Posted in Uncategorized

உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

இலங்கை கொக்கல , ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 322 ஊழியர்கள்

உட்கொண்ட உணவு விஷமானதால் அவர்கள் அனைவரும் வாந்தி ,தலைச்சுற்று

,வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்

    அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா ன்மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர்

    உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

    இவ்வேளை பாரளுமன்றில் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இதை கருத்தை உரைத்துள்ளார்


    எனினும் இதுவரை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்கள் பதிவை

    விலகவில்லை என்பது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது

      சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது

      13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும்

      மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

      அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை

      முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

      இதற்கமைய பொலிஸார் தலைமறைவாக இருந்த 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு, தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை

      (18) அன்று கப்பம் கோரிய சந்தேக நபரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரை கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்தனர்.

      அதன் பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 31

      வயதுடையவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

      இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்

      துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்திருந்தனர்.

      இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை

      மேற்கொண்ட பின்னர் நேற்று (19) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

      இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான சாய்ந்தமருது

      பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை


      உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை ! தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !!

        ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை ! தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !!

        இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவுவதற்கு,

        அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றலுடன் ஓர் பொறிமுறையொன்றினை உருவாக்குமாறு தமிழக அரசினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.

        இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று கடிதமொன்றினை அனுப்பியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
        சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப்

        போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி உதவிப்பொறிமுறை

        உருவாகும் நிலை தோன்றின் புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகத் தமிழ் மக்கள் இணைந்து ஈழத்தமிழ் மக்களை இன்றைய நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

        இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான சிங்கள அரசாங்கங்களின் இனவழிப்புப்போரும், பெரும் இராணுவச் செலவீனங்களும், தவறான கொள்கைளும், ஊழல் நிறைந்த நிர்வாகமும், கொரோனா உலகப்பெருந்தொற்று உருவாக்கிய தாக்கங்களும்

        இணைந்தே இப்பெரும் பொருளாதார நெருக்கடியினை உருவாக்கியுள்ளதெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழர் தேசம் சிங்கள பேரினவாத அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பொருhளார நெருக்கடிக்,

        இனவழிப்புப்போரால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு இன்றைய நெருக்கடி இரட்டைச்சுமையாய் அமைந்துள்ளளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

        ஈழத்தமிழ் மக்களுக்கான ஒரு நேரடி உதவிப்பொறிமுறையினை உருவாக்கும் முயற்சிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை தாங்குமாறு கோரியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், இப்பொறிமுறையினை உருவாக்கும்

        முயிற்சியினைக் காலதாமதம் இன்றி ஆரம்பிப்பது ஈழத்தமிழ்மக்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தரும் எனத் nதிவித்திருந்ததோடு, தமிழ்நாடு அரசின் சார்பில்

        ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை

        அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

        நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும்

        முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

          Posted in Uncategorized

          எண்ணெய் பவுசரை தீவைக்க முயன்ற மக்கள்

          எண்ணெய் பவுசரை தீவைக்க முயன்ற மக்கள்

          இலங்கை ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த

          முயன்றனர். என்ற குற்றசாட்டை பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்தார்

          அனால் இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பி

          பாராளுமன்றில் வாக்குவதத்த்தில் ஈடுபட்டனர்

          எரிபொருள் இன்றி நாடு முடங்கியல்ல நிலையில் பொறுப்பற்ற இவரது இந்த பதில்

          மக்களை கொதிப்புற செய்துள்ளது

            Posted in Uncategorized

            வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்

            வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்

            அமெரிக்கா புளோரிடா பகுதியில் வீடு ஒன்றுக்குள் பெரிய முதலை ஒன்று நுழைந்துள்ளது

            இந்த முதலை நுழைவை அடுத்து அங்கு நின்ற மக்கள் பதறி ஓடினர் ,பின்னர் அந்த

            முதலை விரட்ட பட்டு அருகில் உள்ள நீர் நிலைக்குள் விரட்டியடிக்க பட்டது

            முதலையின் தாக்குதல் இலக்கில் இருந்து குறித்த வீட்டார் தப்பித்தது கடவுள் செயல்


            என சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்

              Posted in Uncategorized

              வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

              வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

              அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு


              $3635 டொலர் தண்டமாக வழங்க பட்டுள்ளது

              குறித்த பற்றுசீட்டை அந்த பெண்மணி டிக் டொக்கில் பதிவிட்ட நிலையில் அது செம வைரலாகி வருகிறது

              இப்படியும் தண்டம் அற விடுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ,மக்களே எச்சரிக்கை

                Posted in உலக செய்திகள்

                லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்

                லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்

                பிரிட்டன் Wrotham பகுதியில் அதிகாலை 4.15 மணியலாவில் ரவுண்டபோர்ட அருகில்


                கறுப்பு நிற விளையாடடு மொடல் கார் ஒன்றினை சாரதி மறைத்து வைத்துள்ளார்

                மேற்படி சம்பவத்தை முகர்ந்து பிடித்த போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்

                அவ்வேளை அதிக போதையில் காணப்பட்ட சாரதி கைது செய்ய பட்டு நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார்

                இப்படியும் சாரதிகள்

                  Posted in இலங்கை செய்திகள்

                  மக்களுக்கு எதிராக இராணுவம் செயல்படவில்லை – இராணுவ தளபதி

                  மக்களுக்கு எதிராக இராணுவம் செயல்படவில்லை – இராணுவ தளபதி

                  இலங்கையில் அரசுக்கு எதிராக நடத்த பட்டு வரும் போராட்டங்களில் இராணுவம்

                  மக்களுக்கு எதிராக செயல் படவில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

                  நாம் மேலும் மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாக சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தெரிவித்துள்ளார் ,


