Author: நலன் விரும்பி
இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொண்டேனர்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பிலான வரி அறுபத்தி ஐந்து வீதம் இன்று
நடைமுறைக்கும் வரும் நிலையில் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த சேவை வரி காரணமாக பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ,
மீளவும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட
நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி
சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி
புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட
காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு
பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி
கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்
இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்
,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை
முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கு
கடனடிப்படையில் உதவிட 40 மெட்ரிக் தொன்
எரிபொருளுடன் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது
இந்திய சமீப நாட்களாக தொடராக இலங்கைக்கு எரிபொருளை அனுப்பிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்காவின் மிதக்கும் விமான தங்கி கப்பல்களில் பணியாற்றிய இராணுவ
சிப்பாய்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை புரிந்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் தற்கொலை செய்தார்களா அல்லது அதற்கு ஊந்த பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
குடும்பத்தினரோ இவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெருவித்துள்ளனர்
23 வயது நிரம்பிய இளம் வீரர்களே இவ்விதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ஐ எஸ் தாக்குதல் – ஒருவர் மரணம் நால்வர் காயம்
ஐ எஸ் தாக்குதல் – ஒருவர் மரணம் நால்வர் காயம்
ஈராக் வடகிழக்கு Diyala.பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்
தாக்குதல் சம்பவத்தை அடுத்து இராணுவம் குவிக்க பட்டு தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன
டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை
டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை- போலீசார் விசாரணை
டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஜிது சவுத்ரி மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் அங்கிருந்து தப்பினர்.
இந்த கொலை குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச் தோட்டாக்கள் உள்பட
இந்த கொலை தொடர்பான சில ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெறுவதாக டெல்லி கிழக்கு பகுதி காவல்துறை அதிகாரி பிரியங்கா காஷ்யப் தெரிவித்தார்.
மருத்துவமனையில் ஜிது சவுத்ரி உடலை பார்வையிட்ட டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அவர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
மோகன்
மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி, 1980-களில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி,
கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மவுன ராகம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இவரை மைக் மோகன் என்று அழைத்தனர். 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு
விலகினார். மோகனை புதிய படங்களில் நடிக்க வைக்க அழைப்புகள் வந்தும் மறுத்து வந்தார். தற்போது, இயக்குனர் விஜய் ஸ்ரீ சொன்ன ஹரா படத்தின் கதை பிடித்ததால்
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து மோகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்தார். ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த
படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க மோகன் முடிவு செய்து இருக்கிறார்.
ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்
ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்
ரூ.5 கோடி மோசடியில் தனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, சிங்காரவேலன் தன்னை பல வகையில் மிரட்டி வந்ததாக நடிகர் விமல் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்
நடிகர் விமல்
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும், சினிமா
தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக நடிகர் விமல் கூடுதல் கமிஷனர் கண்ணனிடம் அளித்துள்ள புகார் மனுவில், கோபி தற்போது தன்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடியில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், எனது புகழை கெடுக்கும் நோக்கத்திலும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மன்னர் வகையறா படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் பூபதி பாண்டியன் என்பவரை அறிமுகம் செய்தார். சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை.
கோபி பணம் கேட்கும்போதெல்லாம், சிங்காரவேலன் என்னை கை காண்பித்து விடுவார். எனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னை பல வகையில்
சிங்காரவேலன் மிரட்டி வந்தார். நான் எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடும், என்று பயந்து சமாளித்து வந்தேன். எனது பயத்தை அவர் எனது பலவீனமாக எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி வந்தார்.
இதனால்தான் சிங்காரவேலன், கோபி உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் முன்ஜாமீன் பெற்று விட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட
தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார்.
அதன் பிறகு துணிச்சலாக நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு ஓரளவு தொல்லை குறைந்தது. இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
என்மீது கொடுத்துள்ள புகார் பற்றி பத்திரிக்கைகளில் படித்துதான் நான் தெரிந்து கொண்டேன். என்மீது கொடுத்துள்ள புகார் பொய்யானது. எனக்கு மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு கேட்டும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு விமல் கூறினார்.
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
போராளிகள் மீதான வன்முறை பற்றி தெரிவிப்பு: மலையக அபிலாசை ஆவணம் கையளிப்பு
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும்
இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இருப்பை பதிவு செய்துக்கொண்டு நமது மக்களை பற்றிய அமெரிக்காவின் அக்கறையை இலங்கை தொடர்பான உங்கள்
கொள்கை நிலைப்பாடுகளின் போது வெளிப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று அமெரிக்க தூதுவரை சந்தித்து உரையாடியது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்
இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமெரிக்க தரப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அரசியல் துறை அதிகாரி ரூபி வுட்சைட் ஆகியோர்
கலந்துக்கொண்டனர். மனோ எம்பியின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் உதவியாளராக கலந்துக்கொண்டார்.
