Posted in Uncategorized

தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு

வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.

ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற

உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.

அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    டீச்சருக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

    இலங்கை ,கண்டி காட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கை நெறி போதித்து வந்த டீச்சர் ஒருவருக்கு கொரனோ

    நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

    மறு அறிவித்தல் வரும் வரை திறக்க பட மாட்ட்து என தெரிவிக்க பட்டுள்ளது ,சுகாதார முறைமைக்கு உட்படுத்த பட்டு கிருமி

    நாசினிகள் கொண்டு பாடசாலை முழுவதுதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது

    ,மேலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது

    இதுவரை இலங்கையில் நானூருக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது