Posted in இலங்கை செய்திகள்

காணமல் போனார் பணியக்கத்திற்கு ஆப்பு

காணமல் போனார் பணியக்கத்திற்கு ஆப்பு

இலங்கையில் ஆளும் கோட்டபாயப அரசினால் பலத்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

அந்த வகையில் காணாமல் போனோருக்கு உருவாக்க பட்ட காணமல் போனோர் சங்கம் கோட்டா அரசினால் கலைக்க படவுள்ளதாக தெரியவருகிறது .

இது தொடர்பான கலந்தாராய்வில் கோட்டபாய தீவிரமாக ஈடுபட்டுளளார் .இவ்வாறு இந்த அமைப்பு கலைக்க பட்டால்

அது கோட்டா அரசுக்கு சர்வதேச ரீதியில் பலத்த நெருக்குதலை கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது

எனினும் இதனை செய்வதாக இருப்பினும் இவர் பாரளுமன்ற தேர்தல் முடிவின் பின்னரே அதனை புரிய கூடிய வாய்ப்புக்கள் கிட்டும் என எதிர்பார்க்கலாம்

அல்லாது விடின் தேர்தலில் இவருக்கு பின்னடைவை தமிழர்கள் மத்தியில் கொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி

பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி

இலங்கையில் இடம்பெற்ற தொடர் எட்டு குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்த பட்ட போலீஸ் அதியஸ்தகர் ஒருவர் ஆளும் கோத்தபாயா அரசினால்

திடிரெண்டு
பதவி இறக்கம் செய்யப் பட்டுள்ளார் .

போலீஸ் தலைமையகம் வழங்கிய உத்தரவின் பேரில் தற்காலிகமாக இவரது இந்த பதவி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்

இலங்கையில் -பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்

இலங்கை – காலி பகுதியில் பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை பிரிட்டன் பெண் ஒருவர் கடித்துள்ள சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பிரிட்டன் பெண் தங்கியிருந்த விடுதியை காவல்துறையினர் சோதனை புரிந்த போதே கணவனுடன் தங்கி இருந்த பிரிட்டன் பெண் இவ்வாறு அந்த பெண்ணின் கையை கடித்துள்ளார்

இலங்கைக்கு வருடம் தோறும் சுற்றுலா வரும் இவர்கள் விசா முடிவடைந்த நிலையில் அங்கு மேலதிகமாக தங்கி இருந்த சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

பெண் காவல்துறை ஊழியரை கடித்த குற்ற சாட்டில் இப்பொழுது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம் செய்வதற்கு கூட இடமில்லை

தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம்
செய்வதற்கு கூட இடமில்லை

மலையக தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாபரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே

சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் பாதையில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இடம்

அதாவது தோட்டம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் காணப்படுகின்றது.

இந்த நல்லடக்க பூமி கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகிலேயே காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் இவை முறையாக காணப்பட்ட போதும் கண்டி நுவரெலியா வீதி புணர்நிர்மானம் செய்யப்பட்ட போது பாதை அபிவிருத்திக்காக நல்லடக்க பூமி பாதைக்கு இறையானது.

இதனால் பெருபாலான கல்லரைகளும் புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டும் உள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு தோட்ட

மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்க் கொண்ட போதும் இதுவரை முயற்சிகள் கை கூடவில்லை.

இதனை பெற்றுக் கொடுப்பதில் தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இலுத்தடிப்புகளை மேற் கொண்டு வருகின்றது. தற்போது காணப்படும் நல்லடக்க பூமி வீதி

அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும். மலையக தேயிலைக்கே உழைத்து தேயிலைக்கே உரமாகி கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இறந்தும்

நல்லடக்கம் செய்வதற்கு கூட ஒரு பொருத்தமான இடம் இல்லாதது வேதனைக்குறிய விடயமாகும். இதை உணர்ந்து

சம்பந்தபட்வர்கள் இவர்களுக்கான தீர்விணை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

தோட்ட தொழிலாளர்கள்
Posted in உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத

ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை

உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .

அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .

அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது

அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,


அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .

அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்

ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .

அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன

ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .

அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .

இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது

எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த

கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .

அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது

ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்

எதையோ சொல்கிறது . .

சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .

இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்

தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .

ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது

,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,

காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது

  • வன்னி மைந்தன் –
ஈரான் ஏவுகணை நகர்தத்ல்
Posted in உளவு செய்திகள்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,

நேச சக்தியாகவும் விளங்கிய
வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
செய்ய பட்டார் .

இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.

அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது

என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .

தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .

300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,

ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .

மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .

ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..

அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .

அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .

ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .

முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .

ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .

மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,

ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்

ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .

குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .

தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

அமெரிக்காவில் தாக்குதல்
Posted in உளவு செய்திகள்

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு

சிரியாவில் ரசியாஅதிபர் – திடீர் பேச்சு

அமெரிக்கா சிரியாவில் அதன் வளங்களை சுரண்டி ஏப்பம் இடவும் அதன் நாட்டு அதிபரை கொன்று குவிக்கவும் முயன்றது ,ஆனால் சிரியாவில் ரசியா அதிபர் வழங்கிய பெரும் ஆதராவால்

அந்த நாடு காப்பாற்ற பட்டது ,சுமார் ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் சுமார் முப்பது லட்சம் மக்கள் அந்த மண்ணை விட்டு அகதிகளாகினர் .

இவ்வாறான சூழல் இன்று செவாய்க்கிழமை ரசியா அதிபர் புட்டீன் திடீரென சிரியாவுக்கு சென்று நேரடியாக அல் அசாத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

புடின் இந்த திடீர் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

ஈரான் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது பெரும் போர் பதட்டம்

உருவெடுத்துள்ள நிலையில் ரசியா அதிபர் அங்கு சென்றுள்ளதே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது

ஈரான் அதிபர் ரசியா அதிபருடன் தொலைபேசியில் பேசியும் இருந்தார் ,இவ்வாறான சூழல் இந்த சந்திப்பின் பின்னர்

என்ன நடக்க போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது .

சிரியா மீளவும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாவும் பெருமளவான விடயங்கள் முடிக்க பட்டு விட்டன என ரசியா

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு

அதிபர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு நீங்கள் வழங்கிய இந்த பெரும் உதவிக்கு நன்றி என அசாத் தெரிவித்துள்ளார்

ஆனால் இங்கே இருவராலும் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவில்லை ,மேலும் இரு நாடுகளுக்கு இடையில்

ஒப்பந்தங்கள் கைச்சாத்திட பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது

சிரியாவில் ரசியா அதிபர்

சிரியாவில் ரசியா அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி

இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி

சற்று முன்னர் இந்தோனேசியா சுமத்திரா தீவில் 6,2 புள்ளி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இதனால் அங்கு சுனாமி பீதி நிலவுகிறது .

இங்கிருந்தே சுனாமி ஏற்பட்டது ,எனினும் அவ்வாறான அபாயம் தற்போது இல்லை என தெரிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது

இதுவரை இங்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

குருநாகல் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றும் ,கனரக லொறி ஒன்றும் மோதி கொண்டதில் பேரூந்தில் பயணித்த சுமார் பதினேழு பேர் .படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .போலீசார் துரித விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாது வாகன ஓட்டிகள் செய்லபடுவதே நாள் தோறும் இலங்கையில் விபத்து
ஏற்பட காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

மத்திய கிழக்கில் -அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

ஈராக்கில் ஈரானிய இராணுவத்தளபதி படுகொலை புரிய பட்ட நிலையில் அவசரமாக மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மூவாயிரம் இராணுவத்தினரை அனுப்பியது .

அவ்வாறு மத்திய கிழக்கிற்கு அனுப்ப பட்ட இராணுவத்தினரின் 82 வது பராட்ரூப் படைகளால்

செல்போன் ,மற்றும் லாப்டாப் என்பன பாவிக்க தடை விதிக்க பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்க பட்டுள்ளன .

இந்த சம்பவம் இராணுவத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவர்கள் ஊடாக ஈரானுக்கு உளவு தகவல்கள் செல்ல கூடும்

மேலும் ஈரானிய படைகள் செய்மதி ஊடாக இவர்களது கைபேசிகள் சிக்னலை வைத்து அந்த இடம் மீது தாக்குதல்

நடத்த கூடும் , லாப்டாப் ஊடாக இராணுவ ரகசியங்கள் கைமாற படாலாமென்பதாலும் ,

ஈரானால் கைக் பண்ண படலாம் என்பதாலும் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவை பார்க்க படுகிறதாம் .

ஆனால் அவர்கள் சொல்லும் காரணம் அதுவல்ல .இதுவாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் .ஈரானிய இராணுவ

தளபதி அவர்களது கைபேசி பாவனை மூலமே கண்காணிக்க பட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியும் உள்ளது ,

அவ்வாறான ஆபத்தான பகுதி ஊடாக ஒரு பிற நாடுகளுக்கு செல்பவர்கள் கைபேசி யையும் ஆப் பண்ணாமலா செல்வார்கள் ..?எடுத்தா செல்வார்கள் ..?

அமெரிக்கா இராணுவ தலைமையகம் இந்த படைகளுக்கு மேற்கொண்ட இந்த திடீர் அதிரடி கட்டுப்பாடு எங்கையோ உதைக்கிறது .

அப்படியானால் அமெரிக்கா ஈரானிடம் இருந்து ஏதோ வித்தியாசமான தாக்குதல்களை எதிர்பார்க்கிறது ,

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

அது நடத்த படும் சாத்தியம் உள்ளதையே இவை காண்பிக்கிறது ,அமெரிக்கா இராணுவம் இத்தனை

இறுக்கத்தை மேற்கொள்ள காரணம் ஈரான் தாக்குதல் உக்கிரமான ஒன்றாக அமையலாம் என்பதாக கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இந்த செயல் மத்திய கிழக்கிற்கு செல்லும் இராணுவத்தினரின் உளவியல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஒருவேளை இவர்களது குடும்பங்களுக்கு இவர்கள் அங்குள்ள களநிலவரங்களை அறிவிக்க அவை எதிரிகள்

துல்லியமாக தகவல்களை பெற்று விடுவார்கள் என்பதல் தனது இராணுவத்தையே அமெரிக்கா நம்ப மறுக்கிறதே ….

உலக சண்டியருக்கே இந்த நிலையா ..?

இது தோல்வியின் அறிகுறியா..? பாதுகாப்பின் வெளிப் பாடா …? மக்களே நீங்களே முடிவெடுங்கள்
..விடயத்தின் அடர்த்தியை புரிந்து கொள்ளுங்கள் நிலைமை புரியும் .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா இராணுவம் செல்போன்கள்
Posted in இலங்கை செய்திகள்

விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்

இலங்கையில் -விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்

இலங்கை -வெள்ளவாய பகுதியில் காட்டு யானைகள் விகாரை ஒன்றுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தின .

இந்த தாக்குதலிலும் விகாரை பலத்த சேதமடைந்துள்ளது ,யானையை கண்ணுற்ற பிக்குகள் அங்கிருந்து தப்பி

ஓடியதால் உயிர் தப்பித்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

இலங்கையில் -மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

இலங்கை -அம்பாறை பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நாங்கள மாணவிகள் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாங்கிட சென்றனர் அப்பொழுது

அந்த நான்கு மாணவிகளுடனும் மருத்துவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டு முன்வைக்க

பட்டுள்ள நிலையில் மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல் பட தயார் – விக்கி அதிரடி அறிவிப்பு

இலங்கை -தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல் பட தயார் – விக்கி அதிரடி அறிவிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்று பட்டு செயல்பட வருமாறு அழைப்பு விடுத்தது .

அவ்வாறான அழைப்பு விடுக்க பட்டால் ஒன்றிணைந்து பயணிக்க முற்பட்டால் அவர்களுடன் இணைந்து செயல்பட

தயார் எனவும் ,அது தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்த தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி

வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி

இலங்கை -ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்

கடந்த இரவு இடம்பெற்ற விபத்தில் இவர் பலியாகியுள்ளார்

ஓமந்தையில் இருந்து வவுனியா பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து மாடு ஒன்றுடன்

மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை கோரியிருந்தார்.

அந்த கோரிக்கை அடங்கிய மனுவை நீதிபதிகளான ராஜா, புகழேந்தி அமர்வு விசாரணைக்கு உட்படுத்தியது.

இதன்போது அவருக்கு இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அதாவது 15 நாட்களுக் சாதாரண பிணை வழங்கி நீதிபதிகள் உத்தவிட்டனர்.

இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் பிணையில் சென்றுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி அவர் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

இதனை அடிப்படையாக கொண்டே அவருக்கு மீண்டும் 15 நாட்கள் பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளதால் அவருக்கு பிணை வழங்குவதில்

ஆட்சேபனை இல்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு

இதே குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும் அண்மையில் ஒரு மாத பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது ராஜீவ் காந்தி கொலை வழக்கு

Posted in இலங்கை செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் முனை வீதியில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வர்த்தக

நிலையம் ஒன்றின் அனுமதியற்ற பகுதிகள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் க. சித்திரவேல் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

17-11-2015 ஆம் ஆண்டு குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள

பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு அமைய கடந்த 18-02-2019 ஆம் ஆண்டு குறித்த கட்டிட பகுதிகளை அகற்றுவதற்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கியது.

