Posted in இலங்கை செய்திகள்

காட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்

காட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்

இலங்கை உடவளவ காட்டு பகுதியில் பொத்துபிட்டிய பிரதேசத்தில் காவல்துறை அதிகாரிகள் திடீரென

மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கஞ்சா தோட்டம் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது

இந்த கஞ்சா தோட்டத்தில் 8 அடி உயரம் அளவில் வளர்ந்த 2000 கஞ்சா செடிகள் அங்கு இருந்துள்ளன

மேற்படி கஞ்சா செடிகளை தீயிட்டு அழிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது

கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது

இலங்கை சிலாபம் கடற்கரையில் உல்லாச கூத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் 38 காதல் ஜோடிகள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

ஜோடிகளாக வருகை தந்த அவர்கள் குடையை பிடித்து கொண்டு இந்த காம கலியாட்டத்தில் ஈடுபட்ட பொழுதே கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறான செயல் பாடுகள் அங்கு ஒரு மாடலாக இடம்பெற்று வருகிறது .

பெண்கள் ஆண்களுடன் கூடி வரும் ,ஆண்கள் ,பெண்கள் தாம் உழைத்து சாப்பிட துணிவில்லை ,பெற்றவர்கள்

பணத்தில் உண்டு ,உலவி வரும் இவர்கள் தமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் எமது வருமானம் என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லாது .

காதல்; கசமுசாவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

கடல் கரையில் சிசு கிசுவில்
கடல் கரையில் சிசு கிசுவில்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீதியை மறித்த முஸ்லிம் மக்கள்-குவியும் குப்பை வாகனங்கள் video

வவுனியாவில் வீதியை மறித்த முஸ்லிம் மக்கள்-குவியும் குப்பை வாகனங்கள் video

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை ஏற்றாது வவுனியா நகரசபை வளாகத்தில் இன்று (22.01)

காலை தொடக்கம் 8க்கு மேற்பட்ட குப்பையேற்றும் வாகனங்கள் தரித்து நிற்கின்றன.

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள்,

வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு லொரிகள், உழவியந்திரங்கள் மூலம்

கொண்டு வந்து வீசுவதுடன் பல்வேறு சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன் மற்றும் மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து பிரதேச இஸ்லாமிய

மக்கள் இன்று காலை 6.00 மணி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மேற்கொள்வதினையடுத்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் சிக்கல்

ஏற்பட்டுள்ளதினால் 8க்கு மேற்பட்ட குப்பையேற்றும் வாகனங்கள் இன்றையதினம் கடமைக்கு செல்லாது நகரசபை வளாகத்தில் தரித்து நிற்கின்றன.

குறித்த பகுதியில் பல லட்சம் பெறுமதியான குப்பைகளை மீள் சுழற்சி இயந்திரமும் கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிருபர் – வெடியரசன்

வவுனியாவில் வீதியை மறித்த
வவுனியாவில் வீதியை மறித்த
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்

சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானது. அது அவருக்கே நன்கு தெரியும்.

1977ம் ஆண்டு நடந்த தேர்தல் என்பது ஆறாம் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னராக நடந்த ஒரு தேர்தல். அதாவது முழுமையான ஒர் அரசியல் வெளியில் நடந்த தேர்தல் அது.

அதற்கு பின்னராக வந்த தேர்தல்கள் எல்லாம் ஆறாம் திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்ட ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் நடந்த தேர்தல்கள். இவற்றினை

அடிப்படையாக கொண்டு 1977ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையினை, அவர்களது அரசியல் பெருவிருப்பினை மாற்றமுடியாது.

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள தனது கூற்றை உண்மையாக நம்பினால், சிறிலங்காவின் அரசமைப்பில் உள்ள ஆறாவது திருத்தச் சட்டத்தினை நீக்கச் சொல்லிவிட்டு, தமிழர்களின்

இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான வழிமுறையாக பொது வாக்கெடுப்புக்கை நோக்கி உழைக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாகவும், தற்போது நடைபெற்ற வரும்

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரே வழி சுதந்திரமும் இறைமையும் தமிழீழத்தான்.

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ்மக்கள் தமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தை வெளிப்படையாக கூறாமல்

இருப்பதற்கான காரணங்களாக, 2009க்கு முன்னர் இருந்த பலம் தற்பேர் இல்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டமுமே ஆகும்.

சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான

பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

அரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்; வடக்கு ஆளுனர்

அரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்; வடக்கு ஆளுனர்

அரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்என வடமாகாண ஆளுனர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஓன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

பாடசாலை மற்றும் வைத்தியசாலையின் குறைபாடு ஆகிய இரண்டு விடயஙகள் தொடர்பாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஜனாதிபதியுடேன்

உரையாடியிருந்தோம். இவற்றுக்குரிய தீர்வுகளை உடனடியாக பெற்றுத் தருவதாக அவர் எமக்கு வாக்குறுதியளித்துள்ளார். எனவே இந்த இரு

பிரச்சனைகளும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். அதைவிட இந்தப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக கஸ்ரப்படும் வறுமையான மக்கள் பற்றியும் நான்

அறிந்திருக்கின்றேன். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களைப பற்றி அறிந்திருக்கின்றேன்.

நல்லகுடிநீர் வசதி இல்லை என்பது தெரியும். உங்களில் பலருக்கு வீட்டுவசதி, மலசலகூட வசதி வழங்கப்படவில்லை என்பதும் தெரியும். எனவே இந்தப் பிரச்சனைகளை

தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும். நிச்சயமாக உங்களோடு ஒருவராகவும், உங்களது பணிகளில் ஒருவராகவும் நான் இருப்பேன்.

இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் நீதியான சேவை தொடரும். அரசியல் காரணங்களுக்காவோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட

காரணங்களுக்காகவோ அநீதிகள் இழைக்கப்படுவதை தடுப்பேன். உங்களுக்கான தேவைகளை மாகாண

நிர்வாகத்தின் ஊடாக ஏற்படுத்தி தருவேன் எனத் தெரிவித்தார்.

நிருபர் – வெடியரசன்

Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு பணப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்

கடந்தாண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

வங்கி முகாமையாளர் எம்.ஐ.எகியா தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட உதவிப் பிராந்திய முகாமையாளர் என்.அருள் செல்வம், பிரதி

முகாமையாளர் எஸ்.எம்.ஏ.ஜவாத் மற்றும் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபில் மற்றும்

மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளில் கல்வி பயின்று கடந்தாண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கே

இந்த பணப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு பணப் ப
மாணவர்களுக்கு பணப் ப
Posted in இலங்கை செய்திகள்

வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

இலங்கை நுகொட பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது படுகொலையில் முடிவடைந்துள்ளது .

64 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தியும் ,வெட்டியும் கோரமாக படுகொலை செய்யப் பட்டுளளார்

.இலங்கையில் இவ்வாறான கத்தி குத்து தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமையும் அதனை தடுக்க காவல்துறையினர் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் 7 சண்டைக்காரர் video

வவுனியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் 7 சண்டைக்காரர் video

சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள வவுனியாவில் இருந்து 7 குத்துச் சண்டை வீரர்கள் பாக்கிஸ்தான் செல்கின்றனர்.

குறித்த வீரர்களுக்கு இனறு மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் பொது மக்களால் கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய குத்துச்சண்டை அணியுடன் நாளை பாக்கிஸ்தான் நோக்கி

பயணமாகவுள்ளனர். பாக்கிஸ்தான் லாகூரில் எதிர்வரும் 23-01-2020 தொடக்கம் 27-01-2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச

கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனால் வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசிகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல், எஸ்.சிறிதர்சன்

மற்றும் கெ.நிரோஜன் ஆகிய வீரர்களை வெற்றிபெற வாழ்த்தி அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்மணி அகளங்கன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின்

இணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் க.சந்திரகுமார், வன்னி மாவட்ட சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம்

ஜெகன், வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாலன், இலங்கை திருச்சபை தமிழ் கலவன்

பாடசாலையின் அதிபர். இ.நவரட்ணம் மற்றும் நகரசபை ஊழியர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி கௌரவித்திருந்தனர்

வவுனியாவில் இருந்து பாகிஸ்தான்
வவுனியாவில் இருந்து பாகிஸ்தான்
Posted in இலங்கை செய்திகள்

பம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

பபம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

வவுனியா பம்பை மடுப் பகுதியில் உள்ள காட்டு ப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த

நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றாங்களின் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்த குப்பை மேட்டுக்கு

பம்பை மடுவில் பரவிய காட்டு தீ- மக்கள்ஓட்டம் வீடியோ

இனந்தெரியாத நபர்கள் நேற்று மாலை (20.01) தீ வைத்திருந்தனர். குறித்த தீயானது குப்பை மேட்டில் எரிந்து படிப்படியாக நகர்ந்து காட்டுக்குள் சென்றது.