இது தொடர்பில் மனோ எம்பி தனது டுவீட்டர் தளத்தில்,
“ஐஎம்எப் இலங்கைக்கு உதவ நினைக்கிறது. நன்றி. ஆனால், அதை ஜனநாயக நிபந்தனையுடன் செய்க. போராளிகள் மீது வன்முறை கூடாது.
காலிமுகம் உட்பட நமது போராளிகள் உலகில் மிக கட்டுப்பாடான போராளிகள். அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம், ரம்புக்கன நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்
கூறினேன். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார அபிலாசைகளுக்கு இலங்கை பரப்புக்கு உள்ளே தீர்வுகள் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, மலையக தமிழரின் அரசியல் அபிலாஷை ஆவணத்தை அமெரிக்க தூதுவரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கையளித்தார். இலங்கையில் தென்னிலங்கையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா,
தென் மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலைமைகள் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டு தெரிந்துக்கொண்டார்.
தான் கொரிய வம்சாவளி அமெரிக்கர் என்பதில் பெருமை அடைவதாகவும், இந்நிலையில் தமது நாட்டின் பன்மைத்தன்மை தமக்கு பலம் சேர்த்துள்ளதாகவும்
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இதுவே இலங்கையும் எதிர்பார்க்கும் எதிர்காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அமெரிக்க தூதுவரிடம் கூறினர்.
மத்திய மலைநாட்டுக்கு விஜயம் செய்து நேரடியாக விடயங்களை அறியுங்கள் என கூட்டணியின் பிரதிதலைவர் இராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பையும் அமெரிக்க தூதுவர் ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவீட்டர் தளத்தில்,
“மலையக தமிழர் உட்பட அநேகமான (இலங்கை) சமூகங்கள்,
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நிலையான பொருளாதார
மீட்சிக்கு இலங்கை மக்களின் தலைவர்கள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (இவைபற்றி) @ManoGanesan
மனோ கணேசன் அவர்களுடன் உரையாடினேன்.” என்று கூறியுள்ளார்.
லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்
லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்
லண்டன் Dartford பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது
இதன் பொழுது அந்த வீட்டில் மறைத்து வைக்க பட்டிருந்த இரண்டு விமான எதிர்ப்பு
துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முப்பத்தி ஆறு வயது நபர் கைது செய்ய பட்டு
தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்
உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்
உக்கிரேன் மாறியபோல் பகுதியில் மேலும் போர் வெடித்துள்ள நிலையில் அந்த
பகுதியை காவல் காக்கும் உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் என ரசியா
மிரட்டல் விடுத்தது வருகிறது
இதனை ஏற்க அந்த நாட்டு இராணுவம் மறுத்து போரிட்டு வருகிறது
சரண் அடைய மறுத்தால் பெரும் தாக்குதல்கள் நடத்த படும் என்பது ரசியாவின் வாதமாக உள்ளது
இங்கே ரசியா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்
ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்
ரசியாவின் பத்து போர் கப்பல்கள் பால்டிக் கடல் பகுதியில் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது
இந்த போர் பயிற்சியின் ஊடாக நாடுகளை மிரள வைக்கும் நடவடிக்கையில் ரசியா
ஈடுபடும் என எதிர்பார்க்க படுகிறது
எனினும் இந்த கூற்று உக்கிரேனில் ரசியா படைகள் பலத்த இழப்பை சந்தித்து வரும் நிலையில்
இராணுவ மிரட்டல்கள் பலிக்குமா எனபதே கேள்வியாக உள்ளது
துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்
துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்
ஈராக்கின் வடக்கு அங்காரா பகுதியை திடீரென துருக்கிய இராணுவம் முற்றுகை இட்டுள்ளது ,இந்த
முற்றுகையை நிறுத்தி இராணுவம் விலக வேண்டும் என ஈராக் தெரிவித்துள்ளது
குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவ படை எடுப்பு
இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா
திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா
நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
நாகசைத்தன்யா
சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
விவாகரத்தான பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர்
நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகசைதன்யாவின் பெற்றோரான நாகார்ஜுன் மற்றும் அமலா இருவரும் நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும்
இதற்கு நாகசைதன்யா ஒகே சொல்லிவிட்டதாகவும், ஆனால், நடிகை வேண்டாம் என்று பெற்றோருக்கு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும், அவர் நடிகை இல்லை என்றும்
தெரியவந்துள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து
அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது
காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது… குவியும் வாழ்த்துகள்
கணவருடன் காஜல் அகர்வால்
இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற
டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும்
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
காஜல் அகர்வால்
தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை
பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் –
கவுதம் கிச்சிலு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்
இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட
காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்
இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன








