Posted in உலக செய்திகள்

ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு அளிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் ஆட்சியின் கோட்டையாக விளங்கும் ,காபூல் பகுதியில் அமைக்க பெற்றுள்ள ,ரஷ்ய தூதரகத்தை சுற்றி ,ஆயுதம் தாங்கிய இராணுவம் ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .

இவர்களின் இந்த இராணுவ குவிப்பு ,பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

ரஷ்ய தூதரகம் மீது தாக்குதல் , நடத்த படலாம் என்ற ,உளவு தகவலை அடுத்து ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

தலிபான்கள் தலைநகர் ,காபூல் பகுதியில், நாள் தோறும் குண்டு வெடிப்புக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அதன் எதிரொலியாக ,இந்த பாதுகாப்பு ,இறுக்கமடைந்துள்ளது என்கிறது சுயாதீன தகவல்கள் .

ஓராண்டு கடந்து பயணிக்கும் தலிபான்கள் ஆட்சி ,செயல் இழக்கும் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதை ,இந்த தொடர் தாக்குதல்கள் எடுத்துரைக்கின்றன .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

    இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

    இலங்கையில் 10.000 உணவகங்களை அடித்து போட்ட பட்டுள்ளது .

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் அதிகரித்தன .

    இந்த நிலையில் ,இந்த சிற்றுண்டி சாலைகள் ,மற்றும் உணவகத்தில் ,விருந்தகங்கள் என்பன அடித்து மூட ப்பட்டுள்ளன .

    பாடசாலைகளில் இயங்கி வந்த , சிற்றுண்டி சாலைகளும் ,அதிக விலை அதிகரிப்பினால் அடித்து மூட பட்டுள்ளன .

    இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

    முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டி சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் வரும் காலங்களில் ,மேலும் விலை வாசிகள் அதிகரிக்க படும் நிலை தோன்றி இருப்பதாக தெரிவிக்க படுகிறது .

    இவ்வாறான நிலை மேலும் நீடித்தால் ,பெரும் நெருக்கடியை அணைத்து மக்களும் எதிர் கொள்ள நேரிடும் என்ற ,பெரும் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

      கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

      கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

      கனடா ஒன்ரேறியோவில் நடத்த பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டில் ,இருவர் மரணமாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

      காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

      கனடா ஒன்ரேறியோவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
      காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

      கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

      ஒன்ரேறியோவில் இடம்பெற்ற, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


      சந்தேக நபர் கைது செய்ய பட்டு தடுப்பு காவல் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என்கிறது காவல்துறை .

      இருவேறு துப்பாக்கி கி சூட்டு சம்பவங்கள்
      தொடர்பில் ,தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என்கிறது காவல்துறை .

        இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
        Posted in சமையல் cook

        இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி

        இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி ,5 நிமிடத்தில் ரெடி பண்ணிக்கலாம் .
        நம்ப கொஞ்சம் கடினமா தான் இருக்கும் .ஆனால் அது தாங்க உண்மை .

        எங்க வீட்டில் இட்லி மாவில், எப்படி ஜிலேபி செய்வது ,என்பதை பார்க்கலாம் வாங்க .

        இந்த ஜிலேபி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன .?
        இலகுவாக இட்லி மாவில் ஜிலேபி செய்வது எப்படி ..?

        வாங்க அதை பார்க்கலாம் .

        செய்முறை ஒன்று

        ஒரு பாத்திரத்தில் மூன்று கரண்டி இட்லி மாவு எடுத்து வைத்திருங்க .
        துளி அளவு பூட் கலர் சேர்க்க போகிறோம் சேர்த்திருங்க .

        இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க .குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் ,இந்த பூட் கலரை சேர்த்து கொள்ளாதீங்க .

        கலர் வேண்டும் என்றால், இரண்டு குங்கும பூ சேர்த்து கொள்ளுங்க ,இதே கலர் கிடைக்கும் .


        இது கூட அரை கரண்டி பேர்கிங் பவுடர் சேர்த்து கொள்ளுங்க .ஒரு கரண்டி மைதா மா சேர்த்து கொள்ளுங்க .

        மைதா மா பிடிக்கல அப்டி என்றால் சோளம் மா ,இல்லாட்டி அரிசிமா சேர்த்து கொள்ளலாம் .


        இந்த இட்லி மாவை திக்காக்கவே ,கட்டியாகவே மைதா மா சேர்த்து கொள்கிறோம் .நன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி வாங்க .

        இது தான் இதனுடைய பதம் ,இப்படி வரணும் மா.

        இப்போ பாத்திரம் ஒன்று எடுத்து கொள்ளுங்க .அதில சீனி பாகு செய்துகொள்ளணும் .


        ஒரு காப்பு அளவு சீனி எடுத்து கொள்ளுங்க .அது கூட தேவையான தண்ணீர் விட்டு கொள்ளுங்க .கம்பி கலராக ஜிலேபி வந்த பின்னர், அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

        அடுத்து ,அடுப்பில கடையா வைத்து ,தேவையான எண்ணெய்
        விட்டு கொள்ளுங்க .

        இப்போ இந்த ஜிலேபி .ஜிலேபி வடிவில்செய்வதற்கு ஆச்சு வேண்டும். அது இல்லாத படியால் .கீழே படத்தில் உள்ளது போன்று ஒரு .பையில் மாவு ஊற்றி. அதில் ஓட்டை போட்டு இப்படி ஊற்றி கொள்ளுங்க .

        ஜிலேபி வடிவிலே செய்துக்கலாம் .எண்ணெய் கிட்ட வந்து பிழியும் போது ஜிலேபி பெரிதாகி வரும் .

        ஜிலேபி வடிவில் நமக்கு கிடைக்கும் .
        ஜிலேபி பொரியும் சத்தம் அடங்கினால், ஜிலேபி ரெடியாடிச்சு என்று பொருள் .

        சீனி பாணியில் சுட்டு வைத்த ஜிலேபியை போட்டிருங்க ,.இரண்டு நிமிடம் அதனை அப்படியே விடுங்க .

        இரண்டு நிமிடம் களித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிடுங்க .

        கடையில் உள்ள அதே ஜிலேபி நமக்கு கிடைத்துள்ளது ,
        உங்களால் நம்பவே முடியல, எப்படி இட்லி மாவிலை ஜிலேபி செய்வது என்பது .

        அது தாங்க சமையல் தந்திரம் . இப்படி வீட்டில முயற்சித்து சமையல் செய்து அசத்துங்க மக்களே.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் கிழமை விடுமுறை அளிக்க பட்டுள்ளது .கடைகள் பாடசாலைகள் .போக்குவரத்துக்கு என்பன முடக்க படுகின்றன .

        பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் நல்லடக்கம் செய்ய படும் நாளான 19 திங்கள், பிரிட்டன் எங்கும் பொது விடுமுறை ,அளிக்க பட்டுள்ளது .

        திங்கட் கிழமை 19 அணைத்து கடைகளும் அடித்து பூட்ட படுகின்றன .,இன்றைய நாள் பிரிட்டன் எங்கும் ,கண்ணீரால் சூழ்ந்த நாளாக மாற்றம் பெறுகிறது .

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு


        இந்த நாட்டின் மகாராணியின் துயரில் மக்கள் தவித்த வண்ணம் உள்ளனர் .இவ்வேளை கடைகள் திறக்க பாட்டால் ,மக்களின் கோபத்திற்கு கடைகள் உள்ளாக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

        பிரிட்டனில் நம்ம தமிழர்கள் சிலர், நத்தார் புத்தாண்டின் பொழுதும் கடைகளை திறந்து வைத்துள்ள வேடிக்கை வினோதம் இடம்பெறுகிறது .

        ,வந்த நாடுகளின் மக்களின் உணர்வுகளையும் ,காலத்தை அறிந்து கொள்ள மறுகின்ற சில சீர் கேடி தமிழர்கள் ,இவ்விதம் லண்டன் பகுதியில் உலவுவதை காண முடிகிறது .

        லண்டன் பக்கீங்கம் அரண்மனை முன்பாக ,பல்லாயிரம் மக்கள் திரண்டு
        மகாராணிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர் .

          Posted in இலங்கை செய்திகள்

          வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு

          வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு

          வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

          வவுனியா தாண்டிக்குளம் ரயில்வே நிலைய தாண்டவாளம் பகுதி அருகில் இந்த மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது.

          இவ்வாறு வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ,சடலமாக கண்டு பிடிக்க பட்டவர் 45 வயதுடைய ஆண் என அடையாள காணப் பட்டுள்ளார் .

          குறித்த ஆணின் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

          வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு


          இவரது சடலத்தின் அருகில் ஊந்துருளி ஒன்றும் இருந்து மீட்க பட்டுள்ளது .

          இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்கின்றன .

            மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க
            Posted in சமையல் cook

            மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

            மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

            மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க.


            மொறு மொறு வெங்காய சமோசா ,எண்ணெய் குடிக்காது இன்றே ஈசியா செய்ங்க.இப்படி ஒரு சமோசா ஈசியாக செய்து சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

            சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அதிகம் இந்தியா மக்களிடத்தில் பிரபலமானது இந்த சமோசா .

            லண்டன் ,கனடா ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ,ரயில்வே நிலையங்களில் ,இந்தியர்கள் கடையில் அதிகமாக விற்பனையாகிறது .

            யாராச்சும் விடுமுறைக்கு செல்லும் பொழுது இதனை அவதானிக்கலாம் .வெள்ளையர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்து வாங்கி செல்வதை காணமுடிகிறது .

            மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

            செய்முறை ஒன்று

            இந்த சமோசா செய்திட இரண்டு கப் மைதா மா எடுத்திடுங்க .தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி எண்ணெய் ,சேர்த்து நன்றாக குழைத்திடுங்க .

            நன்றாக சப்பாத்தி போல பதத்திற்கு வந்துள்ளது .இந்த மாவை மூடி போட்டு மூடி ,ஒரு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

            மாவு நன்றாக சாப்டாக இருக்கு .இப்போ வெறும் மாவு சேர்த்து நன்றாக பிசைந்திடுங்க .

            மாவனாது பாத்திரத்தில் ஓட்டாத பதம் வரும் வரைக்கும், நன்றாக பிசைந்து எடுங்க .

            இந்த மாவை பூரி கட்டையில் வைத்து நன்றாக அழுத்தி எடுங்க .அழுத்திய பின்னர் சின்ன சின்ன துண்டுகள அந்த மாவை எடுத்திடுங்க .

            இப்போ இந்த உருண்டைகளை பூரி கட்டையில் வைத்து அழுத்தி சப்பாத்தி போல எடுத்திடுங்க .இப்போ கடாயில இரண்டு பக்கமும் மெல்லியதாய் வேகவைத்து எடுத்திடுங்க .

            இப்போ சமோசா சீட்டு நாங்க செய்தாச்சு .
            செய் முறை இரண்டு

            இப்போ இந்த வேகவைத்த சமோசா சீட்டை, சதுர வடிவில் வெட்டி எடுத்திடுங்க .அப்புறம் அந்த சதுரம் வெட்டியை சீட்டை மீளவும் நடுவில் வெட்டி இரண்டாக்கிடுங்க .

            சதுரமாக வெட்டியா மாவின் கழிவுகளை .இப்போ பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதற்குள் அவற்றை பொரித்து எடுத்திடுங்க .
            நன்றாக மொறு மொறு பதத்தில் பொரித்து எடுங்க .இவ்வாறு பொரித்ததை தனியாக எடுத்து வைத்திடுங்க .

            இப்போ நாங்க சட்னி ரெடி பண்ண போறம் .ஒரு கப் அளவு வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .
            பொரித்து வைத்த கழிவுகளையும் இந்த் வெங்காயத்துடன் சேர்த்திடுங்க .இது கூட அரை கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி சீராக தூள் ,உப்பு ,கூடவே சக்கரையும் சேர்த்திடுங்க
            யாவும் சேர்த்த பின்னர் நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .மசாலா ஒன்றுடன் ஒன்று நன்றாக ஓட்டணும் .

            அதுவரைக்கும் நன்றாக பிசைந்து கொள்ளுங்க .
            அடுத்து நாங்க ஒரு பேஸ்ட் தயார் செய்ய போகிறோம் .கொஞசகமாக மை தா மா சேர்க்க போகிறோம் .

            இரண்டு கரண்டி மைதா மா எடுத்திருக்கோம் .
            இது கூடவே கொஞ்சமாக தண்ணீர் கலந்திடுங்க .கட்டியான மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்க .

            அப்போ தான் சமோசா சீட் நன்றாக ஒட்டி பிடிக்கும் .இந்த பேஸ்ட் நாம் ஒரு பசை போல பாவிக்க போகிறோம்

            இப்போ சமோசா ரெடி பண்ண போகிறோம் ,சமோசா சீட்டில் இந்த பசையை தடவி கொள்ளுங்க .

            இப்போ முக்கோண வடிவிலே மடித்திட்டு ,இப்போ சட்னி அதற்குள்ள வைத்து இப்போ பசையை ஒட்டி மூடிடுங்க .

            இப்போ சமோசா மாதிரி நமக்கு கிடைத்திடும் ,இப்போ என்னை நன்றாக சூடாக இருக்கு ,அதில் பொறித்திடுங்க .

            நன்றாக பொரிந்து வந்த பின்னர் அதனை எடுத்திடுங்க .
            இரண்டு பக்கமும் பிரட்டி விட்டு வேக வைத்து, நன்றாக மொறு மொறுவாக பொரித்து எடுத்திடுங்க.

            இப்போ சமோசா ரெடியாகிடிச்சு .இதுபோல நீங்களும் வீட்டில செய்து சாப்பிடுங்க.
            நம்ம சமையல் கலை நிபுணர் செமையாக சமோசா, மொறு மொறுவாக செய்துள்ளங்க .செமையான சமோசா ரெடியாடிச்சு

            லண்டன் ,கனடா அமெரிக்காசுக்கு ஏற்றுமதி செய்து வித்திடலாமா நண்பர்களே .

            ல் ,இலங்கை உணவு குறிப்புகள்
            Posted in சமையல் cook

            காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

            காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

            காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

            காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே மிக சுலபமா செய்ங்க
            .இந்த காளான் மசாலா எப்படி செய்வது என்கின்ற உங்கள் சந்தேகம் இதில நீக்க படுகிறது .

            காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஒரு உணவு .
            இவ்வகையான காளான் சுவையாக சமைத்தால் , இட்லி தோசை சோறு கூட ,சாப்பிட ரெம்பவே சுவையாக இருக்கும் .அப்படியான காளான் சமையல் செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

            வீட்டில் காளான் மசாலா செய்வது எப்படி …?
            இந்த காளான் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

            வாங்க இப்போ காளான் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

            செய்முறை ஒன்று

            இவ்வகையான காளான் மசாலா செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு,
            பொடியாக வெட்டிய முட்டைகோஸ் எடுத்திருங்க .
            முட்டை கோஸ் வெட்டிய பின்னர் ,அதனை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்திருங்க .

            வெட்டிய வெங்காயம் 200 கிராம் எடுத்திருங்க .
            ஒருகரண்டி மிளகாய் தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,
            தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,
            அரை கப் அளவு மைதா மா ,அரை கப் அளவு சோளம் மா சேர்த்திடுங்க .

            இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க .
            இந்த மா எல்லா பொருளுடனும் நன்றாக ஒன்றோட ஒன்று ஓட்டணும் .
            அப்படி நன்றாக கலந்திருங்க .

            மா கலந்த பின்னர் ,தேவையான அளவு தண்ணீர் எடுத்திருங்க .இப்போ கிரேவியோட அந்த மா எல்லாத்தையும் சேர்த்து பிசைந்து கலக்கிடுங்க .
            இந்த காளான் மசாலா ரெம்பவே திக்காகவும் ,தண்ணி தன்மையாகவும் இருக்க கூடாது .அதற்கு ஏற்ப இதனை கலந்திருங்க .

            செய்முறை இரண்டு

            இப்பபோ அடுப்பில பாத்திரம் வைத்திருங்க ,அதில தேவையான எண்ணெய் விட்டிருங்க .
            எண்ணெய் சூடானதும் ,பாவோடா அளவில இந்த கலவையை ,துண்டு துண்டாக போடுங்க .

            பாவோடா காளான் மசாலா பொன்னிறமா வந்த பின்னர் வெளியில் எடுத்திருங்க .வெளியில் எடுத்தவுடன் ,அதனை ருசு பேப்பரில் போடுங்க .ஏன் என்றால் எண்ணையை அந்த ருசி விலக்கிடும் .

            இப்போ இதை ஓரமா வைத்திருங்க ,இப்போ காளானுக்கு நாங்க கிரேவி செய்திடலாம் வாங்க .

            இப்போ கடாயில் என்னை ஊற்றி ,அதில வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

            வெங்காயத்தை நன்றாக வதக்கி வாங்க ,இப்போ இது கூட ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .
            ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்திட்டு .நன்றாக வதக்கி கொள்ளுங்க .

            இஞ்சை பூண்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .அடுத்து இதில் ஒரு கரண்டி உப்பு சேர்த்து கொள்ளுங்க .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,
            அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்குங்க .

            அடுத்து இது கூட ஒரு கரண்டி சோயா சோஸ் ,
            ஒரு கரண்டி வினிகர் ,மூண்டு கரண்டி தக்காளி சோஸ் ,சேர்த்திட்டு நன்றாக வதக்கி வாங்க .
            அடுத்து ஒரு கப் எடுத்து கொள்ளுங்க ,அதில இரண்டு கரண்டி சோளம் போடுங்க .கிரேவி திக்கா வருவதற்கு இந்த சோளம் மா உதவுகிறது .

            இப்போ சோளம் மாவிலை ஒரு கப் தண்ணீர் கலந்து ,நன்றாக கலக்கிடுங்க .கட்டி இல்லாம நன்றாக கலக்கிடுங்க .
            இப்படி செய்த பின்னர் ,இந்த சோளம் மா கலவையை, செய்து கொண்டிருக்கும் கிரேவியில ஊற்றி கலக்கிடுங்க .

            சோளம் மா கலவை கலந்ததன் பின்னர், கிரேவியில் தண்ணி கொஞ்சம் கலந்திடுங்க .
            நன்றாக கொதித்த பின்னர் நாம் பொரித்து வைத்த பாவோட காளான் போட்டிருங்க .
            இப்போ நன்றாக கிரேவியோட நன்றாக வேகவைத்து கலக்கி வாங்க .ஒன்றோட ஒன்று நாசியும் வர நசிச்சு கலக்கிடுங்க .நலல மசிச்சு கிரேவியோட சேர்ந்த பின்னர் இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

            இப்போ சுவையான காளான் மசலா ரெடியாகிடிச்சு .

            கடைகளில் விற்பனை செய்யும் அதே ரகத்தில் இந்த காளான் மசாலா நமக்கு கிடைத்தாச்சு .
            இப்போ இந்த காளான் மசாலா கூட தோசை ,இட்லி சாதம் சேர்த்து சாப்பிட்டா பாருங்க ரெம்பவே அருமையாக இருக்கும் .
            ஒருமுறை சாப்பிட்டவங்க மறுமுறை தேடி வரவழைக்கும் ,இந்த வீட்டு காளான் மசாலா சமையல் .

            இப்போ சொல்லுங்க மக்களே சுவை எப்படி இருக்கு .தலைவரே அமெரிக்கா போயிட்டு வந்த பீலிங் வருகுதா ..?

            Posted in இலங்கை செய்திகள்

            விமல் வீரவன்ச வீட்டில் மீது தாக்குதல் இருவர் கைது

            விமல் வீரவன்ச வீட்டில் மீது தாக்குதல் இருவர் கைது

            விமல் வீரவன்சவீட்டின் மீது தாக்குதல் நடத்த பட்டது .
            இந்த தாக்குதல் சம்பவத்தில் ,விமல் வீரவன்ச வீடும் ,மற்றும் அவர்கள் சொத்துக்கள் என்பன சேதமாக்க பட்டது

            விமல் வீரவன்ச வீட்டின் மீதான, தாக்குதலின் பொழுது ,பல பெறுமதியான சொத்துக்களுக்கு , சேதம் விளைவிக்க பட்டது .

            இந்த தாக்குதலை நடத்திய இருவர், கைது செய்யப் பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

            கைதானவர்கள் மீது, தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

            இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் ,பின்புலத்தில் விமல் வீரவன்ச
            விளங்கினார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

              Posted in இலங்கை செய்திகள்

              பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்

              பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்

              பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்க பட்டுள்ளன .

              இலங்கையில் ஏற்படுத்த பட்ட வட்டி வீதம் மற்றும் ,எரிபொருள் தட்டுப்பாடு ,வாகன வரிகள் அதிகரிக்க பட்டுள்ளது .

              இதன் காரணமாக ,பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட 400 வாகன சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .

              மக்கள் மீது பொருளாதார சுமைகள் ,மற்றும் வரி விதிப்புக்கள் என்பன அதிகரிக்க பட்ட நிலையில் ,மக்களின் இந்த சேவை வளங்கள் நிறுத்த பட்டுள்ளன .

              பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்

              தொடர்ந்து ஆண்டு தோறும் வரி விதிப்புக்கள், இலங்கையில் உயர்ரத்த பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது .

              இவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, கடன் உதவி வழங்க பட்டுள்ளது .


              இலங்கை அரசு வரிக்குறைப்பை நீக்கினால் ,இலங்கைக்கு வழங்க படும் கடன் தொகை நிறுத்த படும் .

              அதனால் இலங்கை அரசு வரிகளையும் .பொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது .இதனால் பொது போக்குவரத்து தேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி

                இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி

                இலங்கையில் 300 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டது

                இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களில் ,வாசனை திரவியங்கள் ,மற்றும் சாக்லைட் பொருள்கள் என்பன முதல் இடம் வகிக்க பட்டன,

                அவிதாமான பொருட்களை மீளவும் இறக்குமதி , செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது .

                இலங்கையில் இவ்வாறான பொருட்களுக்கு தட்டு பாதாதி அதிகரித்து ,பின்னர் இறக்குமதி மூலம் அதிக இலாபத்தை சம்பாதித்து .கொள்ள இந்த அரசியல் வியாபார விளையாட்டு இடம்பெற்றுள்ளது .

                எனினும் தொடர்ந்து 77 பொருள்களுக்கு தடை நீடிக்க படுகிறது .

                இந்த பொருட்கள் மீதான தடையும் விரைவில் நீக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா

                  ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா

                  ஜெனிவாவில் இலக்கைக்கு ஆதரவாக சீனா தோள் கொடுத்துள்ளது .


                  ஜெனீவாவில் இலங்கையில் நடத்த மனித குலத்திற்கு எதிரான படுகொலை ,கடத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ,இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது .

                  இவ்வேளையே இலங்கைக்கு ஆதரவாக வளமை போன்று சீனா குரல் கொடுத்துள்ளது .

                  இலங்கையி பொருளாதார வீழ்ச்சிக்கு ,சீனா முக்கிய காரணமாக விளங்கிய பொழுதும் ,ஜெனிவாவில் சீனா இலங்கைக்கு மீளவும் தோள் கொடுத்துள்ளது ,தமிழர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  இறுதி யுத்தம் முடிவுற்று 13 ஆண்டுகள் கழிகின்ற பொழுதிலும் ,தமிழ் இன
                  படு கொலைக்கு இதுவரை தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

                    யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

                    யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்க பட்டுள்ளது .

                    சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்களின் ,கைப்பையுடன் நடமாடிய ஒருவர் தொடர்பாக தகவல் கிடைத்தது .

                    புலனாய்வு தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைக்க பெற்ற நிலையில், நடத்த பட்ட சோதனையின் பொழுது இவை மீட்க பட்டுள்ளன .

                    யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

                    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,குறித்த வாலிபரின் உடமையை சோதனை செய்தனர் .