இதனால் சாளம்பைக்குளம் புதிய குடியேற்ற பகுதியை நோக்கி தீ இன்று பிற்பகல் (21.01) பரவிச் சென்ற நிலையில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

விரைந்து செயற்பட்ட வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர்

பாய்ச்சி தீ பரம்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இதனால் பாரிய அனத்தம் தவிர்க்கப்பட்டது.

நிருபர் –வெடியரசு பம்பை மடுவில் பரவிய காட்டு தீ

பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
பம்பைமடுவில் பரவிய காட்டு தீ
Posted in இலங்கை செய்திகள்

தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்

தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்

இலங்கை மாத்தளை பகுதியில் தமிழ் காதல் ஜோடிகள் ஒன்றாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மன விரக்தி அடைந்த இவர்கள் இவ்வுலகில் வாழ

பிடிக்காது ஒன்றாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

பெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாது சாதிய,சமூக,இனவாத,அடக்குமுறைக்குள் சிக்கி

தவிப்பதால் இவ்வாறான முடிவை இந்த இளம் ஜோடிகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் இந்தியா விமான தாங்கி கப்பல்

கொழும்பில் இந்தியா விமான தாங்கி கப்பல்

இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் முக்கிய படைப் பிரிவுகளுடன் மிதக்கும் இந்தியாவின் அதி நவீன INS எனப்படும் விமான தங்கி போர் கப்பல் ஒன்று தரித்துள்ளது .

இலங்கை இந்தியா கடல்படைகளுக்கு இடையில் மேற் கொள்ளும் கடல் போர் போர் ஒத்திகை மற்றும்

பயிற்சிகளில் ஈடுபடவே இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை கடல் படை தெரிவித்துள்ளது

புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் சர்வதேச கடற்படை கப்பல்கள் இலங்கையை மையமாக வைத்து தங்கி

செல்வதும் ,இவ்வாறான தொடர் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் கவனிக்க தக்கது

கொழும்பில் இந்தியா மிதக்கும்
கொழும்பில் இந்தியா மிதக்கும்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது

இலங்கை தென் மாகாணத்தில் இடம்பெற்ற காவல்துறை விசேட தேடுதல் ,சுற்றிவளைப்பில் சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதில் நீதிமனறினால் தேடப்படும் சுமார் 128 குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளனர் .


இவர்களை கைது செய்யும் நோக்கில் நடத்த பட்ட தேடுத்தலின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது

மேலும் வீதி விதிமுறையை பின்பற்றாது சென்றவர்களும் சிக்கியுள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றது .

இதற்கு அடிப்படை காரணம் வீதி விதிகளை உரியமுறையில் கடைபிடிக்காமையே என்பதாகும்

பொலிஸ் சுற்றிவளைப்பில்
பொலிஸ் சுற்றிவளைப்பில்
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?

சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து சிங்கள பெண் ஒருவர் தன்னை மர்ம நபர்கள்

வெள்ளைவானில் கடத்தி சென்றதுடன் ,பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என முறைப்பாடு செய்துள்ளார் .

இவர் கடத்தப்படவில்லை எனவும் ,இலங்கைக்கு அவ தூறை ஏற்படுத்த இவ்விதம் நடந்து கொண்டார் என கோரி சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

இவரது வழக்கு விசாரணை நீதிமன்றுக்கு வந்த பொழுது அவர் பாவித்த கைபேசியை இரசாயன பகுப்பாய்வு

சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து இவரது கைபேசி உரையாடல்கள் ,மற்றும் தொடர்புகள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்க படுகிறது ,

அவ்வாறு சிக்கினால் மேலும் சிலர் கைதாகும் நிலை ஏற்படும் எனவும் சுவிஸுக்கு தப்பி ஓடிய புலனாய்வு துறை

அதிகாரியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யும் நகர்வில் இலங்கை ஈடுபடலாம் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

இலங்கை பெல்மடுல்ல பகுதி காவல்துறை சாயன்ட் ஒருவர் சுமார் ஐம்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுளளார் .

ஆளும் கோட்டபாய அரசினால் சுமார் 2500 இரகசிய போலீசார் பணியில் அமர்த்த பட்டுள்ளதாகவும் லஞ்சம்

பெறும் அரச உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்

இவர்கள் உங்களை இரகசியமாக கண்காணிக்கின்றனர் என அறிவிக்க ப்பட்ட நிலையில் மேற்படி அதிகாரி லஞ்சம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

இவர்கள் இரண்டு நாட்களில் பணியில் இருந்து விலக்க பட்டு அரசு வழங்கும் சலுகைகள் நிறுத்த பட்டு இவர்

தனிமை படுத்தப்படுவார்கள் எனப்து அரசின் கொள்கை விதி

இவரது இந்த விடயத்தில் அரசின் செயல்பாடு எதுவாக உள்ளது என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ள முடியும்

Posted in இலங்கை செய்திகள்

அறிவற்ற ஒரு முட்டாள் – விமல் வீரவன்ச-மனோ கணேசன்

அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் – விமல் வீரவன்சஅறிவற்ற ஒரு முட்டாள் – விமல் வீரவன்ச-மனோ கணேசன்அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் – விமல் வீரவன்ச

வடமாகாணத்தின் மன்னார் செல்வாரியில் அமைந்துள்ள பனை உற்பத்தி நிலையத்தின் மும்மொழி

பெயர்பலகையை திறந்து வைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பலகையில் முதலில் இருந்த தமிழ் மொழி

எழுத்துகளை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதன்படி இப்போது தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழி பெயர்பலகை மாற்றப்பட்டு, தற்போது

சிங்களத்தில் முதலில் எழுதப்பட்ட மும்மொழி பலகை பொருத்தப்பட்டுள்ளது.

அறிவற்ற ஒரு முட்டாள் – விமல் வீரவன்ச-மனோ கணேசன்

இதன்மூலம் அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னை அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என அடையாளம் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார்.

இலங்கையின் பல இன, மொழி, மத பன்மைத்துவத்தை சிதைத்து, இந்நாட்டை மீண்டும் பின்னோக்கி 1950களின்

‘சிங்களம் மட்டும்’ என்ற இருண்ட யுகத்துக்கு அழைத்து செல்வதில் விமல் வீரவன்ச முன்னணி வகிக்கின்றார்.

இந்நாட்டில் சமூக, பொருளாதார சீரமைப்பு மற்றும் ஒழுக்கம் என்று பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காட்டிக்கொண்டாலும்,

இந்நாட்டின் பன்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இவை அனைத்தும் எந்தவித பயனையும் தராது.

இந்த அரசாங்கத்தில் இடம்பெறும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அமைச்சர்களான அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான்

ஆகியோருக்கு, இது தெரியவில்லையா? தமது அமைச்சரவை சகா விமல் வீரவன்சவின் இனவாத நடவடிக்கைகள் பற்றி விளங்கவில்லையா?

நான் எனது அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த வேளையில், எமது அரசு தவறு விடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசுக்குள் இருந்தபடி

அமைச்சரவையிலும், கட்சி தலைவர்கள் கூட்டங்களிலும் உரக்க குரல் எழுப்பி, ஜனநாயகரீதியாக மோதி என்னால் இயன்றதை செய்திருக்கிறேன் என்பதை இந்நாட்டு தமிழ்

மக்கள் நன்கு அறிவார்கள். இதுவும் இந்த அரசில் வடக்கையும், மலையகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த தமிழ் அமைச்சர்களுக்கு தெரியாதா? என தமிழ்

அறிவற்ற ஒரு முட்டாள் – விமல் வீரவன்ச-மனோ கணேசன்

முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் வினா எழுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்ட செல்வாரியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை நிறுவனம் ஒன்றின் மும்மொழி பெயர்பலகையில் தமிழ் மொழியை தரவிறக்கம் செய்துள்ள

அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி தனது முகநூல் மற்றும் டுவீட்டர் தளங்களில் கருத்து கூறியுள்ள முன்னாள், தேசிய

ஒருமைப்பாடு, மொழி விவகார, சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

விமல் வீரவன்ச, தனது இந்த நடவடிக்கை மூலம் தமிழர்களை இலங்கை தேசிய வாழ்வில் இருந்து ஒதுக்கி

வைக்கிறார். தாம் சிங்கள மேலாண்மை ஆக்கிரமிப்பின் கீழேயே வாழ்கிறோம் என்ற எண்ணப்பாட்டை தமிழர்களுக்கு இவர் தருகிறார்.

நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டுக்கு மேல் தமிழ் பேசும் இலங்கையர்கள் வாழும் மன்னாரில், அரச

நிறுவன பெயர் பலகையில் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்பது ஆக்கிரமிப்பு, மேலாண்மை சிந்தனை என்பதை தவிர வேறு என்ன?

மறுபுறம் விமல் வீரவன்ச என்ற இந்த அமைச்சருக்கு சட்டம் தெரியவில்லை. அரசியலமைப்பின் 18ம் 19ம் விதிகளின் படி

சிங்களமும், தமிழும் இந்நாட்டின் அரசகரும மற்றும் தேசிய மொழிகள் என கூறப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் சிங்களம், தமிழை விட உயர்ந்தது என கூறப்படவில்லை.

அதேவேளை 22ம் விதியின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக பதிவேடுகள் தமிழிலும்,

ஏனைய மாகாணங்களில் சிங்களத்திலும் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுக்க பெயர்பலகைகளில் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் எங்கே

இருக்கிறது? அப்படி ஒரு சட்டம் இல்லை. இந்த துறைசார்ந்த முன்னாள் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இது நன்கு தெரியும்.

இப்படி பெயர் பலகைகளில் சிங்கள மொழியை முன்னிலை படுத்தும் ஒரு சட்டம் இருப்பதாக, விமல் வீரவன்சவோ அல்லது அவரது அரசாங்கத்தில் இடம்பெறும், தமிழ் தெரிந்த

அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உட்பட எந்தவொரு அமைச்சரோ எனக்கு

சுட்டிக்காட்டுவார்களாயின், அரசியலில் இருந்து நான் ஒதுங்கி விடுகிறேன்.

உண்மையில் அரசியலமைப்பு முன்வைக்கும் சட்ட உள்ளார்த்தத்தை மீறியதன் மூலம், அமைச்சர் விமல்

வீரவன்ச, தன்னை நாட்டின் அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என அடையாளம் காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள் PHOTO

யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள் PHOTO

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழர் தேசத்தின் பண்பாட்டு அரசியலின் எழுச்சிவடிமாக ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

யாழ் முற்றவெளியில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வானது தமிழர் தாயக உறவுகள், மலையக உறவுகள் அனைவரதும் பொதுப் பொங்கலிடலாக 108 பானைகள் வைக்கப்பட்ட

தமிழர் திருநாளாக அமைந்திருந்தது. இதனை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டு

செய்திருக்க,வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இளைஞர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

2009ம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் தமிழர் தரப்பினால் பண்பாட்ட எழச்சி நிகழ்வாக

முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2009க்கு பின்னராக தற்போது பத்து ஆண்டுகளின் பின் தற்போது கூட்டுப்பொங்கலாக இது அமைந்துள்ளது.

யாழ்பாணத்துக்கு சுற்றுலாச்சென்றிருந்த பல வெளிநாட்டினரும் உற்சாகத்தோடு, தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

பண்பாட்டு தளத்தில் தமிழர்களாய் ஒருங்கிணைவது காலத்தின் கட்டயமாக அமைந்துள்ளதோடு, பண்பாட்டு எழுச்சியே தமிழர்களின் அரசியல் எழச்சிக்கும் சமூக

விழிப்புக்கு அவசியமாக உள்ளது என ‘தமிழர் திருநாள்’ ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதன் ஒரு செயல்முனைப்பாக பண்பாட்டு தளத்தில் தமிழர்களை ஒருங்கிணைக்கு வகையில் ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுக்கான பிரச்சாரங்கள்

முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, பல பொது அமைப்புக்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என அனைவரதும்

பங்களிப்போடு தமிழர் திருநாள் நிகழ்வினை இவ்வாண்டு முன்கை எடுத்துள்ளதாகவும், வருங்காலத்தில் தமிழர்

தாயகத்தின் மிகப்பெரும் பண்பாட்டு எழுச்சி நிகழ்வாக ‘தமிழர் திருநாள்’ அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயகப்பகுதியில், தமிழர்களின் வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமைகள்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், ‘தமிழர் திருநாள்’ எனும் பண்பாட்டு அரசியல் முன்னெடுப்பென்பது

கவனத்தில் கொள்ளத்தக்கது என சமூக, அரசியல் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்படி தகவலை நாடுகடந்த அரசு செய்தி பிரிவினர் எமக்கு அனுப்பி வைத்தனர் ,இவர்கள் ஒரு நிகழ்வு முடிவுற்று

ஒருவாரம் கழிந்த பின்னே ந்த காட்சிகளை அனுப்பி வைகின்றனர்

ஒழுங்கற்ற விதத்தில் இயங்கும் ஒரு குழப்பகரமான அமைப்பு இது என்பது இந்த நிகழ்வின் ஊடே மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது

யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்
யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்
யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

இலங்கை – மிருசுவில் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் தற்கொலை புரிய முயற்சித்துள்ளனர் .

இதில் 65 வயது மாமியார் சம்பவ நேரத்தில் பலியாகியுளளார் .

மேலும் மக்கள் மருமகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இலங்கையில் ஆடம்பரத்தில் சிக்கி தவிக்கும் எம்மவர்கள் கடனை பெற்று செலவு செய்து விட்டு அதனை மீள

செலுத்த முடியாது திணறி வருவதும் ,இவ்வாறான தற்கொலைக்கு முயற்சிப்பதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை கந்து வட்டி காரர்கள் அதிகம் தொல்லை தருவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போயுள்ளது ,இந்த

கந்து வட்டி காரர்களை ஆளும் அரசு கைது செய்யும் புதிய சட்டத்தை இலங்கையில் இதுவரை அமூல் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்

மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்

இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு வெடிகுண்டு தாக்குதலின் பொழுது உளவு பிரிவினருக்கு குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் கிடைக்க பெற்ற பொழுதும்


அதனை கவனத்தில் எடுத்து மக்கள் பாதுகாப்பை வழங்க மறுத்தமை தொடர்பில்


பொறுப்புக்கூறும் வகையில் நீதி மன்றுக்கு ரணில்,மற்றும் மைத்திரி செல்லும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

இந்தியா மூன்று முறை மேற்படி தகவலை வழங்கி இருந்தும் அதனை அவ்வேளை நாடாண்ட நல்லாட்சி என படும்

ரணில் ,மைத்திரி ஆட்சி தடுக்க தவறியதன் விளைவாக பல நூறு மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

இந்த விசாரணைகள் திட்டமிட்டபடி நடைமுறை படுத்த பட்டால் இருவரும் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

மைத்திரி ரணில் சிறை
மைத்திரி ரணில் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இடிந்து வீழ்ந்த பாடசாலை -8 மாணவர் காயம் – photo

இடிந்து வீழ்ந்த பாடசாலை -8 மாணவர் காயம் – photo

இலங்கை – அம்பலங்கொட பகுதியில் பாடசாலை கட்டிடத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை

கல்வி கற்று வந்த எட்டு மாணவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த பாடசாலை கூரை எவ்வாறு இடிந்து வீழ்ந்தது என்றது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி சம்பவம் மக்கள் ,மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இடிந்து வீழ்ந்த பாடசாலை
இடிந்து வீழ்ந்த பாடசாலை
Posted in இலங்கை செய்திகள்

நீதி பதிகளை சிறையில் அடைக்க வேண்டும் மகிந்தா

நீதி பதிகளை சிறையில் அடைக்க வேண்டும் மகிந்தா

இலங்கையில் சிறைகளில் உள்ளவர்கள் வழக்குகளை விசாரித்து விடுவிக்க வேண்டும் ,அது தவிர நியாயமற்ற முறையில் நீதிமன்ற அமர்வுகளுக்கு அழுத்தம்

வழங்கியவர்களுக்கு அடிபணிந்து ஆதரவு வழங்கிய நீதிபதிகள் சிறை படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்தா தெரிவித்துள்ளார்

முன்னைய ஆட்சிக் கால பகுதியில் மகிந்த குடும்பம் சிறை செல்லும் நிலையில் சிக்கி தவித்தனர் ,மேலும் பிள்ளையான்

,முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இவர்களை நினைவில் வைத்தே மகிந்தவின் இந்த பேச்சு அமைந்துள்ளது .மேலும் விரைவில் சிறை கைதிகள்

விடுதலை செய்யப்படுவார்கள் என மகிந்தா தெரிவித்துள்ளார்