இருந்த போதிலும் அந்த கட்டிட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மே மாதம் அதற்கான நடவடிக்கையினை சட்டத்தரணி ஊடாக

மேற்கொண்டிருந்தார். எனினும் தொடர் நடவடிக்கைகள் அவர்களினால் மேற்கொள்ளப்படாத காரணத்தினால்

குறித்த கட்டிடத்தின் பகுதிகளை அகற்றுமாறு அறிவுறுத்தல் மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கடந்த வாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டு

அதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குறித்த பகுதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் கட்டிடங்கள் இடிப்பு

மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் க. சித்திரவேல் தெரிவித்தார்.கட்டிடங்கள் இடிப்பு

Posted in இலங்கை செய்திகள்

குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – திருமதி சாள்ஸ்

இலங்கையில் -குறட்டை விடும் வடக்கு ஆளுநர் –

இலங்கையில் முதலாவது வடக்கு பெண் ஆளுநராக திருமதி சாள்ஸ் தெரிவு செய்யப்பட்டார் .

கோட்டாவின் பொம்மை என முன்னரே நாம் தெரிவித்து இருந்தோம் ,அதற்கு இசைந்தால் போல பதவியை ஏற்ற

அவர் அதிரடி நகர்வுகளை மேற்கொள்வார் என உலக தமிழ் சமுதாயம் எதிர்பார்த்திருந்ததது .

ஆனால் அவரோகுறட்டை விடுகிறார் .சாவகச்சேரி ,கொடிகாமம் மருத்துவ மனைகளில் வைத்தியர்கள் ,தாதிமார்கள் பெரும் அடாவடியில் ஈடுபாடுவதுடன்

நோயாளர்கள் மீது எரிந்து வீழ்ந்து அவர்களை திட்டுவதாக பாதிக்க பட்டவர்கள் கவலையோடும் கண்ணீரோடும் தெரிவித்தனர் .

சுகாதர அமைச்சராக விளங்கியதாக தெரிவித்த அம்மையார் ,தற்போது குறித்த மருத்துவமனைகள் மீது

மக்கள் வைத்துள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பாக .
நேரடியாக சென்று ஆராய மறுத்து விட்டார் .

முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதவின் வலது கையாக செயல் படும் கொடிகாம பொறுப்பு மருத்துவர் பெரும் இன்னல்களை புரிகிறார் ,

இதனை தட்டி கேட்கவும் உரிய நடவடிகை மேற்கொண்டு மக்கள் பணியினை செய்வதை தவிர்த்து அமைதி காப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

தான் வாழ்ந்த கிராமத்துக்கும் ,அந்த மாவட்டத்திற்கும் சிறந்த பணியினை துணிந்து ஆற்றுவேன் என முழக்கமிட்ட

அம்மையார் காணமல் போய் விட்டாரா என மக்கள் நகைக்கின்றனர் .குறட்டை விடும் வடக்கு ஆளுநர்

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்க பட்ட வன்னி மக்கள் புலம்பல்

வெள்ளத்தால் பாதிக்க பட்ட வன்னி மக்கள் புலம்பல்

இலங்கை – வன்னி கிளிநொச்சி பகுதியில் அமைந்துள்ள இரணைமடு குளம் வான் கதவுகள் திறந்து விட பட்ட நிலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது .

இதன் பொழுது அங்கு ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிவாரணங்கள் ,மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கு

அரசிடம் இருந்து உரிய உதவிகள் வந்து சேரவில்லை என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .

ஆனால் அரசோ பல மில்லியன் ரூபாய்களை வெள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கியதாக தெரிவித்துள்ளது .

அப்படியானால் ஒதுக்க பட்ட நிதி எங்கே என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர் .

வெள்ளத்தால் பாதிக்க பட்ட
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

பேரூந்து விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

இலங்கை -பசறை பகுதியில் அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில்

அதில் பயணித்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட பண்ணி ரெண்டு பேர் பலியாகினர் ,மேலும் முப்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த விபத்தில் சிக்கிய பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பேரூந்து விபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

136 வெளிநாட்டவர் கைது

செல்லுபடியான விசா இன்றி இங்கு தங்கியிருந்த 136 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய 5 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 6.00 மணி

வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரஜை 82 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 12 பேரும், மாலைதீவைச் சேர்ந்த 10 பேரும், நைஜீரியா நாட்டவர் 8

பேரும், பங்களாதேஷ் நாட்டவர் 6 பேரும், சீனாவைச் சேர்ந்த 4 பேரும், கனடாவை சேர்ந்த 4 பேரும் அடங்கலாக மொத்தம் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த தினங்களில் 13 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பொலிஸார் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.