Author: நலன் விரும்பி
மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம்இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்
மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம்இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்
இம்முறை வெளியாகியுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை கோணேஸ்வரா
இந்துக்கல்லூரி மாணவன் மதனராசா சிந்துஜன் திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
வர்த்தகத்துறையில் கல்வி பயின்ற மாணவன் மதனராசா சிந்துஜன் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில்
எட்டாம் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.
மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம்இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்
கல்வியை கற்க முன்னர் அதை சரியான முறையில் தேர்வுசெய்து, திட்டமிட்டு கற்கவேண்டும். கற்றல் செயற்பாடுகளை கஷ்டப்பட்டு முன்னெடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லை.
எனது சிறிய வயதில் தந்தையை இழந்து, தாயின் அயராத உழைப்புக்கு மத்தியில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு இந்த நிலைமையை அடைந்துள்ளேன் என்று அம்மாணவன் தெரிவித்தார்.
வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை மதனராசா சிந்துஜன்
போன்ற பல மாணவர்கள் இம்முறை வெளியான பெறுபேறுகள் மூலம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பைஷல் இஸ்மாயில் –
தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் video
தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் video
தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் ஒருவர் செய்த செயல் ,சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .
தமிழ் பெண் ஒருவரின் ஆதரவுடன் ,தமிழ் மொழியை கற்று கொள்ள ,இந்த வெளி நாட்டு பெண் செய்திடும் கடுமையான பயிற்சியே ,இந்த வெளி நாட்டு பெண்ணின் மனோ தையிரியத்தை எடுத்து காட்டியுள்ளது .
நம்ம தமிழர்கள் ,அவர் தம் தாய்மொழியாம், தமிழை மறந்து செயல்படுகின்ற ,இந்த காலத்தில், வெளிநாட்டு வெள்ளைக்கார பெண் ஒருவர் ,தமிழ்மொழியை கற்று கொள்வதில் ,காட்டி வரும் ஆர்வம் ,மக்களை வியப்பில் உறைய வைத்துள்ளது.
தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் video
இவ்வாறு தமிழை கற்று, பலவெ ளிநாட்டு பெண்கள், அசத்திய வண்ணம் உள்ளமையும் ,சமுக வலைத்தளங்களில்,
வைரலாகிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் இப்பொழுது ஏன் வைரலாகியது என்பதை காணொளியையோ பார்த்த பின் வியந்து போவீர்கள் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்
வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்
வீதியில் வீசப்பட்ட சிசு ஒன்று கண்டு பிடிக்க பட்டது .அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சிசுவுக்கு இலங்கை பெண் பொலிஸ் ஒருவர் ,தாய் பால் ஊட்டி அந்த சிசுவை காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை பண்டாரவளை சிறுவர் அநாதை இல்லத்தின் அருகில் ,பிறந்து 51 நாளான சிசு ஒன்று, கைவிட பட்டு செல்ல பட்டது .
அவ்வாறான அந்த சிசுவை ,கண்டு பிடித்த மக்கள் ,காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் .வீதியில் வீசப்பட்ட சிசு மீட்க பட்டு ,சிறுவர் மடத்தில் சேர்க்க பட்டது .
வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்
இவ்வேளை வீதியில் கிடந்து மீட்க பட்ட சிசுவுக்கு, சிங்கள பெண் பொலிஸ் பெண்மணி ஒருவர் ,தாய்ப்பால் ஊட்டி ,அந்த சிசுவை காப்பாற்றியுள்ள செயல், உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இப்படியும் தாய்மை நிலை கொண்ட சிங்கள பெண் பொலிஸ், இலங்கையில் இருப்பது மகிழ்ச்சி தான் .
வீதியில் வீச பட்ட சிசுவுக்கு ,தாய் பல ஊட்டி காப்பாற்றிய, சிங்கள பெண் பொலிஸ் ,சமூக வலைத்தளங்களில் ,மக்களினால் பாராட்ட பட்டு வருகிறார்
குறித்த சிசுவை ,வீதியில் வீசி செல்லும் காட்சிகள் ,கமராவில் பதிவாகிய நிலையில் ,குறித்த நபரை கைது செய்த்திடும் நகர்வில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கைக்கு உலக வங்கி பெரும் கடன் வழங்க இணக்கம் – தப்புமா இலங்கை
இலங்கைக்கு உலக வங்கி பெரும் கடன் வழங்க இணக்கம் – தப்புமா இலங்கை
இலங்கைக்கு உலக வங்கி , பெரும் கடன் தொகை ஒன்றை வழங்க இணக்கமாகியுள்ளது .இந்த பெரும் கடன் உதவி ஊடாக ,இலங்கை தப்புமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
இலங்கைக்கு உலக வங்கி 2.9 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க உள்ளது .
உலக வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ள இந்த கடன் தொகை, ஊடக வீழ்ந்துபோன இலங்கையின் பொருளாதாரம், மீளவும் எழுச்சி பெறுமா என்கின்ற கேள்வியே முன் வைக்க படுகிறது .
இலங்கைக்கு உலக வங்கி பெரும் கடன் வழங்க இணக்கம் – தப்புமா இலங்கை
இலங்கை அரசுக்கும் ,சர்வதேச உலக வங்கிக்கும் இடையில் ,இடம்பெற்ற பல தரப்பு சுற்று பேச்சின் பின்னர் ,சர்வதேச உலக வங்கியால் இவ்விதமான பெரும் கடன் தொகை இலங்கைக்கு வழங்க இணக்கமாகியுள்ளது .
கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் இலங்கை நாட்டை ஓட்டி செல்லும் நிலையில் இன்றைய இலங்கை சிக்கி தவித்து வருகிறது .
சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்
சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்
சஜித் பிரேமதாச கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,கேகாலை பகுதியில் மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .
சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்த இந்த பெண் அலுவலகத்தில் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார் .
இலங்கையில் செல்வந்தர்கள் ,மக்கள், மற்றும் அரசியல்வாதிகளை, இலக்கு வைத்து ,இவ்வாறான மிரட்டும் துப்பாக்கி சூட்டு கொலைகள் அதிகரிக்க பட்டுள்ளன .
இலங்கையில் அமெரிக்காவை போல நடத்த படும் ,இவ்விதமான துப்பாக்கி படு கொலைகள் யாவற்றையும் தடுத்து நிறுத்திட ,காவல்துறையால் இயலவில்லை .
இந்த துப்பாக்கி சூட்டு கொலைகள் ,மற்றும் கத்தி குத்து கொலைகள் யாவும் ,அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,என்கின்ற குற்ற சட்டு மக்கள் மத்தியில் காண படுகிறது .
இலங்கையில் வேகமாக தொடர்ந்து செல்லும் இந்த படு கொலைகள் என்று நிறுத்த படும் ….?
இலங்கையில் சஜித் பிரேமதாச கட்சி எதிர் கட்சியாக உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
அவ்வாறான அந்த கட்சி அலுவலகத்தில் ,அதன் ஊழியர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளமை ,சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் ,இவாறு தப்பி ஓடிய சிறை கைதிகளில் , ஒரு கைதி மீளவும் ,இலங்கை காவல்துறைகள் கைது செய்யப் பட்டுளளார் .
கைதான கைதி ,மிகுந்த பாதுகாப்புடன், மீளவும் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
போதை பொருள் பாவனை குற்ற சாட்டில், கைது செய்யப்பட்டு ,சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ,விளக்க மறியலில் வைக்க பட்ட ,தடுப்புக் காவல் கைதியே , சாவகச்சேரி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .
தப்பி ஓடிய கைதியை மீள் கைது செய்திடும் நகர்வில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .
இலங்கை சிறைகளில் இருந்து ,குற்ற கைதிகள் இவ்விதம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை, சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது.
புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்
புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்
புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ,எண்ணெய் தாங்கி ஒன்று கண்டுபிடிக்க பட்டு மீட்க பட்டுள்ளது .எனினும் எண்ணெய் மாயமாகியுள்ளது .
புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார பகுதியில், உள்ள காணி ஒன்றில் ,இந்த எண்ணெய் தாங்கி புதைக்க பட்ட நிலையில் ,அது தொடர்பாக பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கிடைத்த நிலையில் ,எண்ணெய் தாங்கி நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்க பட்டது .