                    இதன் பொழுது ,அந்த பெண்கள் கை பையில் எட்டு கிராம் போதைவஸ்து ,மற்றும் நகைகள் ,20 லட்சம் பணம் என்பன இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                    குறித்த சிங்கள வாலிபர், குருநாகல் பகுதியை சேர்நதவர் என தெரிவிக்க பட்டுளள்து .


                    இந்த நகைகள் கொள்ளையடிக்க பட்டனவா ,அல்லது நகைகள் வழங்கி போதைவஸ்து பெறப்பட்டதா என்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஜனாதிபதி மன்னிப்பு 417 கைதிகள் விடுதலை

                      ஜனாதிபதி மன்னிப்பு 417 கைதிகள் விடுதலை

                      ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 417 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


                      கைதிகள் தினத்தைமுன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் சிறைகளில் அடைக்க பட்டிருந்த 417 கைதிகள் இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

                      ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற முதலாவது கைதிகள் விடுதலை நிகழ்வு இதுவாக பதிய பெற்றுள்ளது .

                      ஆண்டு தோறும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் , கைதிகள் விடுதலை செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        வெள்ளவத்தை கடலில் சுற்றி திரிந்த 40 முதலைகள் மீட்பு

                        வெள்ளவத்தை கடலில் சுற்றி திரிந்த 40 முதலைகள் மீட்பு

                        வெள்ளவத்தை கடலில் சுற்றி திரிந்த 40 முதலைகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                        இந்த முதலைகள் நடமாட்டம் இந்த கடல் பகுதி ,மற்றும் நீர் நிலைகளில் காணப்பட்டுள்ளது .

                        சுழியோடிகள்மூலம் ,இவை கண் கணிக்க பட்ட நிலைஇய ,இந்த 40 முதலைகளும் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                        ,இந்த முதலைகள் யாவும் , வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கும் நாடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

                        இவை மக்களுக்கு அச்சறுத்தலாக அமையும் என்கின்ற காரணத்தால் ,.இந்த முதலை பிடிப்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                        வெள்ளவத்தை கடற்கரை பகுதி என்பது ,உல்லாச பயணிகள் அதிகம்
                        வருகை தந்து செல்கின்ற பகுதியாக உள்ளமை குறிப்பிட தக்கது .

                          முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL
                          Posted in சமையல் cook

                          முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

                          முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

                          முட்டை ஆம்லெட் இப்படி வீட்டில செஞ்சா ,பிள்ளைங்க முதல் ,பெரியவர்கள்
                          வரை ரெம்பவே சாப்பிடுவாங்க .

                          இந்த முட்டை ஆம்லெட் செய்வது மிக சுலபம் .ஈசியாக அதிக நேரம் இல்லாது செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

                          இப்ப இந்த முட்டை ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

                          செய்முறை ஒன்று

                          வீட்டில் ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

                          அடுப்பில பாத்திரம் வைத்து கொள்ளுங்க ,அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
                          சிறிதாக வெட்டி வைத்த உருளை கிழங்கை சேர்த்து கொள்ளுங்க .

                          இந்த உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .மெல்லிய நெருப்பில் வைத்து ,உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .பொடியாக நறுக்கிட்டு வெங்காயம் போட்டு கொள்ளுங்க .

                          வெங்காயம் ,உருளைக்கிழங்கை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .
                          நன்றாக வெங்காயம் வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்திடுங்க .அதையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

                          இந்த நேரத்தில சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்க .
                          உப்பு ,இப்பொழுது சேர்த்தால் ,உருளைக்கிழங்கு ,வெங்காயம் சீக்கிரமா வதங்கி வரும் .சேர்த்திட்டு ரெம்பவே வதக்கி வாங்க .

                          இப்போது எல்லாம் நன்றாக வதங்கிருச்சு .இப்போ அடுப்பை நிப்பாட்டிடலாம் .

                          இன்னுமொரு மிக்சிங் போலில் ,மூன்று முட்டையை உடைத்து ஊற்றிடுங்க .
                          இது கூட ஒரு கரண்டி மிளகு தூள் ,தேவையான உப்பு சேர்த்து கலக்கி கொள்ளுங்க .நன்றாக அடித்து கலக்குங்க .

                          கலக்கியதும் கொத்தமல்லி இலையை அதில போட்டு ,அதையும் கலக்கிடுங்க .கூடவே நாம வதக்கி வைத்த வெங்காயம் ,முட்டைகோஸ் எல்லாத்தையும் இதில போட்டு கலக்கிடுங்க .

                          முட்டை ஒன்றுடன் ஒன்று இணையும் மாறு கலக்கி வாங்க .

                          இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து கலவையை ஊற்றிடுங்க .அப்புறம் முட்டை மேல சீஸ் ஊற்றிடுங்க ,அப்புறம் அதுக்கு மேலே முட்டையை ஊற்றிடுங்க .

                          இப்போ ஒரு பக்கம் வேகியிருச்சு .இப்போ மறு பக்கம் பிரட்டும் பொழுது ,ஒரு கோப்பையை வைத்து அதனோடு சேர்த்து பிரட்டி வாங்க ,ரெம்பவே நன்றாக வரும் .

                          இப்போ இந்த முட்டை ஆம்லெட் ரெடியாடிச்சு .சாப்பிட செமையாக இருக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க .

                          தரமான ,சுவையான ,இலகுவான முட்டை ஆம்லெட் ரெடி .மறக்காம நாள் தோறும் சமையல் செய்து சாப்பிட்டு வாங்க மக்களே .

                          https://www.youtube.com/watch?v=mIzHVwBv7YU

                          மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
                          Posted in சமையல் cook

                          மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

                          மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

                          மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
                          வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
                          குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .

                          வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .

                          வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
                          இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

                          வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

                          செய்முறை ஒன்று

                          இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .


                          எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .

                          மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

                          வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .

                          இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .

                          கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
                          சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .

                          இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
                          கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .

                          இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

                          அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .

                          இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
                          நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .

                          இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .

                          இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .


                          இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .

                          எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
                          மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .

                          மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .

                          ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .

                          இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .

                          தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?

                          இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .

                          Posted in உலக செய்திகள்

                          ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை

                          ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை

                          ஜெர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ,தமது சிவப்பு கோட்டை கடந்து உக்கிரேனுக்கு ஜெர்மனி உதவி புரிந்து வருவதாக ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது .

                          ரஸ்யாவின் இந்த எச்சரிக்கையின் காரணமாக ,ஜெர்மனிக்கு ரஸ்யா வேட்டு வைக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                          ஜெர்மன் அதிக குளிர் நிறைந்த நாடாகும் .

                          ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை

                          ரசிவில் இருந்தே ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுகிறது..

                          இவ்வேளை இந்த எரிவாயு விநியோகத்தை ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ,ரஸ்யா தடுத்து நிறுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                          ரஸ்யாவின் எச்சரிக்கை மேலும் மீறி ஜெர்மன் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க முற்பட்டால் ,
                          ரஷ்ய ஜெர்மன் மீது தனது தாக்குதலை தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                          பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil
                          Posted in சமையல் cook

                          பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

                          பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

                          பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம்.நம்ம வீடே மண மணக்க இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

                          நம்ம தமிழர்களில் அதிகாமானவர்கள் பிரியாணி செய்யிறாங்க ,ஆனால் கடையில் விற்பனை செய்வது போல அவர்களினால் பெற்று கொள்ள இயலவில்லை .

                          அது ஏன் .? அது தாங்க நம்ம சமையல் காலை நிபுணர் ,இப்படி செய்து அசத்துறாங்க.
                          அவங்க செய்வதை போல நீங்களும் செய்து அசத்துங்க .

                          எந்த அரிசியிலும் பிரியாணி செய்வது எப்படி …?
                          வாங்க மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .

                          பிரியாணிகளில் , மட்டன் பிரியாணி ,முட்டை பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,சிக்கன் பிரியாணி என்பன உள்ளன .

                          இதில் மட்டன் பிரியாணி, அதிக மக்கள் விரும்பி உண்கிறாங்க .
                          அவ்வாறான மட்டன் பிரியாணி, எந்த அரிசியிலும், எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

                          பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

                          செய்முறை ஒன்று .

                          முதல்ல இந்த மட்டன் பிரியாணி செய்து கொள்ள ,குக்கர் சூடு படுத்தி கொள்ளுங்க .அதில எண்ணெய் ,நெய் சேர்த்திருங்க .

                          நெய் நன்றாக உருகியதன் பின்னர் .கரம் மசலா ,ஒரு பட்டை ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,ஒரு பிரியாணி இலை ,இரண்டு கராம்பு ,அரை கரண்டி ஏலாக்காய் தூள் ,என்பன சேர்த்து கொள்ளுங்க .

                          30 செக்கனில் நன்றாக வதக்கிய பின்னர் .வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

                          வெங்காயம் கலர் மாறி வரும் வரை ,நன்றாக வதக்கி வாங்க .தங்க கலருக்கு வெங்காயம் வந்த பின்னர் ,நாம ஒருகரண்டி இஞ்சி ,இரண்டு பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கிடுங்க .


                          அப்புறம் பொடியாக வெட்டிய கொத்த மல்லி,கூடவே புதினா இலை சேர்த்திடுங்க .இரண்டையும் நனறாக சேர்த்து வதக்கி வாங்க .

                          அப்புறம் பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .கூடவே தேவையான உப்பு சேர்த்திடுங்க .


                          உப்பு சேர்த்து தக்காளி வதக்கும் பொழுது ,தக்காளி வேகமாக வதங்கிடும் .
                          இப்போ தக்காளி நனறாக வதங்கும் வரைக்கும் ,வதக்கி வாங்க .

                          தக்காளி நனறாக சாப்டா வதங்கிய பின்னர் மசாலா சேர்த்திடலாம் .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,கூடவே மல்லி தூள் ,ஒரு கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .


                          மஞ்சள் தூள் சேர்த்திடுங்க .
                          இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .

                          மசாலாவோட பச்சை வாசம் போன பின்னர், தயிர் சேர்த்திடுங்க .சேர்த்ததும் உடனே நனறாக சேர்த்து கடைந்து வதக்கிடுங்க .
                          கட்டை படாமா நன்றாக வதக்கிடுங்க .

                          தயிர் மட்டன் பிரியாணியில் சேர்ப்பதால் ,மட்டன் ரெம்ப சாப்டாக வந்திடும் .அது தான் மட்டன் பிரியாணியில் தாயிருக்குள்ள தனி மவுசு .

                          தயிர் சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணிய பின்னர் ,இப்போ வெட்டி கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்திடுங்க .

                          அரை கிலோ மட்டன் ,இந்த பிரியாணிக்கு சேர்த்திருக்கு .மட்டன் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்திடுங்க .அப்போ தான் பிரியாணிக்கு நன்றாக இருக்கும் .

                          நம்ம சேர்த்துள்ள மசாலா எல்லாம் ,மட்டனுடன் நனறாக மிக்ஸ் ஆகணும் ,அதற்கு ஏற்றவாறு ,நன்றாக கலந்து வாதாக்கி வாங்க .

                          இப்போ இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .
                          ஒரு கப் தண்ணீர் சேர்த்து மட்டனை நன்றாக வேக வைத்திடுங்க .
                          அடுப்பை மெல்லிய நெருப்பில விட்டு இறைச்சியை வேக வைத்து கொள்ளுங்க. .

                          சீராக சம்பா அரிசி நாம எடுத்துள்ளதால இரண்டு கப்பு தண்ணி சேர்த்து கொள்கிறோம் .நீங்க விரும்பின
                          அரிசி பயன் படுத்தி கொள்ளலாம் .

                          நாம் இப்போ ஒன்றரை கப் அளவு அரிசியை ,பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றுகிறோம்.
                          .இப்போ இந்த அரிசியை மூன்று தடவை நனறாக கழுவிருங்க .கழுவிய பின்னர் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க .

                          ஊற வைத்து அரசி போடுவதால் ,ரெம்ப சாப்டாக ,பிரியாணி இருக்கும் .
                          இப்போ வேகவைத்த மட்டன் ,மசாலாவுடன் இணைந்து நன்றாக வெந்து வந்திருக்கு .

                          இப்போ வெந்த மட்டனுக்குள் ,மீளவும் இரண்டு கப்பு
                          தண்ணீர் சேருங்க .சேர்த்திட்டு தேவையான அளவு உப்பு போடிருங்க .
                          அப்புறம் குழம்பை நன்றாக கலக்கி கொள்ளுங்க .

                          அப்புறம் தண்ணி கொதித்து வந்ததும் ,ஊற வைத்த அரிசியை கறிக்குள்ள போட்டிருங்க .


                          இப்போ நன்றாக கலந்து வந்தவுடன் .அரிசி மேல அவிந்து வந்தவுடன் ,கொத்த மல்லி ,நெய் சேர்த்திடுங்க .


                          இப்போ இதில் அரை எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கலந்திருங்க .
                          இப்போ அரிசி மேல் எழுந்து ,வந்ததும் மெல்லிய நெருப்பில ,மூடிய போட்டு மூடி வைத்து .10 நிமிடம் வரை காத்திருங்க .

                          மட்டன் பிரியாணி ,அடிபிடிக்காது ரெம்பவே நன்றாக வந்திருக்கு .இது போலவே நீங்களும் எந்த அரிசியிலும் பிரியாணி செய்து சாப்பிடலாம் .

                          இப்போ நம்ம அசத்தலான மட்டன் பிரியாணி, செமையாக ரெடியாடிச்சு .
                          எல்லோரும் ஓடி வந்து எடுத்து சாப்பிடுங்க .

                          சாப்பிட பின்னர் மறக்காம ,காசை கொடுத்திருங்க . ஏன் என்றால் .நம்ம கடையில், சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுக்கணும் .தண்ணி மட்டும் இலவசம் நண்பர்களே .

                          Posted in இலங்கை செய்திகள்

                          காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

                          காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

                          காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது .

                          அந்த பகுதியில் மீன் வியாபாரம்,செய்து வந்தவரே இவ்விதம் உடலின் வெளிப்புற காயங்களுக்கு உள்ளான நிலையில், சடலமாக மீட்க பட்டுள்ளார் .


                          சடலமாக மீட்க பட்டவர் 27 வயதுடைய சிங்களவர் என கணடறிய பட்டுள்ளது .

                          காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

                          அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்த பட்ட கமராவில், விபத்தில் சிக்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது

                          இவரது மரணத்திற்கு ,விபத்தை ஏற்படுத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

                          தொடர்ந்து குறித்த ஆணின் மரணம் தொடர்பான, விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .