்ச பெருச்சாளிகளை அருகில் வைத்துக்கொண்டு அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுராஅரசு அப்பாவி மக்களை எப்படித்தான் காணப் போகிறார் என்பதுதான் மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .
செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு
செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு
செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு , செத்துப் பார்த்து இந்த மயானத்தில் கடந்த தினம் இடம்பெற்ற அகழ்வின் பொழுது எலும்புக்கூடு ஒன்று முழுமையானதாகவும், மற்றொன்று பகுதியழகன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஏழு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன .
ஒன்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன
அதனைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டு மொத்தமாக ஒன்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இந்த நபர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கையிலும் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஆக்கிரமிப்பு இனவாத பயங்கர ராணுவத்தால் தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதான சம்பவமே இதுவாக காணப்படுகிறது.
இது ஒரு மனிதப் புதைகுழி என மக்கள் மன்றம் தெரிவித்து வருகிறது.
மக்களை படுகொலை செய்த அரச இராணுவம்
ஆகவே மக்களை படுகொலை செய்த அந்த அரச ராணுவத்தினையும் அந்த ஆட்சியாளர்களையும் யார் கைது செய்து விசாரிப்பது என மக்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் சடலங்களாக இருந்தால் அது ஒரு கடதாசி ,சிங்களவராக இருந்தால் அதுதான் மனித உயிர்கள் என பார்க்கின்றது .
இவ்வாறு தான் பாகப்பிரிவினை இலங்கையில் காணப்படுகிறது .
அடக்கப்படுகிற ஒரு இனமாகவும் ,அடக்கி ஆளுக ஒரு இனவாகும் தமிழர்கள் காணப்படுகின்றனர் .
அதனால் தான் என்னவோ தங்களுடைய குரல்கள் சர்வதேசத்தில் ஓங்கி ஒழிக்கவில்லை என்பதாக மக்கள் மன்றம் கண்ணீரோடு தெரிவித்து வருகிறது.
தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்
தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்
தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை
உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றை
வினைத்திறன் மற்றும் செயல்திறனுள்ள வர்த்தகங்களாக உருவாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
செலவினங்களைக் குறைத்து தற்போதுள்ள வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் சந்தையை மையமாகக் கொண்ட வினைத்திறன்
மற்றும் செயல்திறன் வாய்ந்த வர்த்தகமாக உள்நாட்டு பால்தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.
மில்கோ நிறுவனத்தின் உற்பத்தி
கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மில்கோ நிறுவனத்தின் உற்பத்தித் திறனில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மில்கோ அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் பாலிகா பெர்னாண்டோ, மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஜி.வி.எச். கோட்டாபய, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் பீ.சி.எஸ். பெரேரா
மற்றும் கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு
பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு
பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு ,கட்டடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அந்த வீடு முற்று முழுதாக செய்த மருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தில் உள்ள கட்டடம் வர்த்தக நிலையமாக இயங்கி வந்தது அதிலேயே தீப்பிடித்து குறித்த வர்த்தக நிலையம் நாசமாகி உள்ளது.
தீயணைப்பதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள்
தீயணைப்பதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பொழுதும் அதற்குள்ளாக அந்த கடையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இவை மின்சார ஒழுக்க காரணமாக இடம் பெற்றதா ,அல்லது வேறு ஏதாவது காரணங்களால் தீ பரவிக் கொண்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல் பொருள் அங்காடி
மிகப்பெரும் பல் பொருள் அங்காடியாக விளங்கி வந்த இந்த வர்த்தக நிலையத்தில் தீ பிடித்தது எப்படி என்பது தொடர்பிலையே அங்கு பணியாற்றிய ஊழியர்கள்,
மற்றும் வாடிக்கையாளர்கள் அச்சத்தையும் கேள்வியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது .
இது திட்டமிடப்பட்ட ரீதியில் தீ வைக்கப்பட்டதா அல்லது ,மின்சார ஒழுக்கின் காரணமாக மற்றும் ஏனைய காரணங்களினால் இந்த தீப்பற்றி கொண்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை குற்ற புலனாய்வுத்துறை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ அணைத்ததினால் பல மில்லியன் ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்
UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்
UK இந்த மாதம் 3.5% தேசிய வருமானத்தை பாதுகாப்புக்காக செலவழிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நிச்சயமாக உள்ளதாக UK செய்திகள் தெரிவிக்கிறது.