பல்லாயிரம் லீட்டர் எண்ணெய் சேமித்து வைக்கும், எண்ணெய் தாங்கி மீட்க பட்டுள்ள சமபவம் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணா ராஜாவின் தலைமையில் ,விடுதலை புலிகளின் எண்ணெய் தங்கி ,தோண்டி எடுக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டன .,

மீட்க பட்ட எண்ணெய் தாங்கியை ,காவல்நிலையத்தில் வைத்து பாதுகாக்கும் படி ,அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் இலலாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயர்கள், உச்சரிக்க பட்ட வண்ணம் உள்ளது .
இல்லாத தமிழீழ விடுதலை புலிகளை ,சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பி ,தமிழருக்கு எதிராக திசை திருப்பும் நகர்வில் சிங்கள இனவாதம் ஈடுபட்டுள்ளதை, இந்த சம்பவங்கள் மூலம் காணமுடிகிறது .
தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
தலிபான்கள் நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் கோட்டை, காபூல் பகுதியில் நடத்த பட்ட ,குண்டு தாக்குதலில் தலிபான்கள் பலர் காயமடைந்துள்ளனர் .
தலிபான்களின் முக்கிய தளபதிகள் வாகன அணியை ,இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் ,முக்கிய தளபதிகள் தப்பித்து கொண்டனர் ,எனினும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியில் ,தொடராக நாள்தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .,
தலிபான்கள் தலைநகர் கோட்டையில், ஐ எஸ் தீவிரவாத குழுவை தூண்டி விட்டு, அவர்கள் மூலம் இந்த குண்டு தாக்குதல்களை, முன்னைய ஆட்சியினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த பழிவாங்கும் குண்டு தாக்குதல்களுக்கு ,அமெரிக்காவும் உடந்தையாக உள்ளது .
அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் உள்ள நிலையில் ,தாலிபான்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,அமெரிக்கா கங்கணம் கட்டி இவ்வாறான குண்டு வெடிப்பின் பின்புலத்தில் செயல் படுகிறது.
அதற்கமைவாக இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
எரிந்து வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி – பல இராணுவத்தினர் காயம்
எரிந்து வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி – பல இராணுவத்தினர் காயம்
அமெரிக்கா இராணுவத்தின் அதி உயர் ரக உலங்கு வானூர்தி ஒன்று, திடீரென தீ பிடித்து வீழ்ந்து நொறுங்கியது .
அமெரிக்கா இராணுவத்தின், இந்த அதி உயர் உலங்குவானூர்தியின் ,எரிபொருள் தங்கியில் ,ஏற்பட்ட எரிபொருள் ,கசிவின் காரணமாக இந்த, தீ விபத்து இடம்பெற்றுள்ளது என கண்டறிய பட்டுள்ளது .
இந்த விபத்து சம்பவம் ,அமெரிக்கா இராணுவத்தினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வகையான அமெரிக்கா உலங்குவானூர்திகள், 400 க்கு மேற்போட்டவை உலக நாடுகளின் , பல பகுதிகளில் சேவையில் உள்ளன .
அவ்வாறன அமெரிக்கா இராணுவ, உலங்குவானூர்த்தி, இவ்விதம் விபத்தில் சிக்கியமை குறிப்பிட தக்கது.
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
ஈராக் Tarmiyah பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவை தேடி ,ஈராக்கிய இராணுவம் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபொழுது, பெரும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது .
ஈராக்கிய இராணுவம் மேற்கொண்ட தேடுதலின் பொழுது ,தீவிரவாதிகள் மறைத்து வைத்த வெடிகுண்டு ,வெடித்து சிதறியதால் ,ஐந்து ஈராக்கிய விசேட இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் அவர்கள் பயணித்த கவச வண்டிகளும் சேதமடைந்தன .
ஈராக்கில் பல்லின கிளர்ச்சி குழுக்கள் ,பிற நாடுகளின் தூண்டுதலில் போராடி வருகின்றன .
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
இவர்களின் இந்த தாக்குதலினால் ,ஈராக் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது .
அமைதியாக விளங்கிய ஈரக்கை ,சதாம் உசேனை கொன்று ,அந்த நாட்டின் எரிபொருள்களை திருடி செல்லும் அமெரிக்காவின் வேட்டையால் ,ஈராக் இன்று செயல் இழந்து காணப்படுகிறது .
