ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

Spread the love

ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத

ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை

உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .

அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .

அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது

அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,


அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .

அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்

ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .

அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன

ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .

அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .

இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது

எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த

கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .

அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது

ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்

எதையோ சொல்கிறது . .

சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .

இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்

தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .

ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது

,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,

காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது

  • வன்னி மைந்தன் –
ஈரான் ஏவுகணை நகர்தத்ல்

Leave a Reply