அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

Spread the love

மத்திய கிழக்கில் -அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

ஈராக்கில் ஈரானிய இராணுவத்தளபதி படுகொலை புரிய பட்ட நிலையில் அவசரமாக மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மூவாயிரம் இராணுவத்தினரை அனுப்பியது .

அவ்வாறு மத்திய கிழக்கிற்கு அனுப்ப பட்ட இராணுவத்தினரின் 82 வது பராட்ரூப் படைகளால்

செல்போன் ,மற்றும் லாப்டாப் என்பன பாவிக்க தடை விதிக்க பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்க பட்டுள்ளன .

இந்த சம்பவம் இராணுவத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவர்கள் ஊடாக ஈரானுக்கு உளவு தகவல்கள் செல்ல கூடும்

மேலும் ஈரானிய படைகள் செய்மதி ஊடாக இவர்களது கைபேசிகள் சிக்னலை வைத்து அந்த இடம் மீது தாக்குதல்

நடத்த கூடும் , லாப்டாப் ஊடாக இராணுவ ரகசியங்கள் கைமாற படாலாமென்பதாலும் ,

ஈரானால் கைக் பண்ண படலாம் என்பதாலும் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவை பார்க்க படுகிறதாம் .

ஆனால் அவர்கள் சொல்லும் காரணம் அதுவல்ல .இதுவாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் .ஈரானிய இராணுவ

தளபதி அவர்களது கைபேசி பாவனை மூலமே கண்காணிக்க பட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியும் உள்ளது ,

அவ்வாறான ஆபத்தான பகுதி ஊடாக ஒரு பிற நாடுகளுக்கு செல்பவர்கள் கைபேசி யையும் ஆப் பண்ணாமலா செல்வார்கள் ..?எடுத்தா செல்வார்கள் ..?

அமெரிக்கா இராணுவ தலைமையகம் இந்த படைகளுக்கு மேற்கொண்ட இந்த திடீர் அதிரடி கட்டுப்பாடு எங்கையோ உதைக்கிறது .

அப்படியானால் அமெரிக்கா ஈரானிடம் இருந்து ஏதோ வித்தியாசமான தாக்குதல்களை எதிர்பார்க்கிறது ,

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

அது நடத்த படும் சாத்தியம் உள்ளதையே இவை காண்பிக்கிறது ,அமெரிக்கா இராணுவம் இத்தனை

இறுக்கத்தை மேற்கொள்ள காரணம் ஈரான் தாக்குதல் உக்கிரமான ஒன்றாக அமையலாம் என்பதாக கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இந்த செயல் மத்திய கிழக்கிற்கு செல்லும் இராணுவத்தினரின் உளவியல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஒருவேளை இவர்களது குடும்பங்களுக்கு இவர்கள் அங்குள்ள களநிலவரங்களை அறிவிக்க அவை எதிரிகள்

துல்லியமாக தகவல்களை பெற்று விடுவார்கள் என்பதல் தனது இராணுவத்தையே அமெரிக்கா நம்ப மறுக்கிறதே ….

உலக சண்டியருக்கே இந்த நிலையா ..?

இது தோல்வியின் அறிகுறியா..? பாதுகாப்பின் வெளிப் பாடா …? மக்களே நீங்களே முடிவெடுங்கள்
..விடயத்தின் அடர்த்தியை புரிந்து கொள்ளுங்கள் நிலைமை புரியும் .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா இராணுவம் செல்போன்கள்

Leave a Reply