Tag: டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேரம் தடுப்புக்காவல்
டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேரம் தடுப்புக்காவல்
டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேரம் தடுப்புக்காவல் காணாமல் போன துப்பாக்கி தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலும் விசாரணைக்காக 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது ஆயுதம் மீட்கப்பட்ட வழக்கில் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
அடுத்தடுத்த விசாரணைகளில், அந்த துப்பாக்கி 2001 ஆம் ஆண்டு தேவானந்தாவுக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

டக்ளஸ் தேவானந்தாவை சிஐடி கைது செய்தது
டக்ளஸ் தேவானந்தாவை சிஐடிகைது செய்தது
டக்ளஸ் தேவானந்தாவை சிஐடி கைது செய்தது துப்பாக்கி காணாமல் போனது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சிஐடி கைது செய்தது.
காணாமல் போன துப்பாக்கி
காணாமல் போன துப்பாக்கி தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது ஒரு ஆயுதம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடந்ததாக
போலீசார் தெரிவித்தனர். அடுத்தடுத்த விசாரணைகளில், அந்த துப்பாக்கி 2001 ஆம் ஆண்டு தேவானந்தாவுக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
ஆயுதம் எவ்வாறு காணாமல் போனது
ஆயுதத்தின் வரிசை எண் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியின் எண்ணுடன் பொருந்தியது தெரியவந்தது. விசாரணையின்
போது, ஆயுதம் எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தேவானந்தா திருப்திகரமான விளக்கத்தை வழங்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எமது கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பேரழிவைத் தடுக்குமாறு கோரி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.
தற்போது மீனினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை.
இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்தவகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.
இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில் – அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக்கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நிச்சமயாக வரும்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும்,
மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் என டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார் ,யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா இப்படி முழங்கியுள்ளார் .
தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய போராட்ட குழுக்களில் டக்ளஸ் தேவானந்தா ஒருவராவார் .
ஆனால் அந்த இலட்சிய பாதையில் தெளிவுற நேர்மையுடன் பயணிக்க முடியாத அவர் எதிரியுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான சாதிகளில்; ஈடுபட்டார் .
ஈழ தமிழர் வரலாற்றில் யார் இந்த டக்ளஸ் தேவானந்தா என்றால் அவருக்கு என ஒரு திறந்தவெளி கறுப்பு பக்கம் உள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக பெரும் சாதனையை இவர் தமிழர்களுக்கு நாட்டுவார் என எதிர் பார்க்க பட்டது.
ஆனால் அது வெற்றிடமாகவே காண படுகிறது .
ஒன்று பட்டு ஒருமித்து பயணித்த தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையில் சதிகளை தூவி பிரித்தாண்டு ,இன்று ஒட்டு மொத்த தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியாத நிலையில் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா மாற்றம் பெற்றார் .
இது தவிர்க்க பட முடியாத ஒரு பக்கத்தின் பாதை என்பது அவரது உளதெளிவு .
ஆனால் அதனை ஈழ தேசிய இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ,புலிகள் இல்லா காட்டுக்குள் எலிகளுக்கு வேட்டை என்பதை போலவே இப்பொழுது இலங்கையில் பல பெருச்சாளிகள் உலவி திரிகின்றனர் .
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
வரலாற்றில் கிடைத்த மிக பெரும் வாய்ப்புக்களை டக்ளஸ் தேவானந்தாவும் தவறவிட்டு விட்டார் ,என்பதே அவரை எதிரியாக கருகியவர்கள் நெஞ்சங்களில் ஓரத்தில் இப்படி செய்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் ,அற்று போயுள்ளதை காண முடிகிறது .
வயது மூப்பாகி விட்ட நிலையில் ,ஐந்து ஆண்டுகளுடன் எனது ஆயூள் முடிந்து விடும் என டக்ளஸ் தேவானந்தா நினைத்திருப்பார் போல் உள்ளது .
இது அவரது அரசியல் கட்சியின் சிந்தாந்தம் எனவே அதனை யார் தான் மாற்ற முடியும் ..?,ஐந்து என்ன பத்து வருடங்கள் கூட அரசியலில் பயணியுங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே .
கல்லான மனிதர் என்றாலும் ஒரு மூலையில் ஈரம் உள்ளது என்பதை தொலை காட்சி விவாதத்தில் பஞ்சாயத்து பண்ணிய உங்கள் நிலை கண்டு வியந்தேன் .
ஆதலால் உங்கள் செய்திகளை தவிர்த்து வந்த நான் ஒரு சிறு இடம் ஒதுக்கி பதிவிடுகிறேன் .
உங்களுக்கு நாங்கள் எதிரிகள் ஆனால் தமிழர்கள் இன்று யாரையும் எதிரியாக பார்க்கவில்லை .
ஏன் என்றால் அவர்களுக்கு எதிர்க்கும் பலம் இன்று இல்லை டக்ளஸ் தேவானந்தா அவர்களே புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .
Featured
எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – கடற்றொழில் அமைச்சர்
எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – கடற்றொழில் அமைச்சர்
இலங்கை ,யாழ்ப்பாணம் ; இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியுமென்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தென் இலங்கையைச் சேர்ந்த சிறு
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் இன்று (26) கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் , கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக
நன்றாக அறிந்துள்ளதாகவும் பல வழிகளில் கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான டீசல்,
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை விஷேட ஏற்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்
வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று
எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இந்த வருடத்தில் நாம் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, எமது அமைச்சின் பொறுப்புக்களையும், கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும்.
எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் இதன்மூலம் வெற்றிகொள்ள வேண்டும்.
எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சிறந்த இராஜாங்க அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சின் செயலாளரும், பணிப்பாளர் நாயகமும் ஏனைய அதிகாரிகளும் கிடைத்துள்ளனர்.
ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் வழிகாட்டலில், நிதி அமைச்சரின் பக்கத் துணையுடன் எமது பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.
தங்கு தடைகளற்ற உங்களது நலன் சார்ந்த சுதந்திரமான பணிகளுக்கு எனது ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து கிடைக்கும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது
கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும்
பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.
அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில்
விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு
பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.
சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில்
அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள்
தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





















