Posted in சினிமா

திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா

திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?
நயன்தாரா – விக்னேஷ் சிவன்


நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக

காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான

புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில்

வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்

150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம்

அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக

திருமணம்
நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.

    Posted in சினிமா

    விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

    விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

    இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
    நயன்தாரா – விக்னேஷ் சிவன்


    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

    இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது

    , நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில்

    ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

    நயன்தாரா – விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது.


    விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்.

      Posted in சினிமா

      நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்

      நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்

      நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

      நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்
      நயன்தாரா – விக்னேஷ் சிவன்


      நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,

      நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6

      ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

      தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா,

      தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நயன்தாரா நெற்றியில்

      குங்குமத்துடன் இருப்பதை போன்று புகைப்படம் வெளியாகி இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக பேசப்பட்டது.

      இந்நிலையில், தற்போது அவர்களின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம்

      நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
      இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

        Posted in சினிமா

        நயன்தாராவை காதலித்து ஆறு வருடம் – காதலன் நெகிழ்ச்சி

        நயன்தாராவை காதலித்து ஆறு வருடம் – காதலன் நெகிழ்ச்சி

        இயக்குனர் பாடலாசிரியராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

        6 ஆண்டுகள் ஆகிவிட்டது – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
        நயன்தாரா – விக்னேஷ் சிவன்


        இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா

        மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.

        நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர்.

        பின்பு இருவரும் காதலிப்பதாக கூறினார்கள். மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.

        விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளிநாட்டுக்கு மட்டுமில்லாமல் கோயில்களுக்கும் அடிக்கடி செல்வார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

        நயன் தாரா – விக்னேஷ் சிவன்

        இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்

        நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ 6 ஆண்டுகள் ஆகியது போல் தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

          Posted in சினிமா

          அதிரடி முடிவெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

          அதிரடி முடிவெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

          தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

          இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

          இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

          இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

          இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராக்கி படத்தின் வெளியீடு

          குறித்து நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.