நாடுளை ஆக்கிரமித்து ,அந்த நாடுகளுக்குள் ,உள்நாட்டு மோதல்களை
உருவாக்கி குளிர் காய்கிறது ,அமெரிக்கா என்பது தற்கால நிகழ்வுகளாக உள்ளன .
பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்
பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்
இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் ,எரிபொருள் பெற்றிட நின்ற சிங்கள வாலிபன் ஒருவரை ,சிங்கள இராணுவ தளபதி ஒருவர் காலினால் உதைத்தார் .
இவரது இந்த செயல், சமூக ஊடகங்களில் பரவி ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின .
மேற்படி காணொளியை மைய படுத்தி ,நடத்த பட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் ,பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரியை விசாரித்து உதைக்கும் படி இராணுவ தளபதிக்கு மனித உரிமை ஆணையகம் கட்டளை பிறப்பித்துள்ளது .
பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்
பொதுமகனை உதைத்த இராணுவ தளபதியின் மீது நடத்த பட்ட, ஒழுக்காற்று விசாரணை, முடிவுகளையும் தமக்கும் தெரிய படுத்தும் படி, மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவம் அடாவடி ,அக்கிரமம் கொண்டது என்பதை ,தமது மக்களை தாக்கியதன் மூலம் ,
மீளவும் உலக நாடுகளில் முன் அவமான பட்டுள்ளது .
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்
சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து
காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து
தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.
ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாணமன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்
மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வேற்று இனத்தவர்கள் இந்த ஒளிப்படகாட்சிப்படுத்தலை பார்த்தும், கேட்டும் அறிந்து கொண்டதுடன், தமது சமூக வலைத்தளங்களில் இதனை நேரடியாக பகிர்ந்து கொண்டமை

நீதிக்கான போராட்டத்துக்கு நம்பிக்கையினை தந்திருந்தது என நிகழ்வு ஒருங்கிணைப்பாளான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு.மகா ஜெயம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு, பொறுப்புக்கூற
வைப்பத்தற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
நிகழ்வு நாளில் கொட்டிய கடுமை மழையானது, நீதிகோரி 2 ஆயிரம் நாட்களுக்கு
மேலாக போராடும் தாய்மார்கள், உறவுகளின் கண்ணீரை நினைவுபடுத்தியதாக அமைந்ததென உணர்வுகளை பகிர்த்தனர்.
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
இலங்கைக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து கடத்திவரப்பட்ட, 157 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
சுங்க பிரிவினரிடம் சிக்கிய ,இந்த தங்கத்தின் மொத்த விலை ,சுமார் 157 மில்லியன் எனவும் ,60 தங்க பிஸ்கட்டுக்களை ,இவர் நூதன முறையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தங்கத்துடன் கைது செய்ய பட்டவர் ,கட்டு நாயக்கா விமான நிலையத்தின் , பியூட்டி பாரில் பணிபுரியும் ,35 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கைதான நபரிடம் தொடர் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ,இவ்விதமான தங்கம் இலவசமாக சென்றடைகின்றமை குறிப்பிட தக்கது.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக போராட்டத்த்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இவ்வாறு காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை ,உடனடியாக விடுதலை செய்திடும் படி ,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுதல் விடுத்துள்ளார் .
சஜித் பிரேமதசா கோரிக்கையை அடுத்து ,கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய ,போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
மக்கள் போராட்டங்களை அடக்கிட ,மக்களை மிரட்டும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
காவல்துறையினர் இரவு முதல், அதிகாலை வரை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ,காவல்துறையினரால் 94 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
பலவேறு பட்ட குற்ற சத்துக்களில் தேடப்பட்டு வந்த இவர்களை ,காவல்துறையினர் விசேட அணியினரால் இலக்கு வைக்க பட்டு கைது செய்யப்பட்டனர் .
போதைவஸ்து ,கடத்தல் ,கொலை மற்றும் பல்வேறு குற்ற சத்துக்களில் சம்பந்த பட்டவர்கள் ,இவ்விதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்ற வாசகத்தினை தாங்கியவாறு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற
கேள்வியுடன் பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன் பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளான்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான நேற்று (ஓகஸ்ற்-30 செவ்வாயன்று) இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தலைநகர் பரிஸ் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களது
நேற்றைய போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்
அதன்வரிசையில் C’est nous les Tamouls, பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக கவனயீர்ப்பு பேரணி நிகழ்வினை முன்னெடுத்திருந்தன.
