Tag: கம்பிகள்
Posted in இலங்கை செய்திகள்
மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/10/2024
மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்
மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில், வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் கம்பிகள் அகற்றப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கார்ல்டன் தோட்டத்தில் 03 மும்முனை மின்கம்பிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகற்றப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை









