Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சுட்டு கொலை செய்ய பட்ட 4 பொலிசாருக்கு அஞ்சலி
சுட்டு கொலை செய்ய பட்ட 4 பொலிசாருக்கு அஞ்சலி
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நான்கு பொலிசாரின் பூதவுடல்களுக்கு பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன (28) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர்களின் குடும்பங்களுக்கு பொலிஸ்மா அதிபரினால் பணத்தொகையும் ,நன்கொடையும்
வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய பதவி உயர்வு
அடிப்படையில் தற்போது உள்ள தரத்தில் இருந்து அடுத்த தரத்துக்கு பதவி உயர்வும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த பொலிசாரின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர், இலங்கை பொலிஸ் சார்பாக அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
திருக்கோவில பொலிஸ் நிலைய சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியான,,கே. எல். எம் அப்துல் காதர்,
பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஏ. நவிநாத் மற்றும் டி. பி. கே. பி. குணசேகர மற்றும் பொலிஸ்
கான்ஸ்டபிள் சாரதி டி. எம். டி. எச். புஷ்பகுமார ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்
நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும்.
உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே
வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்:
அபுஜா / நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
பிராங்பேர்ட் / ஜேர்மனியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்,
நிக்கோசியா / சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்
தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத
உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள
உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.
இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும். நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும் மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.
செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வெளிநாட்டு அமைச்சு அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உகந்த அளவில் பராமரிக்கவும், ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருளாதார இராஜதந்திரத்தில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றவும் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான அவர்களது நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலன் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது. இலக்குகளை அடைவதற்கான தூதரகங்கள் / பணிமனைகளின் பிந்தைய தேவைகளின் தொடர்ச்சியான மதிப்பீடனது, வெளிநாட்டு அமைச்சினால் வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரக / பணிமனைத் தலைவர்கள், நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சுக்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளக மற்றும் வெளியக ஆலோசனை செயன்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வெளிநாட்டு அமைச்சு,
இலங்கை வங்கிகளுக்கு வரி – கொஞ்சம் இதை பாருங்க
இலங்கை வங்கிகளுக்கு வரி – கொஞ்சம் இதை பாருங்க

கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை
கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை
கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு
குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.
இதேபோல் குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறிய நிலையில்
ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன்
கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிாிழந்துள்ளாா்.
சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நத்தார் தினத்தில் வாலிபர் வெட்டி கொலை
நத்தார் தினத்தில் வாலிபர் வெட்டி கொலை
இலங்கை மட்டக்குளி, பொக்குனுவத்த பகுதியில் இடம்பெற்ற நத்தார் பண்டிகையில் கலந்து கொண்ட
வாலிபர் ஒருவர் வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளார்
சடலம் மீட்க பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனா அரசிடம் இருந்து இலங்கை 1,5 பில்லியன் அமெரிக்கா டொலரை கடனாக பெறுகிறது
நாடு பலத்த கடன் சுமையில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் மீளவும் கடனை பெற்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு
புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.
குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
கொரனோவால் 19 பேர் மரணம்
கொரனோவால் 19 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 19 பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,உயிர் இழப்பை மேலும் அதிகரிக்கலாம் என
அஞ்ச படுகிறது .
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான
மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி,இதற்கான விதி முறை
அமுலாக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குள், அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர
வண்டிகளுக்கு கட்டணங்களை அறவிடுவதற்கான மீட்டரை பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
இலங்கை யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள்
மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்
இதில் 27 வயது வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் ,வண்டியை நிறுத்த முற்பட்ட பொழுதும்
நிறுத்தாமல் சென்ற நிலையில் இந்த சூடு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது
பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது
இலங்கை பொலனறுவை பகுதியில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள காவல்துறை
அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்
மருத்துவ தாதியின் இடுப்பை பிடித்த நபர் கைது
மருத்துவ தாதியின் இடுப்பை பிடித்த நபர் கைது
இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் கொரானா ஊசி செலுத்த சென்ற
நபர் ஒருவர் அந்த ஊசியினை செலுத்திய தாதியின் இடுப்பை கிள்ளியுள்ளார்
மேற்படி சம்பவம் அங்கு பர பரப்பை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபர் கைது செய்ய
பட்டுளளார் ,ஊசிக்கு பயத்தில் இடுப்பை பிடித்தாரா அல்லது ,அந்த நினைப்பில் பிடித்தாரா என்பது உடனடியாக தெரியவரவில்லை
புத்தி கெட்ட மனிதரெல்லாம்-அருமை சிறிதரன் எம்பி உருக்கம்
புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் மிக அருமையான திரைக்கதை மூலம் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்திய எம் ஈழத்து இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
‘புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் அற்புதமான முழு நீள திரைப்படத்தினை இயக்கிய poovan media குழும கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
கதைக்களத்தை சிறப்பான முறையில் உருவாக்கிய இயக்குனர் சிவராஜ் அவர்களுக்கு அவர்தம் குழாத்தினருக்கு மிக இளம் வயதில் சாதிக்க முடியும் என்பதை சாதித்து காட்டிய சாதனையாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
ஈழத்து திரைப்படங்கள் மேலும் வளர்ச்சி நிலையை அடையவேண்டும் இப்படியாக ஈழத்து கலைஞர்களின் படைப்புகள் மேலும் வரவேண்டும் இவர்களின் முயற்சி வெற்றியடைய என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப்புலிகளின் காலம் பொற்காலம் போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து
கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.
எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும், கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள்.
கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.
ஈழத்து திரைப்படங்கள் விடுதலைப் புலிகளின் காலத்தில் உச்ச நிலை பெற்றிருந்தது எம்மவர்களின் கலை வெளிப்பாட்டின்பால் அந்நிலைக்கு ஈழத்து முழுநீள திரைப்படங்கள் வளர்ச்சி பெற வேண்டும் வாழ்த்துக்கள்
பெண் போலீசை கற்பழித்த போலீஸ் அதிகாரி கைது
பெண் போலீசை கற்பழித்த போலீஸ் அதிகாரி கைது
இலங்கை Gandara காவல்த்துறை நிலையத்தில் பணியாற்றி வரும் OIC தர அதிகாரி கான்ஸடபிள் தர
பெண் போலீஸ் அதிகாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிலையில் தற்போது அவர் கைது
செய்ய பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குற்றம் நிரூபிக்க பட்டால்
பல்லாண்டு சிறை வசம் அனுபவிக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது
யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்
யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்13 Engine ஜக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
New Train Jaffna, 23 ஆம் திகதி மருதானையில் இருந்து ரம்புக்கணை நோக்கி 550 பயணிகளுடன் இந்த ரயில் சென்றது.
550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.
இந்த ரயிலின் சில பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு
13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு
போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்
நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்
போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்
ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து
அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்
தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச்
செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட
வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் மகிந்த வழிபாடு
திருப்பதியில் மகிந்த வழிபாடு
இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி
தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த
பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்
தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்
இலங்கை கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வளர்க்க பட்ட மூவாயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகின
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






