Posted in சினிமா

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது… குவியும் வாழ்த்துகள்
கணவருடன் காஜல் அகர்வால்


இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற

டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும்

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

காஜல் அகர்வால்

தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை

பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் –
கவுதம் கிச்சிலு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    Posted in சினிமா

    காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்

    காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்

    பிரபல நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு 30ஆம் தேதி கௌதம் கிச்சல் என்பரை திருமணம் செய்துக் கொண்டார்.

    காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்… வைரலாகும் புகைப்படங்கள்
    காஜல் அகர்வால்


    நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக்

    கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு விட்டார்.

    காஜல் அகர்வால்

    இந்தியன் 2 படம் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டார் காஜல் அகர்வால். ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன்

    பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்தியன் 2 படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் ஆனார்.

    காஜல் அகர்வால்
    கணவருடன் காஜல் அகர்வால்

    காஜல் அகர்வால் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம்

    நடந்தேறியிருக்கிறது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது

      காஜல் அகர்வால்
      Posted in சினிமா

      காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா

      காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா

      மோகன்லால், மம்முட்டி, அமலா பால், துல்கர், திரிஷாவை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

      காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா
      காஜல் அகர்வால்


      அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும்

      வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5

      அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

      ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,

      பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா

      வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

      இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in சினிமா

        காஜல் இடத்தை பிடித்த ஹன்சிகா.

        காஜல் இடத்தை பிடித்த ஹன்சிகா.

        நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.

        காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா
        காஜல் அகர்வால், ஹன்சிகா


        தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில்

        பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.

        ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

        தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா

        வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

          Posted in சினிமா

          அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல்

          அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல்

          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன.

          அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல் அகர்வால்
          காஜல் அகர்வால்


          இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் குயீன். இப்படத்தை தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் நடிகை காஜல்

          அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த

          2018-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீசாகவில்லை.

          இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலிடம், இப்படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த காஜல், “பாரிஸ் பாரிஸ்

          திரைப்படம் எப்போது வரும் என்று எனக்கும் கூடத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

            Posted in சினிமா

            வில்லியாக நடிக்க ரெடி – காஜல் அகர்வால்

            வில்லியாக நடிக்க ரெடி – காஜல் அகர்வால்

            காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

            தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்

            அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை தருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

            எனது அம்மாவின் கஷ்டம் என்ன என்பது திருமணம் செய்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. எனது காதல் திருமணத்தில் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது.

            எனது கணவரை பத்து வருடத்துக்கு முன்பே தெரியும். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினோம். கொரோனா ஊரடங்கில்தான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்தது.

            இதை ஊரடங்கு திருமணம் என்று சொல்லலாம். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

            காஜல் அகர்வால்

            கதை தேர்விலும் வித்தியாசம் பார்க்கவில்லை. எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை.

            ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்”. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

              Posted in சினிமா

              பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்.

              பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்.

              வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

              பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்
              காஜல் அகர்வால்
              கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

              வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு

              வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது. அப்படி செய்தால் அது நமது பலகீனமாக மாறி விடும்.

              நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் எனக்கு சவாலாக இருக்கிற மாதிரியான நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதுபோன்ற

              கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் நானும் விரும்பினேன். படப்பிடிப்பில் தொழில் ரீதியாக பிரச்சினைகள் நிறையவே

              இருந்தன. இப்போது அவற்றை நினைத்து பார்த்தாலும் இனிமையான நினைவுகள்தான்.

              காஜல் அகர்வால்

              விவேகம் படப்பிடிப்பில் மைனஸ் 12 டிகிரி குளிரில் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் புடவை கட்டி நடித்தேன். திரையில்

              ரசிகர்கள் பார்த்து பாராட்டியதை பார்த்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஆனந்தமாக மாறி விட்டது. இதுமாதிரி சொல்ல நிறைய

              விஷயங்கள் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியாது என்று நினைத்தால் அதுதான் நமது பலவீனம். சாதிக்க முடியும் என்று

              நினைத்தால் அதுதான் நமது பலம். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்