Posted in இலங்கை செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம்

ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.

தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே,

இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன்
மூலம் நாளை (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

    களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்

    உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க

    சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

    தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக

    கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்


    சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

      Posted in இலங்கை செய்திகள்

      40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

      40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

      மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக

      தெரிவிக்கப்படுகின்றது.

      இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.

        Posted in மருத்துவம்

        தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

        தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

        வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

        மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். தரையில் படுத்து

        தூங்குவதன் மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மை என்னவென்றால் உடல் தோரணையை சரியாக வைத்திருப்பதுதான்.

        மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க முடியாது. மெத்தையின் மென்மை தன்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சவுகரியமாக

        தூங்குவார்கள். அப்படி தூங்குவது முதுகெலும்பு தோரணையை சீராக பேணுவதற்கு உதவாது. தரையில் தூங்கும்போது முதுகெலும்பை நேராக வைத்திருப்பதற்கு எளிதாக இருக்கும்.

        தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

        ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது. தரையில்

        படுக்கும்போது கிடைக்கும் மேம்பட்ட தோரணை முதுகெலும்பின் இயற்கையான வளைவை ஆதரிக்கும். இருப்பினும் முதுகெலும்பின் அழுத்தத்தைக் குறைக்க சிலர்

        தலையணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதாவது முதுகின் கீழ் மெல்லிய தலையணையை வைக்க வேண்டியிருக்கும்.

        நீங்கள் முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மெத்தையில் படுப்பது உடலுக்கு மென்மையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உடல் எடைக்கு ஏற்ப அழுத்தம்

        உண்டாகும். அதனால் முதுகுவலி அதிகரிக்கக்கூடும். சமதளமான மேற்பரப்பில் தூங்குவதன் மூலம் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.

        தரையில் தூங்குவது குளிர்ச்சியான தூக்க சூழலை வழங்கும். அதாவது தரை குளிர்ச்சியாக இருக்கும் போது, உடல் வெப்பம் விரைவில் தணிந்துவிடும். குறிப்பாக

        வெப்பமான கோடை மாதங்களில் அதிக உடல் உஷ்ணம் கொண்டவர்களுக்கு இந்த தூக்கமுறை சவுகரியமாக இருக்கும். கோடையில் படுக்கை அறை சூழல் குளிர்ச்சியாக

        அமைந்திருக்க வேண்டும். அதற்கேற்ப ஏ.சி. பயன்படுத்தாதவர்களுக்கு தரையில் தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.

        இருப்பினும், எல்லோரும் தரையில் தூங்கக்கூடாது. வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை

        பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
        மருத்துவரின் ஆலோசனையை பெற்று தூக்க நிலையை தீர்மானித்துக்கொள்ளலாம்.

          Posted in மருத்துவம்

          வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

          வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

          வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

          வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய

          நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

          வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற

          பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

          வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

          வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக

          அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.

          ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

          அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள்

          போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

          சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில்

          வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

          நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள்

          கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை
          எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.

          வாழைப்பழத்தில் எதிர் நோயின் தாக்குதலை எதிர்த்து போராடும் திறனும்

          உள்ளது,எதிரி வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடும் எதிர் தன்மை இதில் எதிராகவே நிறைந்து உள்ளது

          இலங்கை இந்திய மக்கள் இயல்பாகவே அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வருகின்றனர் ,வாழைப்பூ வறை மலம் தடையினரி கழிக்க உதவுகிறது ,இதனால் என்னவோ நாளாந்தம் வாழைப்பழத்தை இவர்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்கின்றனர்

            Posted in சினிமா

            சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

            சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

            தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

            சிவகார்த்திகேயன் படத்தின் தேதி அறிவிப்பு
            சிவகார்த்திகேயன்


            நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து

            தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன்

            நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

            ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

            இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10


            ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

            .

              Posted in சினிமா

              வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

              – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

              தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்துவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

              “வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம்” – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
              வைரமுத்து


              தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின்

              மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்

              பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

              வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

              கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி

              தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின்

              பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் புத்தகத்தை படித்த ரஜினிகாந்த், வைரமுத்து குறித்து புகழ்ந்திருந்தார்.

              இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ

              சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து வைரமுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

              அதில்,

              “காளிமுத்து பேரன்
              செந்தமிழன் சீமானின்
              திருச்செல்வன் மாவீரன்
              தமிழாற்றுப்படையோடு
              உறவாடி விளையாடும்
              ஒளிப்படங்கள் கண்டேன்

              நாளையொரு பூமலர
              நல்லதமிழ்த் தேன்சிதற
              வாழையடி வாழையென
              வளருமடா தமிழ்க்கூட்டம்
              என்று வாய்விட்டுச்
              சொல்லிக்கொண்டேன்

              தமிழாற்றுப்படையோடும்
              தமிழர் படையோடும்
              வா மகனே”

              என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

                Posted in சினிமா

                அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை

                அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை

                புதிய காதலன் ஆதில் கான் துரானி, தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.

                அரைகுறை ஆடை அணிவது என் காதலனுக்கு பிடிக்கவில்லை – பிரபல நடிகை
                ராக்கி சாவந்த்


                பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். அதன்பிறகு ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். ஆதிலின் குடும்பம் நான்

                கவர்ச்சியான உடை அணிவதால் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். இந்த

                நிலையில் காதலன் ஆதில் கான் துரானி உடனான உறவின் காரணமாக ராக்கி சாவந்த் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆதில் கான் தனக்கு

                பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் ஆதில் துபாயில்

                தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன்.

                ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது

                குடும்பத்தினருடன் என்னை அறிமுகபடுத்தினார். அவர் தனது குடும்பத்தில் இருந்து சில ‘எதிர்ப்பு’ இருப்பதாக ஒப்புக்கொண்டார், தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம்

                கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார். வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் ஆதில் தன் மீது

                விதிக்கவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. கவர்ச்சி குறைவான மற்றும் அதிக

                மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன் என ராக்கி சாவந்த் கூறினார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  வீரவன்சவின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

                  போலியான ஆவணங்களை பயன்படுத்தி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக்

                  குற்றசாட்டின் கீழ், 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்

                  விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்சவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

                  பிணை மனுமீதான விசாரணை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நாளை (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ரணிலுக்கு மனோ கடிதம் – தீர்வு கிடைக்குமா

                    ரணில் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் மனோ கணேசன் எழுதிய கடிதம் ,உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை.

                    உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும்

                    பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை. கடைகளில் பொருளுமில்லை.

                    இதனால் ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம்.

                    இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

                    தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.

                    விவசாய அமைச்சின் அனுசரணையும் இவர்களுக்கு வழங்க சொல்லுங்கள். இந்நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை தொழிலாளர்கள்

                    பயிரிட்டு தங்கள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் பங்களிப்பை வழங்க முடியும் என தமிழ்

                    முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார்.

                    தனது கோரிக்கை கடிதத்தில் தமுக தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி,

                    கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள்

                    வருமானமின்றி நிர்க்கதி நிலையில் ஏற்கனவே பெருந்துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில

                    மாதங்களில், உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக கணிக்க கூடியயோர் பட்டியலில் முதன்மை நிலையில் இருப்போர் இவர்களே.

                    “தொழிலாளர்கள்” என்ற அடையாளத்தால் இவர்களுக்கு முறையாக சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. கிடைக்காத சம்பள கணக்குகள் காரணமாக

                    இவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே இல்லை என்ற போலி புள்ளி விபரங்கள் காரணமாக இவர்களுக்கு நியாயம் எப்போதும் கிடைப்பதில்லை. உண்மையில் கீழே ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் இந்த மக்களே வறுமை கோட்டுக்கு வாழ்கிறார்கள்.

                    மானிய விலையில், கோதுமை மாவு தருகிறோம், மண்ணெண்ணெய் தருகிறோம் என்று காலத்துக்கு காலம் சொல்லப்பட்டாலும் கூட எதுவும் உருப்படியாக கிடைப்பதில்லை.

                    ஆகவே தோட்டங்களில் அடாத்தாக கிடக்கும் தரிசு காணிகளை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை

                    வேண்டுகிறேன். இந்த நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை கடும் உழைப்பாளிகளான இந்த உழைக்கும் மக்கள் பயிரிட்டு தங்கள் வீட்டு

                    தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்.

                    விவசாய அமைச்சின் அனுசரணையும் வழங்க பணிப்புரை விடுக்கும்படி கோருகிறேன். அவ்வாராயின் குறுகிய காலத்தில் பயன் தரும் உணவு பயிர்களை

                    பயிரிட உரிய ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் அவர்களால் பெற முடியும். நான் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் வரும் பிரதேச செயலாளர்களை அழைத்து

                    அவசர கலந்தாலோசனையை ஏற்பாடுமாறு அன்புடன் கோருகிறேன்.

                    தோட்ட பிரதேசங்களில் நிலவும் வரலாறு காணாத அசாத்திய வறுமை காரணமாக

                    அங்கே தங்களது ஆட்சியின் கீழ் பட்டினி சாவுகள் நிகழ முன்னர் இதை நீங்கள் செய்வீர்களாயின் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.

                      Posted in சினிமா

                      ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்

                      ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்

                      நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      ரஜினி தான் ரியல் டான் என – பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
                      பாராட்டியுள்ளார்


                      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த

                      இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

                      இப்படத்திற்கு இளம் இசை புயல் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

                      இந்த திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது.

                      இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

                      இந்நிலையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு. ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த். தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

                      இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அதனுடன் அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது,

                      “இந்திய சினிமாவின் “டான்” ரஜினிகாந்த் சாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். ரஜனி சாரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும்.

                      உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் மதிப்பு மிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா” என்று நெஞ்சுருகி சிவகார்த்திகேயன் பதிவிட்டிருக்கிறார்.


                      சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஈழப்பிரச்சினையை இதைவிட தெளிவு படுத்த முடியாது video

                        ஈழப்பிரச்சினையை இதைவிட தெளிவு படுத்த முடியாது

                        இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலையும் ,அதன் பின்னால் ஆளும் மோடி அரசு அதனை எவ்வாறு தீர்க்க முயல்கிறது என்பது தொடர்பாக ஆளும் மோடி கட்சியின்

                        தமிழக தலைவர் அண்ணாமலை ,எடுத்துரைத்த விகிதம் ,அதில் உள்ள முடிச்சு

                        அவிழ்ப்புக்கள் ,கண்ணுற்ற தமிழர்களை வியப்பில் அலாதியுள்ளதுடன் ,அவரின் அரசியல் தோலை தூர பார்வை என்பது வியக்க வைத்துள்ளது

                        இது மேடை பேச்சு அல்லது தீர்வு நோக்கி இந்தியா நகர்கிறதா என்பதை காலம் தீர்மானிக்க வேண்டும்

                        ஐயா அண்ணாமலை அவர்களுக்கு ஈழ தமிழர்கள் சிறப்பாக எமது ஆதரவையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

                        Posted in சினிமா

                        வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

                        வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

                        தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                        கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய போனிகபூர்
                        போனிகபூர்


                        மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ,மற்றும் தயாரிப்பாளரான ,போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம்

                        பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.

                        இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட்

                        கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக

                        பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது.

                        குடும்பத்தினருடன் போனிகபூர்

                        தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

                        மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார்.

                        வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

                        போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு

                        பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
                        மேலும், இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

                          Posted in சினிமா

                          திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா

                          திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா

                          நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                          திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?
                          நயன்தாரா – விக்னேஷ் சிவன்


                          நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக

                          காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான

                          புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

                          இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில்

                          வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.

                          நயன்தாரா – விக்னேஷ் சிவன்

                          150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம்

                          அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக

                          திருமணம்
                          நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்

                            50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்

                            காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை

                            கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

                            சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

                            இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.

                            அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

                            கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல்


                            போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வவுனியாவில் -தலை சிதறிய நிலையில் வீதியில் மிதந்த மனித சடலம்

                              வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

                              இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

                              வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தின் மத்தியில் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

                              எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்

                              இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி

                              அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் மரணம்

                              கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                              இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

                              சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்


                              தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

                                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்

                                மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்

                                வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27) தெரிவித்துள்ளனர்.

                                வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன் கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண்

                                வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்த போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த வயோதிப பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

                                உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அழைத்து

                                சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் வயோதிப பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த

                                சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

                                மயக்கம் தெளிந்து குறித்த வயோதிப பெண் எழும்பியதும் நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ்

                                நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ்

                                சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792),

                                திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

                                இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் 4 அரைப்

                                பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த


                                யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

                                  Posted in உலக செய்திகள்

                                  ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

                                  ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

                                  மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
                                  கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

                                  ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

                                  ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க

                                  பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

                                  ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது

                                  எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்

                                  ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது

                                  ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது

                                  ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்

                                  இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது

                                  ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக

                                  அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது

                                  பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது

                                  ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது

                                  அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

                                  ஈரான் பதிலடி -இரண்டு கப்பல்   சிறை பிடிப்பு
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்

                                    லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்

                                    பிரிட்டன் லண்டன் Maidstone store, the Lower High Street பகுதியில் உள்ள பிட்ஸா கடை ஒன்றின்


                                    அதன் திறப்பு நினைவு நாளை முன்னிட்டு 3 மணி தொடக்கம் ஆறு மணிவரை இலவசமாக பிட்ஸா வழங்க படுகிறது

                                    வாடிக்கையாளரை தம் பக்கம் இழுத்திட இவர்கள் மேற்கொள்ளும் விளம்பர

                                    உத்தியாக இது பார்க்க படுகிறது ,அதன் பின்னர் மலிவு விற்பனை இடம்பெறுகிறது

                                    இப்படியும் வியாபார தந்திரம் வைத்து உணவகங்கள் நடத்தும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்


                                    ,மார்க்கட் மனச்மென்ட் தெரிந்த ஒருவராக விளங்குவார் போலும்

                                      Posted in உலக செய்திகள்

                                      உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா

                                      உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா

                                      உக்கிரேன் மீது ரசிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .இவ்வேளை


                                      இந்த தாக்குதலை தடுக்க மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வந்தன

                                      அவ்விதம் இருந்தும் உக்கிரேனால் ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை ,இதனை

                                      அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் திடீர் பெல்ட்டி அடித்து ஆயுத உதவிகள் வழங்கிட மறுத்து வருகின்றன

                                      இது உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலைக்கு வித்திட்டுள்ளது