தலைநகர் பரிசின் மொம்பர்னாஸ் பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு தொடங்கிய நீதிக்கான பேரணி நாடாளுமன்ற முன்றல் அன்வலிட் பகுதியினை சென்றடைந்திருந்தது.
எங்கே என் அக்கா, என் அப்பா, என் அண்ணா என பல்வேறு சொற்கொட்டுக்களை தாங்கிய பதாதைகளுடன் பயணித்த பேரணியில் பயணித்த பொய்க்கால் உயர்ந்த மனிதன், பல்லினமக்களின்
கவனத்தினையும் ஈர்த்திருந்தான்.பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட திடலில் பேரணி நிறைவு பெற்றிருந்தது.
இறுதிப்போரின் நேரடிச்சாட்சியாக பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக யாழ்நிலா ரஞ்சித்குமார், எழில்ஓவியா ரஞ்சித்குமார், அம்மு ரஞ்சித்குமார்
சகோதரிகள் திடல்நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தனர். திரு.சுதாகரன், திரு.கிருபா, திரு.பொன் நாயகன் ஆகியோர் பாதிப்புக்குள்ளனா தமது சாட்சியங்களை முன்வைத்திருந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை சார்பில் திரு.மேத்தா, அரசியல்துறை பிரான்ஸ் திரு.சுக்ளா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதமர் பணிமனைப் பொறுப்பாளர் திரு. மனோகரன் கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.
பிரான்சில் தேசிய செயற்பாட்டில் நீண்டகாலம் பணியாற்றி பின்னர் ஊருக்கு சென்று சிறிலங்கா அரசினால் காணாமலாக்கப்பட்ட திரு.திலகர் அவர்களது
நினைவுகளை மூத்த செயற்பாட்டாளர்கள் திருமதி. சுபாசினி குருபரன் அவர்கள் பிரென்சு மொழியில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வின் களஒருங்கிணைப்பினை முன்னெடுத்திருந்த C’est nous les Tamouls
சார்பில் திரு.குணா ஆறுமுகராசா அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே உறுதியேற்ப்புடன் நிறைவுபெற்றது.






மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
இலங்கையில் மக்களுக்கு மண் சரிவு அபாயம், தொடர்பிலான அவசரகால எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற காலநிலை காரணமாக ,பொழிந்து வரும் மழையால் ,இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதியாக, மாத்தளை ,இரத்தினபுரி கேகாலை, கண்டி, என்பன அறிவிக்க பட்டுள்ளன .
இவ்வேளை இந்த மக்களை மிகவும் ,எச்சரிக்கியாக இருக்கும், படி மீளவும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.
எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈராக் வடக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ,திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ரொக்கட்டுக்கள் எண்ணெய் வயல்கள் மீது வீழ்ந்து வெடித்த நிலையில் ,தற்போது எண்ணெய் வயல் பராமரிப்பு நிறுவனங்கள் ,அந்த பகுதியை விட்டு தப்பி ஓட தயாராகி வருகின்றனர் .
ஈராக்கின் வடக்கு பகுதியில் குருதீஸ் போராளிகள் அதிகம் செறிந்து வசித்து வருகின்றனர் .
அவ்வாறான பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்
ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்
ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .
அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .
ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .
இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் மிகபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது .
சிங்கள இனவாத படைகளால் ,திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்க பட்டும் இருந்தனர் .
இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை .
இந்த நெஞ்சு வலியோடு அவதிபட்டு கொண்டிருக்கும் எம்மின மக்களுக்கு நீதி வேண்டி இன்று செவ்வாய் கிழமை (30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது .
பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினர் (Freedom Hunters For Tamils )மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .
இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி பேரணிக்கு மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.
இலங்கையில் புதிய ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க ஆள்கின்ற பொழுதும் ,ராஜபக்ச அரசாங்கம் நடத்திய தமிழ் இன பாடுகொலைகளுக்கு எவ்வித பொறுப்பு கூறல்களையும் செய்திடாது உள்ளமை தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
லண்டனில் இடம்பெற்ற போராட்டங்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

