                  ஊந்துருளியில் வருகை தந்த இராணுவத்தினர் மக்களை மிரட்டி சென்றமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்

                    தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்

                    இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது நாடு

                    பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் வெடித்துள்ளது

                    தற்போது மேலும் எரிபொருள் விலை அதிகரிக்க பட்ட நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க பட்டுள்ளன

                    இந்த சேவைகள் முடக்கத்தினால் மக்கள் போக்குவரத்து பாதிக்க பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டுள்ளது ,


                    இதனை அடுத்து போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்

                      தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்

                      இலங்கையில் ,இன்றும் ,நாளையும் மின்வெட்டு மேலும் மூன்று மணித்தியாலங்கள்

                      மேலாக முடக்க படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

                      இதனால் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளதுடன், உள்ளூர் உற்பத்தி சேவைகள்

                      பாதிக்க பட்டுள்ளது ,இதனால் பொருளாதாரம் மேலும் கீழ் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் மக்கள் கொதிப்பில்
                      உறைந்துள்ளனர்

                        Posted in Uncategorized

                        சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு

                        சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு

                        இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையினை சீர் செய்திடும்

                        நோக்குடன் சர்வதேச நாணய நிதியத்துடன்


                        இலங்கை நிதி அமைச்சர் குழு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது

                        இதன் பொழுது உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக


                        பேச பட்டதுடன் இலங்கைக்கு மேலும் உதவிடும் செயல் திட்டங்கள் முன் வைக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

                          கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

                          இலங்கையில் ஆளும் கோட்டா அரசு சீனி இறக்குமதியை ஏற்படுத்தி பல மில்லியன் டொலர் பணத்தினை
                          சம்பாதித்து வந்துள்ளது

                          இதனை அடுத்து தற்போது இவ்விதம் மோசடி புரிந்த நபர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு


                          எதிராக வழக்கு தாக்குதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்ற நிலையில்


                          கோட்டா அரசின் சீனி வியாபாரம் அம்பலத்திற்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

                            எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

                            இலங்கையில ஆளும் கோட்டா அரசினால் மீளவும் தற்போது
                            எரிபொருள்விலை அதிகரிக்க பட்டுள்ளது

                            இந்த எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கொதிப்படைந்து போராடி வருகின்றனர்

                            இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது கோட்டா அரசு பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை

                              மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை

                              இலங்கையின் ஆளும் அரசின் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு


                              வெளிநாடுகள் புறப்படுவதற்கு விதிக்க பட்ட தடை மேலும் நீடிக்க பட்டுள்ளது

                              இவரது ஆளுமை காலத்தில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி

                              ஏற்பட்டுள்ளதாக கூறி மக்கள் போராட்டங்கள்


                              வெடித்துள்ள நிலையில் இந்த கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், மன்னிப்பு கேட்க வேண்டும்-மனோ எம்பி

                                20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

                                • தமுகூ தலைவர் மனோ எம்பி
                                  20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இந்நிலையில் 20ம்
                                • திருத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அதீத அதிகாரங்களை கொடுத்து, அதை நியாயப்படுத்தியும் பேசிய எம்பீகள், அதே கைகளை உயர்த்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் கோதாபய ராஜபக்சவின் சர்வதிகாரம் வீழும் என இவர்கள் கற்பனையிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                                இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை

                                பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இதை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

                                முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றும் யோசனையும் தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு கூறினார். எனினும் முழுமையாக

                                நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அகற்றப்பட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திட வேண்டிவரும் என்பதால், அதற்கு நாடு இன்றைய சூழலில் தயார் இல்லை என்பதால்,

                                முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்சமயம் அகற்ற பெரும்பாலான கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை.

                                நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றப்பட்டால்,
                                விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்த மாகாணசபைகள் ஆகியவற்றையும்


                                அகற்ற வேண்டி வரும் என சில ஆளும்கட்சி பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

                                இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்புடைய நிலைப்பாடுகள் இல்லை.
                                தமது நிலைப்பாடும் இதுவே என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரிசாத் பதுர்தீன்,


                                தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் என்னிடம் தெரிவித்தார்கள்.

                                  Posted in சினிமா

                                  பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்

                                  பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்

                                  நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை அஜித் குடும்பத்தினர் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.

                                  பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
                                  அஜித் குடும்பம்


                                  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ்,

                                  யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே

                                  இப்படத்தில் நடித்திருந்தது. ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

                                  இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக அஜித் குடும்பத்தினர் வருகைதந்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள் மற்றும் மகனுடன் சென்னை

                                  சத்யம் திரையரங்கில் கண்டுரசித்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


                                  பீஸ்ட் திரைப்படத்தை காண அஜித் குடும்பத்தினர் வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

                                    Posted in சினிமா

                                    சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா

                                    சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா

                                    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நயன்தாரா

                                    இருவரும் கட்டியணைந்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

                                    சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ
                                    சமந்தா – நயன்தாரா


                                    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம்

                                    “காத்துவாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

                                    அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

                                    இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள்

                                    இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு

                                    நிறைவடைந்ததை கேக் வெட்டி படக்குழு கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகின.

                                    இந்நிலையில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோவை சமந்தா

                                    வெளியிட்டுள்ளார்.
                                    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு

                                      முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு

                                      இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முகக்கவசம்

                                      தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானது

                                      இந்த நிலையில் தற்பொழுது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர்ந்த


                                      இடங்களில் இவை அவசியம் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                                        Posted in Uncategorized

                                        தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

                                        தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

                                        ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு

                                        வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.

                                        ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

                                        இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற

                                        உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.

                                        அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

                                        இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
                                        கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.