இது NATO கூட்டமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் போக்கின் ஒரு பகுதியாகவும், அமெரிக்காவை உறுதியாகச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியுடனும் இணைந்துள்ளது.
இந்த முக்கிய அரசியல் மாற்றம் உறுதியாக இருப்பதால், பாதுகாப்பு துறை (MoD) அதிகாரிகள், முன்னதாக 2030களுக்குள் 3% இலக்கை நோக்கம் எனவா
அல்லது “உறுதி” எனவா குறிப்பிடுவது குறித்து தொழில்நுட்ப சிக்கல்களாக பதற்றப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.
பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது மற்றும் சமூக நல திட்டங்களை மேற்கொள்வது ஆகிய இரண்டுக்கும் இடையில் சமநிலையை தேட வேண்டிய
அரசியல் சிக்கலின் மத்தியில் உள்ளார். அவர் இன்று உடனடியாகவே இந்த செலவுக் குறிக்கோளை தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது.
2035க்குள் பாதுகாப்பு செலவினை 3.5% ஆக உயர்த்துவதுடன், பாதுகாப்பு தொடர்பான இரகசிய உளவுத்துறைகள், தளவமைப்புகள் போன்றவற்றுக்காக கூடுதல் 1.5% செலவினையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும்.
இதன் மூலம் மொத்தப் பாதுகாப்பு செலவு 5% ஆக உயரும், இது இந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறும் முக்கிய NATO மாநாட்டில் ஒட்டுமொத்த உறுப்பினர்களிடமும் எதிர்பார்க்கப்படும்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய போர் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.
2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு (Core families) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம்
ரூபா 1,600,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு
நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி
பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி
பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது பகிடிவதை சம்பவமாக இது பதிவாகியுள்ளது ,பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது .
பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை
குழியாபிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு கற்று வந்த மாணவி ஒருவர் ,அங்கு சக மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆற்றில் குறித்துள்ளார்.
மாணவி ஆற்றில் குதித்ததை கண்டு கொண்ட சிலர், உடனடியாக ஆற்றில் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைசேர்த்து ,மாணவிகி நடந்த பகிடிவதை விடயத்தை கேட்ட பொழுதே ,அழுதபடி மாணவி பகிடிவதை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் பகிடிவதை பாடசாலைகளில் இடம் பெற்று வருவது ,மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் நெருக்கடியையும் உளவியல் உரனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை ,எடுக்க இந்த பாடசாலை மறுத்து வருவது என்ன காரணம் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
பகிடி வதைகளை தடுக்க மக்கள் கோரிக்கை
பெற்றவர்கள் கிளர்ந்தெழுந்து இந்த பகிடி வதைகளை தடுக்க ,தடுத்து நிறுத்த மறுத்தால் ,இதைவிட மேலும் பல விடயங்கள் அதிகரித்து செல்லக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ,குளியாப்பட்டிய போலீசார் எதிர்பாராத மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டனர்,
மாணவர்களை மனரீதியாக உளைச்சலுக்கு உள்ளாக்கி ,அவர்களை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து நிலைக்கு தள்ளிய, இந்த மாணவர்கள் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் .
அவர்கள் எந்த ஒரு பாடசாலையும் அனுமதிக்க முடியாத தண்டனையை வழங்கினால் மட்டுமே ,ஏனைய மாணவர்கள் உயிர்ப பாதுகாப்பு இருக்க முடியும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது.
மேற்படி விடையும் பெற்றோர்கள் பத்தியில் மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம் , செய்யப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதால் நீண்டதூர பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
தொலைதூரங்களுக்கு பயணிக்கும் பேருந்துகள் பயணிகள் பலன் கருதி சொவுசு ஆடம்பர பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் இப்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள்
நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள் அதிக இடம் பெற்று வருகின்ற இக்காலப் பகுதியில் சொகுசு பேருந்துகளை இயக்குவதன் ஊடாக பயணிகள் அச்சமின்றி சென்று வருவதற்கான வழிவகை இது ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுளளார் .
மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட , இந்த சொகுசு பேருந்துகள் உடந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் முன் வழியப்பட்டுள்ளது.
அதன் கீழ் மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட ,மாகும்பர ,அழுத்துகம , மற்றும் ,மொரட்டுவ , போன்ற பிரதான வழிகளில் இடை வழிகளில் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த படவுள்ளது .
சொகுசான தாழ்வான மிதிவலைகள் கொண்ட நூறு பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு
இதற்கான கட்டணங்கள் சற்று அதிகமாக இருப்பினும் ,மக்கள் இலகுவான முறையில் பயணம் செய்யக் கூடிய வகையில் ,இந்த பேருந்து பயணங்கள் இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண் ,மனைவியின் தலையை அறுத்து பொட்டலம்கட்டி பொலிஸில் சரண்டைந்த கணவனால் வவுனியா பரபரப்பாகியுள்ளது.
மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்து சென்ற கணவன்
மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
கள்ள காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.
ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.
பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள் ,இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க மீண்டும் களத்தில் முப்படைகளை இறங்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .
என்று சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது திணறி வருகின்ற ஆளும் அனுரா அரசு .
இராணுவ குவிப்பு
இந்த இராணுவ குவிப்பு கொரோனவை அடையாளம் காட்டுவதன் மூலமும் களத்தில் இறக்கி மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக இதை பயன்படுத்த போகிறதா என்கின்ற பரபரப்பு நிலவுகிறது.
இராணுவ பாதுகாப்பு செலவினத்தையும் இராணுவ படைகளின் எண்ணிக்கையும் குறைத்து வைத்திருந்த அனுரா அரசு ,திடீரென ராணுவத்தை வீதிகளில் இறக்கி பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவதில் இருந்து, தமது அரசை தக்கவைத்துக் கொள்வதற்கு நடவடிக்கையாக உள்ள நோக்கமுடிகிறது .
ஆளும் அரசு அதிகாரங்கள் தமது அரசாட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ,மக்களை அடக்கி ஆளும் தந்திரோபாயத்தை கையாண்டு வருகிறது.
அவ்விதமான ஒரு நடவடிக்கையின் ஒரு வெளிப்பாட்டு தன்மையாகவே, இந்த இராணுவ குவிப்பும் கொரோனா நோய் பரவல் கதைகள் காணப்படுவதாக பார்க்கப்படுகிறது.
வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிப்பு
எதிர்காலத்தில் வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு ,பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அதனால் மக்கள் கைது செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
வரி அதிகரிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏறக்கூடும் என்ற நிலையில் அவ்வேளை மக்கள் தன்னெழுச்சியாக ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவர்.
விதமான போராட்டங்களை தடுப்பதற்காகவே தற்போது கொரோனா நோய் காட்டி இராணுவத்தை வீதியில் இறக்கும் சந்துருபாய் நடவடிக்கை அனுராசு மேற்கொண்டு வருவதையே இதனூடாக காண முடிகிறது
அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போவதையும் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க போவதையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.
வீட்டுடன் மோதிய பேருந்து
வீட்டுடன் மோதிய பேருந்து
வீட்டுடன் மோதிய பேருந்து விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்,
இந்த விபத்தில் பேருந்து முன் பக்கங்கள் பல சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அழுத் மாவட்ட வீதியும் புளுமண்டல வீதியின் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றுடன் இந்த பேருந்து மோதி சிதறியது.
பேருந்து முன் பக்கம் பலத்தை சேதம்
இதன் பொழுது பேருந்து முன் பக்கம் பலத்தை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
விபத்து சம்பவிக்கும் போது ஓட்டுனரும் சாரதி மிதிந்துள்ள நிலையில் தேவாதினமாக மக்கள் அதில் பயணிக்காத காலத்தில் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்போது போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவது சாரதிகளின் அலட்சிய போக்கை காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த பஸ் விபத்து இப்படி இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் தொடராக பஸ் விபத்து அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க அரசு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதன் விளைவுதான் இந்த தொடர்விகத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் அதிகாலை செம்மணி சிந்துபாத்தி இந்த மயானத்தில் ஒரு குழியில் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
செம்மணியில் ஏழு எலும்பு கூடுகள் மீட்பு
இந்த புதைகுழிகளில் இருந்து நேற்று வரை ஏழு எலும்பு மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயதிற்கு தக்க சிறுமி எலும்புக்கூடும் காணப்படுகின்றது.
சுமார் 20 வருடங்களாக புதைக்கப்பட்ட காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் மனித எலும்பு கூடுதலாக இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து காலப்பகுதியில் படுகொலை
குறித்த பகுதியில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொடூரமாக வதைக்கு உள்ளான நிலையில் பின்னர் அங்கு வயல் வெளிகளில் புதைத்துள்ள நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
அவ்விதம் இந்த மனிதப் படுகொலை இடம் பெற்று இருக்கக்கூடும் என தெரிய வருகிறது.
தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்ட சிங்கள பேரினவாத ராணுவம் இவ்வாறான மனித படுகொலைகளை நடத்தி, தமிழ் மகளை அடக்கி ஒடுக்கி வந்தது மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.
கிருசாந்தி முதல் வித்தியா வரை இடம்பெறும் பல கொலைகளுக்கு பின்னணியில் இலங்கையினுடைய புலனாய்வு அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ,
அம்பலமாக இருந்த நிலையில் இந்த செம்மணி புதைகுழி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் பரவும் கொரோனா
இலங்கையில் பரவும் கொரோனா
இலங்கையில் பரவும் கொரோனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இலங்கை ஆளும் அரசு,கொரோனா பரவுதல் பீதியில் உறைந்துள்ள இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் .
கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பிப்பு
திடீரென இலங்கையில் இப்பொழுது கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ,இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு இந்த நோயானது மீளவும் நாட்டுக்குள் வேகமாக பரவினால் அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பில் ,அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து தற்பொழுது அனைவரையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிவது மூலமும் அவசியமென இலங்கை அரசின் சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு
நாட்டில் 180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறன நிலையில் தற்போது சிக்கன் குனியா ,டெங்கு ,மலேரியா ,கொரோனா நோய்கள் ,வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
உண்மையில் இந்த நோய்கள் பரவி வருகிறதா அல்லது அரசு அதனை பரவுவதாக சொல்லி வேறு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இது தமிழர்களையும் இலங்கை வாழ் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் விரைவில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் நிகழப்போவதை, இந்த விடயங்கள் வெளிப்படையாக அறிவித்து நிற்கின்றன.
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார் ,ஆஸ்திரேலியா துணை பிரதமர் குழு ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது ,இந்த குழு தமிழர்களுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
இது நாடுகளுக்கு இடையிலான அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை தொடர்பாக பேசுவதற்கு, அவர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் உட்பட்ட 15 பேர் கொண்ட குழு, கடந்த காலத்திலும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு ,சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டாரை உள்ளிட்ட அதிகாரிகள் குழு வரவேற்று அழைத்துச் சென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல்
விசேடமாக இலங்கை வந்துள்ள இந்த குழுவினரால் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல் ,
அவுஸ்ரேலியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் நாடு கடத்தல் தொடர்பாக எல்லாம் பேச்சுவார்த்தை நடைபெற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா தீவிர படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக கடல் வழியாக தப்பிச் செல்லும் இலங்கை அகதிகளை தடுக்கவும் மீளவும் நாட்டுக் குழுவை அழைத்துவரும் நடவடிக்கையிலும், சிறப்பு ஏற்பாடுகளை
செய்யவும் இந்த பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் இல்லை
நாட்டில் யுத்தம் இல்லை அனைத்தும் முடிந்து விட்டதாக காண்பித்து அகதிகளை மீளவு நாட்டுக்கு திருப்பி எழுப்பு நடவடிக்கையில் பல ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .
இவ்வாறன நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் இலங்கை வருகை பல சந்தேகங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் வெட்டி படுகொலை
ஒருவர் வெட்டி படுகொலை
ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மரடுவிழ கட்டு நெறியா புனித அந்தோனிய மாவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதக காவல்துறையினர் படுகொலை தொடர்பாக தெரிவித்துள்ளனர் .
தனிப்பட்ட தகராறு காரணமாக இவருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து 43 வயதுடைய நபரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை படுகொலை செய்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் .24 வயதுடைய நபர் ஒருவர் தற்பொழுது மாரவில்லை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
வயதானவர் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
வெட்டி படுகொலை செய்கின்ற நடவடிக்கை அதிகரிப்பு
இலங்கையில் சமீப காலங்களாக தொடர்ந்து தனிப்பட்ட நபர் தாக்குதல்களும் அதனால் படுகொலைகள் வெட்டி படுகொலை செய்கின்ற நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகிறது.
தொடரும் இந்த வெட்டி படுகொலை செய்யும் நடவடிக்கை எப்படி தடுப்பது என்ற கேள்வியே எழுந்துள்ளது .
நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலைகளினால் பல உயிர்கள் தொடராக பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சட்டம் இறுக்கப்பட்டு இருந்தால் ,இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்குமானால், அரசு இந்த கொலைகளை
வன்முறைகளை தூண்டிவிட காரணம் என்ன
தடுக்க மறுத்து வன்முறைகளை தூண்டிவிட அதற்கும் ,ஒரு காரணமாக உள்ளதா என்ற கேள்வி மட்டுமே இப்பொழுது எழுந்துள்ளது.
இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டவருடைய குடும்பங்கள் கண்ணீரில் தவிப்பதுடன் அந்த கிராம மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு வழங்க ப்பட்டுள்ளதாக அனுரா மனோர அரசு அறிவித்தல் விடுத்துள்ளது .
நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள்
யுத்த காலத்தில் நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்பிட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கையை விட்டு உயிர் பாதுகாப்பு காரணமாக .இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை வாழ் தமிழர்கள் .மீளவும் நாடு திரும்புவதற்கு தற்பொழுது இலங்கை அரசு தடைகளை விலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள்
குடி வரவு குடியாக சட்ட திருத்தங்கள் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை எடுத்து நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள், மீண்டும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு சென்ற தமிழ் அகதிகள் பெருமளவில் நாடு திரும்பும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு இந்த மக்கள் வருகின்ற பொழுதும் தங்களது காணிகளை அரசு அபகரித்துள்ளது. அந்த காணிகளை வழங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
அயல் வீட்டுக்காரர்களும் தமது காணிகளை எல்லையை போட்டு பிடித்துள்ளதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

கெஹெலிய பிணையில் விடுதலை
கெஹெலியவும் பிணையில் விடுதலை
கெஹெலிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
விளக்க மறியல் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல தற்பொழுது நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு இணைந்து முன்வைத்த வாதங்களை, பரிசீலித்த பின்னர் இந்த பிணை வழங்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சராக இருக்கின்ற பொழுது பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டார் என குற்றச் சுகத்தப்பட்டுள்ளது.
பிணையில் அமைச்சர் விடுதலை
அந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தற்பொழுது பிணையில் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் என்பது , உலக இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை செய்ய நீதிமன்றம் ஏன் அனுமதி அளித்தது என்பதுதான் மக்கள் கேள்வியாக உள்ளது.
நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்ட இவ்வாறானவர்கள் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளது தவறு என்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக காரணமாக இருந்த அமைச்சர் எப்படி விடுதலை ஆனார் .இது தான கேள்வியாகிறது .
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது ,மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனை காரணமாக துப்பாக்கி பிரயோகம்
குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள
குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான
பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகி
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்..
இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம்
யாழில் சைக்கிள் சங்குக்கும் ஒப்பந்தம்
யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம் ,யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார்,
நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.
தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்


















































