Tag: போதைப்பொருள் மீட்பு
19 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
19 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
19 கோடி ரூபாய் பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்தில் DHL வளாகத்தில் வைத்து கைப்பற்ற பட்டது.
இந்த போதைப்பொருள் ஒரு volleyball வலையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகளில் கூடுதல் பிளாஸ்டிக் குழாய் செருகப்பட்டு மறைக்கபட்ட நிலையில் கைப்பற்றபட்டுள்ளது.
19 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
பிரேசிலில் இருந்து கொழும்பு மருதானை பகுதியில் உள்ள முகவரிக்கு இந்த போதைப்பொருள் அடங்கிய ஏர் மெயில் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. பார்சலின் உரிமையாளர்கள் இருவர் கட்டுநாயக்க விமான சரக்கு
முனையத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்by நிருபர் காவலன்
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்by நிருபர் காவலன்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்by நிருபர் காவலன்
- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்by நிருபர் காவலன்
- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வுby நிருபர் காவலன்
யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்க பட்டுள்ளது .
சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்களின் ,கைப்பையுடன் நடமாடிய ஒருவர் தொடர்பாக தகவல் கிடைத்தது .
புலனாய்வு தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைக்க பெற்ற நிலையில், நடத்த பட்ட சோதனையின் பொழுது இவை மீட்க பட்டுள்ளன .
யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,குறித்த வாலிபரின் உடமையை சோதனை செய்தனர் .
இதன் பொழுது ,அந்த பெண்கள் கை பையில் எட்டு கிராம் போதைவஸ்து ,மற்றும் நகைகள் ,20 லட்சம் பணம் என்பன இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
குறித்த சிங்கள வாலிபர், குருநாகல் பகுதியை சேர்நதவர் என தெரிவிக்க பட்டுளள்து .
இந்த நகைகள் கொள்ளையடிக்க பட்டனவா ,அல்லது நகைகள் வழங்கி போதைவஸ்து பெறப்பட்டதா என்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .












