அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

Spread the love

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,

நேச சக்தியாகவும் விளங்கிய
வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
செய்ய பட்டார் .

இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.

அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது

என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .

தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .

300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,

ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .

மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .

ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..

அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .

அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .

ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .

முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .

ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .

மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,

ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்

ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .

குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .

தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

அமெரிக்காவில் தாக்குதல்

Leave a Reply