இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு ,இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2024 அறிக்கையை வெளியிடும்

போது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பொறுப்புக்கூற

வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளையே மேற்கொண்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, விளக்கமறியலில் இருக்கும்போது கொலைகள், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான

கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்குப்

பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்தல், பெண்கள் கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், பொலிஸ் காவலில் வைத்து 7 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், போரில்

பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர் ,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வல்கர் டர்க் இம்மாதம் இலங்கை பெற உள்ளதாக இலங்கையின் பிரதான செய்திகள் தெரிவிக்கின்றது .

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம்

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக மனித உரிமை பேரவையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன உள்ளூர் வழிமுறைகள் அரசுகள் தீர்மானத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.

ஆனால் அதனை இலங்கை அரசு இதுவரை செய்யவில்லை அதனை எடுத்து எதிர்வரும் ஜூன் 23 26 தினங்களில் இலங்கையில் இவர் தங்கையை பரணமும் பல்வேறுபட்டவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கூட்டத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இவர் இங்கு வந்து இடங்களுடன் பேரன்பேசிகளில் ஈடுபடுவர் என நம்பப்படுகிறது.

16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள்

16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் பாரிய பொழுதும் இதுவரை இது விதமான தீர்ப்பும் அங்கு ஏற்படவில்லை.

இவர்களும் ஏமாற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆர்வலர்களாகவே காணப்படுவதாக தவறு.

இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தம் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் முடிந்த பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழருக்கு

ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவை ஏன் தீர்வுகளை பெற்று தரவில்லை என்ற கேள்வி இவர்கள் எழுப்பி நிக்கிறார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்

அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி

பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.